Wednesday, 27 August 2014

நாளை (28/08/2014) மத விடுப்பு உண்டு?

             நாளை (28/08/2014) மத விடுப்பு உண்டு என்பதற்கான  கோவா அரசு அச்சகம் வெளிட்டுள்ள பட்டியல்.

Restricted Holidays

List of Restricted Holidays for the Year 2014
Sr. No.
Holidays
Date
Saka
Days of the week
1.
New Year Day
January, 01
Pausa, 11
Wednesday
2.
Makarsankranti
January, 14
Pausa, 24
Tuesday
3.
Guru Ravi Das Birthday
February, 14
Magha, 25
Friday
4.
Shivaji Jayanti
February, 19
Magha, 30
Wednesday
5.
Ram Navami
April, 08
Chaitra, 18
Tuesday
6.
Mahavir Jayanti
April, 13
Chaitra, 23
Sunday
7.
Vaisakhi
April, 14
Chaitra, 24
Monday
8.
Vishu
April, 14
Chaitra, 24
Monday
9.
Maundy Thursday
April, 17
Chaitra, 27
Thursday
10.
Budha Purnima
May, 14
Vaisakha, 24
Wednesday
11.
Feast of Sacred Heart of Jesus
June, 27
Ashadha, 06
Friday
12.
Raksha Bandhan
August, 10
Sravana, 19
Sunday
13.
Janmashtami
August, 17
Sravana, 26
Sunday
14.
Hartalika
August, 28
Bhadra, 06
Thursday
15.
Onam
September, 07
Bhadra, 16
Sunday
16.
Govardhan Puja
October, 24
Kartika, 02
Friday
17.
Bhaubij
October, 25
Kartika, 03
Saturday
18.
All Souls Day
November, 02
Kartika, 11
Sunday
19.
Muharam
November, 05
Kartika, 14
Wednesday
20.
Guru Nanak’s Birthday
November, 06
Kartika, 15
Thursday
21.
Guru Teg Bahadur Martydom Day
November, 24
Agrahayana, 03
Monday
22.
Feast of Immaculate Conception
December, 08
Agrahayana, 17
Monday
23.
Christmas Eve
December, 24
Pausa, 03
Wednesday
24.
New Year’s Eve
December, 31
Pausa, 10
Wednesday

Tuesday, 26 August 2014

திருமண விழா http://koottanithirumarugal.blogspot.in/p/blog-page_66.html


12 thousands teachers appointment list ready


கதை சொல்லும் நிகழ்ச்சியில் மாணவர்கள் கலந்துகொள்வது குறித்து இயக்குனர் உத்தரவு.


       தொடக்கக் கல்வி - சென்னையில் 26.08.2014 மற்றும் 27.08.2014 அன்று நடைபெறவுள்ள "கதை கலாட்டா" எனும் கதை சொல்லும் நிகழ்ச்சியில் மாணவர்களை செய்ய உத்தரவு

தமிழ்வழிக் கல்வியை சாத்தியமாக்க வழி என்ன?



Advertisement

பதிவு செய்த நாள்

16
ஆக
2014 
23:29

இன்றைய மாணவர்களால் முறையாகத் தமிழில் பேச முடியவில்லை; பிழையின்றி எழுதத் தெரியவில்லை. ஊடகங்கள் பெரும்பாலும் ஆங்கிலம் கலந்த கலவைத் தமிழையே பயன்படுத்துகின்றன என, கண்டனக்குரல் ஒலிப்பதைக் காண முடிகிறது. இத்தகைய குறைகளை மிகைப்படுத்துவதைத் தவிர்த்து, இந்நிலையை மாற்றியமைக்க தமிழ் கல்வியாளர்கள், ஆக்கபூர்மான பணியில் ஈடுபட வேண்டும்.

தமிழ் வழியாகக் கல்வி பயின்றால், பிற மாநிலங்களிலும் பிற நாடுகளிலும் பணிபுரிய முடியாது என்னும் புனைந்துரையையும், தமிழில் இளங்கலை, முதுகலை கற்றவர்களால் ஆசிரியப் பணியினை மட்டுமே மேற்கொள்ள முடியும் என்னும் பரப்புரையையும் பொய்யுரையாக்க வேண்டியது, தமிழ்க் கல்வியாளர்களின் கட்டாயக் கடமை.தாய்மொழிவழிக் கல்வியின் உண்மை நிலையை உணர்ந்து கொள்ளாமையால், ஆங்கிலவழிக் கல்வியின் மீது பெரிதும் நாட்டம் கொண்டுள்ளோம். நம் கல்வித் திட்டத்தில் மொழிக்கல்விக்கு முதன்மை இடம் அளிக்காததால், நாட்டின் வளர்ச்சி தேக்க நிலையில் இருக்கிறது. பல ஆண்டுகள் தமிழைக் கற்றாலும், மாணவர்கள் படித்தவற்றின் உட்பொருளை உணர முடியாமலும், புதியன படைக்கும் திறன் இல்லாமலும், கருத்துக்களை வெளியிடும் திறன் இல்லாமலும் இருக்கின்றனர்.இந்நிலையில், தமிழ்வழியாகக் கற்பிக்கப்படும் பிறபாடங்களின் நுண்பொருளை மாணவர்களால் எவ்வாறு உணர முடியும்?
மொழிக்கல்வியில் நம் பாடத்திட்டத்தில் முதன்மை இடம் பெறுவது இலக்கணக் கல்வி. இலக்கணம் என்பது, ஒரு குறிப்பிட்ட காலத்தில் பயன்படுத்தப் பெற்ற மொழியின் அமைப்பை விவரிக்கக் கூடியது என்பதால், அது காலந்தோறும் மாறிக் கொண்டே வருகிறது.

மொழியலகுகளில் ஏற்பட்டுள்ள முறையான மாற்றங்களை அறிஞர்கள் ஏற்றுக் கொள்ளாமையால், இன்றைய மாணவர்களுக்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் பேசப்பட்ட மொழியின் அமைப்பை விவரிக்கும் இலக்கணத்தைக் கற்பிக்கும் நிலை காணப்படுகிறது. இதனால் மாணவர்களுக்கு, இன்றைய பயன்பாட்டுத் தமிழில் பேசவும், எழுதவும் ஆற்றல் கிடைக்காமல் போய்விடுகிறது.மொழி கற்பித்தலுக்கும், இலக்கியம் கற்பித்தலுக்கும் இடையேயுள்ள வேறுபாடு கூட, கல்வியாளர்கள் மத்தியில் வரையறை செய்யப் பெறவில்லை. இலக்கியக் கல்வியையே மொழிக்கல்வியாகக் கருதும் போக்கு, கட்டாயம் மாற்றம் பெற வேண்டும்.மொழிக் கல்வி பற்றிய தவறான எண்ணம், பாடத்திட்டம், கற்பித்தல் ஆகியவற்றில் காணப்பெறும் நிறைவின்மை காரணமாக, மொழிக்கல்வி மிகவும் பின்தங்கியுள்ளது. 
மாணவர்களிடம் மொழிக்கல்வியில் பெரிதும் ஆர்வம் குன்றியிருப்பதற்குப் பாடத்திட்டமே அடிப்படைக் காரணமாக அமைகிறது.நம் பாடத்திட்டம் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளதே அன்றி, பெரிதும் மாற்றியமைக்கப் பெறவில்லை. இது வாழ்க்கைக்குத் தொடர்பின்றி, ஆசிரியர்களை மையமாகக் கொண்டே அமைந்துள்ளது. இது, மொழித்திறன்களை வளர்ப்பதைக் காட்டிலும், மொழி வரலாற்றைத் திணிக்கும் வகையில் தான் அமைந்துள்ளது.

மருத்துவம், தொழில் நுட்பவியல் போன்வற்றைப் பயிலவிருக்கும் மாணவர்களுக்கு மேனிலை வகுப்புகள் வரை மட்டுமே மொழிக்கல்வி பெற வாய்ப்புள்ளதால், பள்ளியிலேயே அனைத்து மொழித்திறன்களையும் தெரிந்து கொள்ளும் வகையில் பாடத்திட்டம் அமைய வேண்டும்.இளங்கலை, முதுகலைத் தமிழ் பயிலும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பைத் தரும் மொழிபெயர்ப்பு, மொழி கற்பித்தல், கணினி மொழியியல், மானுடவியல், மொழி அறிவியல், பண்பாட்டியல் போன்ற பாடங்களையும் அறிமுகம் செய்து, அனைத்துத் துறைகளிலும் பணிபுரியக் கூடிய வகையில் பாடத்திட்டம் அமைய வேண்டும்.மாணவர்களுக்குத் தன்னம்பிக்கையை உருவாக்கும் ஆங்கில மொழிக் கருத்துப் பரிமாற்றக் கல்வியும், கணினிப் பயன்பாட்டுக் கல்வியும் பாடத்திட்டத்தில் கட்டாயம் இடம் பெற வேண்டும். ஆங்கிலக் கருத்துப் பரிமாற்றத்திறன் பெற்றால் தான், நம் இலக்கண, இலக்கியக் கோட்பாடுகளை உலகறியச் செய்தல் இயலும்.

உலகின் முதல் மொழி அறிவியல் ேபராசான் என்று கருதப்படும் தொல்காப்பியரின் மொழி விளக்க மரபும், இலக்கணக் கோட்பாடும் மேலை நாடுகளைச் சென்றடையவில்லை என்பது வருந்தற்குரியது.கல்வி என்பது வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக; வாழ்க்கையைச் சீர்குலைத்துப் பொருள் ஈட்டுவதையே குறிக்கோளாகக் கொண்டது அல்ல கல்வி என்பதை தெரிந்து கொள்ளும் வகையில், பாடத்திட்டமும், பாடங்களும் அமைய வேண்டும்.கற்ற கல்வியை மதிப்பீடு செய்வதே, தேர்வின் நோக்கம். கற்ற பாடம் முழுவதையும் மதிப்பீடு செய்யாமல், மனப்பாட ஆற்றலின் அடிப்படையில் நடத்தப்பெறும் நம் தேர்வுமுறை, மாணவர்களின் மொழித்திறனில் குறைபாட்டை உருவாக்கி, அவர்களைக் காயப்படுத்துகிறது. 1330 குறளை ஒப்புவிக்கும் மாணவனால், புதிதாக ஒரு திருக்குறளை உருவாக்க முடியவில்லை.மாணவர்களால் தமிழ் ஒலிகளை முறையாக ஒலிக்கத் தெரியவில்லை என்று கூறுவதைக் காட்டிலும், இவர்களுக்குத் தொடக்க நிலையில் முறையான ஒலிப்புப் பயிற்சி வழங்குவதே ஏற்புடையது. 

இத்தகைய பயிற்சி அளிக்கும் அனுபவம் ஆசிரியர்களிடம் இல்லை. தொடக்க நிலையில் மொழி ஆசிரியர்களால் பள்ளியில் மொழிக் கல்வி கற்பிக்கப்படுவதில்லை என்பதும் உண்மை.மொழிக்கல்வியின் குறைபாட்டிற்கு மக்களின் மனநிலை அடிப்படைக் காரணமாக அமைந்துள்ளது. அன்று வடமொழிக்கு, மொழி முதன்மை கொடுத்தோம். இன்று ஆங்கிலத்திற்குக் கொடுக்கிறோம்.ஆங்கிலம் பேசுகிறவர்களை அறிவாளிகளாகக் கருதும் நாடுகளில் ஒன்றான நம் நாட்டில், ஆங்கிலேயன் நம்மிடமிருந்து கடன் பெற்று மாற்றியமைத்த சொற்களை மீண்டும் அவனிடமிருந்து கடன் பெற்றுப் பயன்படுத்துவதைப் பெருமையாகக் கருதுகிறோம்.தமிழ் மொழியமைப்பில் காணப்படும் சீர்மையின்மையைக் களைந்து, கணினிப் பயன்பாடு, மின்னணுவியல் உட்பட அனைத்துத் துறைகளிலும் கருத்துப் பரிமாற்றத்திற்குத் தேவையான அலகுகளை, தமிழில் தமிழ்க் கல்வியாளர்கள் உருவாக்க வேண்டும். இந்நிலையில் தமிழியற்கல்வி புதிய வரலாறு படைக்கும்.
இ-மெயில்: laserbala@gmail.com

- பேராசிரியர் ஏ. ஆதித்தன் 
-மதுரை காமராசர் பல்கலைக்கழகம்

சான்றிதழ் தொலைந்துவிட்டால் பெறுவது எப்படி?


        ஒருவருடைய பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலைப்பள்ளி மதிப்பெண் சான்றிதழ் எதிர்பாராத வகையில் தொலைந்துவிட்டால் அல்லது தீவிபத்து, வெள்ளம், கரையான் போன்றவற்றால் சிதிலமாகி இழக்க நேரிட்டால் அதன் நகலை பெற முடியும். அதற்கான நடைமுறை வழிகளை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

* முதலில் மனுதாரர் தங்கள் பகுதியிலுள்ள காவல்நிலையத்தில் தேவையான தகவல்களுடன் புகார் அளிக்க வேண்டும்.
* அடுத்து தொலைத்துவிட்ட விவரத்தை தினசரி பத்திரிகையில் அறிவிப்பு விளம்பரம் செய்ய வேண்டும்.

* இதற்கு குறைந்தது ரூ.500 வரை செலவழிக்க நேரிடும்.

* பின்னர் காவல்நிலையத்தில் சான்றிதழை கண்டுப்பிடிக்க முடியவில்லை என்று கொடுக்கப்படும் சான்றிதழை பெற வேண்டும்.

* இதனை தாசில்தாரிடம் கொடுத்து அவரிடம் சான்றிதழ் பெற வேண்டும்.
* சான்றிதழ் நகல் பெறுவதற்காக அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்திற்கு வங்கி வரவோலை வாங்க வேண்டும்.

* பின்னர் பத்திரிகை விளம்பரத்தை வெட்டி எடுத்து தாசில்தார் சான்றிதழ், வங்கி வரைவோலை முதலியவற்றை கோரிக்கை மனு ஒன்று எழுதி அதனுடன் இணைக்க வேண்டும்.

* மனுதாரர் எந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு அல்லது பிளஸ்2 படித்தாரோ அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மூலம் மாவட்ட கல்வி அதிகாரிக்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.

* அதனை மாவட்ட அதிகாரி பரிசீலனை செய்து மாநில அரசு தேர்வு துறை இயக்குநருக்கு மதிப்பெண் சான்றிதழ் நகல் வழங்க சிபாரிசு செய்வார்.

* சான்றிதழ் தன்மைக்கேற்ப (படித்த ஆண்டின்) 3 அல்லது 6 மாதங்களுக்குள் சான்றிதழ் நகல் பள்ளி கல்வி தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்திலிருந்து அனுப்பி வைக்கப்படும்.

* இதனை இறுதியாக எந்த பள்ளியில் படித்து முடித்தோமோ, அந்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் பெற முடியும்.

அடிவயிற்றில் தங்கியுள்ள கொழுப்பை குறைக்க வேண்டுமா? இதோ 10 வழிகள்!


       இன்றைய இளைய தலைமுறையாகட்டும், பெரியவர்களாகட்டும் அவர்களுடைய எடையை, குறிப்பாக வயிற்றை குறைக்க படும் பாடுகளை சொல்லி மாளாது. இவ்வாறு வயிற்றுப்பகுதி பெரியதாக இருப்பதை அதை விட பெரிய குறையாக கருதுபவர்கள் பலரும் உண்டு.

         இந்த குறையை தீர்க்க ஏதேனும் வழிமுறைகள் உள்ளனவா என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால் இதோ நாங்கள் சில குறிப்புகளை கொடுக்கிறோம். படியுங்கள் பயன் பெறுங்கள்.

சரியாக சாப்பிடுதல்
 
         சரியான முறையில் சாப்பிட்டால் 80% கொழுப்பை நிச்சயம் குறைக்க முடியும். ஆரோக்கியமான மற்றும் சீரான உணவு முறையை பின்பற்றும் போது இதை நாம் சாதிக்க முடியும். தேவையான அளவு நுண் மற்றும் பெரும ஊட்டச் சத்துக்களை சாப்பிட்டால் கொழுப்பை குறைக்க முடியும். இடை உணவுகள், துரித உணவுகள் ஆகிய கடைகளில் வாங்கும் உணவுகளை அறவே தவிர்த்தால் தடியான வயிறை தட்டையான வயிறாக மாற்ற முடியும். இயற்கையான காய்கறிகள் மற்றும் பழங்கள், வேக வைத்த உணவு வகைகளை தேர்ந்தெடுத்து உண்ணுங்கள்.
 
தண்ணீர்
 
          தாகம், அயர்ச்சி, பசி ஆகியவற்றைப் பற்றி தெளிவாக உணராத சிலர் பசிக்கும் போது நிறைய சர்க்கரை கொண்ட உணவை உண்டு எடையை தங்களை அறியாமலேயே அதிகப்படுத்திக் கொள்கின்றனர் அல்லது கொழுப்புச்சத்து அதிகம் உள்ள உணவை பசியில் விரைந்து உண்கின்றனர். இது தவறு. எப்போதும் ஒரு தண்ணீர் பாட்டிலை கையில் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். குறைந்தது 6 முதல் 8 டம்ப்ளர் தண்ணீராவது குடிக்க வேண்டும். ஆனால் இது உங்கள் எடை மற்றும் வாழ்க்கை முறையை சார்ந்த விஷயமாக அமைகின்றது. இதை கண்டறிந்து உங்களுக்கு தேவையான தண்ணீரின் அளவை கண்டறிந்து அதை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.
 
உடற்பயிற்சி
 
        பல மணி நேரம் உழைப்பு மற்றும் வெகு தூர ஓட்டப் பயிற்சி ஆகிய இரண்டும் தரும் பலன்களை விட சிறிது நேரம் கடினமான உடற்பயிற்சியில் ஈடுபடும் போது கொழுப்பு அதிகமாக குறையும். உதாரணமாக நீங்கள் திரெட் மில்லில் பயிற்சி மேற்கொள்ளும் போது அவ்வப்போது உங்கள் வேகத்தை கூட்டி சில வினாடிகள் அதை தொடர்ந்து பயிற்சி செய்த பின் மீண்டும் நமது பழைய வேகத்திற்கு திரும்பி வரும் போது சிறந்த அளவில் தொப்பை குறையும்.
 
சர்க்கரை வேண்டாம்
 
          பொதுவாக நமக்கு கடைகளில் கிடைக்கும் சர்க்கரையை தவிர்ப்பதும் அல்லது குறைப்பதும் நல்லது. இதை தினமும் நமது உணவில் தவிர்த்தால் சிறந்தது. நாம் தினமும் உண்ணும் உணவில் சர்க்கரை நிறைய அளவு ஒளிந்திருக்கும். இதை உணர்ந்து, நாம் உண்ணும் உணவில் சாக்கரையை குறைப்பது நல்லது. இதற்கு பதிலாக தேன், பனங்கற்கண்டு மற்றும் அதிமதுர சாறு ஆகியவற்றை பயன்படுத்தலாம்.
 
சோடியம் உட்கொள்ளுதலை குறைத்தல்
 
         உப்பை கண்டிப்பாக உணவில் சேர்த்து பயன்படுத்தும் இந்த காலத்தில் சோடியம் உப்பை தவிர, பொட்டாசியம் உப்பு, எலுமிச்சை உப்பு மற்றும் கடல் உப்பு ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இவற்றை வாங்கிப் பயன்படுத்தலாம். மிளகு மற்றும் இதர மூலிகைகளை பயன்படுத்துவதன் மூலம் உப்பு உட்கொள்ளுவதை தவிர்க்க முடியும்.
 
வைட்டமின் சி உணவுகள்
 
          உடலில் உள்ள கொழுப்புகளை சக்தியாக மாற்றும் கார்னிடைன் என்ற பொருளை சுரப்பதற்கு உதவும் வைட்டமின் சி மிகவும் அவசியமானதாக உள்ளது. அது மட்டுமல்லாமல் மன அழுத்தத்தால் சுரக்கப்படும் கார்டிசாலையும் வைட்டமின் சி கட்டுப்படுத்துகிறது. இந்த கார்டிசால் தான் வயிற்று கொழுப்பு அதிகரிப்பதற்கு மிக முக்கிய காரணமாகும்.
 
கொழுப்பை குறைக்கும் இந்திய உணவுகள்
 
          கொழுப்பை குறைப்பதற்கு இயற்கையான வழிகள் பலவும் உள்ளன. பூண்டு, வெங்காயம், இஞ்சி, சிவப்பு மிளகு, கோஸ், தக்காளி, மற்றும் இலவங்கப்பட்டை, கடுகு, கிராம்பு ஆகியவையும் கொழுப்பை கரைக்க உதவுகின்றன. சிறிது கிராம்பு, பச்சை பூண்டு மற்றும் ஒரு அங்குல அளவிற்கு இஞ்சி ஆகியவற்றை கலந்து தினமும் காலை சாப்பிட்டு வந்தால் கொழுப்பை நிச்சயம் கரைக்க முடியும். வெதுவெதுப்பான தண்ணீரில் கொஞ்சம் எலுமிச்சை சாறு மற்றும் தேனை கலந்து, காலையில் வெறும் வயிற்றில் அருந்துவதும் மிகப் பிரபலமான உடல் எடையை குறைக்கும் வழியாக பின்பற்றப்படுகின்றது. இது போன்று பல வழிகள் உண்டு.
 
          தேவையான ஆரோக்கியமூட்டும் கொழுப்புச் சத்தை சேர்த்துக் கொள்ளுதல் கெட்ட அல்லது தேவையற்ற கொழுப்புக்களை குறைக்கும் முயற்சியில் நாம் நல்ல கொழுப்பு வகைகளை சேர்க்க முயல வேண்டும். வெண்ணைய் பழம், ஆலிவ், தேங்காய் ஆகிய பருப்பு வகைகள் நல்ல கொழுப்புகளை கொண்டவையாகும்.
 
காலை உணவை கண்டிப்பாக சாப்பிடவும்
 
          காலை உணவை தவிர்ப்பது உடல் எடையை குறைக்க உதவும் என்று நிறைய மக்கள் தவறாக நினைப்பதுண்டு. இது உடல் எடையை குறைக்காமல், உடல் வீக்கமடைய காரணமாகிவிடுகிறது. இதனால் வயிறு உப்புசமடைவது அதிகரித்து, பசி அதிகமாவதால் வயிற்றுக் கொழுப்பு மிகவும் அதிகமாகிறது. ஆகவே அவ்வப்போது நாம் சிறிது சிறிதாக உண்ணும் போது நமது உடல் செரிமானத்தை கட்டுப்படுத்தி உடல் எடையை மேம்படுத்த முடிகிறது. ஆகையால் உணவின் அளவை குறைத்து உண்ணும் நேரங்களை அதிகப்படுத்தி ஆரோக்கியமாக உடலை உருவாக்கிக் கொள்ளுங்கள். உலர்ந்த பழங்கள், பழ வகைகள் மற்றும் பச்சை அல்லது வேக வைக்காத காய்கறிகள் ஆகியவற்றை உண்ணலாம்.
 
தூக்கம்
 
             உடல் எடையை மேம்படுத்த தூக்கம் மிகவும் அவசியமான ஒன்றாகும். அனைவருக்கும் 6 முதல் 8 மணி நேர உறக்கம் தேவைப்படுகிறது. உறங்காமல் இருப்பதும் உடல் எடையை கூட்டுவதாக உள்ளது. இத்தகைய எளிய வழிகளை பின்பற்றினால் வயிற்றுக் கொழுப்பை மட்டுமல்ல, முழு உடல் எடையையும் குறைத்து ஆரோக்கிய வாழ்வை வாழ முடியும். இதை முயற்சி செய்து வித்தியாசத்தை உணருங்கள்

Friday, 22 August 2014

புதிய பென்ஷன் திட்டத்தின்படி, குடும்ப ஓய்வூதியம் இல்லை


             தஞ்சாவூரைச் சேர்ந்த ஆசிரியர் பி.ராஜா என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தமிழ்நாடு மாநில முதன்மை கணக்காளர் அலுவலகத்தில் கிராஜுவிட்டி தொடர்பாக தகவல் கேட்டிருந்தார். 
 
       அவருக்கு அளிக்கப்பட்ட விளக்கத்தில், தமிழ்நாடு ஓய்வூதிய விதிகள் 1978-க்கு உட்பட்ட அரசு ஊழியர்களின் ஓய்வூதிய பயன்கள் தொடர்பான வேலைகளை மட்டுமே தாங்கள் பார்த்து வருவதாகவும் மற்ற திட்டத்தின் (புதிய பென்ஷன் திட்டத்தில்) கீழ் உள்ள ஊழியர்கள் தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் வரமாட்டார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

            இதற்கிடையே, 2003 ஏப்ரலுக்குப் பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு தமிழ்நாடு ஓய்வூதிய விதிகள் 1978 பொருந்தாது என்று தமிழக அரசு கடந்த 6.8.2003 அன்று அரசாணை வெளியிட்டது. அதேபோல், அவர்களுக்கு பொது வருங்கால வைப்புநிதியும் (ஜிபிஎப்) பொருந்தாது என்று 27.5.2004 அன்று அரசாணை மூலம் தெரிவித்தது. தமிழ்நாடு ஓய்வூதிய விதிகள் 1978 பொருந்தாது என்பதால் அதன்கீழ் வழங்கப்படும் கிராஜுவிட்டி மற்றும் குடும்ப ஓய்வூதியம் ரத்தாகிவிடும்.

எந்த எண்ணெய்... நல்ல எண்ணெய்?!


பொன்.விமலா, படங்கள்: ப.சரவணகுமார், பா.அருண்
நம் தாத்தா, பாட்டி காலத்தில் நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் இவைதான் சமையலுக்குப் பயன்படுத்தும் எண்ணெய்களாக புழக்கத்தில் இருந்தன. ரீஃபைண்டு செய்யப்பட்ட சூரியகாந்தி எண்ணெய், 30 ஆண்டுகளுக்கு முன் சந்தைக்கு வந்த பின், ரீஃபைண்டு முறையிலேயே கடலை எண்ணெய், தவிட்டு எண்ணெய் வகைகளுடன், கடுகு எண்ணெய், சோள எண்ணெய், ஆலிவ் எண்ணெய் உள்ளிட்ட பலவிதமான எண்ணெய்களும் புழக்கத்துக்கு வந்துவிட்டன.
கூடவே, 'தேங்காய் எண்ணெய் பயன்படுத்துகிறீர்களா... உங்களை மாரடைப்பு தாக்குவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது உஷார்!', 'நல்லெண்ணெய் பயன்படுத்துகிறீர்களா... உங்களின் ரத்தக்கொதிப்பை அதிகப்படுத்துவதற்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்' என்று மருத்துவர்களிடம் இருந்து புறப்பட்டு வந்த எச்சரிக்கைகளும் சேர்ந்துகொள்ள... 'எந்த எண்ணெயிலதான் சமைக்கிறதோ...' என்று குழம்பிப் போய், டாக்டர்கள், விளம்பரங்கள் மற்றும் மீடியாக்கள் அவ்வப்போது எதையெல்லாம் சொல்கிறார்களோ... அதில் ஏதாவது ஒரு எண்ணெயை வாங்கிப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
'உடல் நலன் சார்ந்த விஷயத்தில் கூடவா இத்தனைக் குழப்பங்கள்... உண்மையிலேயே எந்த எண்ணெய் நல்ல எண்ணெய்... எதையெல்லாம் சேர்த்துக்கொள்ளலாம், எதையெல்லாம் தவிர்க்கலாம்?' என்கிற கேள்விகளுடன், உணவுச் சிறப் பிதழுக்காக மருத்துவர்கள், கடைக்காரர் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்களைச் சந்தித்தோம்.
எண்ணெய் தயாரிப்பு மற்றும் விற்பனையில் அனுபவங்களைப் பெற்றிருக்கும் சென்னை, ரங்கராஜபுரம் 'ஹேப்பி சூப்பர் மார்க்கெட்’ உரிமையாளர் சர்தார் சொல்வதை முதலில் கேட்போம். ''திருச்சியில ஆயில் மில் வெச்சிருந்தேன். அந்த வகையில் கேள்விப்பட்ட தகவல்கள் மற்றும் என் அனுபவத்தில் இருந்து எண்ணெய் குறித்த சில விஷயங்களைச் சொல்றேன். முன்னயெல்லாம் சமையலுக்கு செக்குல ஆட்டின எண்ணெயைத்தான் பயன்படுத்திட்டு இருந்தாங்க. 'இதயத்துக்குப் பாதுகாப்பானது'னு சொல்லி, கொலஸ்ட்ரால் சத்து நீக்கின ரீஃபைண்டு ஆயிலை பயன்படுத்தச் சொல்லி டாக்டர்கள் வலியுறுத்த ஆரம்பிச்ச பிறகு, மக்களும் பெரும்பான்மையா அதுக்கு மாறிட்டாங்க. ஆனா, இந்த எண்ணெய் விஷயத்துல சத்து, நல்லது இப்படிப்பட்ட விஷயங்களைப் பரப்புறதுல வியாபார அரசியலும் ஒளிஞ்சுருக்குனுதான் சொல்லணும். ஒவ்வொரு எண்ணெய் நிறுவனமும் தங்களோட வியாபாரத்தைப் பெருக்கறதுக்காக, 'அறிவியல்பூர்வமான உண்மை... அது, இது’னு ஏதாவது ஒரு வகையில மக்கள் மனசுல பதியவெச்சுடறாங்க.
உதாரணத்துக்கு, 'சுத்தமான தேங்காய் எண்ணெய்'னு விளம்பரப்படுத்துறதைப் பார்த்திருப்பீங்க. நான் சொல்றதைக் கேட்டபிறகு எந்த அளவுக்கு சுத்தம்னு நீங்களே புரிஞ்சுப்பீங்க. தேங்காய் எண்ணெய் தயாரிப்புக்கான கொப்பரைகளைக் காயவைக்கும்போது, அதுல சட்டுனு பூஞ்சை படர்றது நிறைய வாய்ப்பு உண்டு. இப்படி பூஞ்சை படர்ந்துட்டா... அதைப் பயன்படுத்த முடியாது. அதனால கவனமா கொப்பரைகளைக் காயவெச்சு எடுக்கணும். பூஞ்சை படர்ந்திருந்தா, அதையெல்லாம் நீக்கணும். ஆனா, இதுக்கெல்லாம் பொறுமை இல்லாம, கொப்பரை களோட மேற்பரப்புல கந்தகத்தைத் தடவி காயவைக்க ஆரம்பிச்சாங்க. இப்ப கிட்டத்தட்ட பொதுவான வழக்கமாவே மாறிடுச்சு. கந்தகம்ங்கிறது வீரியமான ஒரு வேதிப்பொருள். இதைக் கலந்து தயாரிக்கப்படுற எண்ணெயை உங்க தலையில தேய்ச்சா முடி வளருமா... முடிகொட்டுமா?'' என்று அதிர்ச்சி கொடுத்த சர்தார் தொடர்ந்தார்.
''இதேபோல, 'ரீஃபைண்டு’ அப்படீங்கிற தயாரிப்பு முறையில வர்ற எண்ணெய்கள்ல நமக்குக் கிடைக்கிற நன்மைகளைவிட, இழக்கும் நன்மைகள்தான் அதிகம்! ஒரு எண்ணெயை, வேதிப்பொருட்களைப் பயன்படுத்தி பல கட்டங்களா சுத்திகரிக்கும்போது, அதோட தன்மையே மாறிப்போறதோட, சத்தும் நீங்கிடுது. முன்பு நல்லெண்ணெய் தயாரிக்கறதுக்கு செக்கில் எள்ளை ஆட்டும்போது, எள்ளிலிருந்து எண்ணெயைப் பிரிக்கறதுக்காக கருப்பட்டியைச் சேர்த்தாங்க. இப்போ 'எக்ஸெலர்’ங்கற இயந்திரம் மூலமா எண்ணெய் எடுக்கிறாங்க. இதுல கருப்பட்டிக்குப் பதிலா, சர்க்கரை ஆலைக் கழிவைப் பயன்படுத்துறாங்க. இது எண்ணெயோட குணங்களை மாத்திடுது. செக்குல ஆட்டுற எண்ணெயை வடிகட்டும்போது, கசடுகள் மட்டும்தான் நீக்கப்படும். ஆனா, இந்த 'ரீஃபைனிங்’ முறையில கசடுகளோட சேர்ந்து சத்துக்களும் வடிகட்டப்படுது.
மொத்தத்தில், ரீஃபைண்டு எண்ணெய் வகைகள், எண்ணெய்க்கே உரித்தான சத்துக்களை நம்மகிட்ட சேர்க்கிறதில்ல. வியாபார நோக்கத்தோட, 'ரீஃபைண்டு பண்ணாத எண்ணெய்கள் உடலுக்குக் கேடு'னு சொல்லிச் சொல்லியே மக்களைப் பயமுறுத்திட்டாங்க. கொலஸ்ட்ராலுக்குப் பயந்து ரீஃபைண்டு ஆயிலுக்கு மாறினவங்களுக்கு கொலஸ்ட்ரால் குறைஞ்சுடுச்சுனும் சொல்ல முடியாது. அதனால, என் அனுபவத்தில் செக்கு எண்ணெய் வாங்கிப் பயன்படுத்துறதே சிறந்தது! ஆனால், செக்கு எண்ணெய் எங்கே கிடைக்கும் என்று தேடிக் கண்டுபிடிப்பது சாதாரண காரியமல்ல. எனவே, ரீஃபைண்டு செய்யாத எண்ணெயைப் பயன்படுத்துவதுதான் நல்லது'' என்று சொன்னார் சர்தார்.
எல்லா எண்ணெய்களையும் கலந்து பயன்படுத்துங்கள்!
எண்ணெய் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் தரும் வகையில் பேசிய 'சூழல் பாதுகாப்புக் குழு' மருத்துவரான டாக்டர் புகழேந்தி, ''சிலர், 'நான் இந்த எண்ணெயைத் தவிர வேற எதையும் தொடறதே இல்லை’னு பெருமையா சொல்லிப்பாங்க. இது முழுக்க தவறான நம்பிக்கை. ஒரே வகையான எண்ணெயைப் பயன்படுத்துறதைவிட, எல்லா வகை எண்ணெய்களையும் கலந்து பயன்படுத்துறது நல்லது. ஒரே வகையான எண்ணெயைத் தொடர்ந்து எடுத்துக்கும்போது அதிலிருக்கிற கெடுதல் தன்மை உடல்ல சேர்ந்துட்டே இருக்கும். அதனால எண்ணெய்கள்ல இருக்கிற நற்குணங்கள் மட்டுமே உடம்புல சேரணும்னா... எல்லா வகை எண்ணெய்களையும் மாத்தி மாத்தி கொஞ்சமா பயன்படுத்தணும். இதயத்துக்கு நல்லதுங்கிற விளம்பரத்தோட மார்க்கெட்டில் விற்கப்படும் சூரியகாந்தி ரீஃபைண்டு எண்ணெய், சிறுநீரகத்துக்கு நல்லது இல்லை. எந்த எண்ணெயாக இருந்தாலும், அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சுங்கிற மாதிரி, ஒரே எண்ணெயைத் தொடர்ந்து பயன்படுத்தினா தீங்கானதுதான். அதனால சமையலுக்கான எண்ணெய் வகையை அடிக்கடி மாத்திக்கிறது நல்லது'' என்றவர்,
''கொழுப்புல தாவர கொழுப்பு, மாமிச கொழுப்புனு ரெண்டு வகை இருக்கு. தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய் போன்ற தாவரங்கள் மூலம் எடுக்கக்கூடிய எண்ணெய்கள்ல இருக்கற கொழுப்பு, பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்தாது. இந்தக் கொழுப்பு ரத்தக்குழாய்கள்ல நேரடியா படிஞ்சு அதிக பாதிப்பைத் தராது. உதாரணமா, தேங்காய் எண்ணெயில் கொழுப்புச் சத்து அதிகம்னு பலரும் ஒதுக்கி வைக்கிறாங்க. ஆனா, கேரளாவில் பெரும்பான்மையான மக்கள் தேங்காய் எண்ணெயைத்தான் சமையலுக்குப் பயன்படுத்துறாங்க. இதயநோயால் பாதிக்கப்படுபவர்கள் மற்ற மாநிலத்தைவிட, கேரளத்தில் அதிகமாக இல்லைனு ஆய்வுகள் சொல்லுது. இதிலிருந்தே தெரிஞ்சுக்கலாம், நன்மைகள் பலவும் அடங்கியிருக்கிற தேங்காய் எண்ணெயை, உணவில் சேர்க்கக்கூடாதுங்கறது எந்த அளவுக்கு தவறான கருத்துனு! இன்னொரு பக்கம், இறைச்சி, இறால் போன்ற மாமிச உணவுகளாலும் உடல்ல கொழுப்பு சேருது. இதைக் கட்டுப்படுத்தாம, எண்ணெயில் மட்டும் கட்டுப்பாட்டைக் கொண்டு வர்றதுல எந்தப் பயனும் இல்லை.
எண்ணெயில் மட்டுமல்ல... வாழ்க்கையிலும் மாற்றம் தேவை!
எண்ணெயைக் குறைக்கிறதால மட்டும் நோய்களைத் தடுக்க முடியாது. ஒட்டுமொத்த வாழ்க்கை முறையிலும் மாற்றம் தேவை முன்னயெல்லாம் மக்களின் வாழ்க்கை, உடலுக்கு உழைப்பு தரும் விதமா இருந்துச்சு. இப்போ உடல் உழைப்பையெல்லாம் ஓரங்கட்டிட்டு, உடற்பயிற்சி செய்யறதுக்குனு சிரமப்பட்டு தனியா நேரம் ஒதுக்கறாங்க. இந்த நேரத்தை தினசரி வாழ்க்கைக்கான வேலைகளுக்கு ஒதுக்கினாலே போதும். பக்கத்துல பஸ் ஸ்டாப்புக்கோ, கடைக்கோ, கோயிலுக்கோ தினமும் நடந்து போறதையும்... வீட்டுல துணி துவைக்க, வீடுகூட்ட, சமைக்கறதுக்காக குனிஞ்சு நிமிர்றதையும் மறந்தவங்க... வீட்டுக்குள்ள வாங்கி வெச்சுருக்கற இயந்திரத்தில் ஏறி நின்னுடலாம்னு முடிவு பண்ணிடறாங்க. ஆனா, இயற்கை காற்றை சுவாசிச்சு, சூரிய ஒளியை சருமத்தில் வாங்கியபடி சாலையில் நடக்கிறதும்... வீட்டுக்குள்ள ஒரு மூலையில இருக்கிற ஒரு இயந்திரத்தில் ஏறி நின்னுகிட்டு ஓடுறதும் சமமான பலன்களைத் தராது'' என்று தெளிவுபடுத்திய டாக்டர் புகழேந்தி,
''கொழுப்பு சத்தே உடம்புக்கு கேடுனு சொல்றது தவறு. நல்ல கொழுப்பு உடம்புக்கு நன்மை தரும். அதேபோல ரீஃபைண்டு ஆயிலில் சத்துக்களே இல்லைனும் சொல்லிவிட முடியாது'' என்றார்!
ரீஃபைண்டு செய்யாவிட்டாலும்... பயன்படுத்தலாம்!
சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் திருநாராயணன், ''கடலை எண்ணெய், உடலுக்குத் தீங்கு தருவதில்லை. அதேசமயம், சுத்திகரிக்காமல் இருக்கும் கடலை எண்ணெயைத் தவிர்ப்பது நல்லது. காரணம், கடலை எண்ணெயின் மூலப்பொருளான கடலை மண்ணுக்குள் விளையும்போது, அதை பூஞ்சைகள் அதிக அளவில் தாக்கும். இப்படிப்பட்ட கடலைகளை நீக்காமல் தயாரிக்கப்படும் எண்ணெயைப் பயன்படுத்துவது பிரச்னை தரவே செய்யும். எனவே, சுத்தமான கடலை எண்ணெயே நல்லது. ரீஃபைண்டு செய்யாத எண்ணெய்களைப் பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால், அதிக நாட்கள் வைத்துப் பயன்படுத்தாமல், உடனுக்குடன் பயன்படுத்திவிட வேண்டும்.
முன்பெல்லாம் 'வனஸ்பதி' என்பதை நெய்க்குப் பதிலாக பயன்படுத்தினார்கள். தாவர எண்ணெய்கள் சிலவற்றை ஹைட்ரஜன் ஏற்றம் செய்து தயாரிக்கும்போது இந்த வனஸ்பதி கிடைக்கிறது. இது உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது. இதன் பயன்பாடு இப்போது கொஞ்சம் குறைந்துவிட்டது. தவிட்டில் இருந்து கிடைக்கக்கூடிய ரைஸ்பிரான் (rise bran) ஆயில் உடம்புக்கு நல்லது'' என்றவர், எண்ணெயை மீண்டும் மீண்டும் சூடுபடுத்திப் பயன்படுத்துவதில் இருக்கும் ஆபத்துகள் பற்றிப் பேசினார்.
பஜ்ஜி, வடை, போண்டா... ஹாஸ்பிடல்!
''திரும்பத் திரும்ப சூடு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்ட எண்ணெயை அறவே தவிர்ப்பது நல்லது. ஓர் உணவைச் சமைப்பதற்கு எந்த அளவுக்கான எண்ணெய் தேவைப்படுகிறதோ, அந்த அளவுக்கு மட்டும் பயன்படுத்திவிட்டு, மீதி எண்ணெயைத் திரும்பவும் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. உதாரணத்துக்கு, அப்பளம், வடை, வத்தல் போன்றவற்றுக்காக பயன்படுத்திய எண்ணெய் நிறையவே இருக்கும். குறிப்பாக கடைகளில் பஜ்ஜி, போண்டா, சமோசா என்று காலையிலிருந்து மாலை வரை அதே எண்ணெயிலேயே திரும்பத் திரும்ப எண்ணெயை ஊற்றிச் சுட்டுக்கொண்டிருப்பார்கள். கடையாக இருந்தாலும், வீடாக இருந்தாலும், இந்த எண்ணெயை வீணடிக்க மனமில்லாமல் மறுமுறை பயன்படுத்துவதுதான் வழக்கமாக இருக்கிறது. ஆனால், ஒரு தடவை சூடுபடுத்திய எண்ணெயை திரும்பச் சூடுபடுத்தும்போதுதான் அதிக பிரச்னை வருகிறது. வீடுகளாக இருக்கும்பட்சத்தில், சூடுபடுத்தாமல் பயன்படுத்தக்கூடிய இட்லி மிளகாய்ப்பொடி மற்றும் பருப்புப் பொடிகளுக்கு இந்த எண்ணெயைப் பயன்படுத்தலாம். கடைகள் என்றால், கணக்குப் பார்க்காமல் அந்த எண்ணெயை குப்பைக்கு அனுப்புவதுதான் கஸ்டமர்களுக்கு நல்லது. 'எண்ணெய் வீணாகிறதே' என கவலைப்பட்டு, அதை மறுமுறை சூடு செய்து நோய்க்கு அழைப்பு வைத்து, இதற்காக செய்யும் மருத்துவச் செலவைவிட, மீதி எண்ணெயை வீணாக்குவதில் தவறே இல்லை'' என்று அழுத்தம்திருத்தமாகச் சொன்னார் மருத்துவர் திருநாராயணன்.
சமையலுக்கு எந்த எண்ணெய்?
எண்ணெயின் பயன்பாடு மற்றும் பலன்கள் பற்றி, ஊட்டச்சத்து நிபுணர்களின் கருத்து என்னவாக இருக்கிறது. இதைப் பற்றி பேசுகிறார், டயட்டீஷியன் யசோதரை!
''கொழுப்புச் சத்துக்கள், உணவுகளின் மூலமாக பலவகைகளில் உடலில் சேர்கின்றன. தானியங்கள், பால் முதலானவை கண்ணுக்குப் புலப்படாத கொழுப்பு சத்துக்களைக் கொண்டிருக்கின்றன. எண்ணெய், நெய் முதலானவை கண்ணுக்குப் புலப்படும் கொழுப்பு சத்துக்களைக் கொண்டிருக்கின்றன. இவற்றில் செறிவுறா கொழுப்பு அமிலங்களைக் கொண்ட கொழுப்புகள் நன்மையைக் கொடுக்கும். செறிவுறும் கொழுப்பு அமிலங்களைக் கொண்ட கொழுப்புகள், தீமையைக் கொடுக்கும். உடலில் தேவையற்ற இடத்தில் படிந்து நோய்களை உருவாக்கும். தீமை தரும் கொழுப்புகள், பெரும்பாலும் மாமிச உணவுகளிலிருந்துதான் பெறப்படுகின்றன.
வறுவலுக்கு ரீஃபைண்டு செய்யப்படாத கடலை எண்ணெய், அரிசி தவிட்டு எண்ணெய்களைப் பயன்படுத்தலாம். பொரிப்பதற்கு மக்காச்சோள எண்ணெய், சூரிய காந்தி எண்ணெய், சோயா பீன்ஸ் எண்ணெய்களைப் பயன்படுத்தலாம். ஆலிவ் எண்ணெயைச் சூடுபடுத்தி சமைப்பது தவறு, சாலட்களுக்கு மட்டும் இதய நோயாளிகள் அல்லாதவர்கள் இந்த ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்திக்கொள்ளலாம். நல்லெண்ணெயைத் தாளிப்பதற்கும், தோசை சுடுவதற்கும், உணவில் நேரடியாகச் சேர்த்துக் கொள்வதற்கும் பயன்படுத்தலாம். வறுவல் போன்ற விஷயங்களுக்கு வேண்டாம். எந்த எண்ணெயாக இருந்தாலும், சரியாக காயாவிட்டாலும் ஆபத்து... அதிகம் காய்ந்தாலும் அதாவது புகையும் அளவுக்கு கொதிக்கவிட்டாலும் ஆபத்துதான்'' என்ற யசோதரை,
''ரீஃபைண்டு செய்யப்படாத எண்ணெய்களைப் பயன்படுத்தலாம். இந்த எண்ணெயைப் பயன்படுத்தும்போதும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். ஒரு நாளைக்கு ஒரு நபர் தன் உணவில் 10 முதல் 20 மில்லி வரை பயன்படுத்தலாம். நீரிழிவு, உடல் பருமன், ரத்தக் கொதிப்பு, இதய நோயாளிகள் கண்டிப்பாக 5 முதல் 10 மில்லிக்குள்தான் பயன்படுத்த வேண்டும். மொத்தத்தில் ரீஃபைண்டு செய்யப்பட்ட எண்ணெய்கள், பாமாயில், வனஸ்பதி, நெய் இவற்றைச் சமையலில் சேர்க்காமல் தவிர்ப்பது நல்லது'' என்றார் எச்சரிக்கையாக!

