தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்
புயலுக்கு பெயரை யார் தேர்வு செய்வது?
பெயர் வைப்பதற்கான காரணம் என்ன?
புயல் சின்னம் உருவாகும் போதெல்லாம், அதற்கு ஒரு பெயர் சூட்டப்படுவது பற்றி அனைவரும் அறிந்திருப்பார்கள். அவற்றிற்கு எவ்வாறு பெயர் சூட்டப்படுகிறது என்பதை இங்கே காணலாம்.
ஒரே நேரத்தில் இரண்டு அல்லது மூன்று புயல்கள் உருவானால் குழப்பம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதால் தான் மனிதர்களைப் போலவே புயலுக்கு பெயர் வைக்கும் முறை உருவானது.
20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஆஸ்திரேலியா தான் இந்தப் பழக்கத்தை முதலில் தொடங்கி வைத்தது. ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையத்தினர் மக்களிடம் செல்வாக்கு குறைந்த அரசியல் வாதிகளின் பெயர்களை புயல்களுக்கு சூட்டியுள்ளனர். பின்னர் 1954-ஆம் ஆண்டு இந்தப் பழக்கத்தை அமெரிக்கா தொடங்கியது.
இந்தியாவைப் பொறுத்தவரை வங்கக் கடல் மற்றும் அரபிக் கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும் நடைமுறை 2004-ஆம் ஆண்டில் உருவானது. இந்தியா, வங்கதேசம், மாலத்தீவு, மியான்மர், ஓமன், பாகிஸ்தான், தாய்லாந்த், இலங்கை ஆகிய 8 நாடுகள் இணைந்து பெயர் பட்டியலைத் தயாரித்து வருகின்றன.
No comments:
Post a Comment