Sunday, 25 December 2016

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பணி வரன்முறை தேவையா?

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


'தேர்வு வாரியம் மூலம் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு பணி வரன்முறை செய்ய தேவையில்லை' என, பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
அரசு பள்ளிகளில், கடந்த காலங்களில், சீனியாரிட்டி மூலம் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.
நியமனம் செய்யப்பட்ட ஓராண்டில், அவர்களுக்கு பணி வரன்முறை செய்யப்பட வேண்டும். தொடர்ந்து, இரண்டு ஆண்டுகளில் தகுதிகாண் பருவம் முடிக்க வேண்டும்.
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமிக்கப்பட்ட, ஆசிரியர்களுக்கு பணி வரன்முறை செய்வதில் குழப்பம் இருந்தது. இதனால், 2010 -- 11ல், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கும் பணி வரன்முறை செய்யவில்லை. மேலும், அவர்களது பதவி உயர்விலும்
சிக்கல் ஏற்பட்டது.
இந்த குழப்பத்திற்கு, பள்ளிக் கல்வி இயக்குனரகம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.'ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு தனியாக பணி வரன்முறை செய்ய தேவையில்லை; இரண்டு ஆண்டுகளில் தகுதிகாண் பருவம் மட்டும் முடித்தால் போதும்' என, தெரிவித்துள்ளது.

பாஸ்போர்ட் பெற விதிமுறைகள் தளர்வு

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


பாஸ்போர்ட் பெறுவதற்கான விதிமுறைகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில்,
கடந்த 21.01.1989க்கு பிறகு பிறந்தவர்கள், பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும்போது, பிறப்பு சான்றிதழ் கட்டாயம் வழங்க வேண்டும் என்ற விதி தளர்த்தப்படுகிறது. அவர்கள், பிறந்த தேதியுடன் கூடிய கடைசியாக படித்த கல்வி நிறுவனங்கள் வழங்கும் மாற்று சான்றிதழ், பான்கார்டு எண், ஆதார் கார்டு எண், டிரைவிங்லைசென்ஸ், தேர்தல் அடையாள அட்டை, பொது காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கிய, காப்பீடு ஆவணம் ஆகியவற்றை சமர்ப்பிக்கலாம்.அரசு பணியில் உள்ளவர்கள் பணி ஆவணம், பென்சன் உத்தரவு ஆவணம் ஆகியவற்றில் ஒன்றை வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பம் செய்பவர்கள், இனிமேல் தந்தை அல்லது தாயார் அல்லது பாதுகாவலர்கள் யாராவது ஒருவரின் பெயரை மட்டும் குறிப்பிட்டால்மட்டும் போதும்.
*பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்பவர்கள் நோட்டரி பப்ளிக், முதல் நிலை ஜூடிசியல் மாஸ்திரேட் போன்றவர்களிடம் அத்தாட்சி கையெழுத்து வாங்க தேவையில்லை. சுய சான்றிதழ் மட்டும் அளித்தால் போதும்.
*திருமணமானவர்கள், திருமண சான்றிதழ் அளிக்க வேண்டிய கட்டாயமில்லை.
*பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்பவர்கள் தங்களது கணவன்/ மனைவி பெயர்களை தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை.
*பிறந்த தேதி தெரியாமல் காப்பகங்களில் வளர்ந்தவர்கள், தங்களது காப்பக தலைவரிடம் சான்று வாங்கி சமர்ப்பித்தால் போதும்.
*உள்நாட்டில் தத்தெடுத்தவர்களுக்கு பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் போது, உறுதிமொழி அளித்து ஆவணம் வழங்கினால் போதும்.
*உயர் அதிகாரிகளிடம் ஐடன்டி சர்டிபிகேட் வாங்க முடியாத அரசு ஊழியர்கள், அவசர தேவைக்காக உயரதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து சுய சான்றிதழ் அளித்தால் போதும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் நினைவாற்றலை வளர்க்க சில குறிப்புகள்

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


1 . சொல்லக் கேட்டு எழுதுதல்.
 (  உணவு இடைவேளையின் போது )     ஒரு மாறுதலுக்காக  வகுப்பறையில்
உள்ள கரும்பலகையை தவிா்த்து வகுப்பறை வெளிச்சுவற்றில் ஒரு தாளில் எளிய வாக்கியம் ( புள்ளி மான் துள்ளி ஓடும்)   ஒன்றை எழுதி ஒட்டி விடலாம். அதனைப் படித்துவிட்டு பாா்க்காமல் என் முன்பு எழுதிக்காட்ட  வேண்டும் என மாணவா்களிடம் கூறவும்.
இப்போது அனைவரும் ஆா்வத்துடன் அவ்வாக்கியத்தை படித்துவிட்டு நினைவில் நிறுத்தி நம் முன்னே எழுதிக் காட்டுவா்.   எழுத்துப் பிழையுள்ள சொல்லை வட்டமிட்டு, மீண்டும் எழுத சொல்ல , தாளை நோக்கி ஓடிச் சென்று,  எந்த இடத்தில் தவறு செய்தாா்களோ அதனை நன்கு கவனித்து மீண்டும் பிழையின்றி எழுதிக்காட்டுவாா்கள் .
           
இதுபோன்று செய்வதால் மாணவா்களிடையே  ஆா்வமும், புதிய அனுபவமும், நல்ல ஞாபகத்திறனும், பாா்க்காமல் எழுதும் திறனும் வளரும்.  நாளடைவில் ஆங்கில வாா்த்தைகள், சொற்றொடா்களை எழுத பயிற்சி அளிக்கலாம்.
          
மெல்லக் கற்கும் மாணவா்க்கு தனியாக சொற்கள் எழுதி பயிற்சி அளிக்கலாம்.
      
2.  நினைவாற்றலை வளர்க்க,,,,
              தொடக்க நிலை மாணவர்க்கு பேனா, பென்சில், ரூபாய்த்தாள், நாணயம் முதலிய பொருட்களை ( 5 முதல் 7 வரை)  மாணவர்க்கு காட்டி நன்கு அவர்கள் பார்த்த பிறகு அவற்றை மூடி வைத்து விடவும். இப்போது அவர்களை ஒவ்வொருவராக அழைத்து மூடி வைத்ததில் என்னென்ன உள்ளது என கேட்க வேண்டும். நன்றாக படிக்கும் மாணவர்கள் உடனே சரியாக பதில் கூறுவார்கள். மெல்லக்கற்போர் ஒன்றிரண்டை விட்டு விட்டு கூறுவார்கள்.
அடுத்த சுற்றில் பொருட்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த, கண்டுபிடிப்பாளர்களும் பெயர்களை கூறுவதில் சற்று முன்னேறி இருப்பர்.
அடுத்த நாளில் பொருட்களுக்கு மாற்றாக வார்த்தை அட்டைகளை வைத்துமுயற்சி செய்யும் போது நினைவாற்றலும் கூடும், மேலும் அவ்வார்த்தை அட்டைகளை நாம் சொல்ல, மாணவர்கள் எழுதினால் பிழையின்றி எழுதி அசத்துவார்கள்
       3.  விரைவாகப் படிக்கும் ஆா்வத்தை துாண்ட ..
          வகுப்பு வாாியாக பாடப்புத்தகத்தில் குறிப்பிட்ட பக்கத்தைக் கூறி அதில் இடம் பெற்றுள்ள ஒரு சொற்றொடரை கண்டுபிடித்து படிக்க கூறவும். மாணவா்களிடையே பரபரப்பும், ஆா்வமும் தொற்றிக்கொள்ளும்.  போட்டி போட்டுக்கொண்டு அப்பத்தியில்  இடம் பெற்றுள்ள மொத்த வாக்கியங்களையும் படித்து - கண்டுபிடித்துவிடுவாா்கள். தொடா்ந்து இம்முறையை பின்பற்ற, விரைவாகப் படிக்கும் திறன் அவா்களிடையே தானாக உருவாகும்.
        
மெல்லக்கற்கும் மாணவா்க்கு மேற்குறிப்பிட்ட முறையில் ஒரேயொரு சொல்லைக் கூறி பயிற்சி அளிக்கலாம்.
            
அனைத்தையும் போட்டி முறையில் வழிநடத்த சிறப்பான முடிவு கிடைக்கும்.

தலைமைச் செயலாளருக்கான அதிகாரங்கள், பொறுப்புகள்?

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


தலைமைச் செயலாளருக்கு இருக்கும் பொறுப்புகள் கடமைகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டாமா? 
1. மாநில முதல்வருக்கு முதன்மை ஆலோசகராக இருப்பவர். அரசின் நிர்வாக விஷயங்களைச் செயல்படுத்துபவர். மாநிலத்தின் மேம்பாட்டுப் பணிகளையும் திட்டங்களையும் திட்டமிடுவதும் செயல்படுத்துவதும் தலைமைச் செயலாளரின் முக்கியப் பணி. 
2. அமைச்சரவைக் குழுவின் செயலாளரும் இவர்தான். அமைச்சரவைக் குழு கூட்டங்களைத் திட்டமிடுவதும், அந்தக் கூட்டத்தின் இடம் மற்றும் நிகழ்ச்சி நிரல்களைத் திட்டமிடுவதும் தலைமைச் செயலாளரின் பொறுப்பு. அரசு விவகாரங்கள் தொடர்பான அறிக்கைகள் மற்றும் ஆவணங்களை நிர்வகிக்கும் அதிகாரமும் இந்தப் பதவிக்கு உண்டு.
3. அரசின் கீழ் செயல்படும் அனைத்துத் துறைகளின் செயலாளர்களையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதும், அவர்களைக் கண்காணிக்கும் அதிகாரமும் இவருக்கு உண்டு. அதேபோல் அனைத்துத் துறைகளின் பணியாளர்களும் இவரது கட்டுப்பாட்டுக்கு உள்ளானவர்கள்.
4. குடிமையியல் பணி தொடர்பான விவகாரங்களும் இந்தப் பொறுப்பின் கீழ்தான் வரும். முக்கிய அரசு உயர் அதிகாரிகளின் நியமனங்கள் மற்றும் பணியிட மாற்றங்கள் ஆகியவற்றையும் தலைமைச்செயலாளரே பார்ப்பார். அரசுத் துறைகளுக்கு வெளியிடப்படும் அனைத்து அறிக்கைகளும், உத்தரவுகளும் தலைமைச் செயலாளர் பெயரில் வெளியிடப்படும். 
5. மண்டல அளவிலான மாநில அரசுகள் ஆணையத்திலும் மாநிலத்தின் சார்பாக அதன் தலைமைச்செயலாளரே பிரதிநிதியாக செயல்படுவார். 
6. தலைமைச் செயலகத்தின் நிர்வாகப் பணிகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதும், யார் யாருக்கு எந்த அறை? என்று ஒதுக்கீடு செய்வதற்கும் தலைமைச்செயலாளருக்கே அதிகாரம் உண்டு. 
7. மைய ஆவணக் காப்பகம், தலைமைச் செயலக நூலகம் ஆகியவற்றையும் நிர்வகிப்பார். தலைமைச் செயலகத்தில் உள்ள காவலாளிகளும் அவரது கட்டுப்பாட்டின் கீழ் இருப்பர். 
8. முக்கியமாக எமர்ஜென்சி அமல்படுத்தப்படும் சமயங்களில், மாநிலத்தின் முழுக் கட்டுப்பாடும் அவரின் கீழ்தான் இருக்கும். 
9. எந்தவொரு நெருக்கடி, அசாதாரண சூழ்நிலையிலும் அரசின் பக்கம் நின்று, அவசியமாக எடுக்க வேண்டிய முடிவுகளுக்கான ஆலோசனை தர வேண்டியது தலைமைச் செயலாளருடைய பொறுப்பு. 
10. அரசு தொடர்பான டெண்டர்கள், கான்ட்ராக்ட்டுகள், நிலம் கையகப்படுத்துதல் என அனைத்தும் தலைமைச் செயலாளரின் கீழ்தான் செயல்படும். 
இவ்வளவு அதிகாரங்கள் தலைமைச் செயலாளருக்கு இருக்கின்றன.

