Tuesday, 24 June 2014

கலந்தாய்வு கூட்டம் புறக்கணிப்பு

கலந்தாய்வு கூட்டம் புறக்கணிப்பு

பதிவு செய்த நாள்

23ஜூன்
2014 
13:54
நாகப்பட்டனம்: நாகை மாவட்ட தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பணியிட மாற்றம், பதவி உயர்வுக்கான கலந்தாய்வு கூட்டம், நாகை, அந்தோணியார் நடுநிலைப் பள்ளியில் நடந்தது. இதில், முறைகேடுகள் நடப்பதாக கூறி, 50க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர்கள் புறக்கணிப்பு செய்ததால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

TAMIL PRONUNCIATION


குழந்தைகளின் கூட்டாளிகள் !


வி.எஸ்.சரவணன்
 
''புத்தரிடம் வாழ்க்கையின் விளக்கம் தேடிவந்த ஒருவருக்கு, புத்தர் எவ்வளவு சொல்லியும் மனநிறைவு கிடைக்கவில்லையாம். அப்போது, குயில் கூவும் ஓசையும் குழந்தை அழுகிற சத்தமும் கேட்டது. அதில், பல செய்திகளை உணர்ந்து, மனநிறைவாக சென்றாரம். இந்தக் கதையை எங்களிடம் ஒரு சிறுவன் சொன்னான். இந்தக் கதையின் தாக்கத்தால், 'குக்கூ குழந்தைகள் வெளி’ என்று பெயர் வைத்தோம்'' என்கிறார்கள் குக்கூ குழுவினர்.
இந்த அமைப்பை 13 ஆண்டுகளுக்கு முன் சில நண்பர்கள் இணைந்து உருவாக்கினார்கள். ஊர் ஊராக சென்று, குழந்தைகளுக்கு கதைகள், விளையாட்டுகளைச் சொல்லிக்கொடுப்பது, பயணங்களுக்கு அழைத்துச்செல்வது இவர்களின் நோக்கம். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் தலைமையில் காட்டுக்குள்  சிறுவர்களை அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.
''அது, குழந்தைகளுக்கு உற்சாகமான புதிய உலகத்தைக் காட்டியது. ஜவ்வாது மலை வனச்சரகத்தில் நுழைந்ததும், பசுமையான காட்சிகள், பறவைகளின் ஒலி, சுத்தமான காற்று என வியந்து ரசித்தார்கள். ஒவ்வொரு இடமாகப் பார்த்து, இந்த மரத்தின் பெயர் என்ன? இந்தப் பூச்சி எப்படி கத்தும்? எனக் கேள்விகளை அடுக்க, நம்மாழ்வார் பதில் அளித்துக்கொண்டே வந்தார். நம் முன்னோர்கள் இயற்கையோடு எப்படியெல்லாம் இணைந்து வாழ்ந்தார்கள் என்பதையும் சொன்னார்'' என்று அந்த பசுமையான நினைவை அசைபோடுகிறார் குக்கூ அமைப்பைச் சேர்ந்த வினோத் பாலுசாமி.
சிறுவர்கள், காட்டில் தாங்கள் பார்த்த புதுபுது விதைகளை எடுத்துப் பத்திரப்படுத்திக் கொண்டார்கள். ஆலமர விழுதுகளில்  தொங்கி விளையாடினார்கள்.
''திருப்பத்தூர் மாவட்ட துணை ஆட்சியராக இருந்த நந்தகுமார் உதவியோடு, ஜவ்வாது மலையில் ஒரு நூலகம் அமைத்தோம். அங்கே குழந்தைகளுக்கான கதை, சுற்றுச்சூழல் புத்தகங்கள் ஏராளமாக உள்ளன'' என்கிறார் பீட்டர் ஜெயராஜ்.
வேலூர் மாவட்டம், பானாவரத்தில் இரண்டாவது நூலகத்தைத் திறந்தார்கள். இந்த நூலகத்தைப் பயன்படுத்துவோர், இலங்கையில் இருந்து வந்த குழந்தைகள். மூன்றாவது நூலகத்தை, திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளியில் அமைத்திருக்கிறார்கள்.
''ஊத்துக்குளியில் அமைத்திருக்கும் விதை நாற்றுப் பண்ணைக்கு அழைத்துச்சென்று ஒவ்வொரு விதைக்கும் ஒரு கதை சொல்வோம். ஒவ்வொருவருக்கும் இரண்டு விதைகள் தருவோம். அந்த விதைகளை தங்கள் வீட்டுப் பக்கத்தில் விதைக்க வேண்டும். சனிக்கிழமைகளில் எல்லோரும் சந்தித்து, தங்கள் செடி எந்த அளவு வளர்ந்திருக்கிறது என்பதை ஒரு நோட்டில் எழுத வேண்டும். பனையைத் தேடி நெடும்பயணம், பாரம்பரிய நெல் திருவிழா என்று இயற்கையோடு குழந்தைகளை இணைக்கிறோம்'' என்கிறார் அழகேஸ்வரி.
''சிறுவர் புத்தகங்களையும் அதை எழுதியவர்களையும் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியையும் நடத்துகிறோம். சுட்டி விகடனில் அடிக்கடி கதைகள் எழுதும் ஓவியா, குக்கூ சிறுவர் குழுவில் இருக்கிறார். சிற்பம், ஓவியம், நாடகம், திரையிடுதல் உள்ளிட்டவற்றையும் செய்துவருகிறோம். குமார் அம்பாயிரம் போன்ற இசைக் கலைஞர்கள் பாராம்பரிய இசையைக் கற்றுத்தருகின்றனர். வேலு சரவணன் நாடகம் நடத்தியிருக்கிறார்'' என்கிறார் முத்துகிருஷ்ணன்.

    தரையில் விரியும் வானவில் !

    வி.எஸ்.சரவணன்
     ''அக்கா... ரொம்ப வெக்கையா இருக்கு... போய் குளிச்சிட்டு வந்துடுறேன்'' என்று சொல்லிவிட்டு ஓடுகிறான், குமார் என்கிற மாணவன். பள்ளிக்குப் பக்கத்தில் இருக்கும் குளத்தில் ஐந்து நிமிடங்கள் குளித்துவிட்டு, தலையைத் துவட்டியவாறு வகுப்பில் அமர்கிறான்.
    நாகப்பட்டினம் மாவட்டம், சிக்கலில் இருக்கும் வானவில் பள்ளி மிகவும் வித்தியாசமானது. மரங்கள், அருகிலேயே வயல், குளங்கள் என்று அற்புதமான சூழலில் அமைந்திருக்கிறது. மாணவர்கள், கற்றல்  சுமையே தெரியாமல் மகிழ்ச்சியோடு படிக்கின்றனர். ஆசிரியர்களை அண்ணன், அக்கா என்றுதான் அழைக்கிறார்கள். இது உண்டு உறைவிடப் பள்ளி.
    இங்கே படிக்கும் மாணவர்கள், பூம்பூம் மாட்டுக்காரர்கள் மற்றும் நரிக்குறவர்கள் வீட்டுக் குழந்தைகள். பெற்றோர்களில் ஒரு சிலரைத் தவிர யாருமே கல்வி கற்காதவர்கள்.
    ''எங்க அப்பா, அம்மா படிக்காததுக்கும் சேர்த்து நாங்க படிப்போம்'' என்கிற இவர்கள், விளையாட்டோடு கற்று வருகின்றனர்.
    ''மாட்டுப் பொங்கல் அன்று மாட்டின் கழுத்தில் நெட்டிமாலை போடுவாங்க. அந்த மாலையில் இருந்த ஒரு நெட்டியில், சூப்பரான மனித பொம்மை செய்திருக்கிறான், நான்காம் வகுப்புப் படிக்கும் பாபு'' என்று பெருமையோடு சொல்கிறார் ஆசிரியை கௌதமி.
    இந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியர்,  ஆசிரியர் என்கிற வித்தியாசம் கிடையாது. எல்லோரும் சமம்தான். மதியம் சாப்பிடும்போது,  மாணவர்களுடன் ஆசிரியர்கள் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகிறார்கள். ஆசிரியை மீனாட்சியின் தட்டில் இருக்கும் உருளைக்கிழங்கு பொரியலை, மாணவி அஞ்சலைதேவி எடுத்துச் சாப்பிடுகிறாள்.
    ''தெய்வானை என்கிற மாணவியை எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஏன்னா... இங்கு தளிர், துளிர் வகுப்புகளும் உண்டு. அந்த சின்னக் குழந்தைகளும் இங்கேதான் தங்கிப் படிக்கிறாங்க. அதில், ஒரு குழந்தைக்கு உடம்பு சரியில்லாதபோது, தெய்வானை அந்தக் குழந்தையை ஒரு அம்மா போல கவனிச்சுக்கிட்டா'' என்று நெகிழ்ச்சியோடு சொல்கிறார் ஆசிரியை வாசுகி.
    ''என் வகுப்பில் ஒரு பையன் படிக்கிறான். அவனை ஆடு, மாடு மேய்க்க அப்பா வித்துட்டார். அவனை விற்ற இடத்தில் சரியாகச் சாப்பாடு போடாமல் கொடுமை செய்திருக்காங்க. எப்படியோ... அங்கே இருந்து ஓடி வந்துட்டான். இப்போ இங்கே, படிப்பில் பிரமாதப்படுத்துறான்'' என்கிறார் ஆசிரியை மீனாட்சி.
    ஆசிரியர்கள் ஷாலினி, யாஸ்மின் பர்வீன், சந்திரன், சுரேந்தர்  ஆகியோர் தங்கள் மாணவர்களைப் பற்றி வித்தியாசமான அனுபவங்களைச் சொல்கிறார்கள். ''இங்கே வேலை செய்வது, மகிழ்ச்சியாகவும் மனநிறைவாகவும் இருக்கிறது'' என்கிறார்கள்.
    வகுப்பறைகளில் விதவிதமான ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. ''அங்கிள், இது நான் வரைஞ்சது...'' ''இது என்னோடது...'' என்று உற்சாகத்துடன் தங்கள் படைப்புகளைக் காட்டுகிறார்கள்.
    வானவில் பள்ளியை நடத்தும் பிரேமா ரேவதி ஓர் எழுத்தாளர், நாடங்களில் நடிப்பவர். ''சுனாமியின் பாதிப்பில் படிப்பைப் பாதியில் நிறுத்தியவர்களை மீண்டும் பள்ளிகளில் சேர்க்கலாம் என்றுதான் இங்கே வந்தேன். பல நடைமுறை சிக்கல்களைத் தாண்டித்தான் இந்தப் பள்ளியை நடத்துகிறோம். முதல் தலைமுறையாகப் படிக்க வந்திருக்கும் இந்தக் குழந்தைகள், வருங்காலத்தில் எல்லோரையும் போல இயல்பான வாழ்க்கையை வாழவேண்டும்'' என்கிறார்.
    ''அக்கா... என்னை சிவா தள்ளிவிட்டுட்டான்'' என்று ஒரு குட்டிப் பெண் சொல்ல, அவளைச் சமாதானப்படுத்தியவாறு அழைத்துச் செல்கிறார் பிரேமா ரேவதி.
    அந்தப் பசுமையான சூழலில் ஆட்டம் ஆடியவாறு, பாட்டுப் பாடியவாறு, பாடங்களைப் படிக்கும் மாணவர்களின் குரல், உற்சாகமாக காற்றில் ஒலிக்கிறது.

SUPPORT GOVERNMENT SCHOOLS

கற்க கசடற.... விற்க அதற்குத் தக! - 1

பாரதி தம்பி, ஓவியம்: ஹாசிப்கான்
 
''கல்வியில் மார்க் பார்த்து தகுதி, திறமை குறிப்பது பெரிய முட்டாள்தனமும் அயோக்கியத்தனமும் ஆகும். மார்க்கினால் கெட்டிக்காரத்தனம், சோம்பேறித்தனம் கண்டுபிடிக்க முடியாது என்பது மாத்திரம் அல்லாமல், யோக்கியன்அயோக்கியன் என்பதையும், அறிவாளிமடையன் என்பதையும் கண்டுபிடிக்க முடியாது என்பதை கடுகளவு அறிவு உள்ளவனும் ஒப்புக்கொள்வான்!''
- பெரியார், 16.03.1968, விடுதலை
பி.எஸ்.எல்.வி. ராக்கெட் விடுவதைக் காட்டிலும் பிள்ளைக்கு எல்.கே.ஜி. சீட் வாங்குவதுதான் இன்றைய தேதிக்கு சவால்!
சிபாரிசு, நன்கொடை, காத்திருப்பு, அவமானம்... என இதன்பொருட்டு எந்தத் துன்பங்களையும் சுமக்க, பெற்றோர்கள் தயார். குழந்தை பிறந்து தவழ ஆரம்பிக்கும்போதே போர்க்களத்துக்குத் தயாராவதைப் போல ஒவ்வொன்றாக விசாரிக்க ஆரம்பிக்கிறார்கள். எந்தப் பள்ளி, எவ்வளவு ஃபீஸ், யாரைப் பிடித்தால் சீட் கிடைக்கும், ஒருவேளை இந்தப் பள்ளியில் சீட் கிடைக்காவிட்டால் வேறு எந்தப் பள்ளியில் சேர்ப்பது என... கல்யாணத்துக்கு வரன் பார்ப்பதைவிடவும் அதிகமான விசாரணைகள். மழலை மாறாத மூன்று வயதுக் குழந்தையைப் பள்ளிக்கூடம் அனுப்ப, ஒட்டுமொத்தக் குடும்பமும் சிந்திக்கிறது; உழைக்கிறது. இதுவா, அதுவா, மெட்ரிக்கா, சி.பி.எஸ்.சி-யா எனப் பட்டிமன்றம் நடத்துகிறது.
பெற்றோர் சும்மா இருந்தால்கூட சுற்றி இருப்பவர்களும் சொந்தக்காரர்களும் 'என்னாச்சு... பையனை எந்த ஸ்கூல்ல போடப் போறீங்க?’ என்று விசாரிக் கின்றனர்; புத்திமதி சொல்கின்றனர். விளைவு, பள்ளியில் சேர்த்துவிட்ட பிறகு யாராவது, 'அந்த ஸ்கூல் பிரமாதமா இருக்கு!’ என்று வேறு ஒரு பள்ளியைச் சொல்லிவிட்டால், 'தவறு இழைத்துவிட் டோமோ?’ என்று பெற்றோர்கள் குற்றணர்வு அடைகிறார்கள். மொத்தத்தில், பெற்றோரின் சிந்தனை யின் ஒவ்வோர் இழையும் பிள்ளையின் பள்ளிக்கூடத்தைச் சுற்றியே பின்னப்படுகிறது.
''போன பிப்ரவரி மாசம், சென்னை, வளசரவாக்கத்தில் இருக்கிற ஒரு ஸ்கூல்ல என் பையனுக்கு பிரி-கே.ஜி. சீட் கேட்கப் போனேன். 'நீங்க மூணு வருஷத்துக்கு முன்னாடியே குழந்தை பிறந்ததுமே வந்திருக்கணும். அப்பவே எல்லாம் புக் ஆகிடுச்சு’னு சொன்னது, தாங்க முடியாத கொடுமை. என் பையனுக்கு வயசே ரெண்டரைதான் ஆகுது. மூணு வருஷத்துக்கு முன்னாடியே புக் பண்ணணும்னா, குழந்தை பிறக்கிறதுக்கு முன்னாடியே பண்ணிடணும் போல இருக்கு'' என்று அதிர்ச்சி விலகாமல் சொன்னார் அந்த நண்பர். இதுபோல பெற்றோர்களுக்குப் பல அதிர்ச்சிகள்.
சென்னை, பெரும்பாக்கத்தில் உள்ள சி.பி.எஸ்.சி. பள்ளி ஒன்றில் தன் இரண்டரை வயது மகளை பிரி-கே.ஜி-யில் சேர்க்க 1.80 லட்சம் ரூபாய் கட்டியிருக்கிறார் ஒருவர். வெவ்வேறு பெயர்களில் வசூலிக்கப்படும் மற்ற கட்டணங்களையும் சேர்த்தால், இது இரண்டு லட்ச ரூபாய் ஆகிவிடும்.
இரண்டரை வயதுக் குழந்தையை, பால்வாடிக்கு அனுப்ப இரண்டு லட்சமா?
''இதில் ஒரு லட்ச ரூபாய் நன்கொடை. அதுக்கு எந்த ரசீதும் கிடையாது. பணத்தைக் கொடுத்ததும் எண்ணிவெச்சுக்குவாங்க, அவ்வளவுதான். என்கிட்ட பணத்தை வாங்கிட்டு, 'கவுன்டர்ல அப்ளிகேஷன் வாங்கிக்கோங்க’னு சொன்னார் ஒருவர். அங்கே போய்க் கேட்டா, 500 ரூபாய் கேட்கிறாங்க. 'இப்பத்தானே உள்ளே ஒரு லட்சம் கொடுத்தேன்’னு சொன்னா, 'அது வேற, இது வேற. அப்ளிகேஷன் விலை 500 ரூபாய்’னு பதில் வருது. சரினு அதையும் கொடுத்து வாங்கி நிரப்பிக் கொடுத்தா, 'புராசஸிங் ஃபீஸ்’னு சொல்லி இன்னொரு 500 ரூபாய் கேட்கிறாங்க. ஹவுஸிங் லோன் வாங்கும்போதுதான், புராசஸிங் ஃபீஸ் எல்லாம் கேள்விப்பட்டிருக்கேன். இப்போ பிள்ளையை ஸ்கூல்ல சேர்க்கவே இந்த நிலைமை'' என்று புலம்புகிறார். பெரும்பாக்கத்தில் உள்ள நான்கைந்து பள்ளிகளில் அதுவே சிறந்தது என்று எல்லோரும் சொல்வதால், அதில் கொண்டுபோய் சேர்த்துள்ளார். மீதம் உள்ள 80 ஆயிரம் ரூபாயை இன்னும் ஒரு மாதத்தில் கட்ட வேண்டுமாம்.
எல்லாம் முடிந்த நிலையில் இப்போது பள்ளி நிர்வாகத்திடம் இருந்து இவருக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், 'குழந்தைக்கு எல்லா சொட்டு மருந்துகளும் கொடுக்கப்பட்டுள்ளதா? உடல்நிலை, மனநிலை சரியாக உள்ளனவா? ஏதேனும் நோய்கள் இருக்கின்றனவா?’ என்று ஊர்ப்பட்ட கேள்விகள். இவற்றுக்கு எல்லாம் பதில் வாங்கி மருத்துவச்சான்றுகள் சமர்ப்பிக்க வேண்டும். ''இதுல என்ன கொடுமைனா, இந்த நிமிஷம் வரைக்கும் அவங்க என் மகளைப் பார்க்கவே இல்லை. ஆளையே பார்க்காம அட்மிஷன் போட்டுட்டாங்க. பணம் மட்டும்தான் அவங்களோட நோக்கம்'' என்று தெள்ளத் தெளிவாகப் பேசும் அவர், பிறகு ஏன் அந்தப் பள்ளியிலேயே கொண்டு சேர்க்கிறார்?
''வேற வழி இல்லைங்க. ஊர்ல எல்லா ஸ்கூலும் இப்படித்தான் இருக்கு. அதுல ஏதோ ஒரு ஸ்கூலைத்தான் நாம செலக்ட் பண்ணணும். 'வீட்டுப் பக்கத்துல இருக்கிற சின்ன ஸ்கூல்ல சேர்க்க வேண்டியதுதானே?’னு கேட்கலாம். என்ன பிரச்னைனா, நான் குடியிருக்கிற அப்பார்ட்மென்ட்ல எப்படியும் 30 குழந்தைகள் இருப்பாங்க. பெரும்பாலான குழந்தைகள் அந்த ஸ்கூல்லதான் படிக்கிறாங்க. நான் மட்டும் சின்ன ஸ்கூல்ல சேர்த்துவிட்டா, அது என் மகளோட மனசுல தாழ்வுமனப்பான்மையை உருவாக்கிடுமோனு பயமா இருக்கு. எனக்கு என் மகளோட எதிர்காலம்தானேங்க முக்கியம்'' என்கிறார்.
பெற்றோர்களின் இந்த எண்ண ஓட்டம் உண்மைதான் என்றபோதிலும், இதில் குழந்தைகளை மட்டுமே காரணமாகச் சொல்வது முழு உண்மை அல்ல. பெற்றோர்களைப் பொறுத்தவரை, தங்கள் குழந்தைகள் புகழ்பெற்ற பள்ளியில் படிப்பதைத்தான் விரும்புகின்றனர். இதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, இத்தகைய பெயர் வாங்கிய பள்ளியில் படித்தால்தான், தரமான கல்வி கிடைக்கும். அதுதான் குழந்தையின் எதிர்காலத்தை உத்தரவாதப் படுத்தும் என்ற எண்ணம். இரண்டாவது, அத்தகைய பெரிய பள்ளிக்கூடங்களில் தன் பிள்ளை படிப்பதுதான் தங்களுக்குக் கௌரவம். ஒரு பள்ளியை இறுதி செய்வதில் இந்த இரண்டும் பெரும்பங்கு வகிக்கின்றன!
சென்னை அண்ணா மேம்பாலம் அருகே உள்ள டி.ஏ.வி. பள்ளிக்கூடம் இதற்குச் சிறந்த உதாரணம். ஒவ்வோர் ஆண்டும் இங்கு விண்ணப்பப் படிவம் வாங்கும்போது நூற்றுக்கணக்கான பெற்றோர்கள் சாலையோர பிளாட்பாரத்தில் நாளிதழ்களை விரித்துப்போட்டு இரவெல்லாம் படுத்திருப்பார்கள். உயர் அந்தஸ்தில் இருப்பவர்கள், அதிகாரிகள், வி.ஐ.பி-கள்... எனப் பலரும் அங்கு 'பெர்த்’ பிடித்திருப்பார்கள்.

கடந்த ஆண்டு ஒரு நள்ளிரவில் அங்கு சென்றபோது, கிட்டத்தட்ட அண்ணாசாலை வரைக்கும் வரிசையாகப் பெற்றோர்கள் படுத்திருந்தார்கள். தற்காலிக டீக்கடைகள்கூட முளைத்திருந்தன. அப்போது, திடீர் என ஒரு போலீஸ் ஜீப் வந்து நின்றது. போலீஸைப் பார்த்ததும் மக்கள் கொஞ்சம் பயந்து எழுந்துகொள்ள, ஜீப்பில் இருந்து மஃப்டி உடையில் இறங்கிய இன்ஸ்பெக்டர், அதுவரை அங்கு படுத்திருந்த தன் மனைவியை ஜீப்பில் ஏற்றி அனுப்பிவிட்டு அவர் படுத்துக்கொண்டார். இத்தனைக்கும் அந்தப் பள்ளியில் சீட் கிடைக்கப்போவது உறுதி அல்ல. வெறுமனே விண்ணப்பப் படிவம் வாங்கவே இவ்வளவு போட்டி.
இப்படி தமிழ்நாடு முழுக்க பல பள்ளிக்கூடங்கள் உள்ளன. பெற்றோர்கள் எப்படியாவது அதில் சீட் வாங்கத் துடிக்கின்றனர். தங்களுக்குச் சாத்தியமான அத்தனை தொடர்புகளையும் பயன்படுத்துகின்றனர்.
எனக்குத் தெரிந்த ஒரு குடும்பம், எட்டாம் வகுப்புப் படித்து முடித்துள்ள தன் மகனை சென்னையின் புகழ்பெற்ற ஒரு பள்ளியில் சேர்க்க வேண்டும் என்பதற்காகவே, திண்டுக்கல்லில் இருந்து முகப்பேருக்குக் குடிபெயர்ந்து இருக்கிறது. அவர்களுக்கு சென்னையில் வேறு எந்த வேலையும் இல்லை. பார்த்துகொண்டிருந்த வேலையை இதற்காகவே விட்டுவிட்டு, வேறு வேலையில் சேர்ந்திருக்கிறார் அந்தக் குடும்பத் தலைவர். ''பசங்களோட எதிர்காலம் நல்லா இருக்கணும்னா, இதை எல்லாம் செஞ்சுதான் சார் ஆகணும்'' என்கிறார்.
வேலையை விடுவது, ஊர் மாறுவது மட்டுமா... புகழ்பெற்ற பள்ளிகளில் மகனை/மகளைச் சேர்ப்பதற்காகப் பெற்றோர்கள் செய்யும் 'தியாகத்தின்’ பட்டியல் இன்னமும் நீளும்!
பள்ளிக்கூடத்துக்கு அருகே வீடு மாற்றுவது, நகைகளை அடமானம் வைப்பது, சொத்துகளை விற்பது, ஊரே கழுவி ஊற்றும் ஊழல்வாதியாக இருந்தாலும் மானம் மரியாதை பார்க்காமல் சிபாரிசுக் கடிதம் வாங்க அலைவது, பணத்தையும் பிடுங்கிக்கொண்டு தடித்தனமாகப் பேசும் பள்ளி நிர்வாகத்தை எதிர்க்க முடியாத இயலாமை, நெருங்கிய சொந்தங்களின் திருமணத்துக்குக்கூட குடும்பத்துடன் செல்ல முடியாத கொடுமை, இவற்றின் பலனாக நிம்மதி இழந்து, தூக்கம் கெட்டுப் பரிதவிப்பது... என்று பெற்றோர்களின் 'தியாகம்’ பெரியது.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளையின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணி இந்தத் துன்பங்களை ஏற்கின்றனர். ஆனால், இந்தத் தியாகத்தின் பயனாளிகள் யார்?
''நம்ம வாழ்க்கைதான் இப்படிப் போயிடுச்சு. பசங்களாவது நல்லா இருக்கட்டும்'' என்ற ஏக்கம்தான் எல்லாவற்றுக்குமான அடிப்படை. அவர்கள் தங்கள் தலைமுறையின் வளர்ச்சியை, தான் நிற்கும் இடத்தில் இருந்து ஓர் அடியேனும் முன் நகர்த்த நினைக்கின்றனர். சிலர், நான்கு தலைமுறை முன்னேற்றத்தை ஒரே தாவலில் கடந்துவிட முயற்சிக்கின்றனர். தன் முதுகுக்கு இந்தப் பாரம் அதிகம் என்று தெரிந்தாலும் சுமப்பது அதனால்தான். அந்த அன்பில் பழுது ஏதும் இல்லை. ஆனால், இந்தக் கண்மூடித்தன மான அன்புதான், கல்வியின் பெயரால் பெற்றோர்கள் சுரண்டப்படுவதற்கான அடிப்படை.
உயிருக்குப் போராடும் ஒருவரை, 'எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை டாக்டர். எப்படியாவது காப்பாத்திடுங்க’ என்று சொல்லிச் சேர்க்கும்போது, நிபந்தனையற்று நம்மைச் சுரண்டும் உரிமையையும் சேர்த்தே வழங்கிவிடுகிறோம். 'என் பிள்ளை வாழ்க்கை நல்லா இருந்தா போதும்’ என்று எண்ணி, புகழ்பெற்ற தனியார் பள்ளிகளை நோக்கிச் செல்லும்போதும் இதுதான் நடக்கிறது.
அவர்கள், ரத்தமும் சதையுமான உங்கள் பிள்ளையை, பணம் காய்க்கும் இயந்திரமாகப் பார்க்கிறார்கள். ஒரு பள்ளியில் எல்.கே.ஜி-க்கு 50 ஆயிரம் கட்டணம் வாங்குகின்றனர் என்று வையுங்கள். ஒரு செக்ஷனுக்கு 50 பேர் என்றால் நான்கு செக்ஷன்களுக்கு 200 பேர். மொத்தம் ஒரு கோடி ரூபாய். அப்படியே ஒவ்வொரு வகுப்பறையாகக் கணக்கிட்டால், இந்தத் தொகையின் பிரமாண்டத்தைப் புரிந்துகொள்ளலாம். புற்றீசல் போல பல்கிப் பெருகியிருக்கும் தனியார் பள்ளிகளின் ஒரே இலக்கு, இந்தப் பணம்தான். அதே நேரம், அவர்கள் தங்களுக்குச் சந்தையில் டிமாண்ட் இருப்பது போன்ற தோற்றத்தையும் தக்கவைக்க வேண்டியிருக்கிறது. ''அஞ்சு சீட்தான் இருக்கு'' என்று உள்ளே வரும் ஒவ்வொரு பெற்றோரிடமும் சொல்கிறார்கள். விளைவு... ஐந்தில் ஒன்றைப் பெற்றிட பெற்றோர்கள் துடிக்கின்றனர்.

