Sunday, 28 February 2016

EMIS -அறிவுரைகள்

EMIS -அறிவுரைகள்

 

*.EMIS update all schools.முதல் வகுப்பு மாணவர்களை பதிவேற்றம் செய்யலாம்.

*.முதலில் நாம் செய்ய வேண்டியது நம்மிடம் படித்து ஜூன்-2015 க்கு பிறகுTC வாங்கி சென்ற மாணவர்களை transfer செய்ய வேண்டும்.

*.Transfer செய்வதற்கு முன் மாணவனின் admission no, date of TC issued கண்டிப்பாக வைத்து கொள்ள வேண்டும்.

*.பின் வெளி பள்ளிகளில் இருந்து நம் பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களை common pool லிருந்து நம் பள்ளிக்கு கொண்டு வந்து சரியான வகுப்பில் சேர்த்து கொள்ள வேண்டும்.

*.Common pool என்பது Transfer செய்யப்பட்ட மாணவர்கள் அனைவரும் இதில் இருப்பார்கள். அதிலிருந்து தான் நம் பள்ளிக்கு கொண்டு வர வேண்டும்.

*.இதெல்லாம் முடித்த பிறகே முதல் வகுப்பு மாணவர்களின் பதிவை மேற்கொள்ளலாம்.

*.ஏனென்றால் முதல் வகுப்பு மாணவனின் விவரங்கள்(blood group, height,weight போன்ற 43 விவரங்கள் திரட்டுவதற்கு ஓரிரு நாட்கள் ஆகும்)அனைத்தும் விடுபடாமல் இருந்தால் மட்டுமே save செய்ய முடியும்.

*.முதலில் நாம் transfer மற்றும் உள்ளீடு செய்வோம்.

புதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் அரசாணை வெளியீடு

புதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் அரசாணை வெளியீடு

 

          வேடசந்துார், புதிய ஓய்வு ஊதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் வழங்க, அரசாணை வெளியிட்டுள்ளதால் நீண்டகால பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது.

 

         1.4.2003க்கு பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. அதற்காக ஊழியர்களின் சம்பளத்தில் மாதம் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டது.

 

 

திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு 12 ஆண்டுகள் ஆனபின்பும் இதில் சேர்ந்த யாராலும் ஓய்வூதியம் பெற முடியவில்லை. ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்ட நிலையில் சிலர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். ஆசிரியர், அரசு ஊழியர்கள் பல ஆண்டுகளாக தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த பிப்.,19அன்று, தமிழக முதல்வர், சட்டமன்றத்தில் விதி எண் 110-ன் கீழ், புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்து,

ஓய்வு பெற்ற மற்றும்ராஜினாமா செய்த, மரணம் அடைந்த, பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு தொகை உடனடியாக வழங்கப்படும் என அறிவித்தார்.

இதனை தொடர்ந்து, பிப்.,22ல்

அன்று தமிழக அரசின் நிதித்துறை சார்பில், அரசாணை எண்-59 வெளியிடப்பட்டுள்ளது.

இத்தொகையை பெற, கணக்கு மற்றும் கருவூலத்துறை இயக்குநர் அலுவலகத்தில், விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் கிடைத்த ஒரு மாத காலத்திற்குள் தொகையை வழங்க திட்டமிட்டுள்ளது. அதற்கான கணக்கு தலைப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த தொகை அனைத்தும் மின் பரிவர்த்தனை மூலம் சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவால் கடந்த பல ஆண்டுகளாக நீடித்த இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

புதிய ஓய்வூதிய திட்டத்தை எதிர்த்து உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்த திண்டுக்கல் பிரடெரிக் ஏங்கல்ஸ் கூறியதாவது இந்த அரசாணையால், ஓய்வூதியம் குறித்த சர்ச்சைக்கு தற்காலிக தீர்வு மட்டுமே கிடைத்துள்ளது. நிரந்தர தீர்வு வேண்டுமெனில்

தமிழக முதல்வர் ஏற்கனவே அறிவித்தவாறு புதிய ஓய்வூதிய திட்டத்தை

ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தையே நடைமுறைப்படுத்த வேண்டும், என்றார்.

Sunday, 7 February 2016

பிப்ரவரி மாத CRC கூட்ட நாட்கள்- வகுப்பறையில் பயிற்சிகளின் தாக்கம் ��தொடக்க நிலை : 20.02.2016 ��உயர்தொடக்கநிலை : 27.02.2016 ��SSA SPD proceedings 1108/a11/trg/2015 DT.5.2.2016!

பிப்ரவரி மாத CRC கூட்ட நாட்கள்- வகுப்பறையில் பயிற்சிகளின் தாக்கம் ��தொடக்க நிலை : 20.02.2016 ��உயர்தொடக்கநிலை : 27.02.2016 ��SSA SPD proceedings 1108/a11/trg/2015 DT.5.2.2016!

 

 

2015-16 Year New Primary School List 2015-16 ஆம் கல்வி ஆண்டில் புதிய தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்படும் குடியிருப்பின் பெயர் பட்டியல் வெளியீடு!

2015-16 Year New Primary School List 2015-16 ஆம் கல்வி ஆண்டில் புதிய தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்படும் குடியிருப்பின் பெயர் பட்டியல் வெளியீடு!

 

 

அமெரிக்காவை பின்னுக்கு தள்ளியது இந்தியா!

அமெரிக்காவை பின்னுக்கு தள்ளியது இந்தியா!




உலக சந்தையில் ஸ்மார்ட்போன் விற்பனையில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளியது இந்தியா
புதுடெல்லி: உலக சந்தையில் ஸ்மார்ட்போன் விற்பனையில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி இந்தியா இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் ஸ்மார்ட்போன் பரிவர்த்தனை 23.3 சதவீதமாக உயர்ந்து 2015ம் ஆண்டில் மட்டும் சுமார் 100 மில்லியன்
ஸ்மார்ட்போன்கள் விற்பனை ஆகியுள்ளது. இது கடந்த ஆண்டை விட அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த 2014ம் ஆண்டு மட்டும் சுமார் 81.1 மில்லியன் ஸ்மார்ட்போன்கள் விற்கபட்டதாக கவுன்டர்பாயின்ட் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. தற்போது இந்தியாவில் சுமார் 220 மில்லியன் ஸ்மாரட்போன் பயனாளர்கள் இருக்கின்றனர். டிசம்பர் 2015ம் ஆண்டின் காலாண்டு வாக்கில் ஸ்மார்ட்போன் சந்தையில் 28.
6 சதவீத பங்குகளுடன் சாம்சங் நிறுவனம் முதலிடம் பிடித்திருந்தது.இதனை தொடர்ந்து 14.3% பங்குகளுடன் மைக்ரோமேக்ஸ், 11.4% பங்குகளுடன் லெனோவோ நிறுவனமும், 9.6% பங்குகளுடன் இன்டெக்ஸ் நிறுவனமும், 6.8% பங்குகளுடன் லாவா நிறுவனமும் அடுத்தடுத்த இடங்களை பிடித்திருக்கின்றன. இதுவே ஸ்மார்ட்போன் மற்றும் மொபைல் போன்களை வைத்து பார்க்கும் போது மொத்த சந்தையில் சாம்சங் நிறுவனம் மீண்டும் முதலிடம் பிடித்திருக்கின்றது.இதனை தொடர்ந்து மைக்ரோமேக்ஸ், இன்டெக்ஸ், லாவா மற்றும் லெனோவோ நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்திருக்கின்றன. இந்தியாவிலேயே தயாரித்து ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்தால் நமது பொருளாதாரம் உயரும். ஆனால் தற்போது வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட செல்போன்கள் தான் அதிகம் விற்பனை ஆகின்றன.

அறிந்து கொள்வோம்.....ஆயிரம் !

அறிந்து கொள்வோம்.....ஆயிரம் !




அறிந்து கொள்வோம்.....
* மலைப்பாம்பு இறகு, முடி தவிர மற்ற அனைத்தையும் ஜீரணித்து விடுமாம்.

* 200 கோடி பேருக்கு ஒருவர்தான் 116 வயதைக் கடந்து வாழ்கிறார்களாம்.

* நத்தைகள் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் வரை தூங்கக் கூடியதாம்.


* மானின் கொம்புகள் ஆண்டுக்கு ஒருமுறை விழுந்து முளைக்கிறது.

* நாய் மகிழ்ச்சியில் வால் ஆட்டும். பூனையோ கோபம் வந்தால்தான் வாலை ஆட்டுமாம்.

* நீர் யானைக்குக் கோபம் வந்தால் கொட்டாவி விடும்.

* ஆமையின் மூளையை எடுத்து விட்டாலும் அது உயிருடன் இருக்குமாம்.

* வண்ணத்துப் பூச்சிகள் தன் பின்னங்கால்களால்தான் சுவையை அறிகின்றன.

* மனிதனுக்கு இணையான அறிவாற்றல் டால்பினுக்கு உண்டு.

* கோழி முட்டையின் ஓட்டில் சுவாசிப்பதற்கு எட்டாயிரம் நுண் துளைகள் இருக்கின்றன.

* ஆந்தையால் ஒரே நேரத்தில் இரு கண்களாலும் இருவேறு காட்சிகளைக் காண முடியும்.

* பெண் சிலந்திப் பூச்சிகள் ஆண் சிலந்தியுடனான உறவுக்குப் பின் அதைக் கொன்று விடுகின்றன.

* நண்டுகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சட்டையை (மேல்தோல்) உரிக்கின்றன.

* ஒரு ஜோடி எலி ஒரே ஆண்டில் 800 குட்டிகள் வரை போட்டு விடுமாம்.

* ஒரு பட்டுப்புழுவின் கூட்டில் 32 ஆயிரத்து 500 கெஜம் நூல் இருக்குமாம்.

* ஒரு சிலந்தி ஒரு மணி நேரத்தில் சுமார் 450 அடி நீளம் கொண்ட வலையைப் பின்னுகிறது.

* புழுவை இரண்டாகத் துண்டித்துப் போட்டாலும் அது சாகாது.

* சூரியனுடைய ஒளியில் முப்பதினாயிரத்தில் ஒரு பகுதிதான் சந்திரனின் ஒளி.

* நம் நாட்டில் மட்டுமல்ல, சீனாவிலும் விதவைகளுக்கு வெள்ளை உடை தான்.

* ஒவ்வொரு வகை சிலந்தியும் ஒவ்வொரு வகை வலை பின்னும்.

* வித்தைகாட்ட பயன்படும் குரங்குக்கு 'பரட்டைத் தலை குரங்கு' என்று பெயர்.

* ஒரு யுகம் என்பது 43, 20, 000 ஆண்டுகளாகும்.

* வளர்பிறை கோடுகள் மேல் நோக்கியும், தேய்பிறை கோடுகள் கீழ்நோக்கியும் இருக்கும்.

* கண்ணீர்புகை குண்டு, குதிரைக்கு எவ்வித விளைவையும் ஏற்படுத்தாது.

* கிறிஸ்தவர்களின் "போப் ஆண்டவர்" மூன்று மகுடங்களை அணிந்திருப்பார்.

* எலிக்கும், முயலுக்கும் பற்கள் வளர்ந்துகொண்டே இருக்கும்.

* "O" குரூப் ரத்தம் உடையவர்களை 'யுனிவர்சல் டோனர்' என்பர்.

* பாகிஸ்தான் - சீனா நாடுகளுக்கு இடையே உள்ள மலைத்தொடர் 'காரகோரம்'.

* அதி உயர விமானப் போர்ப் பயிற்சிப் பள்ளி காஷ்மீர் மாநிலம் 'குல்மார்க்'-ல் உள்ளது.

* நெப்போலியன் - 'Man of Destiney" என்று அழைக்கப்படுவார்.

* குருவியின் கழுத்திலுள்ள எழும்புகள் 23.

* வரிக்குதிரையின் ஆயுட்காலம் 22 வருடங்கள்

* அணிலின் ஆயுட்காலம் 82 வருடங்கள்.

* செம்மறி ஆட்டின் ஆயுட்காலம் 16 வருடங்கள்.

* சிம்பன்சியின் ஆயுட்காலம் 41 வருடங்கள்.

* பெருங்கரடியின் ஆயுட்காலம் 20 வருடங்கள்.

* தீக்கோழியின் ஆயுட்காலம் 50 வருடங்கள்.

* பென்குயினின் ஆயுட்காலம் 22 வருடங்கள்.

* திமிங்கிலத்தின் ஆயுட்காலம் 30 முதல் 40 வருடங்கள்

* கடலாமையின் ஆயுட்காலம் 200 வருடங்கள்

* மூக்கில் பல் உள்ள விலங்கு முதலை.

* பாலைவனக்கப்பல் என அழைக்கப்படும் விலங்கு ஒட்டகம்

* ஈருடகவாழிகள் ஆமை, தவளை, முதளை

* பறக்க முடியாத பறவைகள் கிவி, ஏமு,பெஸ்பரோ, தீக்கோழி, பென் குயின்

* தோலில் நச்சுச் சுரப்பிகள் உள்ள விலங்கு தேரை

தகுதி தேர்வை பூர்த்தி செய்யாவிட்டாலும் சிறுபான்மையினர் பள்ளி ஆசிரியருக்கு, சம்பளம் வழங்க வேண்டும்!

தகுதி தேர்வை பூர்த்தி செய்யாவிட்டாலும் சிறுபான்மையினர் பள்ளி ஆசிரியருக்கு, சம்பளம் வழங்க வேண்டும்!




'தகுதித் தேர்வை பூர்த்தி செய்யாவிட்டாலும், உச்சநீதிமன்ற வழக்குமுடிவுக்கு வரும்வரை, சிறுபான்மையினர் பள்ளி ஆசிரியருக்கு, சம்பளம் வழங்க வேண்டும்,' என, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.


துாத்துக்குடி மேலதட்டப்பாறையில் அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் டி.என்.டி.டி.ஏ., துவக்கப் பள்ளி உள்ளது. இடைநிலை ஆசிரியராக 2012 ஆக.,2 ல் எஸ்தர் நியமிக்கப்பட்டார். இதை
அங்கீகரிக்கக் கோரி கல்வித்துறைக்கு, பள்ளி நிர்வாகம் விண்ணப்பித்தது.

'ஆசிரியர் தகுதித் தேர்வில் எஸ்தர் தேர்ச்சி பெறாததால், நியமனத்திற்கு ஒப்புதல் அளிக்க முடியாது,' என கல்வி அதிகாரிகள் நிராகரித்தனர். எஸ்தர் மற்றும் பள்ளி தாளாளர், 'பணி நியமனத்தை தற்காலிகமாக அங்கீகரித்து, சம்பளம் வழங்க உத்தரவிட வேண்டும்,' என உயர்நீதிமன்றத்தில் மனு செய்தனர். இதை அனுமதித்து ஜன.,4 ல் தனிநீதிபதி உத்தரவிட்டார். இதை எதிர்த்து தமிழக பள்ளிக் கல்வித்துறை செயலர், துவக்கக் கல்வி இயக்குனர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுதகுதித் தேர்வை, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் தகுதியாக நிர்ணயித்துள்ளது. இதில் அரசு தலையிட முடியாது. சிறுபான்மையினர் பள்ளி, சிறுபான்மையினர் அல்லாத பள்ளி என கல்வித்தகுதியை வேறுபடுத்தி பார்க்க முடியாது. தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டனர்.நீதிபதிகள் சதீஷ் கே.அக்னி கோத்ரி, எஸ்.மணிக்குமார் கொண்ட அமர்வு விசாரித்தது. அரசு சிறப்பு வழக்கறிஞர் சண்முகநாதன், பள்ளி நிர்வாகம் சார்பில் வழக்கறிஞர் ஐசக்மோகன்லால் ஆஜராயினர்.

நீதிபதிகள் :

'இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது,' என அரசு வழக்கறிஞர் கூறுகிறார். அது முடிவுக்கு வரும்வரை, பணியாற்றும் காலத்திற்குரிய சம்பளத்தை, ஆசிரியருக்கு வழங்க வேண்டும். பணியை விட்டு நீக்கக்கூடாது. பணியில் தொடர்வது என்பது, உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பிற்கு கட்டுப்பட்டது என்றனர். இதுபோல் தாக்கலான பல்வேறு வழக்குகளில் மனுதாரர், எதிர்மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பநீதிபதிகள் உத்தரவிட்டனர்

Saturday, 6 February 2016

அரசு பள்ளியில்ஆங்கிலத்தில், அசத்தும் வகையில், வகுப்பறைகளில், வண்ண ஓவியங்களை வரைந்து, கற்பித்தல்!

அரசு பள்ளியில்ஆங்கிலத்தில், அசத்தும் வகையில், வகுப்பறைகளில், வண்ண ஓவியங்களை வரைந்து, கற்பித்தல்!




அரசுப்பள்ளி மாணவர்கள், ஆங்கிலத்தில், அசத்தும் வகையில், வகுப்பறைகளில், வண்ண ஓவியங்களை வரைந்து, கற்பித்தல் திறனை ஊக்குவிக்கும் புது திட்டம் கல்வித்துறையால், செயல்படுத்தப்பட்டுள்ளது.
மேகத்தில் மிதப்பது, நிலாவை பிடிப்பது என குழந்தைகளின் உலகம் என்றுமே,
கற்பனை வளமும், வண்ணமயமான காட்சிகள் நிறைந்ததாகவே இருக்கும். ஆனால், பள்ளிக்குள் நுழைந்ததும், அவர்களின் உலகத்தை விட்டு வெளியேற்றி, தங்களுக்கான சூழலை இழப்பதாக கருதுகின்றனர் இன்றைய பள்ளி குழந்தைகள். கல்வி முறையில் மாற்றம் ஏற்பட்டாலும், அதை கற்பிக்கும் விதத்தில் புதுமையை எதிர்பார்க்கும் குழந்தைகளுக்கு ஏமாற்றமே.
புத்தகங்களில், பார்க்கும் வண்ண ஓவியங்களை, தங்களின் கற்பனை களத்தின் காட்சிகளாக படைப்பதற்குள், 'மெல்லக் கற்கும் குழந்தைகள்' என பலரும் முத்திரை குத்தப்படுகின்றனர். இன்னல்களுக்கிடையே, பிடித்த முறையில் பாடம் கற்க முடியாமல், படித்த பாடத்தையும் புரிந்துகொள்ள அவகாசம் அழிக்கப்படாத நிலையில்லாத கல்வி முறையில், மாற்றமாகவே வந்துள்ளது, வகுப்பறைகளில், வண்ண சுவர் சித்திரங்களை வரைதல் மூலமாக பாடம் நடத்தும் முறை.
தமிழ், ஆங்கிலம் உச்சரிப்பு பிரச்னை

தற்போது செயல்பட்டுக்கொண்டிருக்கும் 'ஆல்பாஸ்' கல்வி முறையால், அரசு பள்ளி குழந்தைகளை வாட்டி வதைக்கும் இன்றைய பிரச்னையாக இருப்பது, தமிழ் மற்றும் ஆங்கிலம் உச்சரிப்புகள் தான். குழந்தைகளின் கற்பனை வளத்தை மேம்படுத்தும் 'படம் பார்த்து கதை வழக்கத்தை மீண்டும் குழந்தைகளிடையே கொண்டுவரும் முயற்சியாக இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக, மாநிலம் முழுவதும் முப்பது மாவட்டங்களில், குறிப்பிட்ட துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் இத்திட்டத்தை செயல்படுத்த தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. சிறந்த கட்டட வசதி, மாணவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ள பள்ளிகள், இப்பட்டியலில் இடம்
பெற்றுள்ளன.

7. வது ஊதியக்குழு ஊதியத்தை ஏப்ரல் 1–ந்தேதி பெறலாம்!!!

7. வது ஊதியக்குழு ஊதியத்தை ஏப்ரல் 1–ந்தேதி பெறலாம்!!!




மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.55 சதவீத சம்பள உயர்வு வழங்க 7–வது சம்பள கமிஷன்பரிந்துரை செய்துள்ளதை மத்திய அரசு அப்படியே ஏற்க முடிவு செய்துள்ளது.நாடு முழுவதும் 47 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பணிபுரிகிறார்கள்.


இது தவிர 52 லட்சம் ஓய்வூதியதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள விகிதம்சீரமைக்கப்படும்.


மத்தியில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்ததும் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை விலைவாசி உயர்வுக்கு ஏற்ப சீரமைக்க 7–வது சம்பள கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த கமிஷன், மாநில அரசுகள் மற்றும் பல்வேறு அரசு ஊழியர் சங்கங்கள், தொழிற்சங்கங்களுடன் ஆலோசனை நடத்தியது.பின்னர் தனது பரிந்துரைகளை அறிக்கையாக தயார் செய்து மத்திய அரசிடம் அளித்தது.இதில் பல்வேறு முரண்பாடுகள்இருப்பதாகவும், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கும், மற்ற அதிகாரிகளுக்கும் சம்பள விகிதத்தில் மிகப்பெரிய வித்தியாசம் இருப்பதாகவும் அதிருப்தி எழுந்தது. போக்குவரத்து அலவன்ஸ் உயர்த்தப்படவில்லை என்றும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து 7–வது சம்பள கமிஷன் சிபாரிசுகளை ஆராயவும் முரண்பாடுகளை சரி செய்யவும் மத்திய அரசின் கேமினட் செயலாளர் பி.கே.சின்கா தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இதில் 42 அரசுத்துறை செயலாளர்களுக்கு இடம் பெற்று இருந்தனர்.

இந்த குழு சம்பள கமிஷன் பரிந்துரைகளில் உள்ள முரண்பாடுகள் பற்றி பல்வேறு தரப்பிடம் கருத்து கேட்டது. விரைவில் இதற்கு இறுதி வடிவம் கொடுத்து மத்திய மந்திரிசபையின் ஒப்புதல் பெறப்படும். அதன் பிறகு அமலுக்கு வரும்.7–வது சம்பள கமிஷன் சிபாரிசுகளை அமல்படுத்துவதில் பிரதமர் மோடி அதிக ஆர்வம் காட்டி வருகிறார். வருகிற மத்திய பட்ஜெட்டில்சம்பள கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதற்கான பணிகளில் நிதிமந்திரி அருண்ஜெட்லி கவனம் செலுத்தி வருகிறார்.7–வது சம்பள கமிஷன் பரிந்துரைகளில் எந்தவித மாற்றமும் செய்யாமல் அப்படியே அமல்படுத்தவும் பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்து வருகிறார்.

மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்ததும் மத்திய அரசுஊழியர்களுக்கு சம்பள உயர்வு அமலுக்கு வரும்.மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.55 சதவீத சம்பள உயர்வு வழங்க சம்பள கமிஷன் சிபாரிசு செய்துள்ளது. பல்வேறு அலவன்சுகளும் உயர்த்தப்பட்டுள்ளது.மேலும் மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.18,000 ஆகவும் அதிகபட்ச சம்பளம் ரூ.2.55 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஊழியர்கள் ஓய்வு பெறும்போது வழங்கப்படும் பணிக்கொடை உச்ச வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாகஉயர்த்தப்பட்டுள்ளது.இந்த சம்பள உயர்வை ஜனவரி 1–ந்தேதியிட்டு வழங்கவும் அரசு முடிவு செய்துள்ளது.மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்து அறிவிப்புவெளியானதும் ஏப்ரல் 1–ந்தேதி முதல் சம்பள உயர்வை பெறலாம்

தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களுக்கு, அரசு பொது விடுமுறை!

தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களுக்கு, அரசு பொது விடுமுறை!




மகாமக பெருவிழாவையொட்டி, பிப்., 22ல், மூன்று மாவட்டங்களுக்கு, அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.மாசி மாதம், குரு, சிம்ம ராசியில் இருக்கும் போது, மகம் நட்சத்திரமும், பூராட நட்சத்திரமும், பொருந்தி வரும் காலம், மகாமகம் ஆகும். இந்நிகழ்வு, 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருகிறது.



அன்று, நதிகளில் புனித நீராடல் நடத்துவது சிறப்பு.கும்பகோணத்தில் மட்டும், புனித நீராடல் என்பது, மகாமக குளத்தில் நீராடுவதை குறிக்கும்.இந்த ஆண்டு மகாமகப் பெருவிழா, பிப்., 22ல் நடைபெறுகிறது.

அன்றைய தினம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களுக்கு, அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம், மூன்று மாவட்டங்களில் உள்ள, வங்கிகள், தனியார் தொழிற்சாலைகள்,கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்படும் என அரசு அறிவித்துள்ளது.இதற்கான அரசாணை, நேற்று பிறப்பிக்கப்பட்டது.

2016 - 17 SSA TRAINING Primary & upper primary !!!

2016 - 17 SSA TRAINING Primary & upper primary !!!




Primary – CRC: 10 Days
• Strengthening of SABL - 2 Days (1st Term – 1 day, 2nd Term – 1 day)
• Discussion on Children Achievement – 1 Day

a) Achievement Test
b) District initiatives
c) Grading of schools
d) Periodical Assessments


• Discussion on Impact of Trainings – 1 Day
• Conservation of Eco-system and Health and Hygiene – 1 Day
• Peace and Value Education & Puppetry and Storytelling – 1 Day
• Developing Hand writing Practice and Drawing skills - 1 Day
• Physical Education linked with CCE & Significance of Road Signs - 1 Day
• Effective Usage of Multimedia in classroom - 1 Day
• Inculcation of Positive Attitudes with Inspirational Activities- 1 Day
5.2) Upper primary – CRC :10 Days
• Discussion on Impact of Trainings- 1 Day
• Discussion on Children Achievement – 1 Day
a) Achievement Test
b) District initiatives
c) Grading of schools
d) Periodical Assessments
• Adolescence and Stress Management- 1 Day
• Developing Hand writing Practice and Drawing skills - 1 Day
• Promoting Ethics and Moral Values- 1 Day
• Workshop on TLM Preparation- 1 Day
• CCE in ALM- 1 Day
• Conservation of Eco-system and Health and Hygiene – 1 Day
• Preparation for Competitive examination - 2 Days

5.3) BRC – Primary :10 Days
• Enriching LSRW Skills in Tamil – 2 days
• Enhancing LSRW Skills in English - 4 days
• Mental arithmetic Skills and SLM Kit box- 2days
• Utilization of local environment resources in Science Teaching – 2 days

5.4) BRC – Upper Primary :10 Days
• Teaching of English Phonetics and Grammar – 2 days
• Building Maths Aptitude and usage of Maths kit – 3 days
• Utilization of local environment resources in Science Teaching - 3 days
• Understanding of History through mapping skills – 1 day

• Teaching of Tamil Grammar – 1 day

அரசு ஊழியர்கள் நீண்ட விடுப்பில் இருந்தால், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை !

அரசு ஊழியர்கள் நீண்ட விடுப்பில் இருந்தால், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை !




தமிழக அரசின் பணியாளர் நிர்வாக சீர்திருத்தத் துறை செயலர் டேவிதார், அனைத்து துறை செயலர்கள் மற்றும் துறை தலைவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதம்:அரசு ஊழியர்கள் பணி செய்யாமல், அனுமதிக்கப்பட்ட விடுப்பு நாள் முடிந்த பின்னும், நீண்ட விடுப்பில் இருந்தால், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பணியை, ஒழுங்கு நடவடிக்கை குழு விரைவாக மேற்கொள்ள வேண்டும்.



ஒழுங்கு நடவடிக்கை குழு நடவடிக்கை எடுக்கும் முன், சம்பந்தப்பட்ட ஊழியர் பணியில் சேர விரும்பினால், அவரை அனுமதிக்கலாம்.ஆனால், ஒழுங்கு நடவடிக்கை தொடர்பானவிவரம், அரசுக்கு வர காலதாமதமாகிறது. உதாரணமாக, 1986ல் முறையாக பணிக்கு வராதவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி, 2015ல் அரசுக்கு பரிந்துரை வந்துள்ளது. அந்த நபரோ, 2000ல் ஓய்வு பெற்றுவிட்டார். இது போன்ற தவறுகளை தடுக்க, விடுப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். இவ்வாறு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சலுகைகளும் ரத்தாகும்

* அரசு ஊழியர்கள், அவர்களுக்கான விடுப்பு மற்றும் விடுப்பு எடுப்பதற்கான விதிமுறைகளைஅறிந்திருக்க வேண்டும்
* அரசு ஊழியர்கள், அனுமதிக்கப்பட்ட விடுப்பை எடுக்க விண்ணப்பித்தால், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், தாமதமின்றி அனுமதி வழங்க வேண்டும்
* அரசு ஊழியர்கள் அனுமதிக்கப்பட்டவிடுப்பு முடிந்த பின்னும், விடுப்பு எடுத்தால், அந்த நாளுக்குரிய சம்பளம் மற்றும் சலுகைகள் ரத்து செய்யப்படும்
* விடுப்பு அளிப்பது, அனுமதிப்பது தொடர்பாக சந்தேகம் என்றால், தாமதமின்றி, அரசுநிர்வாகத் துறையை தொடர்பு கொள்ள வேண்டும்
* முன் அனுமதியின்றி, அரசு ஊழியர்கள் அதிக நாள் விடுப்பு எடுத்தால், உடனடியாக, அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும்
* அரசு ஊழியர் ஓய்வு பெறுவதற்கு முன், அவர் எடுத்துள்ளவிடுப்பு மற்றும் எடுக்காத விடுப்பு விவரங்களை, அரசுக்கு உடனடியாக தெரியப்படுத்த வேண்டும்
* அரசு ஊழியர்கள் பயிற்சி காலத்தில், மருத்துவ காரணங்களுக்காக, விடுப்பு எடுக்க அனுமதி கோரினால், 60நாட்கள் வரை விடுப்பு வழங்கலாம்.


ஊழல் புகார் வந்தால், அரசு அனுமதி பெற்ற பிறகே, லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்த வேண்டும்' !

ஊழல் புகார் வந்தால், அரசு அனுமதி பெற்ற பிறகே, லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்த வேண்டும்' !

 


அரசு ஊழியர்கள் மீது லஞ்சம் மற்றும் ஊழல் புகார் வந்தால், அரசு அனுமதி பெற்ற பிறகே, லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்த வேண்டும்' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மீது, லஞ்சம் மற்றும் ஊழல் புகார் வந்தால், அரசு அனுமதி பெற்ற பிறகே, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர்.

 

ஆனால், பிற அரசுஊழியர்கள் மீது, புகார் வந்ததும், அரசு அனுமதியின்றி, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக, சிலர், உச்ச நீதிமன்றம் மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில், பொது நல வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில், நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளின் அடிப்படையில், தமிழக அரசு, நேற்று முன்தினம், புதிய அரசாணை பிறப்பித்து உள்ளது.அதில் கூறியுள்ளதாவது:அரசு ஊழியர்கள் யார் மீதேனும், லஞ்சம் மற்றும் ஊழல் புகார் வந்தால், லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் எதிர்ப்புஇயக்குனரகம், புகாரை லஞ்ச ஒழிப்பு கமிஷனுக்கு அனுப்ப வேண்டும்.கமிஷன், புகார் பதிவு செய்ய, அரசிடம் அனுமதி பெற வேண்டும்.

அனுமதி கிடைத்த பின், லஞ்ச ஒழிப்பு மற்றும்ஊழல் எதிர்ப்பு இயக்குனரகம், விசாரணை நடத்தலாம். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.ஏற்கனவே, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க மட்டுமே, அரசிடம் அனுமதி பெற வேண்டும் என இருந்தது. இப்போது, அரசு ஊழியர்கள் மீதும் வழக்கு தொடர அனுமதி பெற வேண்டும் என, புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது

CPS ல் இதுவரைரூ.8,500 கோடி ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது! பணம் எங்கே???

CPS ல் இதுவரைரூ.8,500 கோடி ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது! பணம் எங்கே???

 


தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு பென்ஷன் வழங்க, ரூ.8,500 கோடி ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது என, அரசு தகவல் தொகுப்பு மையம் தகவல் தெரிவித்து உள்ளது.இந்தியாவில் அரசு ஊழியர்களின் பென்ஷன் திட்டத்தை நிறுத்திவிட்டு, 1.4.2003 முதல் பணியில் சேருபவர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

 

இத்திட்டத்தில் பணம் பிடித்தம் செய்யப்பட்டவர்களுக்கு, ஓய்வுக்கு பின்போ அல்லது பணியில் இருந்தபோது மரணமடைந்தோருக்கோ அரசு ஒரு பைசா கூட ஓய்வூதியமாக வழங்கவில்லை. இதனால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப் பட்டு பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது.இதையடுத்து டில்லியில் உள்ள ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்திடம் சிலர், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டபோது, 'தமிழக அரசு பிடித்தம் செய்த தொகையில் இருந்து, ஒரு பைசாகூட ஆணையத்திடம் செலுத்தவில்லை என்ற தகவல் வெளியானது.

