Thursday, 27 August 2015

DEE- SC / ST இனச்சுற்றில் போதிய இடைநிலயாசிரியர் பணிநாடுனர்கள் இன்மையால் அதே இனச்சுற்றில் பட்டதாரி ஆசிரியர் இடைநிலை ஆசிரியராக பணி நியமனம் செய்யப்பட்டது

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


தொடக்கக்கல்வி - SC / ST இனச்சுற்றில் போதிய இடைநிலயாசிரியர் பணிநாடுனர்கள் இன்மையால் அதே இனச்சுற்றில் பட்டதாரி ஆசிரியர் இடைநிலை ஆசிரியராக பணி நியமனம் செய்யப்பட்டது - பதவி உயர்வு கோருவது - அவ்வசிரியர்களின், தலைமையாசிரியகள் முன்னுரிமை பட்டியல் கோருவது சார்ந்து இயக்குனர் செயல்முறைகள்

குடும்ப அட்டை பற்றி தெரிந்துகொள்ளுங்கள் !

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


1 ,குடும்ப அட்டை பெற விண்ணப்ப படிவம்?
தமிழக அரசு புதிய குடும்ப அட்டைக்கான விண்ணப்பப்படிவத்தினை ஆங்கிலம் மற்றும் தமிழில் நிர்ணயித்துள்ளது . இப்படிவம் http://www.consumer.tn.gov.in/pdf/ration_t.pdf  என்ற இணைய தளத்தில் உள்ளது. பயன்படுத்த விரும்புவோர் படிவத்தினை மேற்கண்ட இணையதளத்தில் இருந்து எடுத்து பிரதிகளை எடுத்துக் கொள்ளலாம்.
 
2, விண்ணப்ப படிவத்தினை யாருக்கு அனுப்ப வேண்டும் ?
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இணைப்பு ஆவணங்கடன் அவர் வசிக்கும் பகுதிக்கு உரிய உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை உதவி ஆணையாளர் (மண்டல) அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் அவர் வசிக்கும் பகுதி எந்த உதவி ஆணையாளர் அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது என்பது தொடர்பாக சந்தேகம் எழுந்தால் தொலைபேசி மூலம் இந்த அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்.
சென்னை தவிர பிற மாவட்டங்களுக்கு விண்ணப்பதாரர் வசிக்கும் பகுதியைச் சார்ந்த உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் வட்ட வழங்கல் அலுவலர், உதவி பங்கீட்டு அலுவலர்*, (கோயம்புத்தூர் நகரம் மட்டும்) குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்பத்தை பெற்றுக் கொள்வார்கள்.
விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட உதவி ஆணையாளர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகத்தில் ஒப்புகை சீட்டினை பெற்றுக் கொள்ள வேண்டும். விண்ணப்பதாரர்கள் தனது விண்ணப்பத்தினை அஞ்சல் மூலமாகவும் அனுப்பலாம். இருந்தபோதிலும் விண்ணப்பம் சென்றடைந்ததை உறுதி செய்துக் கொள்ள ஆதாரமாக ஒப்புகை அட்டையுடன் கூடிய பதிவு அஞ்சல் மூலம் அனுப்பி வைப்பது நல்லது.

3, புதிய குடும்ப அட்டை பெறுவதற்கு விதிமுறைகள் என்னென்ன?
தனியாக புதிய குடும்ப அட்டை பெற தகுதியுடையவர் யார்?
1). விண்ணப்பதாரர் மற்றும் அவருடைய குடும்பம் இந்திய குடியுரிமை பெற்றவராக இருத்தல் வேண்டும்.
2). விண்ணப்பதாரர் மற்றும் அவருடைய குடும்பம் தனி சமையலறையுடன் தனியாக வசிக்க வேண்டும்.
3). விண்ணப்பதாரர் மற்றும் அவருடைய குடும்பம் தமிழகத்தில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.
4). விண்ணப்பதாரர் மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர் இந்தியாவில் எங்கும் குடும்ப அட்டை பெற்றிருத்தல் கூடாது.
5). விண்ணப்பதாரரோ மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர் பெயர் தமிழ்நாட்டில் வேறு எந்த குடும்ப அட்டையிலும் இடம் பெற்றிருக்க கூடாது.
6). விண்ணப்பதாரர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் நெருங்கிய உறவினராக இருத்தல் வேண்டும்.

4, குடும்ப அட்டை மனுவினை பரிசீலிக்க பரிசீலனைக்காக உள்ள நடைமுறைகள் என்ன ?
தங்களால் பூர்த்தி செய்யப்*பட்ட விண்ணப்பம் தல ஆய்வுக்கு அனுப்பப்படும். தல ஆய்வுக்கு செல்லும் அலுவலர் விண்ணப்பதாரரின் வீட்டை தணிக்கை செய்து மனுதாரர் முகவரியில் வசிப்பதையும் தனியாக சமையல் செய்வதையும் மற்றும் எரிவாயு இணைப்பு இருக்கிறதா என்பதையும் ஆய்வு செய்து உறுதி செய்து கொள்வார்.
மனுதாரரின் வீட்டில் ஆய்வுக்கு வரும் அலுவலரின் அடையாள அட்டையை ( அலுவலக அடையாள அட்டை) அவர் ஆய்வை துவக்குவதற்கு உட்படும் முன் மனுதாரர் கேட்கலாம். உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அதன் அலுவலர்களின் நேர்மை மற்றும் அவர்கள் கனிவாக நடந்துக்கொள்வதை உறுதி செய்ய விரும்புகிறது. இத்துறை அலுவலர்கள் மற்றும் ஆய்வு அலுவலரின் முறையற்ற நடத்தை மற்றும் கையூட்டு கேட்பு தொடர்பான புகார்களை மனுதாரர் தொலைபேசி அல்லது மின்னஞ்சல் மூலமாக ஆணையாளர், உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அவர்களுக்கு தயக்கமின்றி தெரிவிக்கலாம்.
மனுதாரர் பூர்த்தி செய்து உதவி ஆணையாளர் / வட்ட வழங்கல் அலுவலகத்தில் கொடுத்த புதிய குடும்ப அட்டை மனு பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் தணிக்கைக்கு வருவார்கள். 30 நாட்களுக்குள் தணிக்கை அலுவலர்கள் வரவில்லை என்றால் உதவி ஆணையாளர்/ வட்ட வழங்கல் அலுவலர்களை தொடர்பு கொண்டு தகவல் கேட்கலாம்.

