தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்
உலகில் உள்ள ஏழு கண்டங்களில் அதிக அளவிலான பனியால் மூடப்பட்டுள்ள கண்டம் அண்டார்ட்டிகா. இக்கண்டத்தில் பிரமாண்டமான மர்ம பள்ளம் தோன்றியிருப்பது விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
பள்ளத்திற்கான காரணம்:
அண்டார்ட்டிகா கிழக்கு கண்டத்தின் ராய் பவுதோயின் என்றழைக்கப்படும் பகுதியில் ஒரு பெரிய ஏரி காணப்பட்டது. அதில் தேங்கியிருந்த நீர், பனிபடலததிற்கு அடியில் தோன்றிய கால்வாய் மூலமாக வெளியேறியது தான் அப்பள்ளத்திற்கு காரணம் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
3 கி.மீ., விட்டம்
சுமார் 3 கி.மீ., விட்டம் கொண்டுள்ள இந்தப் பள்ளம் தோன்றுவதற்கு அப்பகுதியில் விழுந்த எரி நட்சத்திரம் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் எழுந்தது. ஆனால் ஏரியில் காணப்பட்ட பனிகட்டிகளும் பனிப்படலங்களும் உருகி அதிலிருந்த நீர் வெளியேறியது தான் காரணம் என்று தற்போது தெளிவாகி உள்ளது.
வெப்ப காற்று:
அண்டார்ட்டிகா கண்டத்தின் கிழக்கு பகுதியில் உள்ள பனிபடலம் மேற்கு பகுதியில் உள்ளதை காட்டிலும் வேகமாக உருகுகிறது. இதற்கு காரணமாக இருப்பது கிழக்கு அண்டார்ட்டிகா கண்டத்தில் வீசும் வெப்ப காற்று. அதே நேரம் கிழக்கு பகுதியில் தான் அதிக அளவு பனிப் பொழிவும் ஏற்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். வெப்ப காற்று குளிர்ந்த காற்றை அதிக அளவு ஈரப்பதத்தை உறிஞ்சுவது தான் அதற்கு காரணம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
No comments:
Post a Comment