Wednesday, 9 April 2014

அரசு பள்ளி மின் கட்டணத்தை நேரடியாக செலுத்த இயக்குனரகம் முடிவு

அரசு பள்ளி மின் கட்டணத்தை நேரடியாக செலுத்த இயக்குனரகம் முடிவு

     அரசு ஆரம்பநடுநிலைப் பள்ளிகளுக்கான மின் கட்டணத்தை செலுத்துவதில்குளறுபடி ஏற்பட்டு உள்ளது. இதை சரி செய்யஇயக்குனரகம் மூலம் நேரடியாக கட்டணத்தை செலுத்தமுடிவு செய்யப்பட்டு உள்ளது.

          மாநிலம் முழுவதும்23 ஆயிரம் அரசு ஆரம்பப் பள்ளிகள்7,000 நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றின் மின் கட்டண செலவுக்குதமிழக அரசு குறிப்பிட்ட தொகையை வழங்குகிறது. இந்த தொகைமாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்குபிரித்து தரப்படுகிறது. இதில்பல நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக கூறப்படுகிறது. கட்டணத்தை செலுத்த,சில நாள் கால தாமதம் ஆனாலும்உடனடியாக மின் இணைப்பை துண்டித்து விடுவதாகமாவட்ட கல்வி அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில்,மாநிலம் முழுவதும் நிலுவையில் உள்ள மின் கட்டணத்தை,மின்வாரியத்திற்குதொடக்கக் கல்வித் துறை சமீபத்தில் வழங்கி உள்ளது. மேலும்மின் கட்டணம் செலுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை தீர்க்கும் வகையில்30 ஆயிரம் பள்ளிகளின் மின் கட்டண விவரங்களை,மாவட்ட வாரியாகதொடக்கக் கல்வித் துறைஇயக்குனரகத்திற்கு தெரிவிக்கும் படியும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில்,இயக்குனரகமே மின் கட்டணத்தை செலுத்தும் எனவும்மின் வாரிய அதிகாரிகளுக்குஇயக்குனரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான அரசாணை பெறப்பட்டதும்புதிய நடைமுறை அமலுக்கு வரும் எனதுறை வட்டாரம் தெரிவித்தது. 
 
          அரசு உயர்நிலைமேல்நிலைப் பள்ளிகளை பொறுத்தவரை,அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள்மின் கட்டணத்தை செலுத்துகின்றனர். இந்த பள்ளிகளிலும்ஆங்காங்கே பிரச்னைகள் ஏற்படுகின்றன. எனவே,தொடக்கக் கல்வித் துறையை போல்பள்ளிக்கல்வி இயக்குனரகமே,நேரடியாக மின் கட்டணத்தை செலுத்தினால்பள்ளிகளில் மின் இணைப்பு துண்டிப்பு பிரச்னை வராது எனஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரைதுவக்கப் பள்ளியாகவும்ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரைநடுநிலைப் பள்ளியாகவும் தமிழகத்தில் உள்ளது.

No comments:

Post a Comment