'ஆம் ஆத்மி பாணியில் ஊழலுக்கு எதிரான இளைஞர் அமைப்பு': சகாயம் ஐ.ஏ.எஸ். 15-ல் துவக்கி வைக்கிறார்
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஊழல் எதிர்ப்பை முன்னிறுத்தி, ஆம் ஆத்மி கட்சி மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழகத்திலும் இரு இளைஞர்கள் ஊழலுக்கு எதிராக புறப்பட்டிருக்கிறார்கள். சென்னையை சேர்ந்த செந்தில் ஆறுமுகம் (36), மற்றும் சிவ.இளங்கோ (36), ஆகிய இரு இளைஞர்கள் ஊழலுக்கு எதிராக போராட புதிய உக்தியை கையாண்டுள்ளனர்.
தமிழகம் முழுவதிலும் உள்ள எளிய மக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் பற்றியும், அவற்றைத் தர மறுக்கும் ஊழியர் களை வழிக்குக் கொண்டு வருவது பற்றியும் 24 மணி நேரமும் தகவல் கொடுக்க இலவச தொலைபேசி கட்டுப்பாட்டு அறையினை தொடங்க வுள்ளனர். வரும் 15ம் தேதி சென்னை சைதாப்பேட்டையில் அதிகாரப்பூர்வ மாக இந்த கட்டுப்பாட்டு அறை தொடங்கப்படுகிறது. இதனை ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம், தி.நகர், சர்.பிட்டி தியாகராயா அரங்கில் தொடங்கி வைக்கிறார்.
பேஸ்புக் உதவியால்
மறைந்த சமூக ஆர்வலரும், மக்கள் சக்தி நிறுவனருமான எம்.எஸ்.உதயமூர்த்தியின் பட்டறையில் இருந்து வந்திருக்கும் அவர்கள் ‘சட்டப்பஞ்சாயத்து’ என்ற அமைப்பு தொடங்கியுள்ளனர். இம்மையம், தொடங்கப்படுவதற்கு முன்பாகவே இவர்களின் பேஸ்புக் பக்கத்தில் https://www.facebook.com/sattapanchayath ஒரு மாதத்திலேயே 5,300 உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர்.
இந்த மையத்தின் “7667100100” என்ற தொலைபேசி சேவை எண்ணை, சோதனை முறையில் கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி மேற்கண்ட இருவரும் அறிமுகப்படுத்தினர்.
இதில், ரேசன் கார்டு வாங்குவது, அது தாமதமாக கிடைப்பதைத் தவிர்ப்பது, பட்டா மாற்றம், டிரைவிங் லைசென்ஸ் எடுப்பது போன்ற பல்வேறு சேவைகளின் முழு விவரம் பற்றி பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது. அப்படி கிடைக்காதபட்சத்தில் அதை ஒருவர் எப்படி பெறுவது? என்பது பற்றியும் விளக்கம் அளிக்கப்படுகிறது.
வழிக்கு வந்த அதிகாரிகள்
இந்த அமைப்பை தொடங்குவதற்காக கணிசமான வருவாய் அளித்து வந்த, சாப்ட்வேர் நிறுவன வேலையை இவர்கள் உதறிவிட்டு வந்துள்ளனர்.
இந்த மையத்தை தொடங்கியுள்ள செந்தில் ஆறுமுகம் கூறியதாவது:- சாமானிய மக்களுக்கு அரசு விதிமுறைகள் தெரியாததால் அரசு அலுவலகங்களில் அலைக்கழிக்கப் படுகிறார்கள். அதுபோன்றவர் களுக்கு எங்களால் இயன்ற உதவி களை அளிக்கவே இந்த மையம் தொடங்கப்படுகிறது. சோதனை முறையில் செயல்படத்துவங்கிய சில நாள்களிலேயே பலரது பிரச்சினை களை தீர்த்து வைத்துள்ளோம்.
உதாரணத்துக்கு, குறிஞ்சிப்பாடியில் இருந்து சண்முகம் என்பவர் தொடர்பு கொண்டு தனது ரேசன் கார்டு தயாரானபிறகும், தராமல் இழுத்தடிப்பதாகவும், ரூ.400 கொடுத்தால் தருவதாக ஊழியர்கள் கூறுவதாகவும் தெரிவித்தார். எங்களிடம் தமிழகத்தில் உள்ள அனைத்து அதிகாரிகள் விவரங்கள் தொகுப்பு உள்ளது. அதை வைத்து சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொண்டு அதுபற்றி கேட்டோம்.
அப்போது அந்த அதிகாரி ரேசன் கார்டை உடனே கொடுத்துவிட்டார். ரேசன்கார்டை பெற ரூ.5 செலுத்தினால் போதுமானது.
No comments:
Post a Comment