Sunday, 23 April 2017

SBI வங்கியில் சில சேமிப்பு கணக்கிற்கு எல்லாம் குறைந்தபட்ச வைப்பு தொகை தேவையில்லை.!!!

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அன்மையில் வெளியிட்ட அறிக்கையில் பின் வரும் சில சேமிப்புக் கணக்குகளுக்கு எல்லாம் குறைந்தபட்ச இருப்புத் தொகை தேவையில்லை என்று அறிவித்து இருக்கின்றது.
என்னடா இது எல்லாம் எஸ்பிஐ வங்கியில் சேமிப்பு வங்கிகணக்குகளுக்கு 5000 ரூபாய் எனக் கூறுகின்றார்கள் இவன் என்ன இல்லை என்று கூறுகின்றான் என்று நீங்கள் கேட்பது எனக்குக் கேட்கின்றது.ஆம், எஸ்பிஐ வங்கியில் சிறு சேமிப்பு வங்கி கணக்கு, அடிப்படை சேமிப்பு வங்கி கணக்குகள், ஜன தண் கணக்குகள்உள்ளிட்ட சேமிப்பு வங்கி கணக்குகளுக்குக் குறைந்த பட்ச இருப்புத் தொகை தேவையில்லை.இந்த அறிவிப்பு எஸ்பிஐ வங்கியின் டிவிட் மூலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்மையில் எஸ்பிஐ வங்கி ஐந்துதுணை வங்கிகளுடன் இணைந்துள்ளது.
எஸ்பிஐ வங்கி சாதாரணச் சேமிப்புக் கணக்குகள் மட்டும் இல்லாமல் கார்ப்ரேட் சம்பள கணக்குகளும் உள்ளன.எஸ்பிஐ வங்கி ஏப்ரல் 1 முதல் 5,000 ரூபாய் குறைந்தபட்ச இருப்புத் தொகை இருக்க வேண்டும் என்று அறிவித்த போது அனைவரும் பயந்தனர். அந்தக் குறைந்தபட்ச இருப்புத் தொகை 1000 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை இருக்க வேண்டும், அப்படி இல்லை என்றால் மாதம் 20 ரூபாய் முதல் 100 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாத எஸ்பிஐ வங்கி கணக்குகள் பற்றி இங்கு விளக்கமாகப் பார்ப்போம்.சிறு சேமிப்பு வங்கி கணக்கு (Small savings bank account) சிறு சேமிப்பு வங்கி கணக்கில் குறைந்தபட்சஇருப்புத் தொகை வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதே நேரம் அதிகபட்சம் 50,000 ரூபாய் மட்டுமே சேமிப்புக் கணக்கில் வைத்து இருக்க முடிடும். வாடிக்கையாளர்களுக்கு எந்த ஆண்டுக் கட்டணமும் இல்லாமல் ஏடிஎம் கார்டு இலவசமாக வழங்கப்படும்.அடிப்படை சேமிப்பு கணக்கு (Basic savings account) எஸ்பிஐ வங்கியின் அடிப்படை சேமிப்பு கணக்கிற்கு எந்தக் குறைந்தபட்ச வரம்பு மற்றும் அதிகபட்ச வரம்பு ஏதும் இல்லை. இந்தச் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு எஸ்பிஐ வங்கியில் பிற சேமிப்புக் கணக்குகள் துவங்க முடியாது.
 ஒரு வேலை எஸ்பிஐ வங்கியில் பிற சேமிப்பு கணக்கு வைத்திருந்தால் 30 நாட்களுக்குள் அந்தக் கணக்கை மூடிவிட வேண்டும்.பெருநிறுவன சம்பளம் வங்கி கணக்கு (Corporate salarypackage) எஸ்பிஐ வங்கியில் பெருநிறுவன சம்பளம் வங்கி கணக்குகளும் உள்ளன, இந்த வங்கி கணக்குத் திட்டத்தைப் பயன்படுத்திச் சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு இலவசமாக இணையதள வங்கி சேவை கணக்கு, மொபைல் வங்கி சேவை கணக்கு, செக் புக் உள்ளிட்ட பிற நன்மைகள் அளிக்கப்படும். இந்த வங்கி கணக்கிற்கும் குறைந்தபட்ச இருப்புத் தொகை தேவையில்லை.
பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டம் இன்றைய தேதியில் சேமிப்பு வங்கி கணக்குகள் திறப்பதற்கு, சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்பைப் பராமரிக்க வேண்டும். ஏன், அரசாங்கத்துக்குச் சொந்தமான வங்கிகளில் கூட இது தான் விதிமுறையாக உள்ளது. அதுவே தனியார் துறை வங்கிகள் அனைத்தும் குறைந்தபட்ச இருப்பு தொகையைக் கூடுதலாக நிர்ணயித்துள்ளது. பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் கணக்கை திறந்தால், குறைந்தபட்ச இருப்பைப் பராமரிக்கத் தேவையில்லை.

No comments:

Post a Comment