இன்று, தமிழ்நாட்டில் மட்டும் 3,890 மெட்ரிக் பள்ளிகளும், 499 சி.பி.எஸ்.சி. பள்ளிகளும் இருக்கின்றன. பளபளக்கும் பிரமாண்ட கட்டடங்களைக்கொண்டிருப்பவை மட்டுமல்ல; தெருமுக்கில் நான்கு கிரவுண்டு இடத்தில் நடத்தப்படும் பள்ளியும் இதில் அடக்கம். எதுவாக இருந்தாலும் குறைந்தது 10 ஆயிரம் ரூபாயில் தொடங்கி, 30 ஆயிரம், 40 ஆயிரம், 50 ஆயிரம் என்று அதிகரித்துக் கொண்டே போகிறது.
10 ஆயிரம் சம்பாதிப்பவர், கடன் வாங்கி தன் பிள்ளையை 50 ஆயிரம் ரூபாய் பள்ளியில் சேர்க்கிறார் என்றால், 20 ஆயிரம் சம்பாதிப்பவர் ஒரு லட்ச ரூபாய் பள்ளியில் சேர்க்கிறார். தொகை அதிகரிக்க... அதிகரிக்க, தங்கள் கௌரவத்தின் படிநிலை உயர்வதாகவும், குழந்தையின் எதிர்காலப் பாதுகாப்பு உத்தரவாதப்படுவதாகவும் பெற்றோர்கள் கருதுகின்றனர். ஆனால், '10 ஆயிரம் ரூபாய் ஸ்கூல், 30 ஆயிரம் ரூபாய் ஸ்கூல்’ என்று பள்ளிக்கூடங்களைப் பணத்தை வைத்து பாகுபடுத்துவதன் மூலம், சிறுவயதிலேயே குழந்தைகளின் மனதில் ஏற்றத்தாழ்வுகள் இயல்பானவை என்று பதிந்துபோகிறது.
ஒரு தெருவில் 10 குழந்தைகள் இருக்கிறார்கள், அதில் 4 பேர் பணக்காரப் பள்ளியிலும், 4 பேர் ஓரளவு பணக்காரப் பள்ளியிலும், 2 பேர் அரசுப் பள்ளியிலும் படிக்கிறார்கள் என்றால்... அந்த 10 குழந்தைகளின் நட்பு எப்படி சம இயல்புள்ளதாக இருக்கும்? பள்ளியில் ஏழை நண்பன், தெருவில் பணக்கார நண்பன் என்ற முரண்பாடு, அவர்களுக்குப் பயிற்றுவிப்பது என்ன? ஏற்றத்தாழ்வுகளும் வேறுபாடுகளும் மிகவும் சாதாரணமானவை என எண்ணத் தொடங்குகிறார்கள். இது கல்வியுடன் மட்டும் முடியாமல் உணவில், உடையில், பயன்படுத்தும் பொருள்களில், வாகனங்களில்... என அனைத்து வேறுபாடுகளிலும் நீள்கிறது.
சாதி வேற்றுமைகூட அவர்களுக்குத் துருத்தலாகத் தெரியவில்லை. அதையும் ஓர் இயல்பு போல ஏற்றுக்கொள்கின்றனர். நாகரிகத்தை வளர்க்கவேண்டிய கல்வி, அநாகரிகத்தையும், சமத்துவத்தை உருவாக்க வேண்டிய கல்வி, பாகுபாட்டையும் வளர்ப்பது இவ்வாறுதான். பிஞ்சு மனதில் நஞ்சை விதைக்கும் இந்த அநீதியான கல்விக்கு அடிப்படையாக இருப்பது எது?
- பாடம் படிப்போ

Friday, 20 June 2014

Sunday, 15 June 2014

education

முப்பருவ கல்வி முறை நல்லதா?



          தமிழகத்தில் பள்ளிக் கல்வித் திட்டம் சீர்கெட்டு போய் வருகிறது. அடுத்த ஆண்டு எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் வெளிவரும் போது இது வெளிப்படையாக தெரியும் என கல்வியாளர்கள் கூறுகின்றனர். காரணம், முப்பருவ கல்வி முறையால் மாணவர்களின் எழுத்தறிவு திறன் குறைந்து போய் விட்டதுதான். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிகளில் முப்பருவ கல்வி முறை கொண்டு வரப்பட்டது. இதன்படி, பாடப்புத்தகங்கள் மூன்று பிரிவுகளாக பிரித்து, மூன்று பருவங்களுக்கு தரப்படுகிறது.


           காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு தேர்வுகள் என்பது போய், மூன்று பருவத் தேர்வுகளாக நடத்தப்படுகிறது. அதாவது, முதல் பருவத்திற்கான தேர்வு எழுதியதுடன் அந்த பாடப்புத்தகங்களை தூக்கி வீசி விடலாம். 2ம் பருவத் தேர்வு முடிந்ததும் அந்த புத்தகங்களையும் மீண்டும் படிக்க வேண்டிய அவசியமில்லை. இப்படியாக, மூன்றாவது பருவத் தேர்வு எழுதும் போது அந்த பருவத்திற்கான பாடங்களை மட்டும் படிப்பதால், முதல் இரண்டு பருவங்களில் படித்ததை மாணவர்கள் சுத்தமாக மறந்து விடுகிறார்கள். இந்த முப்பருவ முறையில் கடந்த சில ஆண்டுகளாக படித்து வந்த மாணவர்களில் முதல் பேட்ச் மாணவர்கள், அடுத்த ஆண்டு ஏப்ரலில் எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வை எழுத உள்ளார்கள். இவர்கள் ஒவ்வொரு பருவத்திற்கும் குறைந்த அளவிலான பாடங்களை மட்டுமே படித்து பழகி விட்டதால், மொத்தமாக ஓராண்டுக்கு உரிய பாடங்களை படித்து தேர்வு எழுதுவது அவர்களுக்கு மிகவும் சிரமமானதாகி விடும். அதனால், அவர்கள் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவது கடினம் என கல்வியாளர்கள் கூறுகிறார்கள். இந்த சூழ்நிலையில், அரசு பள்ளி ஆசிரியர்கள் எப்படியாவது மாணவர்களை பாஸ் செய்ய வைத்தால் போதும் என்ற மனநிலையில் உள்ளார்கள். எனவே, நன்றாக படிக்கும் மாணவர்களை இன்னும் அதிக மதிப்பெண் பெறச் செய்யலாம் என்று கவனம் செலுத்துவது குறையும். அதே சமயம், பல தனியார் மெட்ரிக் பள்ளிகளில் முப்பருவ முறையை அமல்படுத்தினாலும் மூன்றாவது பருவத்தின் போது முதல் 2 பருவப் பாடங்களையும் சேர்த்தே தேர்வு எழுத வைத்துள்ளார்கள். இந்த நிலைமை குறித்து அரசு ஆசிரியர்கள் கவலைப்படுகிறார்கள். அதே சமயம், பள்ளிக் கல்வி துறை அதிகாரிகள் இதை கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. இந்நிலையில், முப்பருவ கல்வி முறையால் ஏற்படும் நல்ல விஷயங்கள் எவை, பாதிப்புகள் எவை என கல்வித் துறையினர் ஆராய வேண்டியது அவசியமாகும்.

Thursday, 12 June 2014

மழைநீர் சேகரிப்பின் வளர்ச்சி

வாரே வாவ்... ஹிவரே பஸார்!
சோதனைகளைச் சாதனைகளாக மாற்றிய கலக்கல் கிராமம்

'உன்னால் முடியும் தம்பி'..., 1988-ம் ஆண்டில் வெளியான இந்தப் படத்தை பலரும் மறந்திருக்க முடியாது. கே. பாலச்சந்தர் தீட்டியிருந்த இந்த திரையோவியத்தைப் பார்த்தவர்கள், 'ம்... இதெல்லாம் சினிமாவுக்குத்தான் சரிப்பட்டு வரும். நிஜத்துல... அதுவும் நம்ம ஊருல... இதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை' என்றுதான் முணுமுணுத்திருப் பார்கள்.
ஆனால், சினிமாவில் கற்பனையாக சாதித்துக் காட்டிய விஷயங்களையும் தாண்டி, பல்வேறு சாதனைகளை நிஜத்தில் ஒரு கிராமம் சாதித்துக் கொண்டிருக்கிறது என்றால்... அது ஆச்சர்யமான விஷயம் தானே!
திரைப்படத்தில் 'உதயமூர்த்தி' என்ற பாத்திரத்தில் வரும் கமல்ஹாசன், ஏகத்துக்கும் போராடி ஒரு கிராமத்தை உன்னத கிராமமாக மாற்றி வைப்பார். இங்கே நிஜத்திலும் ஒரு உதயமூர்த்தி தோன்ற... விவசாயம், கால்நடை வளர்ப்பு, கல்வி என்று அனைத்து விஷயங்களிலும் அசத் தலாக எழுந்து நிற்கிறது அந்தக் கிராமம். முக்கியமாக, அதன் சாதனை யே... நீர்ப்பாசன மேலாண்மைதான்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் அஹமத்நகர் மாவட்டத் தலைநகரான அஹமத் நகரிலிருந்து 17 கி.மீ. தொலைவில், தக்காண பீடபூமி யின் மழை மறைவுப் பிரதேசத்தில் அமைந்திருக்கும் இந்தக் கிராமத்தின் பெயர் ஹிவரே பஸார். இங்கே, வருடத்துக்கு 40 செ.மீ. மழை பெய்தாலே... அதிகம். வறட்சி, 1972-ம் ஆண்டுக்குப் பிறகு தொடர்ச்சியாக குடிசை போட்டு கும்மியடிக்க ஆரம்பித்துவிடவே, விவசாயத்துக்கு வழியில் லாமல் போய்விட்டது. மனிதர்களுக்கு மட்டு மல்ல... கால்நடைகளுக்கும் உணவுப் பஞ்சம். குடிநீர் பிரச்னையும் சேர்ந்து கொள்ள... 'உள்ளூர் நரக வாழ்க்கைக்கு... நகரத்து நரக வாழ்க்கையே மேல்...' என்றபடி கொஞ்சம் கொஞ்சமாக இடம் பெயர ஆரம்பித்தனர். எஞ்சியவர்கள்... சாராயம் காய்ச்சுவது உள்ளிட்ட குற்றத் தொழில்களில் ஈடுபட... ஊருக்குள் குடியும், குற்றமும் அதிகரித் தது. உச்சக்கட்டமாக, 82-ம் ஆண்டில் குடிபோதை யில் ஒரு கொலையும் நடந்துவிட, சுற்று வட்டாரத்தில் கிராமத்தின் பெயர் ஒட்டுமொத் தமாகக் கெட்டுக் குட்டிச்சுவராகியது.
இப்படி படுபாதாளத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த அந்தக் கிராமம்தான் சிலிர்த் தெழுந்து இந்தியாவையே... ஏன்? உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது!
கடந்த 15 ஆண்டுகளில் தனிநபர் வருமானம் 20 மடங்கு உயர்ந்திருக்கிறது. படிப்பறிவு 30% என்பதிலிருந்து 90% என்று பல மைல் தூரம் தாண்டியிருக்கிறது. விவசாயம் ஏகத்துக்கும் கொழிக்க ஆரம்பிக்க... பால் உற்பத்தி பல மடங்கு பெருகிவிட்டது. இத்தனையையும் கௌரவிக்கும் விதத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், 'தேசிய நீர் விருது' இந்தக் கிராமத்துக்கு தேடி வந்திருக்கிறது.
'மொத்தமாக முடிந்தே போய்விட்டது' என்ற பலராலும் நினைக்கப்பட்ட ஹிவரே பஸார், இப்படி ரகளையாக எழுந்து நின்று சாதனைகள் படைத்துக் கொண்டிருக்க காரணமான கதாநாயகன்... பொபட்ராவ் பவார்!
கிரிக்கெட்டில் தோல்வி... கிராமத்தில் வெற்றி!
பல குடும்பங்களைப் போலவே, கிராமத்தின் மோசமான சூழல் காரணமாக குடிபெயர்ந்த குடும்பங்களில் ஒன்றுதான் பொபட் ராவின் குடும்பம். அஹமத்நகரில் குடியேறி, அங்கேயே படிப்பை தொடர்ந்தவர், மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் இடம் பிடித்தார். ரஞ்சி கோப்பை போட் டிகளில் விளையாடும் அளவுக்குப் புகழ்பெற்றதால், ஹிவரே பஸார் மக்களின் பார்வை இவர் மீது படிந்தது. அவரைத் தேடி வந்த மக்கள், 'ஊராட்சித் தலைவர் பதவியை ஏற்றுக் கொண்டு, நம் கிராமத்தை செழிப்பாக்க வேண் டும்' என்று அழைத்திருக்கின்றனர். அது... 1989-ம் ஆண்டு, ரஞ்சிக் கோப்பைக் கிரிக்கெட்டின் முடிவுச் சுற்றில் அவருடைய அணி தோல்வி யைத் தழுவியிருந்த நேரம்.
எம்.காம். படிப்பை முடித்திருந் தவர், ஏதாவது ஒரு வேலைக்குப் போகலாம் என்றுதான் சிந்தனையில் இருந்திருக் கிறார். ஆனால், கிராமத்தினரின் அழைப்பு அவரை கொஞ்சம் அசைத்துப் பார்த்திருக்கிறது. கிராமத்தின் நிலை மிகமிக மோசமாக இருந்தாலும், எப்போதுமே சமூகத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்டவர் என்பதால், மனதைத் திடப்படுத்திக் கொண்டு களத்தில் இறங்கிவிட்டார்.
துளிகூட நம்பிக்கையில்லாது ஏனோ, தானோ வென்று நாட்களை நகர்த்திக் கொண்டிருந்த மக்களின் எண்ணங்களைச் சீரமைக்கும் வேலையை முதலில் தொடங்கினார். முதல்கட் டமாக மக்களின் பார்வையை அவர் திருப்பியது... ஊரிலிருக்கும் பள்ளிக்கூடத்தின் மீதுதான். 'கடமையே' என்று வந்து, சென்று கொண்டிருந்த பொறுப்பற்ற ஆசிரியர்களுக்கு எதிரான போராட்டத்தை முதலில் கையில் எடுத்தார். ஊர் மக்களே பள்ளியை இழுத்துப் பூட்டும் அளவுக்கு கனன்ற போராட்டம், மாவட்ட ஆட்சித் தலைவர் தலையிட்டு, பொருத்தமான ஆசிரியர் கள் நியமிக்கும் வரை ஓயவில்லை.
இப்போராட்டத்துக்காக இரண்டு மாதங்கள் வரை உறுதி குலையாது ஓரணியாக அவருடன் நின்றனர் மக்கள். இதிலிருந்தே மக்களை ஒன்றி ணைக்கும் கலையை முழுமையாக அறிந்து கொண்ட பவார், கொஞ்சம் கொஞ்சமாக கிராமம் முழுக்க மரம் நடும் பணியில் மக்களை இறக்கி விட்டார். அடுத்தக் கட்டமாக, நீர் சேகரிப்பு முறைகளை நுணுக்கமாகத் தெரிந்து கொண்டவர், அந்தப் பணியை கையில் எடுத்தார்.
பச்சை ஆடை போர்த்திய மலை!
மகாராஷ்டிர மாநில அரசு, மாதிரி கிராமங் களை உருவாக்கும் வகையில் 'ஆதர்ஷ் கிராம் யோஜனா' எனும் திட்டத்தை அப்போது அறிவித்திருந்தது. மாநிலம் முழுக்க 300 கிராமங் களை, மாதிரி கிராமங்களாக உருவாக்குவதுதான் அரசின் திட்டம். இதை முழுமையாகப் பயன் படுத்திக் கொள்ள திட்டமிட்ட பொபட்ராவ், கிராம சபையைக் கூட்டி, 1994-ம் ஆண்டில் 'யஷ்வந்த்' என்ற பெயரில் தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்றைத் துவக்கினார். ஊரைச் சுற்றியிருக்கும் மலைக் குன்றுகளிலிருந்து வழியும் நீரைச் சேகரிக்கச் சுற்றுக் கால்வாய்கள், கண் காணிப்புத் தொட்டிகள், ஊற்றுக் கிணறுகள், குளங்கள், ஏரிகள் என மளமளவென பணிகள் சூடு பிடிக்கத் தொடங்கின. சுற்று வட்டாரத் திலிருந்து சமூக சேவை நிறுவனங்களும் தங்களின் ஆதரவுக் கரங்களை நீட்டின. ஆரம்பத்தில் சந்தேகக் கண் கொண்டு பார்த்த வனத்துறையும் கூட, ஒரு கட்டத்தில் களமிறங்கியது.
இப்படி நல்லெண்ணம் கொண்டோரெல்லாம் கைகோக்க... மொட்டைக் குன்றுகள் எல்லாம் இன்று பச்சை ஆடை போர்த்தி பளபளக்கின்றன. காட்டுநிலம் 70 ஹெக்டேராக உயர்ந்திருக்கிறது. விவசாயமோ... வெளுத்துக் கட்டுகிறது. கண்ணுக் கெட்டும் தூரம் வரை ஊர் முழுக்க பசுமை பாய் விரித்தது போல காட்சியளிக்கிறது. சுற்றியிருக்கும் குன்றுகள் மற்றும் புதர்களில் பறவைகளும் விலங்குகளும் பெருகத் தொடங்கிவிட்டன. தென்னாப்பிரிக்காவிலிருந்து கூட பறவைகள் இடம் பெயர்ந்திருக்கின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!
புல்வெளிகள் அதிகரித்திருந்தாலும், மண் அரிப்பைத் தடுப்பதற்காக மேய்ச்சல் தடை செய்யப்பட்டுள்ளது. புல் அறுத்துச் செல்ல அனுமதி உண்டு. ஒரு நாளைக்கு, ஒரு கட்டுப்புல் வீதம் அறுத்துச் செல்ல, ஓர் ஆண்டுக்கு நூறு ரூபாய் கட்டணத்தை ஊராட்சிக்குச் செலுத்த வேண்டும். புல் உற்பத்தி அதிகரிக்கவே, ஊராட் சியின் உத்தரவாதத்தோடு வங்கிக் கடன்கள் மூலம் மாடுகள் வாங்கப்பட்டு, தினசரி 4,000 லிட்டருக்கும் அதிகமாக பால் பொங்கத் தொடங்கிவிட்டது!
சாராயம் போனது... விவசாயம் வந்தது!
குறைந்த முதலீட்டில், அதிக பால் உற்பத்தி செய்தவர் என்பதற்காக மாநில அரசின் விருது பெற்றிருக்கிறார் மாருதி கோபால் தாங்கே. அவரிடம் பேச்சுக் கொடுத்தபோது, "பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் வெறும் விவசாயக் கூலி. ஒரு துண்டு நிலம் கூட கிடையாது. மாடுகளும் இல்லை. வங்கிக் கடனை வைத்து, மூன்று மாடுகளை வாங்கினேன். இன்று, என்னிடம் 20 மாடுகள் இருக்கின்றன. நாள் ஒன்றுக்கு 200 லிட்டர் பால் கறந்து விற்பனை செய்கிறேன். மூன்று ஏக்கர் நிலம் வாங்கியிருக் கிறேன். புது வீடும் கட்டி, குடி புகுந்து விட்டேன். விவசாயத்துக்கு அடுத்தபடியாக வருமானம் கொழிக்கும் தொழிலாக இது மாறிவிட்டது'' என்று தெம்பு தரும் வார்த்தைகளால் பூரித்தபடி சொன்னார்.
நிதி பட்ஜெட் கேள்விப்பட்டிருப்பீர்கள்... ஆனால், நீர் பட்ஜெட்? அதை ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் போட்டு வருகிறது ஹிவரே பஸார். ஒவ்வொரு ஆண்டும் ஊரில் தேங்கியி ருக்கும் நீரின் அளவைக் கணக்கெடுத்து, எந்தெந்தத் தேவைக்கு, எவ்வளவு பயன்படுத்தலாம் என்று பட்ஜெட் தயாரிக்கிறது ஊராட்சி.
நீர் அதிகமாகத் தேவைப்படும் கரும்பு போன்ற பயிர் வகைகளை பயிரிடக்கூடாது (சொட்டுநீர் அல்லது தெளிப்புநீர்ப் பாசனம் மூலம் பயிரிடலாம்). மரங்களை வெட்டக்கூடாது 60 அடி ஆழத்துக்கும் அதிகமான ஆழ கிணறுகளைத் தோண்டக்கூடாது. குடிநீரைத் தவிர்த்து வேறெந்த காரணத்துக்காகவும் ஆழ்குழாய் கிணறுகளைப் பயன்படுத்தக் கூடாது... இப்படி அடுக்கடுக்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட, நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர்ந்தது. சிக்கனமும், சேமிப்பும் தொடர்ந்து கடைபிடிக்கப் படவே... ஆண்டு தோறும் நீரின் இருப்பு பெருகிக் கொண்டிருக்கிறது (2007-ம் ஆண்டில் அனைத்துத் தேவைகளுக்கும் பயன்படுத்தப்பட்டது போக, 146.5 கோடி லிட்டர் நீர் உபரியாக மிஞ்சியது).
அடுத்த தலைமுறைக்கும்...!
அடுத்த தலைமுறைக்கும் விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் வேலைகளையும் பவார் விட்டு வைக்கவில்லை. ஆரம்ப பள்ளியிலிருந்தே நீர் சேகரிப்பு முறைகள் பற்றி மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. கிராமத்தில் வசந்தகால வாழ்க்கை திரும்பி வந்தது மட்டுமல்லாமல்... மக்களிடையே நட்பு உணர்வு, ஒற்றுமை உணர்வு ஆகியவற்றையும் அதிகரிக்கச் செய்துவிட்டது அந்த வறட்சி. ஆம், இப்போதெல்லாம் எந்தத் திட்டத்தையும் செயல்படுத்துவது அங்கே எளிதாகிவிட்டது. குடும்பக்கட்டுப்பாடு மட்டுமல்ல... திருமணத்துக்கு முன்பாக எய்ட்ஸ் பரிசோதனை கூட ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கிறது.
இத்தனைக்கும் காரணமாக இருக்கும் பவார், பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து ஊராட்சித் தலைவராக நீடிக்கிறார். அதுமட்டு மா...? முசோரியில் இருக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கான பயிற்சிக் கல்லூரி, மாநில அரசின் பயிற்சிக் கல்லூரி ஆகியவற்றில் கிராம முன்னேற்றம் பற்றி பாடம் எடுக்கும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார். நீர் சேகரிப்பு முறைகள் பற்றி பயிற்சியளிக்க வெளிநாடுகளுக்கும் கூட பயணம் பயணிக்கிறார். பவாருக்கும், அவருடைய கிராமத் துக்கும் தேசிய அளவில் பல்வேறு விருதுகள் குவிந்துகொண்டிருக்கின்றன. கிட்டத்தட்ட 113 நாடுகளிலிருந்து மாணவர்கள் மற்றும் நிபுணர்கள் அந்தக் கிராமத்தைத் தேடிவந்து அதிசயித்துத் திரும்பியுள்ளனர். இந்தியாவின் மற்ற மாநிலங்களி லிருந்தும் கிராம வளர்ச்சி பற்றிய பயிற்சிக்காக ஹிவரே பஸார் கிராமத்துக்கு வரிசையாக மக்கள் பிரதிநிதிகள் வந்தவண்ணம் உள்ளனர்.