''ம்... அதெல்லாம் ஒரு காலம்!''
வேப்பெண்ணெய், இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய் (ஆமணக்கு எண்ணெய்) என்று பலவிதமான எண்ணெய்கள் இங்கு இருந்தன. இதைப் பற்றி பேசும் கடலூரை சேர்ந்த 'நாட்டு வைத்தியர்' அன்னமேரி பாட்டி, ''எங்க காலத்துல குழந்தை பிறந்ததும் முதல் மூணு நாளைக்கு தாய்ப்பால் கொடுக்க மாட்டோம். அதுக்கு பதிலாக வெத்தலை, கொடிகள்ளி, கோவை இலை மூணையும் அனல்ல காட்டி அரைச்சு, அந்த சாற்றை எடுத்து, அதே அளவுக்கு விளக்கெண்ணெய், பனைவெல்லம் சேர்த்துக் குழைச்சு, மூணு நாளைக்குத் தருவோம். இது, குழந்தையோட நோய் எதிர்ப்பு சக்திக்கு முக்கியமான மருந்து. அப்புறம் பேன், சொறி, சிரங்கு வராம இருக்கறதுக்கு வேப்பெண்ணையைத்தான் தலைக்குப் பயன்படுத்தினோம். இலுப்ப எண்ணெய், நெய் மாதிரி இருக்கும். இதில் புளி சேர்த்துக் காயவிட்டு வடிகட்டி வெச்சுப்போம். இந்த எண்ணெயில பலகாரங்கள் செய்யும்போது அவ்வளவு ருசியா இருக்கும். ம்... அதெல்லாம் ஒரு காலம்'' என்கிறார் ஆதங்கத்துடன்.
'செகண்ட் ஹேண்ட்' எண்ணெய்!
''பெரிய ஹோட்டல்களில் ஏற் கெனவே பயன்படுத்தப்படுத்தப்பட்ட எண்ணெயை, சின்னச் சின்ன உணவகங்கள் மற்றும் சாலையோரக் கடைக்காரர்கள் வாங்கி, மறுபடியும் பயன்படுத்துவதாக ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது. இப்படிச் செய்வது மிகமிக தவறான விஷயம். பயன்படுத்தப்பட்ட எண்ணெயை விற்பது, வாங்குவதும் சட்டப்படி குற்றமே. இதில் ஈடுபடுபவர்களைக் கண்டறிந்து அரசாங்கம்தான் தண்டிக்க வேண்டும். இதேபோல, விளக்கேற்றும் எண்ணெய் என்கிற பெயரிலும் குடிசைத் தொழில் தொடங்கி, பெரும்பெரும் கம்பெனிகள் வரை இறங்கியிருக்கின்றன. இதில் சிலர் தரமற்ற கலப்பு எண்ணெயில் நறுமணப்பொருட்கள் சிலவற்றைச் சேர்த்து விற்பனை செய்துகொண்டுள்ளனர். தரமான எண்ணெயில் விளக்கேற்றும்போது, அதிலிருந்து வரும் மணத்தை நாம் சுவாசித்தால், உடலுக்கு எந்தப் பிரச்னையும் வராது. ஆனால், தரமற்ற எண்ணெய் என்றால், காசுக்கு மட்டுமல்ல, நம் உடல் நலத்துக்கும் கேடு'' என்று எச்சரிக்கையாக சொன்னார், இயற்கை ஆர்வலரும் சூழலியலாளருமான ரமேஷ் கருப்பையா.
ஆயில் புல்லிங்... எண்ணெய் குளியல் அவசியமா?
ஆயில் புல்லிங், எண்ணெய்க் குளியல் பற்றிப் பேசும் சித்தமருத்துவர் திருநாராயணன், ''ஆயில் புல்லிங் எனப்படும் எண்ணெய் வாய்க்கொப்பளிப்பு, உடலுக்கு மிகவும் நல்லது. நீர்ப்பசை அதிகம் இருக்கும் இடத்தில் தொற்று ஏற்படும் வாய்ப்பு இருப்பதால், நீருடன் ஒட்டும் தன்மையில்லாத எண்ணெயால் வாய் கொப்பளிப்பது... தொற்றினைத் தவிர்க்க உதவும். ஆயில் புல்லிங் செய்வதற்கு நல்லெண்ணெயே சிறந்தது. இதைத் தினமும் செய்யவேண்டிய அவசியம் இல்லை. வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது, செய்தால் போதும்.
எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் கேசம் பொலிவு பெறுவதுடன், உடல் உஷ்ணத்தைக் குறைப்பது, ஒளி, ஒலி, திறன் அதிகரிப்பது, சரும வியாதிகளில் இருந்து காப்பது, பித்தத்தைச் சமன்படுத்துவது என இதன் பலன்கள் பற்பல. எண்ணெய்க் குளியல் கூடாது என்று பல ஆண்டுகளாகவே மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். குறிப்பாக, குழந்தைகளுக்குக் கூடவே கூடாது என்கிறார்கள். இதற்குக் காரணம், முறையாக எண்ணெய்க் குளியல் எடுக்கத் தெரியாத, குழந்தைகளைக் குளிக்க வைக்கத் தெரியாத தலைமுறையாக நாம் இருப்பதுதான். குறிப்பாக, சீகைக்காய் துகள்கள் குழந்தையின் நாசிக்குச் சென்று, சுவாசப் பாதையில் அலர்ஜியை ஏற்படுத்த ஆரம்பித்தும் என்பதால்தான் எண்ணெய் குளியலே தேவையில்லை என்று சொல்ல ஆரம்பித்துவிட்டனர். மற்றபடி, முன்கூட்டியே சீகைக்காயை சரியாக குழைத்துக்கொண்டு முறையாக எண்ணெய் தேய்த்துக் குளிப்பதில் எந்தப் பிரச்னையும் இல்லை'' என்று வலியுறுத்துகிறார்.
''நல்லெண்ணெய்... நல்ல எண்ணெய்!''
''எண்ணெய்களிலேயே சிறந்தது, நம் நல்லெண்ணெய்தான்'' என்று புகழும் டயட்டீஷியன் யசோதரை, ''எள்ளில் இருந்து எடுக்கப்படும் இந்த எண்ணெயில் சத்துக்களான விட்டமின்-பி6; ஆன்டி ஆக்ஸிடன்ட்டான விட்டமின்-இ; தாது உப்புக்களான இரும்புச்சத்து, துத்தநாகம், மெக்னீசியம், செம்பு, கால்சியம் முதலானவை உள்ளன'' என்று பட்டியலிடுகிறார்.
''ஆலிவ் எண்ணெய் அவசியமில்லை!''
நல்லெண்ணெய் பற்றி பேசும் மருத்துவர் திருநாராயணன், ''இதில் சீசமின் (sesamin) என்னும் வேதிப்பொருள் இருப்பதுதான் இதன் அருமையான நிறம் மற்றும் மணத்துக்குக் காரணம். இந்த வேதிப்பொருள், சருமத்தின் முதுமையைத் தடுக்கக் கூடியது. இத்தகைய வேதிப்பொருளுக்காகத்தான் ஆலிவ் எண்ணெயை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்கிறார்கள். நல்லெண்ணெய் இருக்க, ஆலிவ் எண்ணெய் அவசியமே இல்லை'' என்கிறார்.

Wednesday, 20 August 2014

பொது செயலர் அறிக்கை:


2 மாதங்களுக்கு ஒரு முறை ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகள் சரிபார்ப்பு.


    ஆசிரியர்களின் பணிப் பதிவேடுகளை 2 மாதங்களுக்கு ஒரு முறை சரிபார்த்து உறுதி செய்ய தொடக்க கல்வித் துறை அதிரடி உத்தரவிட்டுள்ளது.
               தொடக்க கல்வி இயக்ககத்தின் கீழ் உள்ள ஊராட்சி, நகராட்சி, அரசு துவக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகள் அந்தந்த ஒன்றியத்தின் உதவி, கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.இந்த பணி பதிவேடுகளில் ஆசிரியர்களின் விடுப்பு தொடர்பான பதிவுகள் உரிய காலத்தில் மேற்கொள்ளப்படாமல் இருப்பதாக தொடக்க கல்வி இயக்குநருக்கு புகார்கள் சென்றன.

           அதன் அடிப்படையில் தமிழக தொடக்க கல்வித் துறை இயக்குநர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:உதவி, கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் தங்களுக்கு கீழ் பணிபுரியும் ஆசிரியர்களின் பணிப் பதிவேடு களை உரிய காலத்தில் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண் டும்.2 மாதங்களுக்கு ஒரு முறை ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகள் சரிபார்ப்பு

*.உதவி, கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் தங்களுக்கு கீழ் பணிபுரியும் ஆசிரியர்களின் பணிப் பதிவேடு களை உரிய காலத்தில் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண் டும்.

*.ஆசிரியர்களின் பணி பதிவேட்டில் அவர்கள் பயின்ற உயர்கல்வி விவரங்களை பதிவு செய்யும் முன்பு உயர்கல்வி பயில்வதற்கு அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பதையும், சான்றிதழ்கள் தற்காலிகமா? நிரந்தரமானதா என்பதையும் உறுதிசெய்து கொள்ள வேண்டும்.

*.ஒவ்வொரு ஆண்டிலும் டிச.31ம் தேதி ஒவ்வொரு ஒன்றியத்தில் பணிபுரியும் ஆசிரியர்களின் முன்னுரிமை பட்டியல், பதவி உயர்விற்கான தேர்ந்தோர் பட்டியல் ஆகியவை பணி பதிவேட்டில்உள்ள பதிவேடுகளின் அடிப்படையில் தான் தயாரிக்கப்படுகிறது.

*.எனவே, சரியான சான்றிதழ்கள் அடிப்படையில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும். ஏதேனும் தவறுகள் நடந்தது தெரியவந்தால் சம்பந்தப்பட்டஅலு வலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

*.ஆசிரியர்களின் வளர் ஊதியம், பதவி உயர்வு, ஊதியம் நிர்ணயம் மற்றும் ஓய்வூதியம் ஆகிய அனைத் தும் பணி பதிவேட்டில் உள்ள பதிவுகளின்அடிப்படையில் அனுமதிக்கப்படுகிறது.

*.எனவே ஒவ் வொரு உதவி, கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் தங்கள் கீழ் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களின் பணி பதிவேடுகளில்விவரங்கள் விடுபட்டிருந்தால் 15 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும். 2 மாதங்களுக்கு ஒரு முறை அனைத்து பணி பதிவேடுகளும் அலுவலகத்தில் உள்ளது என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

*.உதவி, கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் பணி மாறுதல் மூலம் வேறு ஒன்றியங்களுக்கு மாறுதல் பெற்று செல் லும் போது அனைத்து ஆசிரியர்களின் பணி பதிவேட்டில் ஆசிரியர் எடுத்த விடுப்புகள் மற்றும் பணி சரிபார்ப்புகள் அனைத்தையும் பதிவு செய்து விட்டுத் தான் செல்ல வேண் டும்.

*.உதவி தொடக்க கல்வி அலுவலகங்களை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் ஆய்வு செய் யும் போது இந்த விவரங்களை சரிபார்த்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

2,000 மழலையர் பள்ளிகளுக்கு அங்கீகாரம் : தொடக்க கல்வி துறை திட்டம்


         'மாநிலம் முழுவதும், அங்கீகாரம் இல்லாத, 2,000 மழலையர் பள்ளிகளுக்கு, விரைவில், அங்கீகாரம் வழங்க, நடவடிக்கை எடுக்கப்படும்' என, தொடக்க கல்வித் துறை வட்டாரம், நேற்றுதெரிவித்தது. 
 
          'அங்கீகாரம் இல்லாத, 1,400 மழலையர் பள்ளிகளை, வரும், 2015 ஜனவரிக்குள் மூட நடவடிக்கை எடுக்கப்படும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், சமீபத்தில் தமிழக அரசு தெரிவித்தது. அதன்படி, அங்கீகாரம் இல்லாத மழலையர் பள்ளிகளுக்கு, தொடக்க கல்வித்துறை சார்பில், தற்போது, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டு வருகிறது.
 
           'நோட்டீஸ் கிடைத்த, மூன்று நாளுக்குள், விளக்கம் அளிக்க வேண்டும்; இல்லை எனில், பள்ளியை மூட, தொடர் நடவடிக்கை எடுக்கப்படும்' என, நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மழலையர் பள்ளிகள் குறித்த முழு பட்டியல், தொடக்க கல்வித் துறையிடம் இல்லை. ஆனால், 'மாநிலம் முழுவதும், 2,000 மழலையர் பள்ளிகள் இருக்கலாம்' என, துறை வட்டாரம் தெரிவிக்கிறது. 'ஒரு பக்கம், மழலையர் பள்ளிகளை மூட, 'நோட்டீஸ்' அனுப்பினாலும், அனைத்து பள்ளிகளும், கட்டட உறுதி சான்று, தீயணைப்பு துறை சான்று உள்ளிட்ட, பல சான்றிதழ்களை சமர்பித்து, அங்கீகாரம் கேட்டு, முறையாக, தொடக்க கல்வித் துறைக்கு விண்ணப்பித்தால், அங்கீகாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என, தொடக்க கல்வித் துறை வட்டாரம், நேற்று தெரிவித்தது.

இதுகுறித்து, துறை வட்டாரம் கூறியதாவது: அங்கீகாரம் இல்லாத மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகளில், தலா, 50 குழந்தைகளுக்கு குறையாமல் படித்து வருகின்றன. அதன்படி, இந்த பள்ளிகளில் (பிரீ கேஜி முதல் யு.கே.ஜி., வரை), ஒரு லட்சம் குழந்தைகள் படித்து வருவதாக அறிகிறோம். பட்டியலில் இடம் பெறாமல் விடுபட்ட மழலையர் பள்ளிகளை அடையாளம் காண, உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
திடீரென, 2,000 பள்ளிகளையும் மூடினால், இங்கு படிக்கும் குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாகும். எனவே, ஒரு பக்கம், மூடுவதற்கு, 'நோட்டீஸ்' அனுப்பினாலும், மறுபக்கம், முறையாக அங்கீகாரம் பெற, சம்பந்தப்பட்ட பள்ளிகள், தொடக்க கல்வித்துறையிடம் விண்ணப்பிக்கலாம். உரிய சான்றிதழ்களை பெற்று விண்ணப்பித்ததும், இந்த விவகாரம் தொடர்பாக, தமிழக அரசிடம் அனுமதி பெற்று, அனைத்து பள்ளிகளுக்கும், அங்கீகாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, துறை வட்டாரம் தெரிவித்தது.

பணத்தை கொட்டும் பள்ளிகள்
மழலையர் பள்ளிகள், பணம் காய்க்கும் மரங்களாக விளங்கி வருகின்றன. உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளை நடத்துவதை விட, இந்த பள்ளிகளை நடத்துவதற்கு, செலவு குறைவு; ஆனால், வருமானம் கொட்டும்.
சாதாரண வீடுகளை, 'பிளே ஸ்கூல்' என, பெற்றோரை ஈர்க்கும் வகையில், மாற்றி, அதை, குழந்தை காப்பகமாகவும், மழலையர் பள்ளிகளாகவும், ஒரே கட்டடத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
இரண்டரை வயது குழந்தையை, முறையான பள்ளிக்கு அனுப்ப, 'பிரீ கேஜி' வகுப்பில் சேர்த்து, ஆறு மாதம் பயிற்சி அளிக்கின்றனர். இதற்கு, சுளையாக, 20 ஆயிரம் ரூபாய் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கின்றனர்.
இந்த கட்டணம், இடத்திற்கு தகுந்தார்போல் மாறுபடுகிறது.
இதனால், முறையாக, சான்றிதழ்களை பெற்று, தொடக்க கல்வித் துறையின், அங்கீகாரத்தை பெற்றுவிட வேண்டும் என, பள்ளி நிர்வாகிகள், மும்முரமாக முயற்சி செய்து வருகின்றனர். இவர்களுக்கு ஏற்ப, அங்கீகாரம் வழங்க, தொடக்க கல்வித் துறை, 'கிரீன் சிக்னல்' காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே கல்வித்தரம் உயரும் - பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பேச்சு


         ஆசிரியர்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே கல்வித்தரம் உயரும்: திண்டுக்கல் மண்டல கூட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பேச்சு

    கல்வித்துறையில் தமிழக அரசு செயல்படுத்தி வரும் புதுமையான திட்டங்களோடு, ஆசியர்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே கல்வித்தரம் உயரும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார். திண்டுக்கல் மண்டலத்தில் உள்ள மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, விருதுநகர் ஆகிய 5 மாவட்டங்களின் கல்வி அலுவலர்கள் மற்றும் பொதுத்தேர்வில் 80 சதவீதத்திற்கும் குறைவாக தேர்ச்சிப் பெற்ற பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 
         திண்டுக்கல் பிஎஸ்என்ஏ கல்லூரியில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்திற்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தலைமை வகித்தார்.
பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலர் சபீதா, அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அமைச்சர் கே.சி.வீரமணி பேசியது:தமிழக அரசு கல்வித்துறைக்கு கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்து வருகிறது. ஆசிரியர்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே, இந்த நிதி ஒதுக்கீடு செய்ததன் முழு பலனையும் பெற முடியும். தமிழக மாணவர்கள், கல்வியின் மூலம் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்ற நோக்கத்தில், தமிழக முதல்வர் சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். திண்டுக்கல் மண்டலத்தில் உள்ள 5 மாவட்டங்களில், 10ஆம் வகுப்பு மற்றும் பிளஸ்2 பொதுத் தேர்வில் 70 சதவீதத்திற்கும் குறைவான தேர்ச்சிப் பெற்ற 234 பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் ஆய்வுக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர். பிளஸ்2 தேர்வில், இந்த 5 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 10ஆயிரம் மாணவர்கள் தேர்ச்சிப் பெறவில்லை. இவர்களின் எதிர்காலம், தவறான வழியில் செல்வதற்கு வாய்ப்புள்ளது. இதுபோன்ற நிகழ்வுகளை தவிர்க்கும்
வகையில், தரத்தில் பின் தங்கிய மாணவர்களின் மீது கூடுதல் கவனம்
செலுத்தி, அவர்களை சிறப்பாக உருவாக்க வேண்டும். தொடர்ச்சியாக பல
ஆண்டுகள் முதலிடத்தில் இருந்த விருதுநகர் மாவட்டம், பின் தங்கியதற்கான காரணங்களை கண்டறியப்பட வேண்டும். கல்வியில் பின்தங்கிய தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்கள், தேர்ச்சி விகிதத்தில் முன்னேற்றம் பெற்றுள்ளன. தோல்வி நிலையானது இல்லை. இதனை புரிந்து கொண்டு, இழந்த பெருமையை மீட்டெடுக்கும் முயற்சியில் தலைமையாசிரியர்கள் ஈடுபட வேண்டும். 2011ஆம் ஆண்டு, 71ஆயிரம் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருந்தது. கடந்த 3 ஆண்டுகளில் படிப்படியாக காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. நிகழாண்டில் மேலும் 3459 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றார் அவர். 2013-14 கல்வியாண்டில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற 13 மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், 35 உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், திண்டுக்கல், தேனி, மதுரை,
விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலிருந்து சிறந்த தொடக்கப்
பள்ளிகளாக தேர்வு பெற்ற தலா 3 பள்ளிகளுக்கும் கேடயங்கள்
வழங்கப்பட்டன. முன்னதாக வேடசந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பழனி கல்வி மாவட்ட அளவிலான மாவட்ட சதுரங்கப் போட்டியை அமைச்சர் கே.சி.மணி தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து 356 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி மற்றும் 331 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி ஆகியவற்றையும்வழங்கினார். நிகழ்ச்சியில் மக்களைவை உறுப்பினர் எம்.உதயக்குமார், வேடசந்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பழனிச்சாமி, மேயர் வி.மருதராஜ், பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ராமேஸ்வர முருகன், தொடக்கக் கல்வித்துறை இணை இயக்குநர் லதா, மெட்ரிக் பள்ளிகளின் இயக்குநர்
பிச்சை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அரசு ஊழியர்களுக்கு 25% அகவிலைப்படி உயர்வு; மாநில அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது 60 ஆகிறது


           ஹரியானா மாநில அரசு ஊழியர்களுக்கு 25 சதவிகிதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. அவர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தப்பட இருக்கிறது என்று மாநிலமுதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா அறிவித்திருக்கிறார்.
 
        ஹரியானா மாநில அரசு ஊழியர்களின் பல்வேறு சங்கங்கள் ஒன்றுபட்டு கடந்த பல ஆண்டுகளாகவே தங்கள் கோரிக்கைகளுக்காகப் போராடி வந்தன. ஹரியானா மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடைபெறவிருப்பதை ஒட்டி, மாநில அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மாநில முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா முன்வந்திருக்கிறார்.
 
         இதனைத்தொடர்ந்து அமைச்சரவைக் கூட்டத்திற்கு முன்பாக அவர் ஊழியர் சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையின் முடிவில் அரசு ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகள் மீது அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

ஹரியானா மாநில அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 25 சதவீதம் அதிகரிக்கப்படும். ஹரியானா மாநில அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது தற்போது 58 ஆக இருக்கிறது. அதனை 60 ஆக மாநில அரசு உயர்த்த இருக்கிறது. அதற்கு முன்பு ஓய்வுபெறும் ஊழியரிடம் 58 வயதில் ஓய்வு பெற சம்மதமா அல்லது மேலும் ஈராண்டுகளுக்குப் பணியில் நீடிக்க விருப்பமா என்று கருத்து கோரப்படும். மேலும் தற்போது 28 ஆண்டுகள் பணி நிறைவு பெற்றவர்களுக்குத்தான் முழு ஓய்வூதியம் கிடைக்கிறது. இது 20 ஆண்டுகளாகக் குறைக்கப்பட இருக்கிறது.

இவை அனைத்தும் அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதியிலிருந்து அமலாகும்.6வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமலாக்கிய சமயத்தில் இருந்த குறைபாடுகளைக் களைந்திட புதிய ஊதியக் குழு அமைக்கப்படும். அட்ஹாக் ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் அனைவரும் நிரந்தரப்படுத்தப்படுவார்கள். ஒப்பந்த ஊதிய முறையை முழுமையாக ஒழித்துக்கட்ட அரசு கொள்கை அளவில் தீர்மானித்திருக்கிறது. மருத்துவ சிகிச்சைக்கு முன் பணம் கொடுப்பதற்கான கொள்கை தளர்த்தப்படும்.இவ்வாறு முதல்வர் ஹூடா அறிவித்துள்ளார்

Tuesday, 19 August 2014

DINAMANI -CLIPPING

தப்பிக்க முயற்சிக்கும் போலி ஆசிரியர்கள் - உடனடி நடவடிக்கை பாயுமா?


தப்பிக்க முயற்சிக்கும் போலி ஆசிரியர்கள் - உடனடி நடவடிக்கை பாயுமா?ஆகஸ்ட் 14,2014,11:03 IST

எழுத்தின் அளவு :
சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் போலி சான்றிதழ் ஆசிரியர்களை, களையெடுக்கும் முயற்சியை மாநகராட்சி கைவிட்டுள்ளது. இந்த விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுப்பதற்குள், மாநகராட்சி பள்ளிகளை விட்டு, பணி மாறுதல் பெற, போலி ஆசிரியர்கள் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.
சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில், 122 துவக்க பள்ளிகள் உள்ளன. இதற்காக, 2,000க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் பணியில் உள்ளனர்.
2 பேர் நீக்கம்
இதில், பெரும்பாலான இடைநிலை ஆசிரியர்கள், கடந்த, 1995ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரை பல்வேறு கட்டங்களில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நேரடியாக பணி நியமனம் செய்யப்பட்டவர்கள். அப்போது, இடைநிலை ஆசிரியர் பயிற்சி, கல்வித்தகுதியாக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அப்போது பணி நியமனம் பெற்ற பலர், முறையான ஆசிரியர் பயிற்சி பெறாமல் 8, 10ம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு, ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் போலியாக சான்றிதழ் பெற்று, அதன்மூலம் பணியில் சேர்ந்திருப்பதாக புகார் எழுந்தது.
இதுகுறித்து, அடிக்கடி சர்ச்சை எழுவதும், மாநகராட்சி கல்வித்துறை அவ்வப்போது நடவடிக்கை எடுப்பதும் வழக்கமாக இருந்து வருகிறது. ஐ.ஏ.எஸ்., அதிகாரி விஜயகுமார், மாநகராட்சி கமிஷனராக இருந்தபோது, இந்த விவகாரத்தில் இரண்டு பேரை பணிநீக்கம் செய்தார். அதன்பிறகு கடந்த ஆண்டு இப்பிரச்னை வெடித்தது.
தொடர்கிறது
அப்போது ஒன்பது பேர் மீது புகார் நிரூபிக்கப்பட்டு, எட்டு பேரை, தற்போதைய மாநகராட்சி கமிஷனர் விக்ரம் கபூர் பணிநீக்கம் செய்தார். ஒருவரின் சான்றிதழ் உண்மையானது என்று கூறி, அந்த ஆசிரியர் மட்டும் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில், 2,000 ஆசிரியர்களின் சான்றிதழ்களையும் ஆய்வுசெய்து, போலி ஆசிரியர்களை முழுமையாக களையெடுக்க, மேயர் சைதை துரைசாமி உத்தரவிட்டார்.
இதற்காக 2,000 ஆசிரியர்களின் சான்றிதழ் நகல்களை, மாநகராட்சி கல்வித்துறை பெற்றது. ஆய்வின் அடிப்படையில், தற்போது பணிபுரியும் ஆசிரியர்களில் யாரும் போலி சான்றிதழ் பெற்றவர்கள் இல்லை என்ற முடிவுக்கு மாநகராட்சி வந்துள்ளது. ஆனால், தற்போதும் 50க்கும் மேற்பட்ட போலி சான்றிதழ் ஆசிரியர்கள் பணியில் இருப்பதாக விவரம் அறிந்த மாநகராட்சி ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், இந்த போலி சான்றிதழ் ஆசிரியர்கள், தங்கள் பணியை காப்பாற்றிக்கொள்ள, மேலிடங்களுக்கு பணம் கொடுத்து சரிக்கட்ட, ஆட்களை பிடிக்கும் வேலையில் இறங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தனி குழு தேவை
சமீபத்தில் புதுச்சேரி அரசு பள்ளியில், போலி சான்றிதழ் ஆசிரியர்கள் சிக்கியதைத் தொடர்ந்து, மாநகராட்சி இந்த விஷயத்தை எப்போது வேண்டுமானாலும் மீண்டும் கையில் எடுக்கலாம் என்று கருதப்படுவதால், சில ஆசிரியர்கள், மாநகராட்சி பள்ளியில் இருந்து வெளி இடத்திற்கு பணி மாறுதல் பெற முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்காக தடையில்லா சான்று கேட்டு சில ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளதாகவும், மாநகராட்சி கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த விஷயத்தில் மாநகராட்சி விஜிலென்ஸ் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளின் விசாரணையை மட்டும் நம்பாமல், போலி ஆசிரியர்களை களையெடுக்க, அரசு தனி குழுவை அமைக்க வேண்டும் என்றும், இதற்கு மேயர் சைதை துரைசாமி ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது