Saturday, 29 April 2017
அரசுப்பள்ளிகளில் தரம் மேலும் உயரும்
உலகின் மலிவு விலை ஏ.சி.யை கண்டுபிடித்துள்ள இவர்கள்தான் நிஜ பவர்ஸ்டார்கள்!
பொது மாறுதல் கலந்தாய்வு- ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் உதவி ஆசிரியர்களின் கவனத்திற்கு....
ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் உதவி ஆசிரியர்களின் கவனத்திற்கு*
🥀 2017-18 இல் மாறுதல் கோரும் ஆசிரியர்கள் புதிய விண்ணப்பப்படிவத்தினைப் பூர்த்தி செய்து 05.05.17 மாலைக்குள் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
🥀 மாறுதல் கோரும் தொடக்க / நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் ஒன்றியத்திற்குள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
🥀 பட்டதாரி / இடைநிலை/உடற்கல்வி ஆசிரியர்கள் ஒன்றியத்திற்குள், ஒன்றியம் விட்டு ஒன்றியம், மாவட்டம் விட்டு மாவட்டம் விண்ணப்பிக்க ஒரே படிவத்தில் தேவையான மாறுதல் இனங்களில் ✔ (டிக்) குறியீடு இட்டு விண்ணப்பித்தல் வேண்டும்.
🥀 சிறப்பு முன்னுரிமை கோருபவர்கள் உரிய சான்றிதழ் நகலை விண்ணப்பத்துடன் இணைத்து வழங்க வேண்டும். அசல் சான்றிதழை உ.தொ.க.அலுவலரிடம் காட்டி உறுதி செய்து கொள்ள வேண்டும்.
🥀 ஆசிரியர்களிடமிருந்து பெறப்படும் மாறுதல் கோரும் விண்ணப்பங்கள் அனைத்தும் இணையத்தளத்தில 06.05.17 முதல் 10.05.17 வரை பதிவு செய்யப்படும். அதன்பின் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பங்களை சார்ந்த ஆசிரியர்கள் 11.05.17 முதல் 13.05.17 வரை அலுவலகத்திற்கு நேரில் வந்து கையொப்பமிட்டு பெற்றுச் செல்ல வேண்டும். இந்த விண்ணப்பத்தையே ஆசிரியர்கள் கலந்தாய்வின்போது பயன்படுத்த இயலும்.
🥀 மனமொத்த மாறுதல் பெற 01.06.16 க்கு முன்னர் தற்போது பணிபுரியும் பள்ளியில் பணியேற்றிருக்க வேண்டும். 01.06.16 க்குப்பின் பணியேற்றவர்கள் பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள இயலாது.
🥀 ஏற்கனவே மனமொத்த மாறுதலில் சென்றவர்கள் மீண்டும் தான் பணிபுரிந்த பள்ளிக்கு மாறுதல் கோரி விண்ணப்பிக்க இயலாது.
🥀 கடந்த ஆண்டில் மனமொத்த மாறுதல் பெற்றவர்கள் இக்கல்வியாண்டில் விண்ணப்பிக்க இயலாது.
🥀 கணவர் அல்லது மனைவி 01.06.16 க்குப் பின் விபத்து அல்லது நோய்வாய்ப்பட்டு இறந்திருந்தால் அதற்கான ஆதாரத்துடன் கலந்தாய்வு விதிகளைப் பின்பற்றாமல் சிறப்பு நிகழ்வாக கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
🥀 மாறுதல் கோருபவர்கள் 01.06.16 க்கு முன்பு தற்போது பணிபுரியும் பள்ளியில் பணியில் சேர்ந்திருக்க வேண்டும். எனினும் 2016-17 இல் பணி நிரவல் பெற்றவர்கள், பதவி உயர்வு பெற்றவர்கள் 01.06.16 க்குப் பிறகு பணியில் சேர்ந்திருந்தாலும் தற்போதைய கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
🥀 முற்றிலும் கண்பார்வையற்றவர்கள், இருதயம், சிறுநீரக அறுவை சிகிச்சை பெற்றவர்கள், டயாலிசிஸ் மேற்கொண்டவர்கள், கடுமையாகப் பாதிக்கப்பட்ட புற்றுநோயாளிகள், இராணுவ வீரரின் மனைவி, விதவைகள் மற்றும் 40 வயதைக் கடந்த திருமணம் செய்யாதவர்கள், 40 % மற்றும் அதற்கு மேலும் உள்ள மாற்றுத்திறனாளிகள், மனவளர்ச்சி குன்றிய மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் உள்ள ஆசிரியர்கள் தற்போது பணிபுரியும் பள்ளியில் ஓராண்டு பணிபுரிந்திருக்க வேண்டியதில்லை. 01.06.16 க்குப் பின்னர் பணியில் சேர்ந்திருந்தாலும் இப்போது விண்ணப்பிக்கலாம்.
🥀. மாறுதல் கோரும் விண்ணப்பத்தில் spouse certificate வைப்பவர்கள் கணவர் அல்லது மனைவி 30 கி.மீ தூரத்திற்கு அப்பால் பணிபுரிபவராக இருக்க வேண்டும்.
🥀 கடந்த ஆண்டு spouse certificate மூலம் மாறுதல் பெற்றவர்கள் நடப்பாண்டில் spouse certificate மூலம் மாறுதல் கோர இயலாது. மாறுதல் பெற்று மூன்றாண்டுகளுக்குப் பின்னரே spouse certificate அடிப்படையில் மாறுதல் கோர இயலும்.
🥀 மத்திய / மாநில அரசு மற்றும் அதைச்சார்ந்த அலுவலர்கள்/ பணியாளர்கள் , அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரிபவர்கள் மட்டும் உரிய அலுவலரிடம் பணிச்சான்று பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
🥀 *மேற்கண்ட விதிமுறைகளைப் பின்பற்றி மாறுதல் கோரும் விண்ணப்பங்களை உதவி தொடக்கக் கல்வி அலுவகத்தில் 05.05.17 மாலைக்குள் சமர்ப்பிக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.*
கல்வி அதிகாரிகளுக்கு கோடை கொண்டாட்டம்
மாணவர்களை தயார்படுத்த, சி.இ.ஓ., - டி.இ.ஓ., போன்ற கல்வித் துறை அதிகாரிகளுக்கு, கோடை கொண்டாட்ட பயிற்சி அளிக்கப் படுகிறது. புதிய கல்வி ஆண்டில், 'நீட்' உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளுக்கு, மாணவர்களை தயார்படுத்தும் வகையில், ஆசிரியர்கள் தயாராக வேண்டும். அதனால், அவர்களுக்கு பயிற்சி அளித்து, பின், மாணவர்களுக்கு கற்பித்தல் முறைகளை மாற்ற திட்டமிடப்பட்டு உள்ளது.
இதற்காக, சி.இ.ஓ., எனப்படும், முதன்மை கல்வி அதிகாரி மற்றும் டி.இ.ஓ., எனப்படும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, கோடை கொண்டாட்ட ஆளுமை பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மே, 3 முதல், 6 வரை, மதுரையில் சிறப்பு புத்தாக்க பயிற்சி நடக்கிறது. இதில், பட்டிமன்ற பேச்சாளர் ஞானசம்பந்தன், எழுத்தாளர், எஸ்.ராமகிருஷ்ணன், டாக்டர் அமுதா ஹரி, ஒடிசா அரசின் கூடுதல் தலைமை செயலர், ஆர்.பாலகிருஷ்ணன், பேராசிரியர், ச.மாடசாமி, கல்வி ஆலோசகர் நெடுஞ்செழியன் உட்பட பலர் பங்கேற்கின்றனர்.
இந்த மூன்று நாள் பயிற்சியில் அதிகாரிகளுக்கு, அறுசுவை விருந்து, கலந்துரையாடல், விவாதம், நகைச்சுவை சொற்பொழிவு, சிலம்பம், கராத்தே, புத்தாக்க விளையாட்டுகள் போன்றவை இடம் பெற உள்ளன. பயிற்சி நிறைவு விழாவில், பள்ளிக்கல்வி செயலர் உதயசந்திரன் மற்றும் அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
இது குறித்து, அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்ட இயக்குனர் கண்ணப்பன் கூறியதாவது:
ஜூனில், புதிய கல்வி ஆண்டு துவங்கும் போது, மாணவர்களை நெறிப்படுத்த, ஆசிரியர்களும், அதிகாரிகளும் புத்துணர்ச்சியுடன் தயாராக வேண்டும். 'நீட்' போன்ற பல போட்டி தேர்வுகளை, மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டும். அதற்கேற்ப, ஆசிரியர்களுக்கு ஆளுமை திறன் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Thursday, 27 April 2017
தமிழக அரசின் 4% அகவிலைப்படி அரசாணை எண் -105 நாள் 27.04.2017 !!
தமிழக அரசின் 4% அகவிலைப்படி அரசாணை எண் -105 நாள் 27.04.2017 !!clik
பி.எப். பணத்தை எடுத்துக்கொள்ள அரசு புது சலுகை அறிவிப்பு.
மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவது உள்ளிட்ட பெரிய அளவிலான நோய் சிகிச்சைகளுக்குத்தான் இந்த விதிமுறை பொருந்தும். டிபி, தொழுநோய், வாதம், இதய சம்மந்தமான நோய்கள் மற்றும் கேன்சர் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும் பி.எப்.பணத்தை எடுக்க ஓ.கே. சொல்லியுள்ளது அமைச்சகம்.
பள்ளிக்கல்வி - சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வழக்கு எண் 11999 / 2015 - திருக்குறளை 6 - ஆம் வகுப்பு முதல் 12 - ஆம் வகுப்பு வரை உள்ள பாடத்திட்டத்தில் சேர்க்க
பள்ளிக்கல்வி - சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வழக்கு எண் 11999 / 2015 - திருக்குறளை 6 - ஆம் வகுப்பு முதல் 12 - ஆம் வகுப்பு வரை உள்ள பாடத்திட்டத்தில் சேர்க்க கோரி திரு S. ராஜரத்தினம் என்பவரால் தொடரப்பட்ட வழக்கு - நீதிமன்ற தீர்பாணை பெறப்பட்டது - நடைமுறைப்படுத்துவது சார்ந்து இயக்குநரின் செயல்முறைகள் மற்றும் அரசாணை.
அரசாணை எண் 78 நாள்:21/4/17- கருணை அடிப்படையில் பணி நியமனம்
அரசாணை எண் 78 நாள்:21/4/17- கருணை அடிப்படையில் பணி நியமனம்- பணியிடையே மரணமடைந்த அரசு ஊழியர்களின் திருமணமான பெண் வாரிசுதாரர்களுக்கும் கருணை பணி வழங்குதல் !!Click Here For Download
அடிப்படையில் பணி நியமனம் வழங்குதல்...
GPF - Rate of interest is 7.9%
Click Here For Download
Wednesday, 26 April 2017
GPF/TPF Account Statement-Now Available for the year 2014-15 & 2015-16 Click here to Download
உங்கள் TPF கணக்கை நீங்களே சரிபார்க்க வேண்டும்.நீங்கள்உடனடியாக செய்யவேண்டியவை : www.agae.tn.nic.in என்ற முகவரிக்குச் சென்று , download TPF account statements for the year 2014-15 /2015-2016 என்ற option ஐ click செய்யுங்கள் . Log in page வரும் , அதில் GPF no : ( உங்கள் TPF எண் .) Dob :( உங்கள் பிறந்த தேதி ). Suffix : PTPF என கொடுத்து login செய்யுங்கள் . உங்கள் பெயருடைய AG பக்கம் தோன்றும் . அதில் view account slip ஐ click செய்தால் financial year கேட்கும் , அதில் 2014-15 / 2015-16 select செய்து view account slip ஐ click செய்தால் 2014-15 / 2015-16 ஆம் ஆண்டிற்கான account slip download ஆகிவிடும் . அதை print எடுத்துக்கொள்ளுங்கள் . Print out செய்த account statement ல் - 1) உங்கள் பெயர் 2) TPF கணக்கு எண் 3) பிறந்த தேதி 4) கருவூலத்தின் பெயர் 5) வட்டிவீதம் 6) 12 மாத சந்தா பிடித்தம் பதிவுகள் , கடன் செலுத்தியபதிவுகள் , பெற்ற கடன் பதிவுகள் 7) opening/closing balance 8) விடுபட்ட சத்தா விவரங்கள் 9) கணக்கு அதிகாரியின் கையொப்பம் . என எல்லா விவரங்களையும் சரிபார்த்துக்கொள்ளுங்கள் . Mobile update சென்று உங்கள் mobile எண்ணை பதிவுசெய்யுங்கள் . கடைசியாக logout கொடுத்து வெளியேறுங்கள் .
EMIS CORRECTION WORK - Announcement *EMIS CORRECTION WORK*
வரும் கல்வி ஆண்டு முதல் அனைத்து விலையில்லா திட்டங்களும் EMIS பதிவுகளைக் கொண்டே வழங்கப்படவுள்ளதால் அனைத்துப் பள்ளி தலைமையாசிரியர்களும் தங்கள் பள்ளி மாணவர்களின் EMIS பதிவுகளில் > இனம் > பாட மொழி > பஸ் பாஸ் > சத்துணவு > ஆதார் எண்போன்ற விவரங்களை சரி செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். - இணை இயக்குனர் ( நிர்வாகம்)
12 ம் வகுப்பு படிக்கும் மாணவர் தயாரித்துள்ள கையடக்க செயற்கைக்கோள்
 கருர் மாவட்டத்தில் உள்ள பள்ளப்பட்டியில் பிறந்த முஹம்மது ரிஃபாக் ஷாருக் ! தற்போது 12 ம் வகுப்பு படிக்கும் மாணவரான இவர் தயாரித்துள்ள கையடக்க செயற்கைக்கோள் விர்ஜீனியா ஏவு தளத்தில் இருந்து எஸ் ஆர் 4 ராக்கெட் மூலம் ஜுன் மாதம் விண்ணில் ஏவப்பட உள்ளது உலகம் முழுவதும் 57 நாடுகளில் இருந்து 8000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்ட இந்த போட்டியில் தேர்வான 80 பேரில் இவர் ஒருவர் மட்டுமே இந்தியர் 64 கிராம் எடையுள்ள இந்த செயற்கைக்கோள் முழுவதும் 3டி பிரிண்ட் தொழில் நுட்பத்தில் கார்பன் ஃபைபரால் உருவாக்கிய இந்த மாணவர் அதற்கு வைத்துள்ள பெயர் "கலாம்சாட்" வாழ்த்துக்கள் முஹம்மது ரிஃபாக் ஷாருக்
12 ஆண்டுகளாக தொடரும் சேவை: கிராமப்புற மாணவர்களுக்கு ஆங்கிலம் போதிக்கும் ஆசிரியர் - விடுமுறை நாட்களில் இலவச வகுப்பு நடத்துகிறார்
கிராமப்புற மாணவர்களை ஆங்கி லத்தில் சரளமாக பேச வைக்கும் முயற்சியில் தனியார் பள்ளி ஆசிரி யர் ஒருவர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். தமிழகத்தில் தனியார் பள்ளி களை ஒப்பிடும்போது, அரசுப் பள்ளி களில் பயிலும் மாணவர்களின் ஆங் கில மொழித் திறன் குறைவாகவே உள்ளது. அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை 10-ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி அடையச் செய்யும் அளவுக்கு ஆங்கிலத்தை பயிற்றுவித்தாலே போதும் என்ற மனநிலைக்கு ஆசிரியர்கள் தள்ளப்படுகின்றனர். ஆங்கில மோகத்தால் கிராமப் புறங்களில் வசிப்பவர்களும், தங்க ளது குழந்தைகளை தனியார் பள்ளி களில் சேர்ப்பது அதிகரிக்கிறது. இருப்பினும், பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் 9-ம் வகுப்பில் பயிலும் மாணவ, மாணவியர்கூட தமிழ், ஆங்கிலத்தை சரளமாக வாசிக்கத் தெரியாத நிலை உள் ளது. தற்போது ‘மூன்றே மாதத்தில் ஆங்கிலம் பேச வைக்கிறோம்’ என்ற அறிவிப்புடன் புதிது புதிதாக ஆங்கிலப் பயிற்சி நிறுவனங்கள் தோன்றினாலும், அவர்கள் ஆயிரக் கணக்கில் கட்டணம் வசூலிப்பதால் இவற்றில் கிராமப்புற மாணவர் களால் எளிதாகச் சேர முடியாது. இந்நிலையில், கடந்த 12 ஆண்டு களாக நூற்றுக்கணக்கான கிராமப் புற மாணவர்களுக்கு ஆங்கில பேச்சுப் பயிற்சி அளித்து வருகிறார் மதுரை கடச்சனேந்தலைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் ஆர்.பாலமுருகன். இவர் சிபிஎஸ்இ பள்ளி ஒன்றில் ஆங்கில ஆசிரிய ராக பணிபுரிகிறார். ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிற் றுக்கிழமையன்று ஒரு அரசுப் பள்ளியைத் தேர்வு செய்து காலை முதல் மாலை வரை ஆங்கில மொழித்திறன் பயிற்சியை அளிக் கிறார். ஆதரவற்றோர் பயிலும் பள்ளிகளிலும் இப்பயிற்சியை இலவசமாக அளிக்கிறார். மேலும் ஆங்கிலத்தில் பேச ஆசைப்படு வோரது வீடுகளுக்கும் சென்று பயிற்சி அளித்து வருகிறார். இதுகுறித்து பாலமுருகன் மேலும் கூறியதாவது: நான் சமூகவியலில் முனைவர் பட்டம் வாங்கி இருந்தாலும், பிளஸ் 2 தேர்வில் ஆங்கில பாடத்தில் தோல்வியை சந்தித்தவன். இந்த தோல்விதான் என்னை ஆங்கி லத்தை மென்மேலும் ஆழமாக படிக்கத் தூண்டியது. மதுரை அமெ ரிக்கன் கல்லூரியில் சமூகவியலில் முனைவர் பட்டம் பெற்றேன். தற் போது தனியார் பள்ளி ஒன்றில் ஆங்கில ஆசிரியராகப் பணிபுரி கிறேன். 2005-ம் ஆண்டில் 10-வது, பிளஸ் 2 மாணவர்களுக்கு ஆங் கில மொழியை பயிற்றுவிக்கும் திட்டத்தைத் தொடங்கினேன். மாதந் தோறும் முன் அனுமதி பெற்று அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவசமாக ஆங்கிலப் பயிற்சியை அளிக்கிறேன். ஆனால், சில பள்ளி களில் உள்ள ஆங்கில ஆசிரியர் களே நான் பயிற்சி அளிக்க அனு மதி மறுக்கும் நிலை ஏற்பட்டது. எளிய முறையில் அதிக இலக் கணம் இன்றி கவிதை, விளை யாட்டு, யதார்த்தம் என மாணவர் களின் மனநிலையை அறிந்து பயிற்சி அளிக்கிறேன். ஆர்வம் இருந் தால் 10 நாட்களில் மாணவர்களை ஆங்கிலத்தில் பேச வைக்கலாம். டிவி, செல்போனை தவிர்த்து தமிழ், ஆங்கில வாசிப்புத் திறனை வளர்த்தால் தானாகவே மொழித் திறன் மேம்படும். இலக்கணம் இன்றி தமிழில் சரளமாக பேசும் போது, அதிக இலக்கணமின்றி ஆங்கிலத்தையும் சரளமாக பேச முடியும். ஆண்டுக்கு ஆயிரத்துக் கும் மேற்பட்ட கிராமப்புற மாண வர்களுக்கு ஆங்கில பேச்சுப் பயிற்சி அளிக்கிறேன். அரசியல்வாதிகள் உட்பட யார் விரும்பினாலும், வீடுகளுக்குச் சென்று குறைந்த கட்டணத்தில் ஆங்கிலப் பேச்சு பயிற்சி அளிக் கிறேன். ஆயிரக்கணக்கான ஏழை மாணவர்களை ஆங்கிலத்தில் பேச வைப்பதே லட்சியம் என்கிறார் பாலமுருகன்.
Sunday, 23 April 2017
உலக புத்தக தினத்தை முன்னிட்டு ஆசிரிய பெருமக்கள் வாசிப்பதற்காக பாரதி புத்தகாலயம் 50 சதவீதம் சிறப்புக் கழிவு!!
உலக புத்தக தினத்தை முன்னிட்டு ஆசிரிய பெருமக்கள் வாசிப்பதற்காக பாரதி புத்தகாலயம் 50 சதவீதம் சிறப்புக் கழிவு வழங்குகிறது. தேவைப்படுவோர் 9444960935 என்னுக்கு வாட்ஸ் அப் மெசேஜ் அனுப்பவும் அல்லது 04424332924 எண்னில் தொடர்பு கொள்ளவும். புத்தகப்பட்டியல்
வீடில்லா புத்தகங்கள் எஸ். ராமகிருஷ்ணன்
 புத்தகத்தால் என்ன பயன்? நேரம்தான் விரயம் ஆகிறது என அதன் அருமை தெரியாதவர்கள் புலம்புகிறார்கள். ஆனால், சரியான ஒரு புத்தகம் ஒருவரின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டுவிடும்! அதிலும் குறிப்பாக ஆசிரியர் ஒருவர் கைக்கு செல்லும் புத்தகம் அவருக்குப் பிடித்த மானதாக இருந்துவிட்டால், எத்தனையோ மாணவர்களுக்கு அது தூண்டுகோலாக அமைந்துவிடும். இப்படியோர் அனுபவத்தை நான் நேரடியாகவே அறிந்திருக்கிறேன். நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக எனது நண்பரான அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவருக்குப் பிறந்த நாள் பரிசாக, ‘பகல் கனவு’ என்ற ‘ஜிஜுபாய் பதேக்கா’ எழுதிய புத்தகத்தைக் கொடுத்தேன். ஒரு வார காலத்துக்குப் பிறகு அவரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. உணர்ச்சிவசப்பட்ட நிலையில், ‘’இதுபோன்ற புத்தகத்தை நான் வாசித்ததே இல்லை. இத்தனை வருஷமாக நானும் ஓர் ஆசிரிய ராக வாழ்ந்திருக்கிறேன். ஆனால், மாணவர்களிடம் இப்படிப் பயிற்று விக்கும்முறை எதையும் செய்து பார்க்கவில்லையே என குற்றவுணர்ச் சியை இந்தப் புத்தகம் ஏற்படுத்திவிட்டது. என்னை சுயபரிசோதனை செய்து கொள்ள இந்தப் புத்தகம் உதவியது. நிச்சயம் நானும் ‘ஜிஜுபாய் பதேக்கா’ வைப் போல செயல்படுவேன்’’ என்றார். அவர் சொன்னதை நிஜமாக்குவதைப் போல இரண்டு மாதங்களுக்குப் பிறகு, கூரியரில் ஒரு பார்சலை அவர் அனுப்பியிருந்தார். திறந்து பார்த் தேன். அத்தனையும் அவருடைய மாணவர்கள் எழுதிய கதைகள். ஐந்தாம் மற்றும் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ஆளுக்கு ஒரு கதையை ஒரு பக்க அளவில் எழுதியிருந்தார்கள். மாணவர்களின் கையெழுத்தில் அந்தக் கதைகளை வாசித்தபோது சிலிர்த்துப் போனேன். ஒரு மாணவன், சைக்கிளின் டயர் அழுத்திப் போன மைதானத்து புல்லின் வலியை ஒரு கதையாக எழுதி யிருந்தான். ஒரு மாணவி, பறக்க ஆசைப்பட்ட தவளையைப் பற்றி ஒரு கதை எழுதியிருந்தாள். இன்னொரு மாணவன், உடல் இளைப்பதற்காக ஒரு யானை எப்படி சாப்பிடாமல் கிடக்கிறது என்பதைப் பற்றி எழுதியிருந்தான். சின்னஞ்சிறார்களின் மனதில்தான் எத்தனை வளமான கற்பனைகள்! அவரை தொலைபேசியில் அழைத்து பாராட்டினேன். சந்தோஷமாக தனது அனுபவங்களைச் சொல்லத் தொடங்கினார். ‘‘இப்போதெல்லாம் நான் வகுப்பறை களில் கதைகள் சொல்கிறேன். படித்த புத்தகங்களை மாணவர்களுக்கு அறி முகம் செய்கிறேன். வாரம் ஒருநாள் வனஉலா அழைத்துப் போய் தாவரங்களை, பறவைகளை அடை யாளம் காட்டுகிறேன். எளிய அறிவியல் சோதனைகளை கூட்டாக செய்து விளையாடுகிறோம். ஒவ்வொரு மாணவனுக்கும் ஒரு நோட்டு வாங்கிக் கொடுத்து, அவன் எதை எழுத விரும்பினாலும் அதில் எழுதச் சொல்லியிருக்கிறேன். நிறைய மாணவர்கள் ஆர்வமாக தான் படித்த, கேட்ட, பாதித்த விஷயங்களை நோட்டில் எழுதிவந்து காட்டுகிறார்கள். அதை பாராட்டும்போது அவர்கள் அடையும் சந்தோஷம் அளவில்லாதது. ஆசிரியர் என்பவர் வெறும் பாடம் நடத்தும் மனித ரில்லை; அது மகத்தான உறவு என்பதை உணர்ந்து கொண்டேன்’’ என்றார். இதுதான் நண்பர்களே ஒரு புத்தகம் ஆசிரியர் மனதில் உருவாக்கும் மகத் தான மாற்றம்! பலநூறு ஆசிரியர் மனதில் இப்படியான மாற்றத்தை எளிதாக உரு வாக்கிய புத்தகமே பகல் கனவு. இது ஓர் ஆசிரியரின் சுய அனுபவங்களில் இருந்து எழுதப்பட்டது. ‘ஜிஜுபாய் பதேக்கா’ குஜராத்தில் ஆரம்பப் பள்ளி ஆசிரியராக இருந்தவர். தனது பள்ளியில் ‘மாண்டிசோரி’ கல்வி முறையை அறிமுகப்படுத்தி, பதேக்கா மேற்கொண்ட முயற்சிகளையே இந்தப் புத்தகம் விவரிக்கிறது. 1931-ம் ஆண்டு குஜராத்தியில் எழுதப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்ற ‘பகல் கனவு’ புத்தகம், இன்றும் கல்விகுறித்த சிறந்த புத்தகங்களில் ஒன்றாக கொண்டாடப் படுகிறது. பயமே இல்லாத வகுப்பறையே மாணவனை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. புதிதாக பள்ளிக்கு வரும் குழந்தை ஒருவித பயத்துடனும், பதற்றத்துடனுமே எப்போதும் இருக்கும். அதுவே கற்றலுக்கான முதல் தடை. இயற்கைக் கல்வி முறையில் சுதந்திரமாக செயல்பட அனு மதிக்கப்படும் குழந்தைகள், தாங்கள் விரும்பும் விஷயங்களை ஆர்வத்துடன் கற்றுக்கொள்கிறார்கள். இதனால் கற்றல் இனிமையான அனுபவமாக அங்கே மாறுகிறது. ஆரம்பப் பள்ளி ஆசிரியராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய ‘ஜிஜுபாய் பதேக்கா’ கல்வியில் புதிய மாற்றங்களை உருவாக்க ஆசை கொண்டிருந்தார். பாடங்களை அப்படியே மனப்பாடம் செய்து மதிப் பெண் வாங்குவது முக்கியமா? அல்லது ஆளுமையை உருவாக்கி அதன் மூலம் மாணவனை வெற்றி பெறச் செய்வது முக்கியமா என்ற கேள்வி, அவரது மனதில் தீவிரமாக ஊசலாடிக் கொண்டிருந்தது. ‘முழுமையான புரிதல் இன்றி மனப்பாடம் செய்து ஒரு மாணவன் அதிக மதிப்பெண் பெற்றால், அவன் எப்படி சிறந்தவனாக இருக்க முடியும்? கட்டாயத்தின் பேரால் ஒன்றை படிப்பதை விடவும், புதிய முறையைக் கையாண்டு எளிதாக புரிந்து படிக்கும் வகையில் கற்று தந்தால் என்ன’ என பதேக்கா யோசனை செய்தார். அதன் விளைவாக மாணவர்களுக்கு கதைகள் வழியாகவே பாடங்களைக் கற்றுத் தர முடிவு எடுத்தார். ஆரம்ப நாட்களில் மாணவர்களும் ஆர்வமாக கதை கேட்பதும், சொல்வது மாக இருந்தார்கள். ஆனால் பாடங்களை, உண்மைகளை கதையோடு சேர்த்து சொல்லும்போது பாடங்களை விரும் பாமல் வெறும் கதையை மட்டும் கேட்கத் தொடங்கினார்கள். ‘இது தவறான வழிகாட்டுதல். உண் மையை மாணவர்கள் உணரும்படி சொல்வதற்குத்தான் கதையைப் பயன் படுத்த வேண்டும்’ என உணர்ந்த பதேக்கா, புதிய வழிமுறையை உரு வாக்கப் போராடினார். இவரது இந்த முயற்சியை சக ஆசிரியர்கள் கேலி செய்தார்கள். பள்ளி நிர்வாகம் அவரை கண்டித்தது. ஆனாலும் அவர் தனது முயற்சியை கைவிடவில்லை. முடிவில் வெற்றி பெற்றார். இந்த அனுபவத்தை அடைவதற்கு அவர் மேற்கொண்ட போராட்டங்கள், அதன் வெற்றி, தோல்விகளே இந்த ‘பகல் கனவு’ புத்தகத்தில் விவரிக்கபட்டுள்ளன. ‘ஜிஜுபாய் பதேக்கா’ கையாண்டது ‘மாண்டிசோரி’ கல்விமுறை. இந்த முறை 1907-ல் இத்தாலி நாட்டைச் சேர்ந்த மாண்டிசோரி அம்மையாரால் வகுக்கப் பட்டது. மாண்டிசோரிப் பள்ளிகளில் குழந்தைகளுக்கு வழிகாட்டவும், கண்காணிக்கவும் மட்டுமே ஆசிரி யர்கள் இருப்பார்கள். இந்தப் பள்ளிகளில் பலவகைப் பயிற்சிக் கருவிகள் மூலம் கல்வி கற்றுத் தரப்படும். இவை கண்ணைக் கவரும் விளையாட்டுப் பொருள் போல பல்வேறு வண்ணங்களில் இருக்கும். இந்தக் கருவிகளை எளிதாகக் கையாண்டு குழந்தைகள் ஆர்வமாக கற்றுக்கொள்கி றார்கள். மருத்துவரான மரியா மாண்டிசோரி 1939 முதல் 1947 வரை இந்தியாவிலும் இலங்கையிலும் பணியாற்றியுள்ளார். குழந்தைகளின் அடிப்படை உணர்வுகளை மதித்து செயல்படுவதே இந்தக் கல்விமுறையின் சிறப்பு அம்சம். குழந்தைகளிடம் அபாரமான சக்தி இருக்கிறது. அதை முறையாக பயன்படுத்தி அவர்களது ஆளுமையை வளர்த்தெடுக்க உதவுவதே கல்வியின் நோக்கம் என்கிறார் மாண்டிசோரி. 80 ஆண்டுகளுக்கு முன்பு ‘ஜிஜுபாய் பதேக்கா’ ஓர் ஆசிரியராக தனக்கான பாதையைத் தானே உருவாக்கிக் கொண்டார். அதில் அவர் வெற்றியும் கண்டார். இந்த நெருப்பு பந்தத்தை உயர்த்திப் பிடித்து நடக்கும் ஆசிரியர்கள் குறைவாக இருக்கிறார்கள் என்பதே நம் காலத்தின் ஆதங்கம்! - வாசிப்போம்…