Saturday, 16 November 2013

499 ஆசிரியர்கள் டிஸ்மிஸ் - பள்ளி கல்வித்துறை நடவடிக்கை

தகுதித் தேர்வில் தேர்ச்சி இல்லாமல் நியமிக்கப்பட்ட 499 ஆசிரியர்கள் டிஸ்மிஸ் - பள்ளி கல்வித்துறை நடவடிக்கை


           அரசு உதவி பெறும் பள்ளிகளில், கடந்த 15.11.2011-க்கு பிறகு தகுதித் தேர்வு தேர்ச்சி இல்லாமல் நியமிக்கப் பட்ட 499 ஆசிரியர்களை டிஸ்மிஸ் செய்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

              கடந்த 23.8.2010 முதல் 14.11.2011-க்கு இடைப்பட்ட காலத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற 5 ஆண்டு கால அவகாசம் அளிக்கப்பட்டு இருக்கிறது.

                      மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் நாடு முழுவதும் கடந்த 23.8.2010 முதல் அமலுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து, அரசு பள்ளியிலோ, அரசு உதவி பெறும் பள்ளியிலோ, தனியார் சுயநிதி பள்ளியிலோ ஒன்றாம் வகுப்புமுதல் 8-ம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர் அல்லது பட்டதாரி ஆசிரியர் பணியில் சேருவதற்கு தகுதித்தேர்வு தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

               ஒவ்வொரு மாநிலத்திலும் ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தும் பொறுப்பு குறிப்பிட்ட தேர்வு அமைப்புகளிடம் வழங்கப்பட் டுள்ளன.

                   மத்திய பள்ளிகளுக்கான தகுதித் தேர்வை சி.பி.எஸ்.இ. நடத்துகிறது. தமிழ்நாட்டில் தகுதித்தேர்வு நடத்தும் பொறுப்பு, ஆசிரியர் தேர்வு வாரியத் திடம் (டி.ஆர்.பி.) ஒப்படைக்கப்பட் டுள்ளது. இதுவரை 3 தகுதித் தேர்வுகள் நடத்திமுடிக்கப்பட்டுள்ளன. அண்மையில் நடந்துமுடிந்த 3-வது தகுதித்தேர்வில் 27 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றார்கள்.

உதவிபெறும் பள்ளிகளில் நியமனம்

              அரசுப் பள்ளிகளிலும் சரி, அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் சரி.. ஏற்கனவே பணி நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு பொருந்துமா, பொருந்தாதா என்ற குழப்பம் இன்றுவரை தொடர்கிறது.

                           இதற்கிடையே, தகுதித்தேர்வு அறிவிப்பாணை வெளியிடுவதற்கு முன்பு நியமிக்கப்பட்ட ஆசிரியர் களும், பணி நியமனத்துக்கான பணிகள் (அறிவிப்பு வெளியிடுதல், சான்றிதழ் சரிபார்ப்பு போன்றவை) தொடங்கப்பட்டிருந்தாலும் அத்தகைய ஆசிரியர்களும் தகுதித் தேர்வு எழுதத் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டது.

டிஸ்மிஸ்

                        தகுதித்தேர்வு விதிமுறை அமலுக்கு வந்த போதிலும் தமிழகம் முழுவதும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், தகுதித்தேர்வு தேர்ச்சி இல்லா மலேயே இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் நிய மிக்கப்பட்டு வந்தனர். அவர்களின் பணி நியமனத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு அரசு சம்பளமும் வழங்கியது.

                           யார் யாருக்கு தகுதித்தேர்வு உண்டு, யார் யாருக்கு விதி விலக்கு என்பது சரிவர முடிவுசெய் யப்படாததால் அவ்வப்போது பல மாவட்டங்களில் இந்த ஆசிரியர் களுக்கு சம்பளம் வழங்குவது நிறுத்தப்படுவதும், பின்னர் மீண்டும் வழங்கப்படுவதும் என்ற நிலை தொடர்ந்தது. இந்த நிலையில், தமிழகம் முழுவதும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 499 ஆசிரியர் களை டிஸ்மிஸ் செய்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித் துள்ளது. இவர்கள் அனைவரும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி களில் இடைநிலை ஆசிரியராக, பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருபவர்கள்.

5 ஆண்டு கால அவகாசம்

                    இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறை சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக் கும், மாவட்டக் கல்வி அதிகாரிகளுக் கும் அனுப்பப்பட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

                           பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு உதவி பெறும் பள்ளி களில், கடந்த 15.11.2011-க்கு பிறகு தகுதித்தேர்வு தேர்ச்சி இல்லாமல் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களை உட னடியாக பணியில் இருந்து விடுவிக்க வேண்டும். இருப்பினும், 23.8.2010 முதல் 14.11.2011 வரையிலான காலத்தில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் நியமிக்கப்பட்ட ஆசிரி யர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு 5 ஆண்டுகள் கால அவகாசம் அளிக்கப்படுகிறது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

                         இந்த உத்தரவின் மூலம், பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 15.11.2011-க்குப் பிறகு தகுதித்தேர்வு தேர்ச்சி இல்லாமல் நியமிக்கப்பட்ட 499 ஆசிரியர்கள் நடவடிக்கைக்கு உள்ளாவார்கள். உயர் நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரி வித்தனர்.

தொடக்கக் கல்வி இயக்ககம்

                                பள்ளிக் கல்வித் துறையைப் போல, தொடக்கக்கல்வி இயக்க கத்தின் கீழ் இயங்கும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் (ஆரம்பப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள்) மேற்குறிப்பிட்ட காலக்கெடுவுக்கு பிறகு இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித் தேர்வு தேர்ச்சி இல்லாமல் நியமிக்கப் பட்டிருக்கலாம். அவர்கள் மீதும் தொடக்கக்கல்வி இயக்ககம் தனியே நடவடிக்கை மேற்கொள்ளும் என கூறப்படுகிறது.

                   உயர் நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment