Friday, 9 May 2014

Tuesday, 6 May 2014

மாணவர் சேர்க்கை விளம்பரங்கள்: அரசுப் பள்ளிகளுக்கு உத்தரவு

மாணவர் சேர்க்கை விளம்பரங்கள்: அரசுப் பள்ளிகளுக்கு உத்தரவு

       தமிழகம் முழுவதுமுள்ள அரசுப் பள்ளிகளில் முதல் வகுப்பில் மாணவர்கள்சேர்க்கையை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை பள்ளிகள் மேற்கொள்ளகல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
 
         மெட்ரிக் பள்ளிகளின் பெருக்கத்தாலும்அவை மேற்கொள்ளும்பல்வகை விளம்பர உத்திகளாலும் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைவிகிதம் குறைந்து வருகிறதுஇந்நிலையில்மாணவர் சேர்க்கையை அதிகரிக்கபுதிய உத்திகளைக் கையாள கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளதுஇதுதொடர்பாகதமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர்அனைத்து மாவட்டதொடக்கக் கல்விஅலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

                   அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தரமான கல்விவழங்கவும்இடைநிற்றலைக் குறைக்கவும்மாணவர் சேர்க்கையைஅதிகரிக்கவும் தமிழக அரசு 14வகையான விலையில்லாத் திட்டங்களைச்செயல்படுத்தி வருகிறது.எனவேபள்ளிகள் அதன் அருகேயுள்ளகுடியிருப்புகளில் உள்ள குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதற்குநடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்இதற்காக மாணவர் சேர்க்கை தொடர்பானவிளம்பரங்களை பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் விளம்பரம்செய்தல் வேண்டும்.

                     சேர்க்கை தொடர்பான துண்டுப் பிரசுரங்களை வழங்குவதுடன்,முக்கியப் பகுதிகளில் பேனர்களை வைக்க வேண்டும்மேலும்மாணவர்சேர்க்கை ஊர்வலத்தையும் நடத்த வேண்டும் என சுற்றறிக்கையில்கூறப்பட்டுள்ளது

Sunday, 4 May 2014

தயார் நிலையில் இலவச பாடப்புத்தகங்கள் மே 15ம் தேதிக்கு பிறகு வினியோகம்

தயார் நிலையில் இலவச பாடப்புத்தகங்கள் மே 15ம் தேதிக்கு பிறகு வினியோகம்

 
         தமிழக அரசின் இந்த ஆண்டுக்கான இலவச புத்தகங்களை பொறுத்தவரை உயர் வகுப்புகளுக்கான புத்தகங்கள் அச்சிடும் பணி முடிந்து, தற்போது பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான புத்தகங்கள் வினியோகம் தொடங்கப்பட்டுள்ளது.
 
         திருவான்மியூர் கிடங்கில் இருந்து அனைத்து வட்டார அலுவலகங்களுக்கும், பாடப்புத்தகங்களை பிரித்து, லாரிகள் மூலம் எடுத்து செல்லப்பட்டு அந்தந்த மாவட்ட குடோன்களில் இறக்கி வைக்கப்பட்டுள்ளன. இதுதவிர அச்சகங்களில் இருந்து நேரடியாக அனுப்பும் பணியும் தொடங்கியுள்ளது. அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளுக்கு பிளஸ் 2 பாடப்புத்தகங்களை, பிளஸ் 1 ரிசல்ட் வெளியிட்ட பிறகு தலைமை ஆசிரியர்கள் மூலமாக வழங்குவார்கள்.
 
             இதைதொடர்ந்து, 22 வட்டார அலுவலகங்கள், சென்னையில் உள்ள தமிழ்நாடு பாடநூல் கழகம் ஆகிய இடங்களில் புத்தகங்கள் விற்பனை செய்யவும் ஏற்பாடு செய்யப்படுகிறது. விற்பனைக்காக கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் சுமார் 16 லட்சம் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. இலவச பாடநூல் வழங்கும் திட்டத்தின் கீழ் வழங்குவதற்காக 64 லட்சம் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. இந்நிலையில், 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான முப்பருவ முறை புத்தகங்கள் மே 15ம் தேதிக்குள் அனைத்து மையங்களுக்கும் அனுப்பி வைக்க தமிழ்நாடு பாடநூல் கழகம் திட்டமிட்டுள்ளது.
 
              ஒவ்வொரு பருவத்துக்கும் ஒரு தொகுதி புத்தகம் அச்சிடப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்புக்கு இந்த ஆண்டு முப்பருவ முறை இல்லை என்பதால் கடந்த ஆண்டு பயன்பாட்டில் இருந்த அதே புத்தகமே இந்த ஆண்டும் அச்சிட்டு வழங்கப்பட உள்ளன. அதற்கான புத்தகங்கள் அச்சிடும் பணிகள் நடக்கிறது. 1 முதல் 5ம் வகுப்புகளுக்கு தலா ஒரு புத்தகம், 6 முதல் 9ம் வகுப்புகளுக்கு தலா 2 புத்தகங்கள் என அச்சிடப்பட்டுள்ளன. ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கும் போது அனைத்து மாணவர்கள் கையிலும் புதிய புத்தகங்கள் இருக்கும்.
 
              பத்தாம் வகுப்பு பாட புத்தகங்களை, 9ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியான பிறகு அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வழங்குவார்கள். பத்தாம் வகுப்பு பாடப்புத்தகங்கள் சுமார் 75 லட்சம் அச்சிடப்படுகின்றன. பத்தாம் வகுப்பு புத்தகங்கள் வினியோகம் செய்த பிறகு படிப்படியாக மற்ற வகுப்பு புத்தகங்கள் மே மாத இறுதிக்குள் வழங்கப்படும். ஆனால் மே 15ம் தேதிக்குள் அனைத்து வகுப்பு புத்தகங்களும் வழங்கப்படும் என்று பாடநூல் கழக வட்டாரங்கள் தெரிவித்தன.
 
முப்பருவ முறை புத்தகங்கள் அச்சிட்டுள்ள விவரம்:
வகுப்பு புத்தக எண்ணிக்கை
1ம் வகுப்பு 13,26,000
2ம் வகுப்பு 12,86,000
3ம் வகுப்பு 12,66,000
4ம் வகுப்பு 12,64,000
5ம் வகுப்பு 12,89,000
6ம் வகுப்பு 29,75,000
7ம் வகுப்பு 29,59,000
8ம் வகுப்பு 29,59,000

திருத்துறைப்பூண்டியில் பள்ளி செல்லா குழந்தைகள் 141 பேர் கண்டுபிடிப்பு

தேர்தல் பாதுகாப்பு குறைபாடால் பறிபோன உயிர்?: கலங்கித் தவிக்கும் அரக்கோணம் ஆசிரியையின் குடும்பம்


கணவர் மற்றும் குழந்தைகளுடன் ஆசிரியை பூங்கொடி. (கோப்புப் படம்)
கணவர் மற்றும் குழந்தைகளுடன் ஆசிரியை பூங்கொடி. (கோப்புப் படம்)
ஆசிரியை பூங்கொடி. ஜூன் 4-ம் தேதி நடக்கும் மகள் சரண்யா வின் நிச்சயதார்த்த வேலைகளை தொடங்க திட்டமிருந்த நிலையில் ஏப்.24-ம் தேதி தேர்தல் பணி அழைத்தது. பணி முடிந்து மாலையில் வீடு திரும்புவார் என காத்திருந்த அவரது கணவர் அன்பழகனுக்கு பூங்கொடி வருவதற்கு பதிலாக அவரது இறப்பு செய்திதான் வந்தது. உருக் குலைந்து போனது ஒட்டுமொத்த குடும்பமும்.
இது ஏதோ பணிக்கு சென்ற ஒரு பெண் ரயில் மோதி இறந்துவிட்டார் என்ற வெறும் விபத்து செய்தி அல்ல. இதன் பின்னணியில் தேர்தல் பணிகளின் குறைபாடுகள் குறித்த அம்சங்கள் பற்றிய விவாதங்கள் கிளம்பியுள்ளன. மனைவியை இழந்த துயரத்திலிருந்த மீண்டு வராத அன்பழகனை ‘தி இந்து’ சார்பில் தொடர்பு கொண்டோம்.
அவர் கூறுகையில், ‘தேர்தல் கமிஷன் எனது மனைவிக்கு மட்டு மல்லாமல் தேர்தல் பணியிலிருந்த எல்லா பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க தவறிவிட்டது என குமுறினார்.
மேலும் “எனது மனைவி பூங்கொடி 1997-ம் ஆண்டு முதல் தேர்தல் பணிக்கு சென்று வருகிறார். எப்போதும் ஆசிரியர்களின் வசிப் பிடங்களுக்கு அருகிலேயே வாக்குச்சாவடிகள் இருக்கும். கடந்த இரண்டு தேர்தல்களாக தான் நம்பகத்தன்மையை காரணம் காட்டி ஒரு பகுதியில் வசிக்கும் ஆசிரியர்களை வேறு பகுதிகளுக்கு நியமிக்கின்றனர். இதனால் பாதுகாப்பு குறைபாடு, போக்குவரத்து வசதியின்மை என பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடுகிறது” என்றார்.
மனைவி இறந்து பற்றி நம்மிடம் கூறிய அவர், “நாங்கள் வசிக்கும் பகுதி அரக்கோணம். தேர்தல் பயிற்சி முகாம் அரக்கோணத்திற்கு அருகிலேயே நடந்தது.
இந்நிலையில் வாணியம்பாடி அருகில் உள்ள தும்பேரி ஊராட்சி பள்ளியில் அவருக்கு பணி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான ஆணையை பெற்றுக் கொள்ள ஏப்.23-ம் தேதி காலை 9 மணிக்கு வருமாறும் அழைப்பு வந்தது. இதன்பேரில் அதிகாலை யிலேயே புறப்பட்டு சென்ற அவர் ஆணையை பெற்றுக்கொண்டார். மறுநாள் தேர்தல் நாளில் காலை 6 மணிக்கே இருக்க வேண்டும் என்பதால் அங்கேயே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பள்ளியில் இரவில் தங்கிவிட்டார்.
மறுநாள் தேர்தல் முடிந்து பூங்கொடியிடம் போனில் பேசிய போது மணி இரவு 9.30. அதுவரை வாக்குப்பெட்டிகளை எடுப்பதற்கு அதிகாரிகள் வரவில்லை என்று சொன்னார். பின்னர் 10.30 மணிக்கு பணியில் இருந்த ஆசிரியர் கள் லிப்ட் கேட்டு ஒருவழியாக வாணியம்பாடி ரயில் நிலையத் துக்கு வந்துள்ளனர்.
அவர்கள் இரவு 12.30 மணி வரை ரயில் நிலையத்தில் இருந்தனர். அப்போது சிறுநீர் கழிப்பதற்காக அவர் 3-வது நடைமேடைக்குச் சென்றுவிட்டு திரும்புகையில் எதிரில் வந்த காவேரி எக்ஸ்பிரஸ் ரயில் மோதி உடல் சிதைந்து மனைவி பலியானார்” என்று தழுதழுக்க அன்பழகன் கூறினார்.
“தேர்தல் ஆணையம் முறையான போக்குவரத்து வசதி யும் பாதுகாப்பும் வழங்கி இருந் தால் என் மனைவி இன்று என்னுடன் இருந்திருப்பாள். இந்த விவகாரத் தில் தேர்தல் ஆணையம் பதில் சொல்லியாக வேண்டும்” என்றார் அவர்.
போக்குவரத்து வசதி குறைவு
தேர்தல் பணியிலிருந்த பெரும் பாலான ஆசிரியைகள் தங்களுக்கு போதுமான போக்கு வரத்து வசதி செய்து தரப்பட வில்லை. பெரும்பாலானவர்கள் போக்கு வரத்துக்கு தங்கள் சொந்த காசை செலவழித்தனர் என்றனர். இந்த குற்றச்சாட்டை வேலூர் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ மறுத்தார். “வேலூர் மாவட் டத்தில் 159 பேருந்துகளும் 20 சிறு பேருந்துகளும் அனைத்து பகுதிகளுக்கும் இயக்கப்பட்டன” என்றார்.
தேர்தல் பணியில் ஈடுபடுபவர் களின் பாதுகாப்பை உறுதி செய்யாத தால் இன்று ஒரு குடும்பமே உருக் குலைந்து போயிருக்கிறது. இனி வருங்காலங்களில் இன்னொருவ ருக்கு பூங்கொடி நிலை ஏற்படக் கூடாது என்பதுதான் தேர்தல் பணி செய்யும் ஆசிரியர்களின் எதிர் பார்ப்பாக உள்ளது.


கோப்பு படம்
கோப்பு படம்
புகையிலை நிறுவனங்கள் நடத்தும் எந்த போட்டியிலும் பள்ளி மாணவர்கள் பங்கேற்க அனுமதி அளிக்கக் கூடாது என்று தொடக்கக் கல்வி இயக்குநர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, போக் குவரத்து விதிகள், எய்ட்ஸ் நோய் தடுப்பு உள்ளிட்டவை குறித்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விழிப் புணர்வு நிகழ்ச்சிகளும், போட்டி களும் நடத்தப்படுவதும் வழக்கம்.
விழிப்புணர்வு தொடர்பான பேரணிகள் மற்றும் ஊர்வலங்களில் பள்ளி மாணவர்கள் உற்சாகமாக கலந்துகொள்வார்கள். அதேபோல், இதுகுறித்த போட்டிகளிலும் மிகுந்த ஆர்வத்தோடு பங்கேற்பார்கள். அதில் வெற்றி பெறுவோருக்கு ஸ்பான்சர் செய்யும் நிறுவனங்கள் சார்பில் பரிசுகள், பாராட்டுச் சான்றி தழ்கள் வழங்கப்படும்.
பள்ளி மாணவர்களுக்கு தடை
இத்தகைய விழிப்புணர்வு நிகழ்ச் சிகளுக்கு அரசு பொதுத்துறை நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் ஸ்பான்சர் செய் வது வழக்கம். விழிப்புணர்வு தொடர்பாக நடத்தப்படும் போட்டி களுக்கு பரிசுகளையும் அந்த நிறுவனங்கள் வழங்கிவிடும்.
இந்த நிலையில், புகை யிலை மற்றும் புகையிலை சார்ந்த பொருட்களை (பீடி, சிகரெட், பான்பராக், குட்கா, கான்ஸ், மாவா) தயாரிக்கும் நிறுவனங் களால் வழங்கப்படும் பரிசுப் பொருட்களை வாங்கவும், அந்த நிறுவனங்கள் நடத்தும் எந்த விதமான போட்டியிலும் பங்கேற் கவும் ஆரம்ப, நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. கல்வி அதிகாரிக ளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக் கையில் கூறியிருப்பதாவது:-
இந்திய புகையிலை நிறுவனம் (ஐடிசி) நிறுவனத்தால் பள்ளிகளில் போட்டிகளில் நடத்துவதையும், அந்த நிறுவனத்தால் வழங்கப்படும் பரிசு பொருட்களையும் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.
மாவட்ட அளவிலோ அல்லது ஒன்றிய அளவிலோ புகையிலை மற்றும் புகையிலை சார்ந்த பொருட் கள் பயன்படுத்தும் நிறுவனங்கள் நடத்தும் எந்தவிதமான போட்டி களிலும் மாணவர்களை பங்குபெற அனுமதி அளிக்கக் கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது. இதுதொடர்பான அரசு வெளி யிட்ட வழிகாட்டி நெறிமுறை களை பின்பற்றுமாறு மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.