Wednesday, 19 November 2014

3100ம் ஆண்டு வரை தேதிக்கு கிழமை சொல்லும் சிறுவன் : அதிசயிக்கின்றனர் பெற்றோர், ஆசிரியர்கள்

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


          கொளப்பாக்கத்தை சேர்ந்த சேசுராம் என்ற 10 வயது சிறுவன், மொத்தம், 1090 ஆண்டுகளில் ஏதாவது ஒரு தேதியை (3,97,850 நாட்கள்) கூறி, கிழமை கேட்டால், மறு நொடியே, சம்பந்தப்பட்ட தேதிக்கான கிழமையை கூறுகிறான்.
அவனுடைய தனித்திறமை குறித்து, பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் மிகவும் பிரமிப்படைகின்றனர். ஆனால், சேசுராமுக்குள் ஒளிந்திருந்த இந்த திறமை, எப்படி உருவானது என, அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. என்ன நடந்தது?சேசுராமுக்கே அவனது திறமை குறித்து கேட்டால், தெரியவில்லை. 'தெரியும்' என்று மட்டுமே கூறுகிறான். 
 
         மகனின் திறமை குறித்து, தந்தை கோபாலகிருஷ்ணன் கூறியதாவது:நான் ஒரு தனியார் நிறுவன ஊழியர். கடந்த, ஏப்ரல் மாதம் பள்ளி கோடை விடுமுறையில், சொந்த ஊரான ஈரோட்டிற்கு குடும்பத்துடன் செல்ல வேண்டி இருந்தது. சேசுராமை அழைத்துக்கொண்டு ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய சென்றேன். நான் கேட்ட தேதியில், டிக்கெட் இல்லை என்பதால், 20 நாட்களுக்கு பின், ஒரு தேதியில் டிக்கெட் இருப்பதாக, முன்பதிவாளர் கூறினார்.அன்றைய தேதி என்ன கிழமை என, தெரிந்துகொள்ள அலைபேசியில், தேட முயன்றேன். அதற்குள், சேசுராம், கிழமையை கூறிவிட்டான். ஆச்சரியப்பட்டேன்.அடுத்த வாரத்தில் உள்ள குறிப்பிட்ட தேதியின் கிழமையை கூறவே, ஒரு நிமிடமாவது கணக்கு போட வேண்டும். ௨௦ நாளுக்கு பின் உள்ள தேதியின் கிழமையை மறுநொடியே அவன் கூறியதும், அவனுக்குள் எதோ ஒரு திறமை ஒளிந்திருக்கிறது என, தெரிந்து கொண்டோம்.பிறகு, ஒவ்வொரு ஆண்டு வாரியாக தேதிக்கு கிழமை கேட்டோம். 2010 முதல் 3100ம் ஆண்டு வரை உள்ள, ஏதாவது ஒரு தேதியை கேட்டால், யோசிக்காமல் மறு நொடியே அந்த நாளுக்கான கிழமையை கூறுகிறான்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
உடனுக்குடன்...:

          சிறுவனின் தாயார் தமிழ்ச்செல்வி கூறுகையில்,''ஓர் ஆண்டுக்கு முன், குறிப்பிட்ட தேதியில், அவன் என்ன நிற உடை அணிந்தான், நான் என்ன குழம்பு வைத்தேன் என்பதையும் கூறுகிறான். ஒரு பாடலை கேட்ட உடனே, எந்த பாடகர் பாடினார் என, கூறிவிடுகிறான். ஒரேநாளில், 1 முதல் 100 வரை உள்ள இந்தி வார்த்தைகளை மனப்பாடம் செய்துவிட்டான். 3100ம் ஆண்டுக்கு மேல்உள்ள காலண்டர் கிடைக்காததால், அடுத்தடுத்த ஆண்டுகளுக்கான கிழமை குறித்து கேட்க முடியவில்லை,'' என்றார்.
ஆசை என்ன?

தொடர்ந்து, தந்தை கோபாலகிருஷ்ணன் கூறியதாவது: சேசுராமுவுகுள் இந்த திறமை எப்படி உருவானது என, கண்டுபிடிக்க வேண்டும். யாரிடம் அழைத்து சென்றால் விடை கிடைக்கும் என, தெரியவில்லை. அவனின் இந்த திறமையை மேற்கொண்டு அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்லவும் வழி தெரியவில்லை. உலக மொழிகள் அனைத்தையும் கற்று கொடுக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது, இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment