தலைமைஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு
தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான, பதவி உயர்வு கலந்தாய்வு இன்று அந்தந்த மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடக்கிறது.
இந்த கல்வியாண்டில், தொடக்க கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டிற்குட்பட்ட, ஊராட்சி ஒன்றியம், நகராட்சி பள்ளிகளில், 50 நடுநிலை பள்ளிகள், உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. 50 தொடக்க பள்ளிகளுக்குரிய, தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இதே போல், 54 புதிய தொடக்க பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்காக 104 தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு உள்ளன. மேற்காணும், தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களில், சேலம் மாவட்டம் ஏற்காடு சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுவதால், அங்குள்ள 5 தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் தவிர்த்து, எஞ்சியுள்ள 99 தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர் பணி இடங்களுக்கு, கலந்தாய்வு இன்று அந்தந்த மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடத்த தொடக்க கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில், சாக்கோட்டை ஒன்றியத்தில் உள்ள காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி தொடக்க பள்ளி, பொய்யாவயல் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி, தலைமை ஆசிரியருக்குரிய கவுன்சிலிங், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடக்கிறது.
No comments:
Post a Comment