Tuesday, 14 January 2014

இடைநிலை ஆசிரியர்களின் சிந்தனைக்கு

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி டிக்டோ ஜக்கிலிருந்து வெளியேறியவுடன் அநெக விமர்ச்சனங்கள் வந்தது . இடைநிலை ஆசிரியர்களின் சிந்தனைக்கு . 1, சென்ற ஆட்சியில் ஊதிய பாதிப்பை பேச்சிவார்த்தைமுலம் வாங்கித்தருவோம் என்று சொன்னவர்கள் எவ்வளவு வாங்கித் தந்தார்கள் ? 2, இந்த ஆட்சியில் போராடுவோம் என்று சொன்ன இயக்கங்களில் எந்த இயக்கம் அரசை எதிர்த்து போராட முதலில் தேதியை அறிவித்தது . 3, தனித்தனியே போராடியதில் எந்த இயக்கம் சென்னை வரையில் சென்று மறியலில் அதிகம்பேர் கைதானார்கள். 4.தங்கள் இயக்கத்தின் பலவினங்கள் தங்கள் உறுப்பினர்களுக்கு தெரியாமல் மறைப்பதற்காக திட்டமிட்டு , மாவட்டதலைவர்களை கலந்தாலோசிக்காமல் போராட்டத்தை அறிவிக்கும் இயக்கங்கள் எது என்று தெரியுமா ? 5 , மாநில தலைமைக்கு எந்த பாதிப்பும் வராமல் , அரசுக்கு எதிராக அதிரடியாக போராட பயந்து ஊரோடு தேர் இழுத்த இயக்கமும் உண்டு. 6, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி , யார் ஆட்சிக்கு வந்தாலும் வராவிட்டாலும் ஆசிரியர்களின் உரிமைக்காக கண்டிப்பாக போராடும் , சிறைக்கு செல்லவும் அஞ்சாது .7 டிக்டோ ஜக்கின் கூட்டத்தில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி முன்வைத்த கோரிக்கை மாநில, மாவட்ட அளவில் அதிரடியான அல்லது கைதாகும் அளவில் போராட்டத்தை முன்னிலைப் படுத்த வேண்டும் என்றது. மற்றவர்கள் பயந்து மாவட்ட அளவில் பேரணி அல்லது ஆர்பாட்டம் என்றனர். ஒன்றியம், மாவட்டம் , மாநில அளவில் எல்லா இயக்கங்களும் போராடிய பின்னரும் ஏன் திரும்பவும் மாவட்ட அளவில் பயனில்லா போராட்டம்? சரி அதுதான் தேரை இழுத்து மாநில அளவில் விட்டு விட்டோமே திரும்பவும் முதலில் இருந்து இழுப்போம் வாங்கன்னு கூப்பிட்டா எப்படிங்க வரமுடியும் . 8, இடைநிலை ஆசிரியர்கள் எல்லா இயக்கங்களின் வரலாற்றையும் தயவுகூர்ந்து படித்து பாருங்கள் வரலாறு உங்களுக்கு உண்மையை சொல்லும் . 9. அரசியல் இல்லாத ஜனநாயக இயக்கம் எது என்று தெரிந்தும் மாற்று இயக்கத்திலிருந்து வந்து சேர்வதர்கும் பயம் , மனதிற்குள் புழம்பி தல்லுவதில் பயனில்லை, எதிற்கும் குணமும் , போராட்ட குணமும் , உரிமையை கேட்கும் குணமும் , இன்றைய தலைமுறை இடைநிலை ஆசிரியருக்கு இல்லை . பகுத்தறிவு இல்லாததால் பயத்தால் எதாவது ஒரு இயக்கத்தில் சார்ந்து இருக்கிறீர்கள் .

Sunday, 12 January 2014

ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி பனங்குடி சமத்துவபுரம் பள்ளியில் தமிழர் திருநாளாம் பொங்கள் திருநாள் கொண்டாடப்பட்டது.

ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி பனங்குடி சமத்துவபுரம் பள்ளியில் தமிழர் திருநாளாம் பொங்கள் திருநாள் கொண்டாடப்பட்டது. அனைவருக்கும் பொங்கள் நல்வாழ்த்துக்கள்.




Thursday, 9 January 2014

அரசு ஊழியர்கள் அடையாள அட்டை அணிய உத்தரவு.

அரசு ஊழியர்கள் அடையாள அட்டை அணிய உத்தரவு.


           தமிழக அரசு ஊழியர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரசு துறை அதிகாரிகளுக்கும் மாவட்ட கலெக்டர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. 
 
         அதில், அரசுப் பணியாளர்கள் பணி நேரத்தில் அடையாள அட்டையை கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடையாள அட்டையில் பெயர் மற்றும் பதவியை மட்டும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒன்றின்கீழ் ஒன்று இடம்பெறுமாறு மாற்றி அமைத்து உரிய அட்டையை ஊழியர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு எண்.33399 / 2013, 7.1.14 அன்றைய விசாரணை நிலவரம்

இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு எண்.33399 / 2013, 7.1.14 அன்றைய விசாரணை நிலவரம்

 
             தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் ( TATA ) சார்பில் தொடரப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையாக வழங்க கோரி தொடரப்பட்ட வழக்கின் 7.1.2014 அன்றைய நிலவரம். 7-1-2014 அன்று நீதிமன்ற விசாரணை FOR ORDERS என்ற பகுதியில் 8வது வழக்காக வந்தது, அரசு வழக்கறிஞர் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு பற்றியோ, அரியர் பற்றியோ வாதம் செய்யவில்லை, ஆனால் அவர்கள் மனுவில் தவறான அறிக்கை கொடுத்த திரு. ராஜீவ் ரஞ்சன் IAS, திரு கிருஷ்ணன் IAS ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அவகாசம் கேட்டார். இதையடுத்து நீதிபதி 17.1.14க்கு ஒரு வாரம் வாய்தா கொடுத்து ஒத்தி வைத்தார்.

        நமது மூத்த வழக்கறிஞர் திரு. அஜ்மல் கான் அவர்கள் 17-1-14 க்கு பதிலாக 21.1.2014 அன்று ஆஜராகி வழக்கை முடித்து தருவதாக உ றுதியளித்து உள்ளார்.
தகவல் : திரு. கிப்சன்

OUR TESTF STAND IN TETOJAC

SCHOOL AREAS

ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் முதல்முறையாக 6 துறைகள் அறிமுகம்



மிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் முதல்முறையாக 6 துறைகள் தொடங்கப்பட்டுள்ளன.

சென்னையில் அமைந்துள்ள  இந்தப் பல்கலைக்கழகத்தின் கீழ் 674 கல்லூரிகள் இணைப்புப் பெற்றுள்ளன. கல்லூரிகளுக்கு இணைப்பு அந்தஸ்து வழங்குவது, ஆண்டுதோறும் இணைப்புக் கல்லூரிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்து அந்த இணைப்பு அந்தஸ்தை புதுப்பிப்பது, பாடத் திட்டங்களை வகுப்பது, இணைப்புக் கல்லூரி மாணவர்களுக்குத் தேர்வுகளை நடத்தி, முடிவுகளை அறிவிப்பது போன்ற பணிகளை மட்டுமே இந்தப் பல்கலைக்கழகம் இதுவரை மேற்கொண்டு வந்தது.

இந்த நிலையில் இப்போது பல்கலைக்கழகத்தில் முதல்முறையாக 6 துறைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் எம்.பில் மற்றும் பிஎச்.டி. படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

கலை அறிவியல் துறை, மதிப்பு சார்ந்த கல்வித் துறை, கல்வி உளவியல் துறை, கல்வி தொழில்நுட்பத் துறை, பாடத் திட்டம் தயாரிப்பு மற்றும் நிர்வாகத் துறை, கல்வித் திட்டம் மற்றும் நிர்வாகத் துறை என 6 துறைகள் முதன்முறையாகத் தொடங்கப்பட்டுள்ளன. இந்தத் துறைகள் சார்பில் 2014, ஜனவரி முதல் எம்.பில் மற்றும் பிஎச்.டி படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இதற்கு பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. எம்.பில் படிப்பில் அதிகபட்சமாக 20 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். பிஎச்.டி. படிப்பைப் பொருத்தவரை, ஒரு பேராசிரியர் 8 பேருக்கு வழிகாட்டியாக இருப்பார்.

இந்தப் படிப்புகளில் மாணவர்களைச் சேர்த்துக் கொள்வதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மற்றும் டிசம்பரில் விளம்பரம் வெளியிடப்படும். ஜூலை மற்றும் ஜனவரியில் வகுப்புகள் தொடங்கப்படும் என்று பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜி.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

IMPORTANT INSTRUCTIONS ABOUT INCOME TAX