Thursday, 6 August 2015

சைக்கிள் விரும்பிகளுக்கு ஒரு நற்செய்தி!

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


    இரைச்சல், புகையினால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு போன்றவற்றால் உலகம் ஸ்தம்பித்துவரும் நிலையில் சீனா, பிரான்ஸ் போன்ற நாடுகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக மீண்டும் சைக்கிள் பயணத்தை ஊக்குவித்து வருகின்றன. சைக்கிளை ஓட்ட விரும்புபவர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் விதமாக பேட்டரியில் இயங்கும் சைக்கிளை தயாரித்திருக்கிறார் ஒரு இங்கிலாந்துக்காரர். 
        ஜீடெக் என்ற நிறுவனத்தின் நிறுவனர் நிக் க்ரே என்பவர் ‘ஏர்ரேம்’ என்ற பேட்டரியில் இயங்கும் வாக்யூம் க்ளீனரை முன்னர் உருவாக்கினார். இது செல்போன்களுக்கு பயன்படுத்தப்படும் லித்தியம் பேட்டரியால் தயார் செய்யப்பட்டு இயங்கி வருகிறது. தற்போது இதே வகை பேட்டரியால் இயங்கும் சைக்கிளை நிக் உருவாக்கியுள்ளார். 
இந்த சைக்கிளில் தண்ணீர் பாட்டில் போன்ற அமைப்பில் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதனை மூன்று மணி நேரம் சார்ஜ் செய்து பயன்படுத்தலாம். இந்த சைக்கிளில் ஒரு மணி நேரத்தில் சுமார் 15 மைல் தூரத்தைக் கடக்க முடியும். தொடர்ந்து பேட்டரியை ‘சார்ஜ்’ செய்து அதிகபட்சம் 30 மைல்கள் வரை இதன்மூலம் பயணிக்க முடியும். 
பேட்டரி இல்லாமலேகூட வழக்கமான விதத்தில் மிதிக்கட்டையை பயன்படுத்தியும் இந்த சைக்களில் செல்ல முடியும். நீண்ட தூரம் சைக்கிள் மிதித்து உடல் தொய்வடையும்போதும், மலையேறும்போதும், நமது சிரமத்தை குறைக்க பேட்டரி மூலம் இதை இயக்கிக்கொள்ளலாம். 
வெறும் 16 கிலோ எடைகொண்ட இந்த சைக்கிள் இங்கிலாந்தின் ஜிடெக் நிறுவனம் மூலம், 1695 பிரிட்டிஷ் பவுண்டுகளுக்கு (இந்திய மதிப்பில் சுமார் 1 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய்) விற்பனை செய்யப்படுகிறது.

No comments:

Post a Comment