எதிர்ப்புகள் இல்லாமலா?
எந்த நல்ல முயற்சியும் எதிர்ப்புகளைச் சந்திக்காமல் ஈடேறிவிடுமா என்ன...? பவாரின் முயற்சிக்கும் அப்படி எதிர்ப்புகள் முளைக்கத்தான் செய்தன. "94-ம் ஆண்டு, 'ஆதர்ஷ் கிராம் யோஜனா' மூலம் மரம் நடுவது, சுற்றுக் கால்வாய்கள் அமைப்பது உள்ளிட்ட பணிகளை ஊராட்சி மூலமாக செய்யத் திட்டமிட்டோம். காரணமே இல்லாமல் சுமார் 20 பேர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். அத்தனைபேரும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள். நல்ல விஷயங்களுக்கு முட்டுக்கட்டை போடுகிறார்களே என்று கோபம் வந்தாலும், 'உங்களின் விருப்பம் இல்லாமல் எதையும் செய்யப் போவதில்லை' என்று பணிகளைக் கிடப்பில் போட்டேன். ஓர் ஆண்டு உருண்ட நிலையில், 'சிரவண விழா' (நம்ம ஊர் மாட்டுப் பொங்கல் போல) அன்று மாடுகளுடன் அனுமான் கோயில் முன்பாக ஊரே திரண்டது. அப்போது, 'ஏற்கெனவே தீர்மானம் செய்தபடி மரம் மற்றும் கால்வாய் விஷயங்களை உடனடியாக ஆரம்பிக்கவேண்டும். அதற்கு இப்போது உறுதிமொழி கொடுத்தால்தான் இங்கிருந்து நகர்வோம்' என்று ஊரே அடம் பிடிக்க ஆரம்பித்துவிட்டது. இதைப் பார்த்ததுமே, ஏற்கெனவே எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் மொத்தமாக அடங்கிப்போனார்கள். இதையடுத்து, வேலைகளைத் துவங்கினேன். முன்பு எதிர்த் தவர்களே, எந்தப் பணியாக இருந்தாலும் இப்போது முதல் ஆளாக வந்து நிற்கிறார்கள்'' என்று சிரித்தபடியே சொன்ன பவார்,
"பொதுப்பணி எனும்போது, எல்லோருடைய சம்மதமும் அவசியம். இதை வைத்து ஊருக்குள் பிளவு வந்துடக்கூடாது என்பதுதான் எனக்கு முக்கியம். அதனால்தான் ஓர் ஆண்டு வரை காத்திருந்தேன். மக்கள் ஒன்றிணைந்து கைகோக்காவிட்டால், இது எதுவுமே சாத்தியப் பட்டிருக்காது'' என்று வெகு அடக்கமாகச் சொல்கிறார்!
'காந்தியின் கனவை நனவாக்குவோம்' என்று அவரின் பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதியன்று செய்தி ஊடகங்களில் முழ நீள விளம்பரத்தை தருவதைத் மட்டுமே வழக்கமாகக் கொண்டிருக்கும் அரசாங்கங்கள்தான் இந்தியா வின் பல மாநிலங்களிலும் நீடித்து கொண்டிருக் கின்றன. இதற்கு நடுவே, கிராமங்களின் தன்னி றைவு, ஒற்றுமையில்தான் இருக்கிறது என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறது ஹிவரே பஸார்.
இந்தியாவின் மூலைமுடுக்கெல்லாம் ஓராயிரம் ஹிவரே பஸார்கள் உதிக்கட்டும்!
தொடர்புக்கு: பொபட்ராவ் பவார், அலைபேசி: 094207-52525
நீர் சேகரிப்புத் தொழில்நுட்பங்கள்!
நீர் சேகரிப்பு முறைகளைப் பற்றி ஊருக்குள் இருக்கும் குழந்தையிடம் கேட்டால்கூட தெளிவாக விவரித்துவிடும். அந்த அளவுக்கு இந்த விஷயத்தில் ஊரே அத்துப்படியாக இருக்கிறது. இதைப்பற்றி நம்மிடம் பேசினார் வார்டு உறுப்பினர்களில் ஒரு வரான மோகன். , "மொட்டைத் தலையில் தண்ணீரை ஊற்றினால், சீக்கிரம் வடிந்துவிடும். இதுவே தலை முழுவதும் முடி இருந்தால், அத்தனை சீக்கிரமாக தண்ணீர் வடியாது. இதுதான் சுற்றுக் கால்வாய் களுக்கான (continuous contour trench) அடிப்படை. மலையைச் சுற்றிலும் தொடர்ச்சியாக வட்ட வடிவில் கால்வாய்களைத் தோண்டி, அங்கே மரங்களை வைத்திருக்கிறோம். மேலிருந்து கீழ் வரை இப்படிப்பட்ட கால் வாய்கள் இருப்பதால், தண்ணீர் சீக்கிரமாக வடியாமல் தடுக்கப்படும். அத்தோடு, மண் அரிப்பும் தடுக் கப்பட்டு, மலையின் மீது மரங்கள் வளர ஏதுவாக அமைந்துவிடும்.
கள்ளி மாதிரியான செடிகளை (உயிர் வாழ் வடிகட்டிகள் Living filters) வரிசையாக நடுவதன் மூலம் மண் அரிப்பைத் தடுப்பதோடு, தண்ணீரின் வேகத்தையும் கட்டுப்படுத்த முடியும். இதற்காகவே சிறிய அளவிலான கல்லணைகள் (Loose Boulder dam) மலையின் நடுப்பகுதியில் கட்டப்பட்டுள்ளன. கீழ்ப்பகுதியில் மண்மடைகள் (Earthern bunds) கட்டியிருக்கிறோம். மலையை விட்டு இறங்கிய தண்ணீர், உடனடியாக சமவெளியில் ஓடிவிடாமல் தடுப் பதற்காக இந்த ஏற்பாடு. இங்கேயும் கூட மரங்களை நடுவதன் மூலம் தண்ணீரின் வேகத்தைக் குறைத் துள்ளோம்.
சமவெளிப்பகுதிகளில் ஓரளவு மேடாக உள்ள நிலங்களில் ஊற்றுக் கிணறுகள் (Percolation Tanks) அமைத்துள்ளோம். நிலத்தடி நீரை அதிகரிப்பதுதான் முக்கியமான வேலை. மிகவும் சமவெளியாக இருக்கும் பகுதிகளில் குளங்கள், ஏரிகள், சிமென்ட் கண்காணிப்புத் தொட்டிகள் (Cement Check Dams), நீர் சேகரிப்புத் தொட்டிகள் (Cement Storage tanks ) சாதாரண கிணறுகள் (Open wells) அமைக்கப்பட்டுள்ளன.
உச்சியிலிருந்து சமவெளி வரை இதுபோன்ற அமைப்புகளை ஏற்படுத்தியிருப்பதால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திருப்பதோடு, அதிக எண்ணிக்கையில் மரங்களும் பெருகி, காடாக மாறிவிட்டது. இதன் மூலம் அதிக மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. அப்படியே மழை இல்லாவிட்டாலும்கூட, இருக்கின்ற நீரை வைத்தே எந்தப் பிரச்னையும் இல்லாமல் விவசாயத்தை செய்து கொண்டிருக்கலாம்" என்றார் உற்சாகமாக.
"இதுபோன்ற நீர் சேகரிப்பு முறைகள் எல்லா இடங்களிலும் சாத்தியமா?" என்ற கேள்விக்கு,
"தாராளமாக..." என்று பாய்ந்து வந்து பதில் தந்த பவார்,
"சம்பந்தபட்ட இடத்தின் புவியியல் அமைப்புக்கு ஏற்றது போல சிற்சில மாற்றங்களுடன் இந்தியா முழுக்கவே இந்த தொழில் நுடபங்களைப் பயன்படுத்தி தண்ணீரைச் சேகரிக்க முடியும்"
-குரலில் உறுதி தெறிக்கச் சொன்னார்.
"அரசியலா.... வேண்டவே வேண்டாம்!"
அஹமத்நகர் பகுதியில் படுபிரபல மாகிவிட்டார் பவார். இதை வைத்தே, சட்டமன்றம், நாடாளுமன்றம் என்று காலூன்றிவிடலாம். ஆனால், அதை யெல்லாம் அலட்சியமாக தவிர்த்து விடுகிறார் பவார். காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் கட்சி) ஆகிவற்றின் சார்பில் 2004-ம் ஆண்டு தேர்தலின்போது, நாடாளு மன்ற வேட்பாளராக அறிவிக்கத் தயார் என்று சொல்லியிருக்கின்றனர். ஆனால், அதை இவர் ஏற்றுக் கொள்ளவில்லையாம்.
"அரசியல் நடத்துவதில் எனக்கு நம்பிக்கை இல்லை" என்கிறார் தெள்ளத் தெளிவாக!
சமுதாய விவசாயம்!
ஊருக்குள் எல்லோருமே பயிர் செய்ய ஆரம்பித்துவிட்டதால் விவசாயக் கூலி வேலைகளுக்கு இங்கு ஆட்கள் பற்றாக்குறை. வெளியிலிருந்து 200 பேருக்கும் மேல் வந்தாலும் பற்றாக்குறை தீர்ந்த பாடில்லை. இதைச் சமாளிக்க என்ன வழி என்று யோசித்திருக்கிறார்கள். கடைசியில், 'ஒருவர் அருகிலி ருக்கும் மற்றொருவர் நிலத்தில் பரஸ்பரம் உதவி செய்வது' என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதையடுத்து, கவுரவம்... அது... இது என்று தயங்காமல், வேலை செய்வது என்பது ஊருக்குள் இயல்பான விஷயமாகிவிட்டது.
"அமுல் நிறுவனம் போல தனியானதொரு முத்திரையுடன் காய்கறி, பால் ஆகியவற்றை விற்பனை செய்வது பற்றி மாநில அரசுடன் பேசி வருகிறேன். கூடிய சீக்கிரத்தில் அதை ஆரம்பித்து விடுவோம். அதேபோல கிராமம் முழுக்கவே இயற்கை விவசாயம் செய்யத் தீர்மானித்துள்ளோம். இப்போதைக்கு முழுமையாக மாறிவிடவில்லை. என்றாலும், தனியானதொரு முத்திரையுடன் வியாபாரத்தை ஆரம்பிக்கும்போது, அத்தனையும் இயற்கையாக உற்பத்தி செய்த பொருட்களாகத்தான் இருக்கும்'' என்று அடித்துச் சொல்கிறார் பவார்.
சாராயத்துக்குத் தடை!
சுற்றுவட்டாரத்தில் ஒரு காலத்தில் சாராயம் என்றாலே.. அது 'ஹிவரே பஸார் சரக்கு' தான் என்று புகழ் பெற்றி ருந்தது. இன்றோ.... சாராயம் காயச்ச, குடிக்க எதற்குமே ஊருக்குள் அனுமதியில்லை. சாராயத் தொழிலை கைவிட்ட வர்களில் ஒருவரான சப்பாஜி நாராயண கிரி, "ஊராட்சி சிபாரிசு செய்ததனால் வங்கிக் கடன் கொடுத்தார்கள். இப்போது, தக்காளி, உருளைக் கிழங்கு என்று என்னுடைய நிலத்தில் விவசாயம் செழிக்கிறது. கூடவே, எருமை மாடுகள் மூன்று வைத்து பால் வியாபாரமும் செய்கிறேன். வாழ்க்கை முன்பை விட சந்தோஷமாக போய்க் கொண்டி ருக்கிறது" என்கிறார் மகிழ்ச்சி பொங்க.
கலக்கல் கிராமம் சில குறிப்புகள்!
ஒவ்வொரு ஏப்ரல் மாதமும் முதல் தேதி ஜில்லா பரிஷத் தலைமை செயல் அலுவலர் முன்பாக கிராமத்தின் வரவு செலவைத் தாக்கல் செய்கிறார், பவார். கிராமம் முழுக்க கலந்துகொள்ளூம் இந்தக் கூட்டத்தில் யார் வேண்டுமானாலும் எழுந்து சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
கிட்டத்தட்ட 50 குடும்பங்கள், கடந்த 15 ஆண்டுகளில் நகரங்களிலிருந்து மீண்டும் கிராமத்துக்கே திரும்பியுள்ளன.
நிலமில்லாதோர் பட்டியலில் மொத்தம் ஆறு பேர்தான் இடம் பிடித்துள்ளனர். அதேசமயம், வீடில்லாதவர்கள் என்று யாருமே கிடையாது! முன்பு வறுமைக் கோட்டுக்குக் கீழிருந்த குடும்பங்களின் எண்ணிக்கை 168. இன்று மூன்றே மூன்று குடும்பங்கள்தான் அந்தக் கோட்டுக்கு கீழே இருக்கின்றன.
ஊருக்குள் இருப்பது ஒரே ஒரு முஸ்லிம் குடும்பம்தான். என்றாலும், அவர்களுக்கென சிறிய அளவிலான ஒரு மசூதியை ஊராட்சியே கட்டித் தந்துள்ளது.
கட்டாய ஹெச்.ஐ.வி. பரிசோதனை!
'திருமணத்துக்கு முன்பாக ஹெச்.ஜ.வி. பரிசோதனையைக் கட்டாயமாக்கினால் என்ன?' என்று உலக அளவில் இப்போது ஆலோசனை நடக்கிறது. ஆனால், 2002-ம் ஆண்டிலேயே சத்தமில்லாமல் அதை ஆரம்பித்துவிட்டது ஹிவரே பஸார். இப்படியரு திட்டம் உருவானது பற்றி பேசிய பவார், ''பதினொண்ணாம் வகுப்பு படிக்கும் ஒரு பெண்ணிடம் இருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. 'எனக்கு, வீட்டில் கல்யாண ஏற்பாடு நடக்கிறது. ஆனால், மாப்பிள்ளையின் நடத்தையில் எனக்கு திருப்தி இல்லை. நம் கிராமம் பெரிய அளவில் வளர்ந்திருக்கிறது. இந்திய அளவில் புகழ் பெற்றிருக்கிறது. பல்வேறு சாதனைகள்தான் இத்தகையதொரு பெயரை நம் கிராமத்துக்கு பெற்றுத் தந்திருக்கிறது. அதேபோல, திருமணத்துக்கு முன்னதாக ஹெச்.ஐ.வி. சோதனை கட்டாயம் என்பதை நம் ஊரில் ஏன் அமல்படுத்தினால், நம் புகழ் மேலும் பரவுமே?' என்று கடிதத்தில் எழுதப் பட்டிருந்தது. இந்தக் கடிதத்துக்கு இன்னொரு காரணமும் உண்டு. அந்தப் பெண்ணின் பெரியம்மா மகளின் கணவன், திருமணமான ஆறு மாதத்திலேயே இறந்துபோய்விட்டான். ஹெச்.ஜ.வி. காரணமாகத்தான் இறப்பு ஏற்பட்டது என்பது அப்போதுதான் தெரிந்தது. அந்தப் பொண்ணுக்கும்... அவளின் குழந்தைக்கும் கூட ஹெச்.ஐ.வி. தாக்குதல் இருக்கிறது. இதுபோல நம் வாழ்க்கையும் ஆகிவிடக்கூடாது என்ற காரணத் தாலும்தான் அப்படியரு கடிதத்தை எழுதியிருந்தார் அந்தப் பெண்.
இதையடுத்து, கல்லூரிகளில் படிக்கும் என் கிராமத்து மாணவர்களை அழைத்துப் பேசினேன். எல்லோரும் ஒரே குரலாக, 'ஹெச்.ஐ.வி. சோதனை கட்டாயம் என்பதை அமல்படுத்தலாம்' என்றனர். பிறகு, ஊராட்சிக் கூட்டத்தில் இதைப் பேசி, அறிவிப்பு வெளியிட்டோம். இந்த முயற்சி நடைமுறைக்கு வந்ததும், அமெரிக்காவின் முக்கிய பத்திரிகையான 'வாஷிங்டன் போஸ்ட்' இதைப் பற்றி செய்தி வெளியிட்டது'' என்று சொன்னார்.
தற்போது, மஹாராஷ்டிரா முழுக்கவே இதை அமல்படுத்தும் யோசனையில் இருக்கிறது மாநில அரசு.
'பைக்'குக்குத் தடா... சைக்கிளுக்கு ஜே!
கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து பெட்ரோல் விலை அளவில்லாமல் எகிற ஆரம்பித்தது. இதையடுத்து, ஊர் மக்களைக் கூட்டி விவாதித்த பவார், கிராம எல்லைக்குள் மோட்டார் சைக்கிளை பயன்படுத்தத் தடை விதித்திருக்கிறார். இதனால், உள்ளூருக்குள் இப்போது மிதிவண்டிகளின் பயன்பாடு அதிகரித் துள்ளது. "பணம் மிச்சமாவதோடு, சுற்றுச்சூழல் பாதிப்பும் குறையுமே..." என்கிறார் பவார்!

THE HINDU NEWS ABOUT ESWARAN MAALIGAI OPENING CEREMONY