தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி டிக்டோ ஜக்கிலிருந்து வெளியேறியவுடன் அநெக விமர்ச்சனங்கள் வந்தது . இடைநிலை ஆசிரியர்களின் சிந்தனைக்கு . 1, சென்ற ஆட்சியில் ஊதிய பாதிப்பை பேச்சிவார்த்தைமுலம் வாங்கித்தருவோம் என்று சொன்னவர்கள் எவ்வளவு வாங்கித் தந்தார்கள் ? 2, இந்த ஆட்சியில் போராடுவோம் என்று சொன்ன இயக்கங்களில் எந்த இயக்கம் அரசை எதிர்த்து போராட முதலில் தேதியை அறிவித்தது . 3, தனித்தனியே போராடியதில் எந்த இயக்கம் சென்னை வரையில் சென்று மறியலில் அதிகம்பேர் கைதானார்கள். 4.தங்கள் இயக்கத்தின் பலவினங்கள் தங்கள் உறுப்பினர்களுக்கு தெரியாமல் மறைப்பதற்காக திட்டமிட்டு , மாவட்டதலைவர்களை கலந்தாலோசிக்காமல் போராட்டத்தை அறிவிக்கும் இயக்கங்கள் எது என்று தெரியுமா ? 5 , மாநில தலைமைக்கு எந்த பாதிப்பும் வராமல் , அரசுக்கு எதிராக அதிரடியாக போராட பயந்து ஊரோடு தேர் இழுத்த இயக்கமும் உண்டு. 6, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி , யார் ஆட்சிக்கு வந்தாலும் வராவிட்டாலும் ஆசிரியர்களின் உரிமைக்காக கண்டிப்பாக போராடும் , சிறைக்கு செல்லவும் அஞ்சாது .7 டிக்டோ ஜக்கின் கூட்டத்தில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி முன்வைத்த கோரிக்கை மாநில, மாவட்ட அளவில் அதிரடியான அல்லது கைதாகும் அளவில் போராட்டத்தை முன்னிலைப் படுத்த வேண்டும் என்றது. மற்றவர்கள் பயந்து மாவட்ட அளவில் பேரணி அல்லது ஆர்பாட்டம் என்றனர். ஒன்றியம், மாவட்டம் , மாநில அளவில் எல்லா இயக்கங்களும் போராடிய பின்னரும் ஏன் திரும்பவும் மாவட்ட அளவில் பயனில்லா போராட்டம்? சரி அதுதான் தேரை இழுத்து மாநில அளவில் விட்டு விட்டோமே திரும்பவும் முதலில் இருந்து இழுப்போம் வாங்கன்னு கூப்பிட்டா எப்படிங்க வரமுடியும் . 8, இடைநிலை ஆசிரியர்கள் எல்லா இயக்கங்களின் வரலாற்றையும் தயவுகூர்ந்து படித்து பாருங்கள் வரலாறு உங்களுக்கு உண்மையை சொல்லும் . 9. அரசியல் இல்லாத ஜனநாயக இயக்கம் எது என்று தெரிந்தும் மாற்று இயக்கத்திலிருந்து வந்து சேர்வதர்கும் பயம் , மனதிற்குள் புழம்பி தல்லுவதில் பயனில்லை, எதிற்கும் குணமும் , போராட்ட குணமும் , உரிமையை கேட்கும் குணமும் , இன்றைய தலைமுறை இடைநிலை ஆசிரியருக்கு இல்லை . பகுத்தறிவு இல்லாததால் பயத்தால் எதாவது ஒரு இயக்கத்தில் சார்ந்து இருக்கிறீர்கள் .
No comments:
Post a Comment