Thursday, 14 January 2016

தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு கல்வி கற்பித்தல் பயிற்சி!

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


அரசு தொடக்கப் பள்ளி மாணவ, மாணவியருக்கு உடற்கல்வி முறையில் கற்பிக்க ஆசிரியர் பயிற்றுநருக்கான சிறப்பு  பயிற்சி, மதுரையில் புதன்கிழமை நடைபெற்றது.

 அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5 வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு எளிதில் புரியும்படி கணிதம், அறிவியல்
உள்ளிட்ட பாடங்களைக் கற்பிக்க அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சித் திட்டம், அனைவருக்கும் கல்வித் திட்டம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.


அதன்படி, மதுரை மாவட்டத்தில் உள்ள உடற்கல்வி ஆசிரியர் மற்றும் வட்டார ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான பயிற்சி, ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.

இதில், 80 ஆசிரியர் பயிற்றுநர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு, சென்னையில் சிறப்புப் பயிற்சி பெற்றுள்ள உடற்கல்வி ஆசிரியர் டி. காட்வின் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

வட்டம், செவ்வகம், சதுர வடிவமாக மாணவரை நிற்கவைத்து அதன்மூலம் கணிதத்தை மனதில் பதியவைப்பது, பந்துகளை எரிந்தும், குறிப்பிட்ட எண்கள் மீது அதை தூக்கி வீசியும் புரியவைப்பது போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

இப்பயிற்சியை முடித்தவர்கள், அந்தந்த வட்டாரங்களில் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்க உள்ளதாகவும், அப்பயிற்சி வரும் 25ஆம் தேதியிலிருந்து தொடங்கும் என்றும், அனைவருக்கும் கல்வித் திட்ட உதவி அலுவலர் ஏ. மீனாட்சி தெரிவித்தார்.

No comments:

Post a Comment