தற்போது திண்டுக்கல்லை சேர்ந்த ஏங்கல்ஸ் என்பவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், புதிய ஓய்வூதியதிட்டத்தின்கீழ் இன்றுவரை சேர்ந்துள்ள பணியாளர்களின் எண்ணிக்கை, அவர்களிடம் பிடித்தம் செய்த தொகை, அவர்களுக்காக அரசு செலுத்திய தொகை, அரசு செலுத்திய வட்டி தொகை என, ஐந்து கேள்விகளை கேட்டுள்ளார்.அதற்கு பதில் அளத்த அரசு தகவல் தொகுப்பு மையம், தமிழகஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் இருந்து, இதுவரை 3 ஆயிரத்து 791 கோடியே 35 லட்சத்து 2 ஆயிரத்து 80 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. அதே தொகை அரசு சார்பில் பங்களிப்பு தொகையாக வழங்கப்பட்டுள்ளது. இந்த தொகைக்கு ரூ.8கோடியே 30லட்சத்து, 53 ஆயிரத்து 394 வட்டி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

ஏங்கல்ஸ் கூறியதாவது:
இதுவரை தமிழக அரசு சார்பில், 4 லட்சத்து 23 ஆயிரத்து 441 பேரிடம் இருந்து, ரூ.8 ஆயிரத்து 453 கோடியே 0057 ஆயிரத்து 544 ரூபாய் அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது என்கின்றனர். ஆனால், மதுரையை சேர்ந்த ஆசிரியை காமாட்சி என்பவரை தவிர (கோர்ட் மூலம் பணம் பெற்றவர்) வேறு யாரும் பென்ஷன் திட்டத்தில் பலன் பெறவில்லை. பிடித்தம் செய்யப்பட்ட இந்த நிதி எங்குள்ளது? ஊழியர்களுக்கான பென்ஷன் கிடைக்குமா? என்பது குறித்து, தமிழக அரசு வெளிப்படையான வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், என்றார்.

இரண்டு CPS கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு !!!

இரண்டு CPS கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு !!! 
 

 

மாநிலத்தின் கல்வித்தரம் வேதனை அளிக்கிறது !

மாநிலத்தின் கல்வித்தரம் வேதனை அளிக்கிறது !




மாநில அரசின் பாடத்திட்டம் மோசமாக உள்ளதாக மத்திய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுமம் கூறியுள்ளது வேதனை அளிக்கிறது என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.இதுகுறித்து, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-



மத்திய அரசிற்கும், மாநில அரசிற்கும் கல்வித்துறையில் நல்ல பல ஆலோசனைகளை வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட, மத்திய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுமம், சமீபத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பள்ளிக்கல்வித்துறை குறித்து மிகப்பெரிய ஆய்வை நடத்தி அதன் அறிக்கையை வெளியிட்டுள்ளது.அந்த அறிக்கையில் தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர்கள் ஆங்கிலம், கணக்கு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் தேர்ச்சி விகிதம் மிகவும் குறைவாக உள்ளதென்றும், தேர்ச்சி விகிதத்தில் இந்திய சராசரியைவிட தமிழ்நாட்டின் சராசரி மிகமிக குறைவாக உள்ளதென்றும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.மேலும், தமிழக மாணவ, மாணவியர்கள் ஆங்கில பாடத்தில் 2 சதவீதமும், கணித பாடத்தில் 4 சதவீதமும், அறிவியல் பாடத்தில் 2 சதவீதமும், சமூக அறிவியலில் 4 சதவீதமும்என மிகமிக குறைந்த எண்ணிக்கையிலேயே சரியான விடையை அளிக்கிறார்கள் எனவும் இவ்வறிக்கை தெரிவித்துள்ளது. மேலும் 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழில் பிழை இல்லாமல் வார்த்தைகளை எழுதுவதற்கு தெரியவில்லை என்றும், ஆங்கில எழுத்துக்களையே எழுத தெரியவில்லை என்றும் கல்வியாளர்கள் கூறுவது அதிர்ச்சியளிக்கிறது.மேலும் இந்த ஆய்வு அறிக்கையில் தமிழ்நாட்டில் சி.பி.எஸ்.இ. மற்றும் ஐ.சி.எஸ்.இ. பாடதிட்டங்களில் பள்ளிக்கல்வித்தரம் சிறப்பாக உள்ளதென்றும், மாநில அரசின் பாடதிட்டம்தான் மிகவும் மோசமாக உள்ளதென்று கூறியுள்ளது மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது.தமிழகத்தில் தற்போதுள்ள பாடத்திட்ட முறைகளே தொடர்ந்தால், தமிழக மாணவ, மாணவியரின் முழுத்திறமையும் வெளிப்படாது.

தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, தான் ஆட்சிக்கு வந்த பிறகு 10 மற்றும் பிளஸ்-2 வகுப்பில் தேர்ச்சி சதவீதம் அதிகம் என புள்ளிவிவரங்கள் அளிப்பதை விட்டுவிட்டு, விருப்பு வெறுப்பின்றி, அரசியல் காழ்புணர்ச்சியின்றி, சிறந்த கல்வியாளர்களும், சமூக சேவகர்களையும் கொண்ட குழுவை அமைத்து, அவர்கள் மூலம் உலக தரத்திற்கு இணையாகவும், தேசிய கல்வி திட்டத்திற்கு இணையாகவும் பாடங்களை உருவாக்கி, வருங்கால சந்ததிகளான இளைய சமுதாயத்தை அறிவுத்திறன் மிக்கவர்களாக உருவாக்க தமிழக அரசு முயற்சி எடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

தகுதிகாண் பருவத்தின் போது ,மருத்துவ விடுப்பு எடுத்தால் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்!

 

 

 

தகுதிகாண் பருவத்தின் போது ,மருத்துவ விடுப்பு எடுத்தால் பின்பற்ற வேண

5 நிமிடத்தில் ஆதார் கார்டில் உள்ள பிழைகளை திருத்த எளிய முறை!

 


5 நிமிடத்தில் ஆதார் கார்டில் உள்ள பிழைகளை திருத்த எளிய முறை!
ஆதார் கார்டில் பிழைகளை திருத்த எளிய முறை..!
ஆதார் கார்டில் பிழைகள் உள்ளதா?
நீங்களே ஆன்லைனில் Edit செய்திடுங்கள்!
5 நிமிடத்தில் மாற்றி கொள்ள வழி இதோ

இந்தியாவில் ஒரு சிலருக்கு ஆதார் கார்டு இந்திய அரசால் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த கார்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் முகவரி, மொபைல் எண் அல்லது மற்ற குறிப்புகளில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால், அந்த மாற்றத்தை ஆன்லைன் மூலம் அப்டேட் செய்ய முடியும்.
அதாவது மாற்றம் ஏற்பட்டிருக்கும் குறிப்புகளை ஆன்லைனில் அப்டேட் செய்யலாம். அல்லது அந்த குறிப்புகளை தபால் மூலம் அனுப்பலாம்.
ஆதார் கார்டில் உள்ள குறிப்புகளை ஆன்லைன் மூலம் எவ்வாறு மாற்றம் செய்வது?

1. ஆதார் கார்டுக்கான வெப்சைட்டுக்குள் சென்று லாகின் செய்ய வேண்டும்.

2. மாற்றம் செய்ய வேண்டிய குறிப்புகளை அந்த வெப்சைட்டில் அப்டேட் செய்ய வேண்டும்.

3. டாக்குமென்டுகளை அப்லோட் செய்ய வேண்டும்.
ஆதார் கார்டுக்கான வெப்சைட்டுக்குள் செல்வதற்கு முன் உங்களிடம் கண்டிப்பாக மொபைல் எண் இருக்க வேண்டும்.
ஏனெனில் வெப்சைட்டில் ரிஜிஸ்டர் செய்யும் போது அதற்கான பாஸ்வேர்ட் உங்கள் மொபைல் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இந்திய குடிமக்கள் தங்களுடைய பெயர், முகவரி, பாலினம், பிறந்த தேதி மற்றும் மொபைல் எண்கள் ஆகியவற்றை இந்த வெப்சைட்டில் அப்டேட் செய்யலாம்.


ஆன்லைனில் ஆதார் கார்டை அப்டேட் செய்ய தேவையான குறிப்புகள்:
1. ஆதார் கார்டு வெப்சைட்டைப் பயன்படுத்த வேண்டும் என்றால் கண்டிப்பாக நீங்கள் மொபைல் வைத்திருக்க வேண்டும்.

2. ஆதார் கார்டு வெப்சைட்டில் சேரும் போது, அந்த வெப்சைட்டில் உங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். பின் உங்கள் ஆதார் கார்டு எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். உடனே உங்கள் மொபைல் எண்ணிற்கு ஒன் டைம் பாஸ்வேர்ட் (ஒடிபி) அனுப்பி வைக்கப்படும்.

ஒருவேளை நீங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்யவில்லை என்றால், அந்த வெப்சைட்டில் ஆதார் கார்டு எண்ணைப் பதிவு செய்யவும். தற்போது மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.

அப்போதுதான் நீங்கள் ஒடிபி பெற முடியும். ஒருவேளை மொபைல் எண்ணைத் தவறவிட்டிருந்தால், உங்கள் அப்டேட்டைத் தபால் மூலம் தான் அனுப்பி வைக்க முடியும்.

3. ஒடிபி கிடைத்தவுடன் அதை வெப்சைட்டில் பதிவு செய்ய வேண்டும்.

4. எந்தந்த குறிப்புகளையெல்லாம் அப்டேட் செய்ய விரும்புகிறீர்களோ, அவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
5. தேர்ந்தெடுத்த குறிப்புகளை, ஆங்கிலம் மற்றும் தாய்மொழியில் அப்டேட் செய்யவும்.

அ. அப்டேட் செய்யப்படும் குறிப்புகளுக்கு தேவையான உறுதிச் சான்றிதழ்களை இணைக்க வேண்டும் என்று வெப்சைட்டில் குறிக்கப்பட்டிருந்தால், அதற்கான சான்றிதழ்களை அப்லோட் செய்ய வேண்டும்.
ஆ. பெயர் மாற்றத்தை அப்டேட் செய்தால், பெயர் மற்றும் உங்கள் தோற்றம் ஆகியவற்றிற்கான உறுதிச் சான்றதழ் மற்றும் உங்கள் புகைப்படம் ஆகியவற்றை அப்லோட் செய்ய வேண்டும்.

இ. பிறந்த தேதியை அப்டேட் செய்யும் போது அதற்கான உறுதிச் சான்றிதழையும் அப்லேட் செய்ய வேண்டும்.

6. முகவரியை அப்டேட் செய்யும் போது, புதிய முகவரிக்கான உறுதிச் சான்றிதழை அப்லோட் செய்ய வேண்டும்.

7. தேவையான உறுதிச் சான்றிதழ்களை ஆன்லைனில் அப்லோட் செய்ய முடியவில்லை என்றால் தபால் மூலம் அனுப்பி வைக்கலாம்
 நீங்களே ஆன்லைனில் Edit செய்திடுங்கள் –
http://uidai.gov.in/update-your-aadhaar-data.html