வட சென்னை ரோட்டரி சங்கம் இந்திய ஆங்கில மொழி ஆசிரியர் அமைப்புடன் இணைந்து 300 அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில மொழிப் பயிற்சியை இலவசமாக அளிக்க உள்ளது.
விருப்பமுள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் 9444257308 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்புகொள்ளளாம். முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ஆசிரியர்கள் இந்தப் பயிற்சியில் சேர்க்கப்படுவர்.
இந்தப் பயிற்சித் திட்டம் ஆங்கில ஆசிரியர்களுக்கு மட்டுமில்லாமல், ஆங்கில வழியில் பிற பாடங்களைக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் உரியது என இந்திய ஆங்கில மொழி ஆசிரியர் அமைப்பின் தேசிய செயலாளர் கே.இளங்கோ கூறியுள்ளார்.
மொத்தம் 30 மணி நேரம் கொண்ட இந்தப் பயிற்சி, வரும் ஜூன் மாதத்தில் அளிக்கப்பட உள்ளது. கவனித்தல், பேசுதல், படித்தல், எழுதுதல் ஆகியவை குறித்தும், சொல், இலக்கணம் சார்ந்த மொழித் திறன்கள் குறித்தும் பயிற்சி அளிக்கப்படும்.
No comments:
Post a Comment