தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்
ஏழாவது ஊதியக் கமிஷன் பரிந்துரையை செயல்படுத்த உயர்நிலைக் குழுவை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் 47 லட்சம் பேர், ஓய்வூதியதாரர்கள் 52 லட்சம்பேரின் ஊதியத்தை மாற்றியமைப்பதற்காக அமைக்கப்பட்ட 7வது ஊதியக் கமிஷன் தனது பரிந்துரைகளை மத்திய அரசிடம் தாக்கல் செய்தது.
இதன்படி, புதிய சம்பளம் இம்மாதம் 1ம் தேதி அமல்படுத்தப்பட வேண்டும். இதனால் இந்த நிதியாண்டில் மத்திய அரசுக்கு கூடுதலாக ரூ.1.02 லட்சம் கோடி செலவாகும். இதன் மூலம் ஏற்படும் நிதிப்பற்றாக்குறையை அரசு சமாளிக்கும் என நிதியமைச்சர் ஜெட்லி ஏற்கனவே கூறிவிட்டார். இந்நிலையில் 7வது ஊதிய கமிஷன் பரிந்துரை செயல்படுத்துவதற்கு, உயர்நிலைக் குழுவை அமைக்க மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.
No comments:
Post a Comment