இரண்டு நாட்கள் மேலாண்மை பயிற்சி

காற்று மாசுபாட்டைக் குறைக்க புது ஐடியா:

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்

காற்று மாசுபாட்டைக் குறைக்க புது ஐடியா: பேருந்து கட்டணத்தில் 75% டிஸ்கவுன்ட் தரும் மாநில அரசு

காற்று மாசுபாட்டால் தலைநகர் டெல்லி தொடர்ந்து அவதிப்பட்டு வருகிறது. டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கு இது கடும் சவாலாக இருப்பதால் காற்று மாசுபாட்டினைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
இந்நிலையில் தனிநபர் போக்குவரத்தைக் குறைக்கும் வகையில் பேருந்து பயணம் செய்பவர்களுக்கு புதிய சலுகைகளை டெல்லி அரசாங்கம் வாரி வழங்கியுள்ளது. அதன்படி பேருந்தில் பயணம் செய்பவர்களுக்கு 75% கட்டணம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
மேலும், சாதாரண பேருந்தில் பயணம் செய்பவர்களுக்கு 5 ரூபாய் கட்டணமும், குளிர்சாதன பேருந்தில் பயணம் செய்பவர்களுக்கு 10 ரூபாய் கட்டணமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர 21 வயதுக்குட்பட்டவர்கள், கணவனை இழந்தவர்கள், மூத்த குடிமக்கள் ஆகியோருக்கு இலவச பயண அட்டைகள் வழங்கப்படவுள்ளன. பொருளாதரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு மாதாந்திர கட்டணத்தில் 75% சலுகை வழங்கப்படவுள்ளது.
இதுகுறித்து டெல்லி போக்குவரத்துத்துறை கூறுகையில் "சாலையில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதே எங்களது நோக்கம். குறிப்பாக இளைஞர்கள் தங்களது பைக்குகளை விட்டு பேருந்தில் பயணம் செய்ய வேண்டும் என கருதுகிறோம். இதனால் காற்று மாசுபாடு குறையும் என கருதுகிறோம்" என்று தெரிவித்துள்ளது.
ஜனவரி 1-ம் தேதி முதல் இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் என கூறப்படுகிறது.

கண்துடைப்பாகும் 'SLAS' தேர்வுகள் : 'சர்வே' முடிவால் சறுக்கும் கல்வித்துறை!

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி திட்டம் (எஸ்.எஸ்.ஏ.,) சார்பில் நடத்தப்படும் மாணவர் திறனை மதிப்பீடு செய்யும் 'சிலாஸ்' (ஸ்டேட் லெவல் அச்சிவ்மென்ட் சர்வே) தேர்வுகள் கண்துடைப்பாகி விட்டது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், தொடக்க கல்வி மாணவர்கள் முந்தைய கல்வியாண்டில் பெற்ற, கற்றல் அடைவு திறன் (கற்றல் திறன்) தொடர்பான மதிப்பீட்டை, எஸ்.எஸ்.ஏ., மேற்கொள்கிறது. இதன்படி மூன்று, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் பாடங்களில் 'சிலாஸ்' தேர்வு நடத்தி அவர்கள் அடைவு திறன் குறித்து மாநில அளவில் சர்வே எடுக்கப்படுகிறது.இந்தாண்டு இத்தேர்வு, டிச.,19ல் துவங்கி 22ல் (இன்று) முடிகிறது.
இத்தேர்வு எழுத, ஒவ்வொரு ஆண்டும், ஒரே பள்ளிகளை தேர்வு செய்வதாகவும், ஒரு வகுப்பில் 25க்கு குறைவாக மாணவர் எண்ணிக்கை உள்ள பள்ளிகள் தேர்வு செய்யப்படுவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், பெரும்பாலான பள்ளிகளில், 'வினாவிற்கான விடையை ஆசிரியர் சொல்லிக் கொடுப்பதால், மாணவர் அடைவு திறனை சோதிக்க வேண்டும் என்ற இத்தேர்வு நோக்கமே கேள்விக் குறியாகி விட்டது' எனவும் சர்ச்சை எழுந்துள்ளது. இதுதவிர, கல்வி செய்திகளை பதிவிடும் ஒருசில தனியார் 'வெப்சைட்'கள், இத்தேர்வு நடப்பதற்கு முன்பே வினாவிற்கான விடைகளை பதிவிடுகின்றன எனவும் ஆசிரியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது: ஒரு யூனியனில் 1-5 வகுப்பில் 10 பள்ளிகள், 6-8 வகுப்பில் ஆறு பள்ளிகள் தேர்வு செய்து, இத்தேர்வு நடத்தி மாணவர் திறன் குறித்த சர்வே எடுக்கப்படும். மதிப்பெண் குறைந்தால் ஆசிரியர் கற்பித்தலில் கேள்வி எழும் என்பதால், மாணவர் விடையளிக்க ஆசிரியர் உதவி செய்கின்றனர் என பிரச்னை எழுந்தது.
இதனால் 'ஒரு பள்ளியில் நடக்கும் தேர்வை மற்றொரு பள்ளியை சேர்ந்த ஆசிரியர், தலைமையாசிரியர் கண்காணிக்க வேண்டும்,' என கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. ஆனாலும் எந்த பள்ளிக்கு, எந்த ஆசிரியர் செல்கின்றனர் என்ற விவரம், முன்கூட்டியே தெரிந்து விடுகிறது. இதனால், அதிகாரிகள் கண்காணிப்பையும் மீறி 'மாணவர்களை நன்றாக தேர்வு எழுத வைத்து விடுகின்றனர்'. ஒவ்வொரு ஆண்டும் ஒரே பள்ளிகளை தேர்வு செய்யாமல் 25 பேருக்கு குறைவாக இருந்தாலும் அந்த பள்ளியையும் தேர்வு செய்ய வேண்டும். இதுபோன்ற குறைபாட்டை நீக்கினால் தான் 'சிலாஸ்' மூலம் உண்மையான சர்வேயை எதிர்பார்க்க முடியும், என்றார்

தமிழகத்தில் 770 அரசுப் பள்ளிகளில் விர்சுவல் கிளாஸ் ரூம் திட்டம் விரைவில் துவக்கம் அமைச்சர் பாண்டிராஜன் தகவல்.

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


சென்னை, டிச. 19& தமிழகத்தில் உள்ள 770 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் விர்சுவல் கிளாஸ் ரூம் விரைவில் துவங்க திட்டமிட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.     தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி விதி எண் 110 ன் கீழ் பள்ளிக்கல்வித்துறையில் 770 பள்ளிகளில் மெய்நிகர் வகுப்பறைகள் அமைக்கப்படும் என அறிவித்தார். அப்போது,  தமிழக மாணவர்களுக்கு ஒரே வகையான தரமான கற்றல் கற்பித்தலைக் கொண்டு சேர்க்கும் வகையில் இன்றையத் தகவல் தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு மெய்நிகர் வகுப்பறைகள் (விர்சுவல் கிளாஸ் ரூம்) ஏற்படுத்தப்படும்.
முதற்கட்டமாக 770 அரசுப் பள்ளிகளிலும், 11 மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்களில் மெய்நிகர் வகுப்பறைகள் ஏற்படுத்தப்படும். மேலும், 11 மைய ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்களிலிருந்து நடத்தப்படும் வகுப்பறை செயல்பாடுகளை, இணையத் தொடர்பின் வாயிலாக கிராமப்புறப் பகுதியிலுள்ள அனைத்துப் பள்ளிகளும் பெற்று மாணவர்கள் பயன்பெறுவர். இத்திட்டத்தினை செம்மையாக செயல்படுத்த கோயம்புத்தூர், பெரம்பலூர் மற்றும் தருமபுரி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களுக்கு கட்டடங்கள் மற்றும் தளவாடங்கள், நூலகம் மற்றும் ஆய்வகம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் . இதற்கென 33 கோடியே 22 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும் என கூறினார்.
அதனைத் தொடர்ந்து மாநில ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனத்தின் சார்பில், தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் 770 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் விர்சுவல் கிளாஸ் ரூம் துவக்கப்பட உள்ளது. தமிழகத்தில் 11 மண்டலமாக பிரித்து இதற்கான மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த  மையத்திலோ அல்லது பள்ளிகளிலோ நடைபெறும் பாடத்தினைவகுப்பறையில் விடியோ கான்பரன்சிங் முறையில் பாடம் மாணவர்கள் கற்கலாம். இந்த முறையில் பெரும்பாலும் தமிழிலும், ஆங்கிலத்திலும் வகுப்புகள் ஆடியோ, வீடியோ, விசுவல் முறையில் நடத்தப்படும்.
இந்த வகுப்பறை தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் இணையத்தில் இணைக்கப்பட்டு, ஒரே நேரத்தில் பாடம் நடைபெறும்போது மாணவர்களுக்கு எழும் சந்தேகங்களையும் நிவர்த்தி செய்து கொள்ளலாம்.    இந்த வகுப்பறை அமைக்க பள்ளியில் கணிப்பொறி, இணையம், யூபிஎஸ், பிராட்பேண்ட் வசதி கட்டாயம் இருக்க வேண்டும். இந்த வகுப்பு நடத்தப்படுவதன் மூலம் இதுவரை பாடங்களை மனப்பாடம் செய்த மாணவர்கள் இனிமேல் நேரடியாகவும்,செயல்முறையுடன் கூடிய பாடங்களை வீடியோ மூலம் பார்த்துக் கொள்ளலாம். இதன் மூலம் கற்றல் அறிவை மாணவர்களிடையே 100 சதவீதம் வளர்க்க முடியும். ஆங்கில அறிவும் எளிதில் கிடைக்கும் என்பதால் இந்த புதிய வகுப்பு முறை தமிழக பள்ளி கல்வித்துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். இதற்கான உபகரணங்கள் தற்பொழுது பள்ளிகளுக்கு அனுப்பபட்டு பொருத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பாண்டிராஜன் கூறும்போது, தமிழகக்தில் 10,12 ம் வகுப்பு பயிலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டும், அவர்கள் தேர்வினை எளிதாக எதிர்கொள்ளும் வகையில், விர்சுவல் கிளாஸ் ரூம் விரைவில் துவக்கப்பட உள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கனவு திட்டத்தை விரைந்து செயல்படுத்தும் வகையிலும், மாணவர்களின் நலனையும் கருத்தில் கொண்டு துவக்கப்படும் என தெரிவித்தார். ரயில்வே கட்டணத்தை உயர்த்த மத்திய அரசு திட்டம்?  பஸ் கட்டணங்கள் அதிகமாக இருப்பதால் சாதாரண நடுத்தர மற்றும் ஏழை மக்கள் ரயில்களில் பயணம் செய்கின்றனர். ஆனால்  கடந்த சில ஆண்டுகளாக குறிப்பாக பாஜ அரசு மத்தியில் பதவியேற்றது முதல் ரயில்வே கட்டணங்கள் உயர்த்தப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். ரயில்வே கட்டமைப்புகளை மேம்படுத்தும் நோக்கத்தில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜ அரசு ரயில் கட்டணங்களை கடுமையாக உயர்த்த முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரயில்வே பாதுகாப்பு கட்டமைப்புகளை வலுப்படுத்து வதற்காக ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் நிதித்தொகுப்பை உருவாக்க அத்துறைதிட்டமிட்டுள் ளது. ஆனால் இத்தொகையில் 25 சதவீதத்தை மட்டுமே தர மத்திய நிதியமைச்சகம் முன் வந்துள்ளதாகத் தெரிகிறது. எனவே மீதமுள்ள நிதியை பயணிகள் கட்டணம் மூலம் திரட்ட ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. உயர் வகுப்பு கட்டணங்கள் ஏற்கனவே கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆயினும் இப்போதைய நிதித் தேவையைக் காரணம் காட்டி அதை மேலும் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. 2ம் வகுப்பு மற்றும் 2ம் வகுப்பு படுக்கை வசதி ஆகிய பிரிவு களில் பயணம் செய்வோரின் கட்டணத்தையும் உயர்த்த ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கூடு தலாக வசூலிக்கப்படும் கட் டணம் ரயில்வே பாதுகாப்பு அம்சங்களை வலுப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட உள்ள நிதித் தொகுப்பில் சேர்க் கப்படும் எனக் கூறப்படுகிறது.
பல ஆண்டுகளாக ரயில்வேதுறைக்கு தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. வரும் நிதியாண்டில் மத்திய பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட் இணைக்கப்படும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்நிலையில் ரயில் பயண பாதுகாப்பை உறுதி செய்ய ரூ.1,19,183 கோடி நிதி தேவை என்று ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லிக்கு கடிதம் எழுதினார். இந்த நிதியின் மூலம் தண்டவாளங்கள், சிக்னல்களை மேம்படுத்தவும் ஆளில்லா ரயில்வே கேட்டுகளில் மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைக்கவும் ரயில்வே அமைச்சகம் திட்ட மிட்டிருந்தது. ரயில்வே அமைச்சரின் கோரிக்கையை பரிசீலித்த நிதியமைச்சகம் 25 சதவீத நிதியை மட்டும் ஒதுக்க முன்வந்துள்ளது. மீதமுள்ள 75 சதவீத தொகையை செஸ் வரி மூலம் திரட்டுமாறு அறிவுறுத்தியுள்ளது. இதற்காகவே விரைவில் ரயில் கட்டணம் உயர்த்தப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

'ஸ்வைப் மிஷின்' மூலம் காஸ் பில் : புத்தாண்டு முதல் அமல்படுத்த முடிவு

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


ஸ்வைப் மிஷின்' மூலம், காஸ் சிலிண்டர் பில் செலுத்தும் முறை, புத்தாண்டு முதல் அமலுக்கு வர இருக்கிறது. 'ரூபாய் நோட்டுகள் செல்லாது' என்ற அறிவிப்பை தொடர்ந்து, நாடு முழுவதும் பணத் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பணமில்லா வர்த்தகத்தை ஊக்குவிக்கும் முயற்சியில், மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. 
ஏற்கனவே, பெட்ரோல், டீசல் போன்றவற்றுக்கு, 'ஸ்வைப் மிஷின்' மூலம் பணம் பெற்றுக் கொள்ளும் முறையை, அனைத்து எண்ணெய் நிறுவனங்களும் அமல்படுத்தி உள்ளன. இனி, வீடு மற்றும் வர்த்தக காஸ் சிலிண்டர்கள் வாங்கும் போது, அதற்கான பணத்தை, 'ஸ்வைப் மிஷின்'கள் மூலம், வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த முறை, புத்தாண்டு முதல் படிப்படியாக நடைமுறைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கிகளிடம், 'ஸ்வைப் மிஷின்' கேட்டு காஸ் ஏஜென்சிகள் விண்ணப்பித்துள்ளன. இனி, காஸ் சிலிண்டர் வினியோகிக்கும் ஒவ்வொரு ஊழியரின் கையிலும், 'ஸ்வைப் மிஷின்' இருக்கும். காஸ் சிலிண்டர் வினியோகிக்கும் போதே, இந்த மிஷின் மூலம் அதற்குரிய பில் தொகையை பெற்றுக் கொள்வர்.

8' போடும் அமைப்பில் 'சென்சார்'டூ - வீலர் உரிமத்தில் புதிய முறை

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


இரு சக்கர வாகன ஓட்டுனர் உரிமம் பெறுவதற்காக, '8' போடும் அமைப்பில், 'சென்சார்' கருவி பொருத்தப்பட உள்ளது. ஓட்டுனர் உரிமம் பெற, வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் உள்ள, '8' அமைப்பில் இரு சக்கர வாகனத்தை ஓட்ட வேண்டும்; தரையில் கால் ஊன்றாமல் வாகனத்தை ஓட்ட வேண்டும் என்பது உட்பட சில நிபந்தனைகள் உண்டு.
மோட்டார் வாகன ஆய்வாளர் பார்வையிட்டு உரிமம் அளிப்பார். இந்நிலையில், '8' அமைப்பில், 'சென்சார்' கருவி பொருத்தி உரிமம் அளிக்கும் புதிய முறை விரைவில்வர உள்ளது. அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்த அமைப்பில் பொருத்தப்படும், 'சென்சார்' கருவி, வாகனங்களின் போக்கை துல்லியமாக கணக்கிடும். இதை கம்ப்யூட்டரில் ஆய்வு செய்யும் அதிகாரி, அந்த மென்பொருள் பரிந்துரைப்படி உரிமம் அளிப்பார். இது குறித்து, புனேயில் உள்ள ஆராய்ச்சி மையத்தில் ஆய்வு நடக்கிறது. விரைவில் நடைமுறைக்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்.

How To Use Paytm App, Add Money In Wallet & Transfer Balance..!!

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


We all know about Paytm but there are many peoples who don’t know about Paytm.  So today we are
share step by step guide to know how to use Paytm , how make your life style easy. Paytm is online way where any one can make mobile, Data card, Dth recharge.
Electricity, landline/broadband, postpaid mobile , gas bill payments,  book bus tickets. Online shopping from 5000+ products at Paytm. Today we learn how to use Paytm.
How To Use Paytm App All Step By Step Guide
1. First visit www.Paytm.com  / Download Paytm App
2. If you have Smartphone then download Paytm app for better experience
3. Install & Open Paytm app
4. Register or login
5. You can register with your any email address
6. After successfully register make login to Paytm
7. To use Paytm features you have to add some Paytm wallet Money
8. Use any given payment method to add money in wallet
1) Debit card
2) Credit card
3) Net banking
4) ATM
5) IMPS


How To Add Money In Paytm Wallet All Steps
1. Open Paytm app or site
2. Login on Paytm
3. Click on “ADD MONEY” Icon at Home page of Paytm App
5. Enter amount which you want to add

6. Click on “Add Money” option
7. Apply promo code if you have any in promotional/voucher field
Note – You can see All Paytm Promo Code Using Above Given Paytm Promo Code Link

8. If you have not promo code then leave field blank and click on “Proceed to pay Rs.”
9. Choose suitable  method to pay amount, complete  payment process
10. your amount will be credited instantly in your Paytm wallet.
Steps To Use Paytm Wallet Cash : How To Use Paytm Promo Code
1. You can use Paytm for below listed transaction
– Recharge mobile phones
– Data cards Recharge
– Dth Recharge
– Electricity bill payment
– Landline/broadband bill payment
– Gas bill payment
– Postpaid mobile bill payment
– Book bus tickets
– Online shopping from 5000+ products

2. Select any one to make online transaction through Paytm
~ You want to make recharge on your mobile no. then make click on recharge option in side Paytm site / app fill all details about your recharge. Proceed to pay using your Paytm wallet online, your recharge will be done instantly.www.ednnet.in
How To Send Money From Paytm
1. Open your Paytm app & login
2. Click on “PAY” & select option “SCAN CODE”,  “MOBILE NO.”, “SHOW CODE”, as you want to send money or make merchants payment.
3. Follow Instruction and make payment.
For Mobile To Mobile Send Money (Paytm Wallet to Another Paytm Wallet)
Select Mobile No. option
Enter mobile number (enter the number of receiver)

பள்ளிகளில் மனித உரிமைக் கல்வி அவசியம்: ஆணைய உறுப்பினர் வலியுறுத்தல்

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


நாடு முழுவதும் பள்ளிகள் அளவிலேயே மனித உரிமைக் கல்வியை அறிமுகம் செய்ய வேண்டும் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர் நீதிபதி டி.முருகேசன் தெரிவித்தார்.

புதுச்சேரி மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் மீதான மனித உரிமை மீறல்கள், பிரச்னைகள் தொடர்பான புகார்கள் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் சார்பில் நேரடி விசாரணை தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவரும், ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியுமான எச்.எல்.தத்து தலைமை தாங்கினார். உறுப்பினர்கள் சிரியாக் ஜோசப், டி.முருகேசன், எஸ்.சி.சின்ஹா உள்ளிட்டோர் கொண்ட குழு ஆணையத்திடம் அளிக்கப்பட்ட புகார்கள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டது.
இதில் தலைமைச் செயலர் மனோஜ் பரிதா, டிஜிபி சுனில்குமார் கெளதம், அரசுச் செயலாளர்கள், காவல் துறை உயரதிகாரிகள், பல்வேறு துறை இயக்குநர்கள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள், மனித உரிமை மீறல் சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர், ஆணைய உறுப்பினர் நீதிபதி முருகேசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் 17 மனித உரிமை மீறல் புகார்கள் பெறப்பட்டன. இவற்றில் கடந்த மாதம் மட்டுமே 15 புகார்கள் வந்துள்ளன. புகார்கள் தொடர்பாக பாதிக்கப்பட்டோர், எதிர்தரப்பினரிடம் விசாரணை செய்துள்ளோம். இதன் மீது பெறப்படும் அறிக்கையின் அடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்படும்.
புதுச்சேரியில் ஆணையம் வேண்டும்: அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் தனியாக மனித உரிமை ஆணையங்கள் இருக்க வேண்டும் என்பது ஆணையச் சட்டத்திலேயே உள்ளது. புதுச்சேரியில் தற்போது மனித உரிமைக் குழு தான் உள்ளது. அதன் செயல்பாடும் சரிவர இல்லை எனத் தெரிகிறது. புதுச்சேரியிலும் முழு மனித உரிமை ஆணையத்தை அமைக்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளோம்.
கூடுதல் அதிகாரம் தேவை: தேசிய, மாநில மனித உரிமை ஆணையங்களின் உத்தரவுகள் பெரும்பாலும் சட்ட ரீதியில் கட்டுப்படுத்தப்படுபவையாக இல்லாத நிலை உள்ளது. எனவே, ஆணையத்துக்கு கூடுதல் அதிகாரங்களை மத்திய அரசு தர வேண்டும். மனித உரிமை மீறல் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், பள்ளிக் கல்வி அளவிலேயே மனித உரிமைகள் தொடர்பான பாடப்பிரிவை இடம் பெறச் செய்ய வேண்டும். ஒருவருக்கு தனக்கான உரிமைகள், பாதிக்கப்பட்டால் எவ்வாறு அணுகுவது என்பது தொடர்பாக விழிப்புணர்வு தேவைப்படுகிறது. மாணவ, மாணவியருக்கு தவறாமல் மனித உரிமைக் கல்வியை கற்பிக்க வேண்டும்.
மனித உரிமை ஆர்வலர்கள் தாக்கப்படும் சம்பவங்களை ஆணையம் தீவிரமாக கருதுகிறது. அவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய அரசிடம் வலியுறுத்தி வருகிறோம்.
புதுச்சேரியில் சாதி மோதல்களால் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.18 லட்சம் இழப்பீடு அரசு சார்பில் தரப்பட்டுள்ளது. இத்தொகை போதுமானதில்லை என கோரிக்கை வந்துள்ளது. அதை பரிசீலிக்குமாறு அரசிடம் தெரிவித்துள்ளோம். வழக்கம் போல காவல் துறை மீது தான் அதிக மனித உரிமை மீறல் புகார்கள் வந்துள்ளன. ஒரு நபரை 5 காவல் துறையினர் தாக்கியதாகப் புகார் வந்துள்ளது. அதுதொடர்பாகவும் தீவிரமாக விசாரித்துள்ளோம் என்றார் முருகேசன்.
ஆணையச் செயலர் சத்திய நாராயண மொகந்தி, செயலர் சிகே.சதுர்வேதி, இணைச் செயலர் எஸ்.கோச்சர், டிஐஜி சாயா சர்மா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


DA:7% அகவிலைப்படி உயர்வு செய்திகுறிப்பு.

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


கலெக்டர் அலுவலகத்தில் பள்ளிக்கூடம் அமைத்த கலெக்டர்!

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


படிக்க பள்ளிக்கூடம் இல்லாமல் தவித்த மாணவர்களுக்காக கலெக்டர் அலுவலகத்தில் இடம் ஒதுக்கி கொடுத்திருக்கிறார் கோழிக்கோடு கலெக்டர் என்.பிரசாந்த்.
கேரள மாநிலம், கோழிக்கோடு கலெக்டராக இருப்பவர் என்.பிரசாந்த். இவர் அங்கு பல்வேறு மக்கள் நல பணிகள் செய்து பொதுமக்களின் இதயத்தில் இடம் பிடித்துள்ளார். அதேபோல், தற்போதும் ஒரு செயல் புரிந்து பாராட்டு பெற்றிருக்கிறார்.
சமீபத்தில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி கோழிக்கோட்டில் உள்ள மலப்புரம் தொடக்கப் பள்ளி மூடப்பட்டது. இதனால், மாணவர்கள் படிப்பதற்கு இடமின்றி தவித்து வந்தனர்.இதையடுத்து, மாவட்ட கலெக்டர் என்.பிரசாந்த், அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். இந்த கூட்டத்தில், மூடப்பட்ட பள்ளி மாணவர்கள் படிப்பதற்காக கலெக்டர் அலுவலகத்தில் இடம் ஒதுக்கி கொடுப்பது என முடிவு செய்யப்பட்டது. இதற்கு பள்ளி பாதுகாப்பு குழுவும் உத்தரவாதம் அளித்தது.
அதன்படி, கலெக்டர் அலுவலகத்தின் பெரும் பகுதியை மாணவர்கள் படிப்பதற்காக ஒதுக்கி கொடுத்துள்ளார். மேலும், அந்த பள்ளி ஆசிரியர்களும், பணியாளர்களும் தங்களுடைய பணியினை செய்வதற்கான இடத்தையும் ஒதுக்கி கொடுத்திருக்கிறார்.
இங்கு படிக்கும் மாணவர்களுக்கு கலெக்டரின் செலவில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. அரசிடமிருந்து எந்தவொருமானியமும் பெறாமல், பொதுமக்கள் வழங்கும் நன்கொடையை ஏற்று இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறார் கலெக்டர் என்.பிரசாந்த்.ஏற்கனவே, பல்வேறு சமூக பணிகளின் மூலம் மக்கள் மனதை கவர்ந்த கலெக்டர் என்.பிரசாந்த்துக்கு, தற்போது மாணவர்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் இடம் ஒதுக்கி கொடுத்ததற்காகவும் பாராட்டு குவிகிறது.

அண்டார்ட்டிகா கண்டத்தில் தோன்றியுள்ள மர்ம பள்ளம்!!!

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


உலகில் உள்ள ஏழு கண்டங்களில் அதிக அளவிலான பனியால் மூடப்பட்டுள்ள கண்டம் அண்டார்ட்டிகா. இக்கண்டத்தில் பிரமாண்டமான மர்ம பள்ளம் தோன்றியிருப்பது விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
பள்ளத்திற்கான காரணம்:
அண்டார்ட்டிகா கிழக்கு கண்டத்தின் ராய் பவுதோயின் என்றழைக்கப்படும் பகுதியில் ஒரு பெரிய ஏரி காணப்பட்டது. அதில் தேங்கியிருந்த நீர், பனிபடலததிற்கு அடியில் தோன்றிய கால்வாய் மூலமாக வெளியேறியது தான் அப்பள்ளத்திற்கு காரணம் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
3 கி.மீ., விட்டம்
சுமார் 3 கி.மீ., விட்டம் கொண்டுள்ள இந்தப் பள்ளம் தோன்றுவதற்கு அப்பகுதியில் விழுந்த எரி நட்சத்திரம் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் எழுந்தது. ஆனால் ஏரியில் காணப்பட்ட பனிகட்டிகளும் பனிப்படலங்களும் உருகி அதிலிருந்த நீர் வெளியேறியது தான் காரணம் என்று தற்போது தெளிவாகி உள்ளது.
வெப்ப காற்று:
அண்டார்ட்டிகா கண்டத்தின் கிழக்கு பகுதியில் உள்ள பனிபடலம் மேற்கு பகுதியில் உள்ளதை காட்டிலும் வேகமாக உருகுகிறது. இதற்கு காரணமாக இருப்பது கிழக்கு அண்டார்ட்டிகா கண்டத்தில் வீசும் வெப்ப காற்று. அதே நேரம் கிழக்கு பகுதியில் தான் அதிக அளவு பனிப் பொழிவும் ஏற்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். வெப்ப காற்று குளிர்ந்த காற்றை அதிக அளவு ஈரப்பதத்தை உறிஞ்சுவது தான் அதற்கு காரணம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

Wednesday, 14 December 2016

தமிழ்நாடு முழுவதும் SLAS TEST நடைபெறும் பள்ளிகளின் விவரம்

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்





தமிழ்நாடு முழுவதும் SLAS TEST நடைபெறும் பள்ளிகளின் விவரம்

Click Here

2 nd term Question

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்



click here.......

உணவை செய்தி தாள்­களில் வைத்து கொடுக்க தடை!!!

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


‘செய்தித் தாள்­களில், உண­வு­களை, ‘பேக்’ செய்­வதால் ஏற்­படும் ஆரோக்­கிய பாதிப்பு குறித்து, மக்­க­ளிடம் விழிப்­பு­ணர்வு ஏற்­ப­டுத்த வேண்டும்’ என, இந்­திய உணவு தரக் கட்­டுப்­பாட்டு அமைப்பு, அனைத்து மாநி­லங்­களின் உணவு பாது­காப்பு அமைப்­பு­க­ளுக்கு கடிதம் எழு­தி­யுள்­ளது.
அதன் விபரம்:செய்தித் தாள்­களில் பயன்­ப­டுத்தும், ‘மை’ உடல் நல­னுக்கு ஊறு­வி­ளை­விக்கும். அதில், வண்ணம் உள்­ளிட்ட பிற ரசா­யனப் பொருட்­களின் சேர்க்கை உள்­ளது. உணவுப் பொட்­ட­லங்­க­ளுக்கு, இத்­த­கைய செய்தித் தாள்கள் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. குறிப்­பாக, உணவு தொழிலில் உள்ள, அமைப்பு சாரா துறை­யினர், உணவை பொட்­டலம் கட்ட, செய்தித் தாள்­களை உப­யோ­கிக்­கின்­றனர்.
அது போல, தின்­பண்­டத்தில் உள்ள எண்­ணெயை உறிஞ்­சவும், பலர் செய்தித் தாள்­களை பயன்­ப­டுத்­து­கின்­றனர். இதனால், தின்­பண்­டங்­களில், ரசா­யனப் பொருட்கள் கலந்து, அவற்றை உண்­போரின் ஆரோக்­கியம் பாதிக்­கப்­ப­டு­கி­றது. இத்­த­கைய அபா­ய­க­ர­மான பயன்­பாட்டை குறைக்க, உணவு தயா­ரித்து விற்­பனை செய்வோர் மற்றும் நுகர்­வோ­ரி­டையே விழிப்­பு­ணர்வு பிர­சா­ரங்­களை, மாநில மற்றும் யூனியன் பிர­தேச உணவு பாது­காப்பு அமைப்­புகள் மேற்­கொள்ள வேண்டும். செய்தித் தாள்­களில், உண­வுகள், தின்­பண்­டங்கள் உள்­ளிட்­ட­வற்றை மடித்துக் கொடுக்கும் வழக்­கத்தை, அறவே நீக்க நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். இவ்­வாறு அதில் கூறப்­பட்டு உள்­ளது.

Tuesday, 6 December 2016

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல்.

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவரது உடல்  பொதுமக்களின் அஞ்சலிக்காக  ஓமாந்தூரார் தோட்டத்தில் உள்ள ராஜாஜி ஹாலில் வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுமக்களின் அஞ்சலிக்கு பின்னர் இன்று மாலை அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக தெரிகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன.  தமிழகத்தில் பதவியில் இருக்கும் போது உயிரிழந்த மூன்றாவது முதல்வர் ஜெயலலிதா ஆவார்.

முதல்வரின் மறைவையொட்டி 7 நாட்களுக்கு துக்கம் அனுசரிப்பு.

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து  தமிழகம் முழுவதும் தேசிய கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கும் என அறிவிக்கப்பட்ட்டுள்ளது, முதல்வரின் மறைவையொட்டி 7 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

முதல்வர் ஜெயலலிதா காலமானார்!! அப்பல்லோ அறிவிப்பு

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


05.12.2016 அன்று இரவு 11.30 மணிக்கு காலமானார் செல்வி ஜெயலலிதா
அப்போலோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி காலமானார்.
அவருக்கு வயது 68. டிசம்பர் 5-ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு மருத்துவர்களின் தீவிர சிகிச்சை பலனின்றி ஜெயலலிதா காலமானதாக அப்போலோ மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 
தமிழக முதல்வர் ஜெயலலிதா செப்டம்பர் மாதம் 22-ம் தேதி இரவு திடீர் உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் என்று சொல்லி அனுமதிக்கப்பட்டவர் நுரையீரல் பிரச்னை, சுவாசக் கோளாறு, நோய்த் தொற்று என பல உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை குணமடையவேண்டி தமிழகம் முழுக்க அ.தி.மு.க. தொண்டர்கள் பல்வேறு வழிபாடுகளை நடத்தி வந்தனர்.
ஜெயலலிதா உடல்நிலை தேறிவருவதாக அப்போலோ மருத்துவர்கள் சொல்லிவந்த நிலையில், டிசம்பர் 4-ம் தேதி திடீரென அவருக்கு இதய முடக்கம் ஏற்பட்டதாகச் சொன்னார்கள். இதைத் தொடர்ந்து ஜெயலலிதா தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டதாகவும் தகவல் தெரிவித்தார்கள். இந்நிலையில் தொடர் தீவிர சிகிச்சை பலனளிக்காமல் டிசம்பர் 5-ந் தேதி இரவு 11:30 மணிக்கு காலமானார் ஜெயலலிதா.
தமிழகம் கடந்து உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மத்தியிலும் இந்திய அரசியல் அரங்கிலும் இந்தச் செய்தி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஜெயலலிதா மறைவு, தமிழர்களுக்கு மட்டுமல்லாது உலகம் முழுக்கவே அதிர்வலைகளை உண்டாக்கியிருக்கிறது.
திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவரங்கத்தை பூர்வீகமாகக் கொண்ட ஜெயலலிதா, 1948-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி கர்நாடக மாநிலம், மேல்கோட்டை எனும் கிராமத்தில் பிறந்தவர். பள்ளி செல்லும் பிராயத்திலேயே நடிக்கத் தொடங்கி, தமிழர்களின் அபிமான நடிகையாக தடம் பதித்தார். அவர் மனதுக்குப் பிடித்துதான் நடிப்புத் தொழிலை தேர்ந்தெடுத்தார் என்று சொல்வதற்கில்லை... ஆனால், அதில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து கொண்டார். தன் முழு உழைப்பையும் கொட்டினார். ஆம், இதுதான் அவர் இயல்பே!  எதையும் அவரால் அரை மனதுடன் செய்ய முடியாது. இதை அவர் ஒரு நேர்காணலிலும் பகிர்ந்திருக்கிறார்.
இதனால்தான்  தமிழ் மொழி மட்டுமல்லாது தெலுங்கு, கன்னட மொழி சினிமாக்களிலும் முத்திரைப் பதித்து 120-க்கும் மேற்பட்ட  திரைப்படங்களில் முன்னணிக் கதாபாத்திரங்களில், அவரால் நடிக்க முடிந்தது.
அரசியல் அரங்கில் அ.தி.மு.க உறுப்பினராக அடியெடுத்து வைத்த ஜெ. 1984-ஆம் ஆண்டு முதல் 1989-ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிலும், அவர் மிளிர்ந்தார். அவரது பேச்சாற்றலை மூத்த ஊடகவியலாளர் குஷ்வந்த் சிங் பாராட்டி இருக்கிறார். தன் தாய் சந்தியாவுக்கு அடுத்து இந்திரா காந்தியை ஜெயா மிகவும் நேசித்தார். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் இறப்புக்குப் பின்னர் அவரது அரசியல் வாரிசாக தொண்டர்களால் தேர்வு செய்யப்பட்டவர் ஜெயலலிதா. அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, இறக்கும்வரை அக்கட்சியின் நிரந்தரப் பொதுச்செயலாளராக இருந்தார்.
1989-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுக்குக் கிடைத்த எதிர்க்கட்சி அந்தஸ்தின் மூலம் தமிழகத்தின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவரானார். 1991 தேர்தலில் வெற்றி பெற்று, முதல் முறையாக முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதேபோல, 2001, 2011 மற்றும் 2016 ஆண்டு தேர்தல்களில் வெற்றி பெற்று தமிழக முதல்வராக தேர்வானார். 2001-’06 காலகட்டத்தில் டான்சி வழக்கு காரணமாக முதல்வர் பதவியிலிருந்து விலக நேர்ந்தது. மேல் முறையீட்டில் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு மீண்டும் முதல்வரானார். அதே போல் 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, சிறை செல்ல நேர்ந்ததால், முதல்வர் பதவியை இழந்தார். பின்னர் அதிலிருந்து விடுவிக்கப்பட்டதால், 2015 மே மாதம், மீண்டும் தமிழக முதல்வரானார்.
2016 தேர்தலில் மீண்டும் தமிழக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழக அரசியலில், எம்.ஜி.ஆர் காலத்துக்குப் பின்னர், ஒரு தலைவர் தொடர்ச்சியாக இருமுறை ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது என்றால், அது ஜெயலலிதாதான்!  தன்னம்பிக்கையும், மிகுந்த துணிச்சலும் கொண்ட ஜெயலலிதா தமிழகத்தின் முதல்வராக 6 முறை பதவி வகித்தவர். தற்போது முதல்வராக இருக்கும்போதே மரணமடைந்துள்ளார்.
‘புரட்சித் தலைவி’ என்றும், ‘அம்மா’ என்றும் அ.தி.மு.க-வினரால் கொண்டாடப்படும் செல்வி. ஜெ.ஜெயலலிதா உயிரிழந்தது அ.தி.மு.க. தொண்டர்களுக்கு நிச்சயம் ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.