Thursday 27 April 2017

பி.எப். பணத்தை எடுத்துக்கொள்ள அரசு புது சலுகை அறிவிப்பு.

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


உடல் நலக்குறைவு நேரங்களில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை டாக்டர் அனுமதி கடிதம் கொடுக்காமல் கூட எடுத்துக்கொள்ளலாம் என்று மத்திய தொழிலாளர் அமைச்சகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நிறுவன உரிமையாளரின் ஒப்புதலையும் டாக்டரின் சான்றையும் சமர்ப்பித்தே பி.எப் பணத்தின் ஒரு பகுதியை எடுப்பது கட்டாயமாகும் என்ற நிலை இதன் மூலம் மாறியுள்ளது.
மருத்துவ நோக்கங்களுக்காக பி.எப் நிதி சேமிப்புகளை திரும்ப பெற சுயமாக ஒரு சான்றிதழை (self-declaration form) தொழிலாளி கொடுத்து ஆறு மாத கால சேமிப்பை பெற்றுக்கொள்ள முடியும் என்கிறது இந்த புதிய அறிவிப்பு.
மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவது உள்ளிட்ட பெரிய அளவிலான நோய் சிகிச்சைகளுக்குத்தான் இந்த விதிமுறை பொருந்தும். டிபி, தொழுநோய், வாதம், இதய சம்மந்தமான நோய்கள் மற்றும் கேன்சர் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும் பி.எப்.பணத்தை எடுக்க ஓ.கே. சொல்லியுள்ளது அமைச்சகம்.
மாற்றுத்திறனாளிகள் அவர்களுக்கு தேவையான உபகரணங்கள் வாங்குவதற்கும் பி.எப் தொகையை எடுக்கலாம். இதற்கு மருத்துவ சான்றிதழ் தேவையில்லை என்று அமைச்சகம் கூறியுள்ளது.

No comments:

Post a Comment