அதன்பிறகு, சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்/ உதவி அணையாளர் மேற்கூறப்பட்ட நிபந்தனைகள்படி விண்ணப்பம் தகுதியுடையதாக இருப்பின், விண்ணப்பம் ஒப்புதல் அளிக்கப்பட்டு குடும்ப அட்டை அச்சடிக்க அனுப்பப்படும்.
 5. மனுதாரர் தனது விண்ணப்பத்தின் முடிவினை அறிந்து கொள்ள முடியுமா?
கூடுதல் ஆவணங்கள் அளிக்கப்பட வேண்டியது இருந்தால் தவிர, மனுதாரர் 30 நாட்களுக்கு முன்னதாக உதவி ஆணையாளர் / வட்ட வழங்கல் அலுவலர்களை தொடர்பு கொள்ள தேவையில்லை. 
விண்ணப்பத்தினை அளித்த உடன் விண்ணப்பத்தின் வரிசை எண், தேதி, அலுவலக முத்திரையுடன் மற்றும் மனுவின் மீதான இறுதி முடிவு தெரிந்து கொள்ளும் தேதி ஆகியவற்றுடன் கூடிய ஒப்புகை சீட்டினை மனுதாரர் பெற்றுக் கொள்ள வேண்டும்.
தமிழக அரசு புதிய குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்பத்தின் பேரில் 60 நாட்களுக்குள் குடும்ப அட்டை வழங்க / மனுவின் முடிவை தெரிவிக்க கால நிர்ணயம் செய்துள்ளது.
விண்ணப்பம் தகுதியுடையதாக இருந்தால், குடும்ப அட்டை அச்சிட அனுப்பப்படும். அச்சிடப்பட்ட குடும்ப அட்டை உதவி ஆணையாளர் / வட்ட வழங்கல் அலுவலர் அலுவலகத்தில் பெறப்பட்டவுடன்* அலுவலகத்திலிருந்து ஒப்புகைச்சீட்டுடன் 15 தினங்களுக்குள் குடும்ப அட்டை பெற்றுக் கொள்ளுமாறு அஞ்சல் அட்டை மனுதாரருக்கு அனுப்பப்படும்.
ஒரு வேளை, விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தாலும் உதவி ஆணையாளர் / வட்ட வழங்கல் அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்ட காரணத்தை விண்ணப்பித்த நாளிலிருந்து 60 நாட்களுக்குள் மனுதாரருக்கு அஞ்சல் அட்டை மூலம் தெரிவிக்கப்படும்.
விண்ணப்ப படிவத்தில் மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் குறிப்பிட்டிருந்தால், விண்ணப்பத்தின் மீது எடுக்கப்பட்ட இறுதி முடிவின் நிலையினை உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையிடமிருந்து மனுதாரருக்கு தகவல் தெரிவிக்கப்படும். 
6, விண்ணப்பதாரர் தனது குடும்ப அட்டையினை எவ்விதம் பெற்றுக் கொள்ள வேண்டும் ? 
குடும்ப அட்டை சம்பந்தப்பட்ட உதவி ஆணையாளர்/ வட்ட வழங்கல் அலுவலகத்தில் தயாராக உள்ளது என்ற தகவலை விண்ணப்பதாரர் பெறப்பட்டவுடன், 15 தினங்கக்குள் நேரடியாக திங்கள் அல்லது வெள்ளிக் கிழமை அல்லது அஞ்சல் அட்டை, சிக்கன சேமிப்பு தகவல் / மின்அஞ்சல் ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள தேதியில் சம்பந்தப்பட்ட உதவி ஆணையாளர்/ வட்ட வழங்கல் அலுவலரிடம் விண்ணப்பம் சமர்ப்பித்த பொழுது பெறப்பட்ட அசல் ஒப்புகை சீட்டுடன் கொடுத்து குடும்ப அட்டையினை பெற்றுக் கொள்ளலாம்.
ஒருவேளை, அசல் குடும்ப அட்டை தொலைந்து விட்டால் , நகல் அட்டை பெற விண்ணப்பிப்பதற்கு ஏதுவாக மனுதாரர் குடும்ப அட்டையின் முதல் பக்கமும் கடைசி பக்கமும் நகல் எடுத்து அல்லது குடும்ப அட்டை எண் ,கடையின் குறியீடு எண் ஆகியவற்றை பாதுகாப்பாக குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வேளை, குடும்ப தலைவர் குடும்ப அட்டை பெற்றுக் கொள்ள வர இயலவில்லை என்றால் குடும்ப தலைவர் குடும்ப உறுப்பினர் ஒருவரிடம் அதிகாரம் அளிப்பு கடிதத்துடன் குடும்ப அட்டை பெற்றுக் கொள்ள அனுப்பலாம். குடும்ப அட்டை பெற்றுக் கொள்ள வரும் உறுப்பினரின் கையொப்பத்தினை மனுதாரர் மேலொப்பம் செய்து அங்கீகாரம் அளிப்பு கடிதம் அளிக்க வேண்டும். இந்த அதிகாரம் வழங்கப்பட்ட நபர் விண்ணப்பம் வழங்கிய பொழுது பெறப்பட்ட அசல் ஒப்புகைச் சீட்டினை சமர்ப்பித்து குடும்ப அட்டைகளை பெற்றுக் கொள்ளலாம்.
உதவி ஆணையாளர்/ வட்ட வழங்கல் அலுவலர் அங்கிகாரம் செய்யப்பட்ட நபர் சந்தேகப்படும் வகையில் இருப்பின் குடும்ப அட்டை வழங்குவதை மறுக்கலாம்.
புதிய குடும்ப அட்டை பெற கட்டணம் உள்ளதா ?
தமிழக அரசு புதிய குடும்ப அட்டை பெற ரூ.5/- கட்டணம் நிர்ணயித்துள்ளது. இந்த தொகை சம்பந்தப்பட்ட உதவி ஆணையாளர் / வட்டவழங்கல் அலுவலகத்தில் செலுத்தப்படும்.
 7, ரேஷன் கார்டு விண்ணப்பித்து 60 நாட்களுக்கு மேல் தாமதமானால் மனுதாரர் என்ன செய்யலாம்?

ரேஷன் கார்டு விண்ணப்பித்து 60 நாட்களுக்கு மேல் தாமதமானால் மனுதாரர் என்ன செய்யலாம்?
விண்ணப்பதாரர் உதவி ஆணையாளர் அல்லது வட்ட வழங்கல் அலுவலரை சந்தித்து காலதாமதமான காரணத்தை அறியலாம்.
விண்ணப்பம் வேண்டுமென்றே தாமதம் செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட பணியாளர் மற்றும் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னை நகரம் அல்லது புறநகர் பகுதிகளில் விண்ணப்பதாரர் துணை ஆணையாளர் (நகரம்)வடக்கு, துணை ஆணையாளர் (நகரம்) தெற்கு அவர்களிடம் பேசலாம்.
மாவட்டங்களில் மனுதாரர் சம்பந்தப்பட்ட மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரை அணுகலாம்.
உதவி ஆணையாளர் மற்றும் துணை ஆணையாளர்கள் உரிய பதில் அளிக்கவில்லை எனில், தேவைப்படின் மனுதாரர் மின் அஞ்சல் மற்றும் தொலைபேசி மூலம் ஆணையாளர், உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையிடம் முறையிடலாம்.
8, ரேஷன் கார்டு விண்ணப்பித்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் யாரிடம் முறையீடு செய்வது ?

சென்னை நகர் மற்றம் புற நகர் பொறுத்த வரையில் துணை ஆணையாளர் (நகரம்) வடக்கு மற்றும் துணை ஆணையாளர் (நகரம்) தெற்கு, உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அவர்களிடம் மேல் முறையீடு செய்யலாம் . 
பிற பகுதிகளில் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மேல் முறையீடு செய்யலாம்.

9, ரேஷன் கார்டு விண்ணப்பத்தில் பொய்யான அல்லது தவறான தகவல்களை அளித்தால்? 
  
ஒவ்வொரு குடும்ப அட்டைக்கு தோராயமாக ஆண்டுக்கு ரூ.2000/- மானிய செலவு ஆகிறது என்பதை விண்ணப்பதாரர் அறிந்து கொள்ள வேண்டும். எனவே குடும்ப உறுப்பினர் பற்றிய தவறான விவரங்கள் மற்றும் தவறான முகவரி அளித்தல் போன்றவை பொது விநியோக திட்ட பொருட்களை கடத்துதலுக்கு வழிகோலும் என்பதுடன் 1955 ஆம் ஆண்டு அத்தியாவசியப் பண்ட சட்டம் பிரிவு 7 ன் கீழ் தண்டனைக்குரியதாகும். இத்தகைய விண்ணப்பதாரர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மற்றும் சட்டப் படி தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, விண்ணப்பதாரர்கள் சரியான குடும்ப உறுப்பினரின் விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்
10, குடும்ப அட்டைகளின் வகைகள்: (விருப்பங்களின் அடிப்படையில் )
அனைத்து அத்தியாவசிய பொருட்கள் .குடும்ப அட்டைகள் ( பச்சை நிற அட்டைகள் ) அரிசி மற்றும் இதர இன்றியமையாப் பொருட்கள் பெற விருப்பம் தெரிவித்தவர்களுக்கு பச்சை நிற குடும்ப அட்டைகள் வழங்கப்படுகின்றன.
சர்க்கரை விருப்ப குடும்ப அட்டைகள் ( வெள்ளை நிற குடும்ப அட்டைகள்) அரிசிக்கு பதிலாக சர்க்கரை பெற விருப்பம் தெரிவித்தவர்களுக்கு சர்க்கரை விருப்ப அட்டை ( வெள்ளை நிறம் ) வழங்கப்படுகின்றன. அவர்களுக்கு அரிசி தவிர இதர அத்தியாவசியப் பொருட்களுடன் அரிசி*க்கு பதிலாக 3 கிலோ கூடுதல் சர்க்கரை வழங்கப்படுகிறது.
எந்த பொருளும் பெற விருப்பமில்லை என்ற குடும்ப அட்டைகள். வெள்ளை நிற குடும்ப அட்டைகள்: பொது விநியோக திட்டத்தின் கீழ் எந்த பொருளும் வாங்க விருப்பம் தெரிவிக்காதவர்களுக்கு, எப்பொருளும் வேண்டா ( வெள்ளை நிறம் ) குடும்ப அட்டை வழங்கப்படுகின்றன.

11, பெயர் நீக்கம் மற்றும் பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்?
ரேஷன் கார்டில் பெயர் நீக்கம் செய்ய வேண்டும் என்றால் குடும்ப தலைவர் விண்ணப்ப படிவம் மற்றும் ரேஷன் கார்டு கொடுக்க வேண்டும். குடும்ப தலைவர் மரணம் அடைந்திருந்தால், இறப்பு சான்றுடன் அவரது வாரிசுதாரர் மனு கொடுக்கலாம். பெயர் சேர்க்க வேண்டும் என்றால், சம்பந்தப்பட்ட குடும்ப
தலைவர் அதற்கான விண்ணப்பிக்க படிவத்தை அளிக்க வேண்டும்.

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்


அகஇ - 28 & 29 அன்று ஹைதராபாத் - இல் நடைபெறவுள்ள பணிமனையில் கலந்துக்கொள்ளும் மேற்ப்பார்வையாளர்களை விடுவித்து அனுப்ப திட்ட இயக்குனர் உத்தரவு

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்

அகஇ - 28 & 29 அன்று ஹைதராபாத் - இல் நடைபெறவுள்ள பணிமனையில் கலந்துக்கொள்ளும் மேற்ப்பார்வையாளர்களை விடுவித்து அனுப்ப திட்ட இயக்குனர் உத்தரவு - மேற்ப்பார்வையாளர் பட்டியல் வெளியீடு - இயக்குனர் செயல்முறைகள்



"தேர்வுநிலை" அனுமதித்து ஆணை

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


         தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர், பட்டதாரி ஆசிரியர், பட்டதாரி தலைமையாசிரியராக பணிப்புரிந்த காலத்தினையும் கணக்கில்கொண்டு தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பதவியில் "தேர்வுநிலை" அனுமதித்து ஆணை - ஆலந்தூர் கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்

நன்றி : திரு. செல்வராஜூ 

Wednesday, 12 August 2015

DEE - Transfer Counselling Regarding Circular (Date: 11.8.15)

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்
  1. 01.06.2014க்கு முன் பணிபுரிபவர்களுக்கு மட்டுமே பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்துக்கொள்ள அனுமதி - தொ.க.இயக்குனர் செயல்முறை

பல் சொத்தை வருவது ஏன்? தடுக்க வழிமுறைகள் என்ன?

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


Image result for tooth      முகத்தின் முக்கியஅம்சங்களில் ஒன்றான பற்கள்பாதிக்கப்பட்டால் பல்வேறுநோய்கள்நம்மைத் தாக்கத்தொடங்கும். 'பல் போனால்சொல் போகும்என்பார்கள்பெரியோர்பற்களின்ஆரோக்கியத்தைக் காத்தால்,உடலின் ஆரோக்கியத்தையேபாதுகாக்கலாம் என்கின்றனர்மருத்துவர்கள்.

பல்லின் அமைப்பு

பல்லானது வேதி அமைப்பில் கால்சியம்பாஸ்பரஸ் தாதுகளால்ஆனதுஒவ்வொரு பல்லிலும் வெளியில் தெரிகிற மேற்பகுதிக்குமகுடம் (Crown) என்று பெயர்பல்ஈறுக்குள் புதைந்திருக்கும் பகுதிக்குவேர் (Root) என்று பெயர்பல் ஈறின் அடிப்பாகத்திலிருந்துஒவ்வொருபல்லுக்குள்ளும் நடுவில் நரம்புகளும் ரத்தக்குழாய்களும்செல்கின்றனஇந்தப் பகுதிக்குப் பல் கூழ் (Pulp) என்று பெயர்இதைச்சுற்றி டென்டைன் (Dentine) எனும் பகுதியும்அதற்கும் வெளியேவெள்ளை நிறத்தில் பல்லுக்கு ஓர் உறைபோல் அமைந்திருக்கும்எனாமல் (Enamel) எனும் கடினமான பகுதியும் உள்ளன.

பல் சொத்தை

பல் பாதிப்புகளில் முதன்மையானதுபல் சொத்தை (Tooth Decay).குழந்தைகள்இளம் வயதினர்முதியோர் என எல்லோரையும் இதுபாதிக்கிறதுஇது ஏற்படுவதற்கு முக்கியக் காரணம்இனிப்புகளைஅதிகமாகச் சாப்பிடுவதுதான்குறிப்பாகபற்களில் ஒட்டக்கூடியஇனிப்பு மாவுகள்பிஸ்கட்டுகள்மிட்டாய்கள்சாக்லேட்கள்,ஐஸ்கிரீம்குக்கீஸ்கேக்பேக்கரிப் பண்டங்கள் போன்றவற்றில்உள்ள சர்க்கரைப் பொருள் பல் இடுக்குகளில் ஒட்டிக்கொள்ளும்போது,வாயில் உள்ள பாக்டீரியாக்கள் இவற்றுடன் வினைபுரிந்துலாக்டிக்அமிலத்தைச் சுரக்கின்றனஇந்த அமிலம் எனாமலை அரித்துப்பற்களைச் சிதைக்கிறதுஇதன் விளைவால் பற்கள்சொத்தையாகின்றன.

பற்களைச் சுத்தமாகப் பராமரிக்கத் தவறினாலும் பாக்டீரியாக்கள்வளர்ந்து பல் சொத்தையை உண்டாக்கும்காபிதேநீர்போன்றவற்றை அதிகமாகக் குடிப்பதுபுகைபிடிப்பதுபான்மசாலா/வெற்றிலை பாக்குப் போடுவது போன்ற பழக்கங்களால் பற்களில்காரை படியும்இதில் பாக்டீரியாக்கள் சந்தோஷமாக வாழும்இந்தநிலைமை நீடித்தால்பற்களில் சொத்தை விழுந்துபற்களின்ஆரோக்கியத்துக்கு வேட்டு வைக்கும்.

குழந்தைகள் இரவில் புட்டிப்பாலைக் குடித்தபடியேஉறங்கிவிடுவார்கள்அப்போது பற்களின் மேல் பால் தங்கி,சொத்தையை ஏற்படுத்திவிடும்சிலருக்குப் பரம்பரை காரணமாகவும்பல் சொத்தை வரலாம்.

அறிகுறி என்ன?

சொத்தைப் பல்லின் ஆரம்ப அறிகுறிபற்கூச்சம்முக்கியமாக இனிப்புசாப்பிடும்போதுகுளிர்ச்சியான அல்லது சூடான பானங்களைஅருந்தும்போது பற்களில் கூச்சம் ஏற்படும்பிறகு பல்லில் வலிஏற்படும்உணவை மெல்லும்போது பல் வலி அதிகரிக்கும்.சொத்தைப் பல்லை ஆரம்பத்தில் கவனிக்காவிட்டால்எனாமலைஅடுத்துள்ள டென்டைன் பகுதிக்கும் சொத்தை பரவிவிடும்அப்போதுபற்களில் கறுப்புப் புள்ளி அல்லது கோடு தெரியும்அங்குக் குழிவிழும்காய்ச்சல்கழுத்தில் நெறி கட்டுதல்கழுத்து வலிகாது வலிபோன்றவையும் தொல்லை தரும்இந்த நிலைமையிலும் சிகிச்சைபெறாவிட்டால்பல் கூழ் மற்றும் வேர்களில் சீழ் பிடித்துப்பழுதாகிவிடும்நாளடைவில் இந்த வேர்கள் வலுவிழந்து போகும்.அப்போது பற்கள் ஆட்டம் கண்டு தாமாகவே விழுந்துவிடும்.

சிகிச்சை என்ன?

முப்பது ஆண்டுகளுக்கு முன்புவரை பல் சொத்தையாகிவிட்டால்,ஒருவித சிமெண்டைக் கொண்டு சொத்தையை மூடுவார்கள் அல்லதுஅந்தப் பல்லை நீக்கிவிடுவார்கள்இப்போது இந்த நிலைமைமாறியுள்ளதுஎந்த அளவுக்குச் சொத்தை பல்லில் பரவியுள்ளதுஎன்பதை எக்ஸ்-ரே எடுத்துப் பார்ப்பதன் மூலம் அறியலாம்பல்லின்எந்தப் பகுதி பாதிக்கப்பட்டுள்ளது என்பதைப் பொறுத்துச் சிகிச்சைமாறும்.

எனாமல்டென்டைன் வரைக்கும் சொத்தை இருந்தால் ‘ஃபில்லிங்எனப்படும் நிரப்புதல் சிகிச்சை போதுமானதுசொத்தையானது பல்கூழ்வரை சென்றிருந்தால், ‘வேர் சிகிச்சை’ என்று அழைக்கப்படும்ரூட் கனால் சிகிச்சை’ (Root canal treatment) செய்யப்பட வேண்டும்.

ரூட் கனால் சிகிச்சை

இந்தச் சிகிச்சையின்போது ஈறுகளில் மயக்க மருந்தைச் செலுத்தி,பல் கூழ் வரை டிரில் செய்து பல்லில் ஏற்பட்டுள்ள சொத்தைசீழைத்துப்புரவாக அகற்றிவிட்டுஅங்குள்ள நரம்பையும் வெட்டிவிட்டு,நன்றாகச் சுத்தப்படுத்துகிறார்கள்அங்கு நோய்த்தொற்று இல்லைஎன்று உறுதி செய்த உடனேயோ அல்லது 15 நாட்கள் கழித்தோபல்லைச் சுத்தப்படுத்திய குழியில் ‘கட்டா பெர்ச்சா பிசின்’ (Gutta-percha resin), ஜிங்க் ஆக்சைடுயூஜினால் (Eugenol) கலந்த வேதிப்பொருளைக்கொண்டு நிரப்புகிறார்கள்இதைத் தொடர்ந்து அந்தப் பல்லுக்குக்`கேப்’ போட்டு மூடிவிடுகிறார்கள்இதன் பலனால் சொத்தைசரியாகிவிடும்பல்லுக்கு உறுதித் தன்மை கிடைத்துவிடும்சிலருக்குரூட் கனால் சிகிச்சை’ செய்ய முடியாத அளவுக்குப் பற்கள்மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும்அத்தகைய பற்களை நீக்கித்தான்ஆக வேண்டும்வேறு வழியில்லை.

செயற்கை பல்

சிலர் சொத்தை விழுந்த பல்லை எடுத்து விடுகின்றனர்ஆனால்,பதிலுக்கு அந்த இடத்தில் செயற்கைப் பல்லைக் கட்டுவதில்லைஇதுதவறுஇதனால் அருகில் உள்ள பற்களுக்குப் பாதிப்பு ஏற்படும்இந்தப்பற்கள் பக்கத்தில் சாய்ந்துவிடலாம்இடைவெளிஅதிகமாகிவிடலாம்அப்போது நாக்கை அடிக் கடி கடித்துக்கொள்ளவேண்டி வரும்பல பற்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டிருந்தால் பேச்சுகுழறும்.

சொத்தையைத் தடுக்க வழி

காலைஇரவு என இரண்டு வேளை பல் துலக்க வேண்டும்மேல்தாடைப் பற்களைக் கீழ்நோக்கிச் சுழற்றியும்கீழ்த் தாடைப் பற்களைமேல் நோக்கிச் சுழற்றியும் துலக்க வேண்டும்கடிக்கும் பகுதியைமுன் பின்னாகத் துலக்க வேண்டும்நாக்கையும் சுத்தப்படுத்தவேண்டும்.

ஃபுளூரைடு கலந்த அனைத்து வகைப் பற்பசைகளுமேஉகந்தவைதான்பல்லில் தேய்மானம் இருந்துபல்லில் கூச்சம்ஏற்பட்டால்அப்போது மட்டும் 'டிசென்சடைசிங்பற்பசையைப்பயன்படுத்தலாம்.

பட்டாணி அளவிலான பற்பசை போதுமானது.

கரிஉப்புமண்செங்கல்பொடிசாம்பல்நெல்உமி போன்றவற்றால்பல் துலக்கக் கூடாது.

பல் துலக்கியைப் பொறுத்தவரையில்மிருதுவான அல்லது நடுத்தரவகை பல்துலக்கியைப் பயன்படுத்துவது பற்களின் பாதுகாப்புக்குநல்லது.

ஆரோக்கியமான நிலைப்பற்களுக்குப் பால்பற்கள்தான்அஸ்திவாரம்ஆகவேகை விரலில் பொருத்திக்கொள்ளும்மிருதுவான 'விரல் பல்துலக்கி'யைப் பயன்படுத்திஐந்துவயதுவரையிலும் குழந்தைகளுக்குப் பெற்றோரே பல் துலக்கிவிடவேண்டும்.

குழந்தைக்குப் பாட்டிலில் பால் கொடுத்தவுடன்ஈறுப் பகுதியைத்தண்ணீரால் நன்றாகத் துடைத்துவிட வேண்டும்.

தினமும் ஒரு காரட்ஒரு வெள்ளரிக்காயைச் சாப்பிட்டு வந்தால்,பல் சுத்தமடையும்.

வைட்டமின் - சிவைட்டமின் - டிகால்சியம்பாஸ்பரஸ் சத்துகள்மிகுந்த மீன் எண்ணெய்திராட்சைஆரஞ்சுதக்காளிஎலுமிச்சை,நெல்லிக்காய்பச்சையிலைக் காய்கறிகள்கீரைகள்பழங்கள்முதலியவற்றையும்புரதச்சத்து மிகுந்த பால்முட்டைஇறைச்சி,பயறுபருப்பு முதலியவற்றையும் தினசரி உணவில் சேர்த்துக்கொண்டால்பல் ஈறுகளும் எனாமலும் நல்ல வளர்ச்சி பெறும்.

பற்களில் ஒட்டிக்கொள்ளக் கூடிய இனிப்பு மாவுசாக்லேட்,மிட்டாய்ஐஸ்கிரீம் போன்றவற்றைச் சாப்பிட்டால் உடனே வாயைக்கொப்பளிக்க வேண்டும்.

காபிதேநீர் உள்ளிட்ட அதிகச் சூடான உணவு வகைகளையும்,ஐஸ்கிரீம் உள்ளிட்ட அதிகக் குளிர்ச்சியுள்ள உணவு வகைகளையும்,குளிர் பானங்களையும் அடிக்கடி சாப்பிடக்கூடாது.

வெற்றிலைப் பாக்கு போடுவதுபுகைபிடிப்பதுபான்மசாலாபயன்படுத்துவதுமது அருந்துவது போன்றவற்றைத் தவிர்த்தால்,பல்லுக்குப் பாதுகாப்பு கிடைக்கும்.

குண்டூசிகுச்சி போன்றவற்றால் பல் ஈறுகளைக் குத்தி அழுக்குஎடுக்கக்கூடாது.

குளிர்பானங்கள் குடிப்பதைக் குறைத்துக்கொள்வது பற்களுக்குநல்லதுகாரணம்அவற்றில் உள்ள அமிலங்கள் எனாமலை தாக்கிப்பற்களையும் சிதைக்கின்றன.

குழந்தைகளுக்கு விரல் சூப்பும் பழக்கம் இருந்தால்சிறுவயதிலேயே அதைத் தடுத்து விட வேண்டும்தவறினால்சொத்தைப்பற்கள் மட்டுமல்ல தெற்றுப் பற்களும் தோன்றக்கூடும்.

தினமும் பால் அருந்துங்கள்அதிலுள்ள கால்சியம் பல்லுக்குப்பாதுகாப்பு தரும்.

நகம் கடிக்கக் கூடாதுகாரணம்அதன் மூலம் கிருமிகள் வாய்க்குள்சென்று நோய்களை உண்டுபண்ணும்.


ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பல் மருத்துவரைச் சந்தித்துஆலோசனை பெறும் பழக்கத்தைப் பின்பற்றினால்பற்சொத்தைஉள்ளிட்ட பல்வேறு பல் பிரச்சினைகளை ஆரம்ப நிலையிலேயேதவிர்த்துவிடலாம்.

அரசு நலத்திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயம் அல்ல: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


டெல்லிஅரசியன் நலத் திட்டங்களைப்பெற ஆதார் எண் கட்டாயமானது அல்லஎன்று உச்சநீதிமன்றம் அதிரடியாகஉத்தரவிட்டுள்ளதுநாடு முழுவதும்மக்களுக்கு ஒரே அடையாள அட்டைவழங்கும் வகையில் ஆதார் அட்டைதிட்டத்தை மத்திய அரசு செயல்படுத்திவருகிறதுஅரசின் உதவிகள் பெற ஆதார் அட்டை அவசியம் என்றமத்திய அரசின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
         அதேபோல் ஊதியம் பெறுவதுதிருமணப் பதிவு,சொத்துகள் பதிவு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு ஆதார்அட்டையை கட்டாயமாக்க சில மாநிலங்கள் திட்டமிட்டுள்ளதற்கும்எதிராகவும் உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டனஇந்த மனுக்கள் உள்பட ஆதார் தொடர்பானஅனைத்து வழக்குகளையும்அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றவேண்டும் என்று மத்திய அரசும் வலியுறுத்தி இருந்ததுஇந்தமனுவை விசாரித்த நீதிபதிகள் செலமேஸ்வர்எஸ்.போப்டே,சி.நாகப்பன் ஆதார் அட்டை தொடர்பாக பல்வேறு கேள்விகள்எழுப்பினர்.

அதன் பிறகு வழக்கை உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசனபெஞ்சுக்கு மாற்றி உத்தரவிட்டனர்இன்றைய விசாரணையின்முடிவில் அரசின் நலத் திட்டங்களைப் பெற ஆதார் எண்கட்டாயமல்லஆதார் எண் கட்டாயம் அல்ல என்பதை மக்களுக்குஊடகங்கள் மூலம் அரசு தெரிவிக்க வேண்டும்ஆதாருக்காகசேகரிக்கப்படும் விவரங்களை அந்நிறுவனம் பிற நிறுவனங்களுடன்பகிர்ந்து கொள்ளக் கூடாதுபொதுவிநியோகத் திட்டம்சிலிண்டர்வழங்கலுக்கு ஆதார் எண்ணை அரசு கேட்கலாம் என்றும்உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த ஆண்டு நிரப்பப்படுமா? டி.இ.ஓ.,சி.இ.ஓ பணியிடங்கள் !

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


     கல்வித் துறையில் இழுபறியாக இருந்த அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு தகுதி பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 600க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.  
          இவற்றை பதவி உயர்வு மூலம் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் மற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களை நிரப்ப (5:2 அடிப்படையில்) வலியுறுத்தப்பட்டது.இந்நிலையில் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டதால், தவிர்க்க முடியாமல் பதவி உயர்வு 'பேனல்' நேற்று வெளியானது.இதன்படி மாநிலம் முழுவதும் 1252 முதுநிலை பட்டதாரி ஆசிரியர், 963 உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், 5 நகராட்சி பள்ளி தலைமை ஆசிரியர்கள் இப்பட்டியலில் இடம் பெற்றனர். இவர்களுக்கு ஆக., 12, 14ல் மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடக்கின்றன.65 டி.இ.ஓ.,க்கள் காலி: மாநில அளவில் டி.இ.ஓ.,க்கள், தொடக்க கல்வி அலுவலர், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் என 65க்கும் மேற்பட்ட டி.இ.ஓ., நிலை பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கான பதவி உயர்வு தகுதி பட்டியலும் வெளியிடப்பட்டு அறிவிப்பு மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆக., 12, 14ல் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வு நடப்பதற்கு முன் டி.இ.ஓ.,க்கள் பதவி உயர்வு அறிவிப்பு வெளியானால், கலந்தாய்வின் போது தலைமை ஆசிரியர்களுக்கு கூடுதல் பணியிடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கழக பொது செயலாளர் சாமிசத்தியமூர்த்தி கூறுகையில், "தற்போது 12 கூடுதல் சி.இ.ஓ.,க்கள், 65க்கும் மேற்பட்ட டி.இ.ஓ.,க்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. பதவி உயர்வு மூலம் இவற்றை நிரப்பிய பின் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்துவது தான் முறை. இல்லை எனில் வழக்கம்போல் குழப்பம் தான் ஏற்படும்" என்றார்

எஸ்.எஸ்.ஏ., கூடுதல் கல்வி அலுவலர்பணியிட கலைப்பின் பின்னணி

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


      அனைவருக்கும் கல்வி இயக்கக (எஸ்.எஸ்.ஏ.,) கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் பணியிடம் கலைக்கப்பட்டுள்ளது. திட்டத்தை நிறுத்தப் போவதற்கான அறிகுறியே இது என்கின்றனர் பணியாளர்கள்.
 
       பள்ளி வயதுள்ள அனைத்து குழந்தைகளும், கட்டாயம் ஆரம்பக் கல்வி பெற வேண்டும் என்ற நோக்கில், மத்திய அரசு, கடந்த, 2002ல், அனைவருக்கும் கல்வி இயக்ககத்தை (எஸ்.எஸ்.ஏ.,) ஏற்படுத்தியது. மத்திய அரசு, 65 சதவீதம், மாநில அரசு, 35 சதவீதம் நிதி ஒதுக்கீடு வழங்கி வருகின்றன.

மாவட்டந்தோறும் எஸ்.எஸ்.ஏ., கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, நிர்வாகப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், எஸ்.எஸ்.ஏ., கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் பணியிடம் கலைக்கப்பட்டு, அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களே நிரந்தரமாக அப்பணிகளை கவனிக்க வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது.

எஸ்.எஸ்.ஏ., வட்டாரங்கள் கூறுகையில், 2002ல் துவக்கப்பட்ட எஸ்.எஸ்.ஏ., திட்டம், கலைக்கப்படும் என்ற பேச்சு எழத் துவங்கியுள்ளது. அதன் விளைவாக தான், எஸ்.எஸ்.ஏ., கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் பணியிடங்கள் கலைக்கப்பட்டுள்ளன. இனி கல்வித்துறை மற்றும் எஸ்.எஸ்.ஏ., ஆகிய இரு பணிகளையும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களே கவனிக்க வேண்டும் என்பதால், பணிகளில் தொய்வு ஏற்படலாம் என்றன.

GOOGLE CHROME, GOOGLE DRIVE ஆகியவற்றைத் தயாரித்த தமிழர்! கூகுள் தலைவரானார்

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


கூகுள் தேடிய பொக்கிஷம் சுந்தர் பிச்சை!
கூகுள் நிறுவனம் அதனை சீரமைப்பு செய்யும் பணிகளை துவங்கியுள்ளது. அதன் முதற்கட்டமாக அதன் செயல்பிரிவில் இருந்த இந்தியர் சுந்தர் பிச்சையை தலைமை செயல் அதிகாரியாக அறிவித்துள்ளது. ஏற்கெனவே அந்த பதவியில், கூகுளின் நிறுவனர்கள் லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் இருந்தது குறிப்பிடத்தக்கது.
சுந்தர் பிச்சை கடந்து வந்த பாதை!
சென்னை பத்மசேஷாத்ரி பள்ளியில் படித்த சுந்தர் பிச்சைதான் கூகுள் நிறுவனத்தில் ஆண்ட்ராய்ட், கூகுள் க்ரோம் மற்றும் கூகுள் ஆப்ஸ் பிரிவுக்குத் தலைவர். 2004-ம் ஆண்டு கூகுள் நிறுவனத்துக்குள் நுழைந்த சுந்தர், புதியதை உருவாக்குவதில் வல்லவர். 'இன்னொரு பிரவுஸர் தேவையா?’ என்று கேள்விகளுக்கு மத்தியில், கூகுள் க்ரோமை அறிமுகப்படுத்தி வியக்கவைத்தவர்.
இப்போது உலகின் வேகமான, எளிமையான, பாதுகாப்பான பிரவுஸராக முதல் இடத்தில் இருக்கிறது க்ரோம். உலகின் மூன்றில் ஒரு பங்கு ஸ்மார்ட்போன்களில் இடம்பிடித்திருக்கும் ஆண்ட்ராய்ட் ஓ.எஸ்-ஸை அடுத்தகட்டத்துக்கு அழைத்துச் சென்றிருப்பவர் சுந்தர் பிச்சை.
மைக்ரோசாஃப்ட், ட்விட்டர் நிறுவனங்கள் சுந்தரைக் கொத்திக் கொண்டு போக முயற்சிக்கும்  ஒவ்வொரு முறையும், 50 கோடி ரூபாய் போனஸ் கொடுத்து சுந்தரைத் தக்கவைத்தது கூகுள்!  
1972-ல் சென்னையில் பிறந்த சுந்தர் பிச்சை, ஐஐடி கரக்பூரில் தொழில்நுட்பவியல் படித்தவர். ஸ்டான்ட்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் மேற்படிப்பும், வார்டன் ஸ்கூலில் எம்பிஏ பட்டமும் பெற்ற இவர், 2004-ம் ஆண்டு கூகுளில் சேர்ந்தார். புதுமைகளை அறிமுகப்படுத்தும் பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டார் சுந்தர்.
கூகுள் குரோம், கூகுள் டிரைவ் ஆகியவற்றைத் தயாரித்த பெருமை இவரையேச் சாரும். அடுத்ததாக, ஆப்ஸ் மேம்பாட்டு துறைக்குத் தலைமை தாங்கினார். ஜி-மெயில் ஆப்ஸ் மற்றும் கூகுள் மேப்ஸ்களை உருவாக்கியதில் இவரது பணி அளப்பறியது.
கூகுள் இவரைத் தனது ஆண்ட்ராய்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் ஆண்ட்ராய்டு ஒன் செல்போன்களை உருவாக்கும் பொறுப்பை வழங்கியது. மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களான மைக்ரோசாஃப்ட், கூகுள் இரண்டிலுமே தற்போது சிஇஓ பதவியை வகிப்பது இந்தியர்கள்தான். உலகமே தன் சந்தேகங்களை கூகுளில் தேட, கூகுள் தேடிய பொக்கிஷமாக இருக்கிறார் சுந்தர் பிச்சை.