Thursday 30 November 2023

NEWS ஆய்வுக்கு வந்த இடத்தில் ஆசிரியர்களை திட்டி மிரட்டிய BEO

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


ஆய்வுக்கு வந்த இடத்தில் ஆசிரியர்களை திட்டி மிரட்டிய BEO

ஆய்வுக்கு வந்த இடத்தில் ஆசிரியரை ஒருமையில் பேசி திட்டி மிரட்டிய வட்டார கல்வி அதிகாரி - சிஇஓவிடம் பரபரப்பு புகார்...

கிருஷ்ணகிரி அருகே ஆய்வுக்கு வந்த இடத்தில் , ஒருமையில் திட்டி மிரட்டியதாக வட்டாரக் கல்வி அலுவலர் மீது , ஆசிரியர் புகார் தெரிவித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

IMG-20231129-WA0002


ARIVOM கடுகு ரகசியமும்... ஏவுகணையும்...!

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்



IMG_20231129_110344_wm

நாம் பயன்படுத்தும் கடுகுக்குள் சற்று ஈரப்பதம் இருக்கும். எண்ணெயில் கடுகை இட்டுத் தாளிக்கும்போது, கடுகு சூடேறி அதற்குள் இருக்கும் நீர் ஆவியாகும்.கடுகின் தோலை பிய்த்துக்கொண்டு நீராவி வெளியே வருவதால் கடுகு வெடிக்கிறது. 


நமக்கு கேட்கும் `பட்... பட்...' என்கிற சத்தமும்கூட, ஆவியாகி வெளியே வரும் நீர், எண்ணெயில் படுவதால்தான் உருவாகிறது. சூடான எண்ணெயில் நீர்த்துளிகள் படும்போது சத்தம் வரும் அல்லவா, அதுபோலத்தான்.ஆனால், எல்லா கடுகும் பாத்திரத்தைவிட்டு வெளிநடப்பு செய்வதில்லை. ஒன்றிரண்டு கடுகுகள் வெடித்தாலும், அவை பாதியாக பிய்ந்து போவதில்லை. உருண்டையாகத்தான் இருக்கின்றன. ஆக, கடுகுக்குள் இருந்த நீராவி வெளியே வரும்போது, கடுகை மொத்தமாகச் சிதைத்து விடுவதில்லை. ஒரு சிறு துவாரத்தை இட்டுக்கொண்டு நீராவி வெளியேறுகிறது.எனவே, எந்த கடுகு எவ்வளவு பெரிய துவாரம் இட்டிருக்கிறது என்பதைப் பொறுத்தே கடுகு வெளியேறித் தப்பிக்குமா, இல்லை நம் உணவுத் தட்டுக்கு வருமா? என்பது முடிவாகிறது.கடுகில் ஏற்படும் துவாரம் சற்றுப் பெரிதாக இருந்தால், விரைவில் நீராவி வெளியேறிவிடும், கடுகால் பறக்க முடியாது. ஆனால், நுண்ணிய துவாரமாக இருந்தால், நீராவி சிறிது சிறிதாக வெளியேறும்.


 அப்படி வெளியேறும் நீராவியால் தனக்கு கிடைக்கும் உந்துவிசை மூலம் முன்னேறி கடுகு மேலே பறக்கும். கடுகுக்குள் இருக்கும் நீராவி முழுவதும் வெளியேறிவிட்டால், கடுகுக்கு மேற்கொண்டு உந்துவிசை கிடைக்காது. அப்போது கடுகு கீழே விழுந்துவிடும். இவ்வளவு சாகசம் செய்யும் ஒரு கடுகின் எடை மிக மிக குறைவானதுதான்.சின்னச்சிறு கடுகுக்கும், வானைத் தொடும் ஏவுகணைக்கும் ஒரு தொடர்பு உண்டு. ஓர் ஏவுகணை மேலே செல்ல வேண்டுமென்றால், எரிபொருள் தேவை. ஏவுகணை ஏவப்படும்போது எரிபொருள் எரிக்கப்படும். அப்போது வெளியாகும் வாயுக்களால் அழுத்தம் உண்டாகி, அதன்மூலம் கிடைக்கும் உந்துவிசையை பயன்படுத்தி ஏவுகணை முன்னேறிப் போகிறது. 


ஆக, சூடான எண்ணெயில் பட்டதும் வெடித்துப் பறக்கும் கடுகும், ஏவுகணையும் ஒரே வகையைச் சேர்ந்தவைதாம். இதுதான் கடுகுக்குள் உள்ளே இருக்கும் ரகசியம். இன்னும் சொல்வதென்றால் குட்டிக் குட்டி உருண்டை வடிவ ஏவுகணைகளைத்தான் நாம் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம், என்று கடுகை நினைத்து பெருமிதமும் கொள்ளலாம்.

PROCEEDING அரசுப் பள்ளிகளில் மிஷன் இயற்கை - சுற்றுச்சூழல் திட்டம் செயல்படுத்துதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்



அரசுப் பள்ளிகளில் மிஷன் இயற்கை - சுற்றுச்சூழல் திட்டம் செயல்படுத்துதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

IMG_20231129_173526

அரசுப் பள்ளிகளில் மிஷன் இயற்கை - சுற்றுச்சூழல் திட்டம் செயல்படுத்துதல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!

DSE - Mission Iyarkai Proceedings - Download here

BEO கார் கவிழ்ந்து விபத்து - வட்டார கல்வி அலுவலர் உயிரிழப்பு

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


கார் கவிழ்ந்து விபத்து - வட்டார கல்வி அலுவலர் உயிரிழப்பு

 


கார் கவிழ்ந்து விபத்து - வட்டார கல்வி அலுவலர் உயிரிழப்பு

IMG_20231129_173722

*உளுந்தூர்பேட்டை அருகே நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததில் வட்டார கல்வி அதிகாரி பலி


* ஏ.குமாரமங்கலம் மாதிரி பள்ளி அருகே நிகழ்ந்த விபத்தில் வட்டார கல்வி அலுவலர் செலின்மேரி உயிரிழப்பு


* படுகாயமடைந்த மேலும் 3 ஆசிரியர்கள் சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதி


* செல்லின்மேரி தியாகதுருகம் BEO என தகவல்.

சிற்றுண்டி முதல்வரின் காலை உணவுத் திட்டம்; தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்!

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


முதல்வரின் காலை உணவுத் திட்டம்; தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்!

 

vikatan%2F2023-08%2F057884b8-181e-4c36-b518-dce7426c861d%2F1692966788279

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின் ஆணைப்படி தமிழ்நாடு முழுவதும் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அரசால் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தொடக்கப் பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்துக் குறைபாட்டினைப் போக்குதல், கல்வி இடைநிற்றலைத் தடுத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட தொடக்கப் பள்ளிகளுக்கான காலை உணவுத் திட்டம், ஓராண்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில், தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.


முன்னதாக சென்னை மேயர் பிரியா தலைமையில் பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், சென்னையில் பள்ளிகளுக்கான காலை உணவுத் திட்டத்தை ஓராண்டுக்குத் தனியாருக்கு ஒப்பந்தம் செய்வது விடுவது தொடர்பான தீர்மானம், முன்வைக்கப்பட்டது.


இது தொடர்பாக கூடுதல் தலைமைச் செயலாளர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் வெளியிட்டக் குறிப்பில், `பெருநகர சென்னை மாநகராட்சியில், மத்திய வட்டாரத்திலுள்ள 164 பள்ளிகளில் (பெருநகர சென்னை மாநகராட்சிப் பள்ளிகள், அரசுப் பள்ளிகள், ஆதிதிராவிடர் தொடக்கப் பள்ளிகள்) பயிலும் 25,468 மாணவ மாணவியருக்குக் காலை உணவுத் திட்டத்தினை வெளி நிறுவனம் மூலம் ஓராண்டு காலத்துக்கு ஒப்பந்தம் கோரி பணி மேற்கொள்ள அனுமதி' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.


இதன்மீது வாக்கெடுப்பு நடந்தபோது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக, `ஏற்கெனவே சென்னை மாநகராட்சியின்கீழ் காலை உணவுத் திட்டம் நன்றாகச் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், எதற்காக தனியாருக்கு ஓராண்டுக்கு ஒப்பந்தம் விடவேண்டும்' என கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.


அதற்கு, சென்னை தவிர பிற பகுதிகளில் ஏற்கெனவே தனியாருக்கு இவ்வாறு ஒப்பந்தம் விடப்பட்டிருப்பதாகவும், அதனடிப்படையில் ஓராண்டுக்கு மட்டும் தனியாருக்கு ஒப்பந்தம் அளிப்பதாகவும் மேயர் பிரியா பதிலளித்ததாகக் கூறப்படுகிறது. இறுதியில், பெரும்பான்மை அடிப்படையில் சென்னையில் அரசுப் பள்ளிகளுக்கான காலை உணவுத் திட்டத்தைத் தனியாருக்கு ஓராண்டுக்கு ஒப்பந்தம் அளிப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

CEO INCENTIVE PROCEEDING உயர் கல்வி தகுதி பெற்றமைக்கு மொத்த தொகை வழங்குதல் - புதிய அரசாணை அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு!

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


உயர் கல்வி தகுதி பெற்றமைக்கு மொத்த தொகை வழங்குதல் - புதிய அரசாணை அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு!


உயர் கல்வி தகுதி பெற்றமைக்கு மொத்த தொகை வழங்குதல் - புதிய அரசாணை அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள மதுரை முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு!


மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்களில் 09.03,2020 க்கு முன்னர் உயர்கல்வித் தகுதி பெற்றவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவது குறித்து அரசாணையில் அறிவித்துள்ள வழிகாட்டு முறைகளின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

 Lumpsum Amount - CEO Proceedings - Download here


PROCEEDING TRANSFER உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்

உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு


உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...

PET, PD1, PD2 COUNCELLING - REG👇

Proceedings - Download here

27.11.2023 அன்றைய நிலவரப்படி அனைத்துவகையான ஆசிரியர்களின் நிரப்பத்தகுந்த காலிப்பணியிட விவரங்களை ( Eligible Vacancy Only ) CEO Login ID ஐ பயன்படுத்தி EMIS இணையதளத்தில் அதற்கென உள்ள உரிய படிவத்தில் 05.12.2023 க்குள் பதிவேற்றம் செய்திடல் வேண்டும்.


 ஆசிரியரின்றி உபரிக் காலிப் பணியிடத்தினை ( Surplus Post without Person ) எக்காரணம் கொண்டும் காலிப்பணியிடமாக Vacancy பதிவேற்றம் செய்யக்கூடாது.


மேலும் காலிப்பணியிட விவரங்கள் EMIS இணையத்தில் பதிவேற்றம் செய்து முடிக்கப்பட்டவுடன் பின்னர் சேர்க்கை / நீக்கம் / திருத்தங்கள் போன்றவைகளுக்கு இடமளிக்காமல் செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகிறது .

30 ஆண்டுகள் ஒரே பணி நிலையில் உள்ள ஆசிரியர்கள் போனஸ் ஊதிய உயர்வு பெறும் விண்ணப்ப படிவம்

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்

30 ஆண்டுகள் ஒரே பணி நிலையில் உள்ள ஆசிரியர்கள் போனஸ் ஊதிய உயர்வு பெறும் விண்ணப்ப படிவம்

asfd

30 ஆண்டுகள் ஒரே பணி நிலையில் உள்ள ஆசிரியர்கள் போனஸ் ஊதிய உயர்வு பெறும் விண்ணப்ப படிவம்

Download here


மகாகவி சுப்ரமணிய பாரதியார் பிறந்தநாளை முன்னிட்டு இந்திய மொழிகள் உற்சவம் நடத்துதல்- வழிகாட்டும் நெறிமுறைகள் வழங்குதல்- சார்ந்து- பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்...

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


IMG-20231130-WA0003_wm

மகாகவி சுப்ரமணிய பாரதியார் பிறந்தநாளை முன்னிட்டு இந்திய மொழிகள் உற்சவம் நடத்துதல்- வழிகாட்டும் நெறிமுறைகள் வழங்குதல்- சார்ந்து- பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்...

இந்திய மொழிகள் உற்சவம் நடத்துதல்

வங்கக்கடலில் உருவாகும் புயல் தமிழ்நாட்டை நோக்கி நகரும்: இந்திய வானிலை மையம் தகவல்

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


 

IMG_20231130_134130

வங்கக்கடலில் உருவாகும் புயல் வடதமிழ்நாட்டை நோக்கி நகரும் என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் வரும் 2ம் தேதி புயல் உருவாகும் என்று கணிக்கப்பட்ட நிலையில் 3ம் தேதி புயல் உருவாகிறது. டிசம்பர்.3ம் தேதி உருவாகும் புயல் வடதமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திராவை நோக்கி நகரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

பிரச்னைகளை தைரியமா சொல்லுங்க! மாணவ, மாணவியருக்கு புதிய திட்டம்

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


 

கோவை : மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியர் டோல் பிரீ எண் வாயிலாக கமிஷனர், கல்வி குழுவினரை வாரம் தோறும் தொடர்பு கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கும் வசதி, விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.இதன் வாயிலாக, பள்ளிகளில் சந்திக்கும் பிரச்னைகள் மட்டுமல்லாமல், பாலியல் தொந்தரவு, மனரீதியான பிரச்னைகளை தெரிவிக்கவும் நல்ல வாய்ப்பு அமையவுள்ளது.


கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ், 42 துவக்கப்பள்ளிகள், 11 உயர்நிலை, 14 நடுநிலை மற்றும், 17 மேல்நிலைப் பள்ளிகள் என, 84 மாநகராட்சி பள்ளிகள் செயல்படுகின்றன. இப்பள்ளிகளில், 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயில்கின்றனர்.தவிர 1,400க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உள்ளனர். கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருவதால், நடப்பு கல்வியாண்டில், 3,263 மாணவியர், 2,727 மாணவர்கள் என, 5,990 பேர் இப்பள்ளிகளில் கூடுதலாக சேர்க்கை புரிந்துள்ளனர்.அதேசமயம், பள்ளிகளில் அடிப்படை வசதிகள், கட்டமைப்பு, பயிற்றுவிப்பு, ஆசிரியர்கள் அணுகுமுறை உள்ளிட்டவற்றில் இருக்கும் குறைகளை மாணவ, மாணவியர் யாரிடம் கூறுவது என தெரியாமல் அவதிப்படுகின்றனர்.


இதற்கு தீர்வு காண, வாரம்தோறும் மாணவர்களிடம் குறைகளை கேட்டறிந்து தீர்வு காண, மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடந்த, கல்விக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்துக்கு, கமிஷனர் சிவகுரு பிரபாகரன் தலைமை தாங்கினார். குழு தலைவர் மாலதி முன்னிலை வகித்தார். மாநகராட்சியின், 100 வார்டுகளிலும் உள்ள பூங்காக்களில் பெயின்ட் அடித்தல், குழந்தைகள் விளையாட தேவையான வசதிகளை ஏற்படுத்தித்தரவும், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கல்விக் குழு தலைவர் மாலதி கூறியதாவது:கோவை மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியரிடம் குறைகளை கேட்டறிந்து, தீர்வு காண முடிவு செய்துள்ளோம். இதற்கென, இலவச டோல் பிரீ எண் அறிமுகம் செய்யப்படவுள்ளது. 


மாநகராட்சி கமிஷனர், எங்களது குழுவினர் வாரந்தோறும் புதன் காலை, 7:00 முதல் 8:00 மணி வரை மாணவ, மாணவியரிடம் இருந்து வரும் குறைகளை கேட்டறிந்து, உடனுக்குடன் தீர்வு காண உள்ளோம். குழந்தைகளின் பெற்றோரும் பள்ளி சார்ந்த குறைகளை தெரிவிக்கலாம். அடுத்த வாரம் இந்த வசதி துவங்கப்படவுள்ளது. இதற்கான அடிப்படை பணிகள் நடைபெற்று வருகின்றன.இவ்வாறு, அவர் கூறினார்.