Sunday 7 February 2016

அமெரிக்காவை பின்னுக்கு தள்ளியது இந்தியா!

அமெரிக்காவை பின்னுக்கு தள்ளியது இந்தியா!




உலக சந்தையில் ஸ்மார்ட்போன் விற்பனையில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளியது இந்தியா
புதுடெல்லி: உலக சந்தையில் ஸ்மார்ட்போன் விற்பனையில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி இந்தியா இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் ஸ்மார்ட்போன் பரிவர்த்தனை 23.3 சதவீதமாக உயர்ந்து 2015ம் ஆண்டில் மட்டும் சுமார் 100 மில்லியன்
ஸ்மார்ட்போன்கள் விற்பனை ஆகியுள்ளது. இது கடந்த ஆண்டை விட அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த 2014ம் ஆண்டு மட்டும் சுமார் 81.1 மில்லியன் ஸ்மார்ட்போன்கள் விற்கபட்டதாக கவுன்டர்பாயின்ட் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. தற்போது இந்தியாவில் சுமார் 220 மில்லியன் ஸ்மாரட்போன் பயனாளர்கள் இருக்கின்றனர். டிசம்பர் 2015ம் ஆண்டின் காலாண்டு வாக்கில் ஸ்மார்ட்போன் சந்தையில் 28.
6 சதவீத பங்குகளுடன் சாம்சங் நிறுவனம் முதலிடம் பிடித்திருந்தது.இதனை தொடர்ந்து 14.3% பங்குகளுடன் மைக்ரோமேக்ஸ், 11.4% பங்குகளுடன் லெனோவோ நிறுவனமும், 9.6% பங்குகளுடன் இன்டெக்ஸ் நிறுவனமும், 6.8% பங்குகளுடன் லாவா நிறுவனமும் அடுத்தடுத்த இடங்களை பிடித்திருக்கின்றன. இதுவே ஸ்மார்ட்போன் மற்றும் மொபைல் போன்களை வைத்து பார்க்கும் போது மொத்த சந்தையில் சாம்சங் நிறுவனம் மீண்டும் முதலிடம் பிடித்திருக்கின்றது.இதனை தொடர்ந்து மைக்ரோமேக்ஸ், இன்டெக்ஸ், லாவா மற்றும் லெனோவோ நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்திருக்கின்றன. இந்தியாவிலேயே தயாரித்து ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்தால் நமது பொருளாதாரம் உயரும். ஆனால் தற்போது வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட செல்போன்கள் தான் அதிகம் விற்பனை ஆகின்றன.

No comments:

Post a Comment