Monday 25 November 2013

ஐநாவில் பேசிய பார்வையற்ற சென்னை மாணவி சுவர்ணலட்சுமி

ஐநாவில் பேசிய பார்வையற்ற சென்னை மாணவி சுவர்ணலட்சுமி

1453288_516430598452474_1660979791_nஅமெரிக்காவில் உள்ள ஐநா சபையில் ஒருவர் ஒரு முறை பேசினாலே வாழ்க்கையில் பாக்கியம் பெற்றவர் ஆவார். ஆனால் பார்வையற்ற சென்னை மாணவி சுவர்ணலட்சுமி ஒரு முறைக்கு இரு முறை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஐநாவில் பேசியுள்ளார் அவர் யார் என்பதை அறிய ஆர்வமாக இருக்கிறதா…


சென்னை கனரா பாங்கின் நிறுவனர் நாள் விழாவினை முன்னிட்டு சாதனை புரிந்த மாணவ, மாணவியருக்கான பாராட்டு விழா ப்ரீடம் ட்ரஸ்ட் டாக்டர் சுந்தர் தலைமையில் நடைபெற்றது.
மேடைக்கு அழைக்கப்பட்டவர்களில் சுவர்ணலட்சுமி பலரது கருத்தையும் கவர்ந்தார்.

சென்னை பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த ரவிதுரைக்கண்ணு- லட்சுமி தேவி தம்பதியின் ஒரே மகள் சுவர்ணலட்சுமி.  சுவர்ணலட்சுமிக்கு பிறவியிலே கண்பார்வை இல்லை. இவருக்கு பார்வைவேண்டி பலவித முயற்சிகள் எடுத்த பெற்றோர் அந்த முயற்சிகள் தந்த தோல்வியினால் துவண்டு போகவில்லை, காரணம் தாங்கள் துவண்டு போனால் அது தங்களது மகளை பாதிக்கும் என்பதால் மகளின் விருப்பம், அவரது முன்னேற்றத்திற்காக தங்களது வாழ்க்கை ஒதுக்கவும், சுவர்ணலட்சுமியின் வளர்ச்சியை செதுக்கவும் செய்தனர்.

சுவர்ணலட்சுமி சென்னையில் உள்ள பார்வையற்றோருக்கான லிட்டில் பிளவர் கான்வெண்ட் மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து பிரமாதமாக படித்து வருகிறார் தற்போது அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறார்.  பாட்டு பாடுவது, கீபோர்டு வாசிப்பது, நீந்துவது, செஸ் விளையாடுவது என்று எதையும் விட்டு விடாமல் எதிலும் சோடை போகாமல் வளர்ந்து வந்த சுவர்ணலட்சுமிக்கு பள்ளியில் செயல்பட்டு வரும் குழந்தைகள் பார்லிமெண்ட் அமைப்பின் தகவல் தொடர்புதுறை அமைச்சர் பதவி கிடைத்தது.

இந்த இடத்தில் குழந்தைகள் பாராளுமன்றம் பற்றி ஒரு சில வார்த்தை. இந்தியாவின் பல மாநிலங்களில் குழந்தைகளை மட்டுமேவைத்து அமைக்கப்பட்டதுதான் இந்த குழந்தைகள் பாராளுமன்றம். தமிழகத்தில் எட்வின் என்பவரால் 1993ல் நாகர்கோவிலில் தொடங்கப்பட்டு, சிறப்பாக இயங்கி வருகிறது. தமிழகத்தில் மட்டும் 15,000 குழந்தைகள் பாராளுமன்றங்கள் உள்ளன. சமூக ஆர்வலர்களின் மூலம் நடத்தப்படும் இந்தப் பாராளுமன்றங்களில் பிரதமர் மற்றும் பிற அமைச்சர்கள் வரை அனைவரும் பள்ளி மாணவர்களே, இதன் ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் சூரியசந்திரன்.

குழந்தை திருமணம், பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிள்ளைகளை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது, தங்களது பிரச்னைகளைத் தாங்களே பேசித் தீர்வுகாண்பது என இந்தப் பாராளுமன்றங்களின் பணிகள் மகத்தானவை. இதன் மூலம் மாணவர்கள், தங்களது பள்ளிப் பருவத்திலேயே தன்னம்பிக்கையையும் ஆளுமைப் பண்பையும் வளர்த்துக் கொள்ள முடிகிறது.

இந்த பாராளுமன்றத்தில் வெட்டி பேச்சு கிடையாது, வேட்டி கிழியும் அபாயமும் கிடையாது, வெளிநடப்பும் கிடையாது எல்லா பேச்சும் அளவானவை, ஆரோக்கியமானவை, குழந்தைகள் உரிமையை நிலைநாட்டுபவை, அவர்களது வளர்ச்சிக்கு வழிகாணுபவை. ஒவ்வொரு பாராளுமன்றத்திலும் தேர்தல் மூலமாக அமைச்சர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவ்வாறு அந்தந்தப் பகுதிகளில் தேர்வு செய்யப்படும் அமைச்சர்கள் அடங்கிய பாராளுமன்றங்களின் கூட்டம் ஒவ்வொரு மாதமும் நடக்கும். அதில் சிறப்பாகப் பேசியவர்கள், செயல்பட்டவர்கள் மாநில அளவிலான பாராளுமன்றத்திற்குத் தேர்வு செய்யப்படுவார்கள்.

தகவல் தொடர்பு அமைச்சராக தேர்வு செய்யப்பட்ட சுவர்ணலட்சுமிக்கு இயல்பாகவே சமூக சேவை எண்ணம் உண்டு. இதன் காரணமாக கடலூரில் தானே புயல் தாக்குதல் சம்பவத்தை கேள்விப்பட்டு 30 ஆயிரம் ரூபாயை சேகரித்து நேரடியாக சம்பவ இடத்திற்கு போய் பாதிக்கப்பட்ட மக்களிடம் அந்த நிதியை வழங்கினார்.

அதன்பிறகு அனைவருக்கும் தொண்டு செய்யும் எண்ணம் வரவேண்டும் என்பதற்காக ஒருவருக்கு ஒரு ரூபாய் என்ற திட்டத்தை கொண்டு வந்து அந்த ஒரு ரூபாயும் பள்ளி குழந்தைகள்தான் தரவேண்டும் என்று சொல்லி ஏழாயிரம் ரூபாயை ஏழாயிரம் பேரிடம் இருந்து வசூல் செய்தார். இந்த பணத்தை கொண்டு இரண்டு குழந்தைகளின் படிப்பு கட்டணத்தை கட்டியதுடன் சிலருக்கு சீருடையும் வாங்கிக் கொடுத்தார்.  இந்த நிலையில் அடுத்து நடந்த பாராளுமன்ற கூட்டத்தில் சுவர்ணலட்சுமி நிதி அமைச்சராக தேர்வானார் இவரது பேச்சு செயல்பாடு காரணமாக அடுத்து நடந்த மாநில அளவிலான கூட்டத்தில் குழந்தைகள் பாராளுமன்ற பிரதமராக தேர்வானார்.

இந்த நிலையில் ஐநாவின் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டு பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் பற்றி பேச அனுமதிக்கப்பட்டார், இவரது சிறப்பான பேச்சு காரணமாக அமெரிக்கா போய் திரும்பி சில மாதங்களிலேயே திரும்பவும் ஐநா அழைக்கப்பட்டு மீண்டும் போய் பேசிவிட்டு வந்தார்.

இப்படி ஒரு முறைக்கு இருமுறை ஐநா போய்வந்த சுவர்ணலட்சுமிக்கு இங்குள்ள பல்வேறு அமைப்புகள் பாராட்டு விழா நடத்திவருகின்றன.  ஆரம்பத்தில் என்னிடம் பல விஷயங்களில் பயம், தயக்கம், பார்வை இல்லையே என்கிற வருத்தம் இருந்தது. சில்ரன்’ஸ் பார்லிமென்டில் சேர்ந்த பிறகு, தைரியமும் தன்னம்பிக்கையும் வளர்ந்தன.

‘எந்தச் செயலையும் பளுவாக நினைக்காமல், புதிய கண்ணோட்டத்துடன் அணுகினால் ஜெயிக்கலாம்’ என்பதைக் கற்றுக் கொண்டேன். ஒவ்வொரு பாராளுமன்றக் கூட்டத்தின் போதும் எந்த மாதிரியான பிரச்னைகள் விவாதத்துக்கு வரும், அதற்கு எப்படிப் பட்ட தீர்வைச் சொன்னால் சரியாக இருக்கும்னு ஒரு முன் தயாரிப்போடு இருப்பேன்.

இந்த திட்டமிட்ட உழைப்பு என்னை தற்போது இந்த உயரத்திற்கு கொண்டு வந்துள்ளது. இந்த பாராட்டுக்கள் என்னை இன்னும் சமூகத்திற்கு உழைக்க தூண்டுகிறது. எதிர்காலத்தில் மாவட்ட ஆட்சித் தலைவராகி இன்னும் நிறைய உழைக்க என்னை நான் தயார் செய்து கொண்டு வருகிறேன்.

நம்மை வாழவிடாமல் தடுப்பதற்கு நாட்டில் ஆயிரம் காரணங்கள் இருக்கும் ஆனால் வாழவைக்க ஏதேனும் ஒரு காரணம் இருக்கும் அந்த காரணத்தை பிடித்துக்கொண்டு நாமும் வளர வேண்டும், நம்மைச் சார்ந்தவர்களையும் வளர்க்க வேண்டும். பயமும், தயக்கமும்தான் நமது லட்சியப் பயணத்திற்கான தடைக்கற்கள்.

நன்றி.  எல்.முருகராஜ் &. நாகூர்கனி.

Saturday 23 November 2013

2 மாவட்ட கல்வி அலுவலர்கள் முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வும், ஒரு முதன்மைக் கல்வி அலுவலருக்கு மாறுதலும் வழங்கி உத்தரவு

2 மாவட்ட கல்வி அலுவலர்கள் முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வும், ஒரு முதன்மைக் கல்வி அலுவலருக்கு மாறுதலும் வழங்கி உத்தரவு


               ஈரோடு மாவட்ட அகஇ முதன்மை கல்வி அலுவலராக பணிபுரிந்த திரு.சுப்பிரமணி அவர்கள் வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்ட கல்வி அலுவலர் திருமதி.கலாவதி அவர்கள் பெரம்பலூர் மாவட்ட அகஇ முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
 
           சேரன்மாதேவி மாவட்ட கல்வி அலுவலர் அகஇ முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தலைமைஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு

தலைமைஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு


           தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான, பதவி உயர்வு கலந்தாய்வு இன்று அந்தந்த மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடக்கிறது.

            இந்த கல்வியாண்டில், தொடக்க கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டிற்குட்பட்ட, ஊராட்சி ஒன்றியம், நகராட்சி பள்ளிகளில், 50 நடுநிலை பள்ளிகள், உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. 50 தொடக்க பள்ளிகளுக்குரிய, தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

                                இதே போல், 54 புதிய தொடக்க பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்காக 104 தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு உள்ளன. மேற்காணும், தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களில், சேலம் மாவட்டம் ஏற்காடு சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுவதால், அங்குள்ள 5 தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் தவிர்த்து, எஞ்சியுள்ள 99 தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர் பணி இடங்களுக்கு, கலந்தாய்வு இன்று அந்தந்த மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடத்த தொடக்க கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

                                   சிவகங்கை மாவட்டத்தில், சாக்கோட்டை ஒன்றியத்தில் உள்ள காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி தொடக்க பள்ளி, பொய்யாவயல் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி, தலைமை ஆசிரியருக்குரிய கவுன்சிலிங், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடக்கிறது.

Monday 18 November 2013

சமூக சமநில நேர்மறை எண்ணங்களை வளர்த்தெடுத்தல் என்ற தலைப்பில் பயிற்சி

சமூக சமநில நேர்மறை எண்ணங்களை வளர்த்தெடுத்தல் என்ற தலைப்பில் பயிற்சி

          டிசம்பர் மாதம் 7ம் தேதி சமூக சமநில நேர்மறை எண்ணங்களை வளர்த்தெடுத்தல் என்ற தலைப்பில் பயிற்சி வழங்கப்படுகிறது.கருத்தாளர் பயிற்சி சென்னையில் வரும் 20ம் தேதி நடக்கிணறது

                     தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு குறு வள மைய அளவில் டிசம்பர் மாதம் 7ம் தேதி சமூக சமநில நேர்மறை எண்ணங்களை வளர்த்தெடுத்தல் என்ற தலைப்பில் பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்காக மாநில மற்றும் மாவட்ட அளவிலான கருத்தாளர் பயிற்சி சென்னையில் வரும் 20ம் தேதி நடக்கிணறது. இதில் ஒரு மாவட்டத்திற்கு 2 ஆசிரிய பயிற்றுனர்களும், 2 மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன 2 விரிவுரையாளர்களும் கலந்து கொள்கின்றனர்.

            மாவட்ட அளவில் அனைத்து ஆசிரிய பயிற்றுனர்கள், ஆசிரிய கருத்தாளர்களுக்கு வரும் 27ம் தேதி மற்றும் 28ம் தேதி நடக்கிறது. குறு வள மைய அளவில் தொடக்க மற்றும் உயர்நிலை ஆசிரியர்களுக்கு வரும் டிசம்பர் மாதம் 7ம் தேதி பயிற்சி நடத்தப்படுகிறது. இவ்வாறு அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Saturday 16 November 2013

499 ஆசிரியர்கள் டிஸ்மிஸ் - பள்ளி கல்வித்துறை நடவடிக்கை

தகுதித் தேர்வில் தேர்ச்சி இல்லாமல் நியமிக்கப்பட்ட 499 ஆசிரியர்கள் டிஸ்மிஸ் - பள்ளி கல்வித்துறை நடவடிக்கை


           அரசு உதவி பெறும் பள்ளிகளில், கடந்த 15.11.2011-க்கு பிறகு தகுதித் தேர்வு தேர்ச்சி இல்லாமல் நியமிக்கப் பட்ட 499 ஆசிரியர்களை டிஸ்மிஸ் செய்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

              கடந்த 23.8.2010 முதல் 14.11.2011-க்கு இடைப்பட்ட காலத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற 5 ஆண்டு கால அவகாசம் அளிக்கப்பட்டு இருக்கிறது.

                      மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் நாடு முழுவதும் கடந்த 23.8.2010 முதல் அமலுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து, அரசு பள்ளியிலோ, அரசு உதவி பெறும் பள்ளியிலோ, தனியார் சுயநிதி பள்ளியிலோ ஒன்றாம் வகுப்புமுதல் 8-ம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர் அல்லது பட்டதாரி ஆசிரியர் பணியில் சேருவதற்கு தகுதித்தேர்வு தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

               ஒவ்வொரு மாநிலத்திலும் ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தும் பொறுப்பு குறிப்பிட்ட தேர்வு அமைப்புகளிடம் வழங்கப்பட் டுள்ளன.

                   மத்திய பள்ளிகளுக்கான தகுதித் தேர்வை சி.பி.எஸ்.இ. நடத்துகிறது. தமிழ்நாட்டில் தகுதித்தேர்வு நடத்தும் பொறுப்பு, ஆசிரியர் தேர்வு வாரியத் திடம் (டி.ஆர்.பி.) ஒப்படைக்கப்பட் டுள்ளது. இதுவரை 3 தகுதித் தேர்வுகள் நடத்திமுடிக்கப்பட்டுள்ளன. அண்மையில் நடந்துமுடிந்த 3-வது தகுதித்தேர்வில் 27 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றார்கள்.

உதவிபெறும் பள்ளிகளில் நியமனம்

              அரசுப் பள்ளிகளிலும் சரி, அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் சரி.. ஏற்கனவே பணி நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு பொருந்துமா, பொருந்தாதா என்ற குழப்பம் இன்றுவரை தொடர்கிறது.

                           இதற்கிடையே, தகுதித்தேர்வு அறிவிப்பாணை வெளியிடுவதற்கு முன்பு நியமிக்கப்பட்ட ஆசிரியர் களும், பணி நியமனத்துக்கான பணிகள் (அறிவிப்பு வெளியிடுதல், சான்றிதழ் சரிபார்ப்பு போன்றவை) தொடங்கப்பட்டிருந்தாலும் அத்தகைய ஆசிரியர்களும் தகுதித் தேர்வு எழுதத் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டது.

டிஸ்மிஸ்

                        தகுதித்தேர்வு விதிமுறை அமலுக்கு வந்த போதிலும் தமிழகம் முழுவதும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், தகுதித்தேர்வு தேர்ச்சி இல்லா மலேயே இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் நிய மிக்கப்பட்டு வந்தனர். அவர்களின் பணி நியமனத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு அரசு சம்பளமும் வழங்கியது.

                           யார் யாருக்கு தகுதித்தேர்வு உண்டு, யார் யாருக்கு விதி விலக்கு என்பது சரிவர முடிவுசெய் யப்படாததால் அவ்வப்போது பல மாவட்டங்களில் இந்த ஆசிரியர் களுக்கு சம்பளம் வழங்குவது நிறுத்தப்படுவதும், பின்னர் மீண்டும் வழங்கப்படுவதும் என்ற நிலை தொடர்ந்தது. இந்த நிலையில், தமிழகம் முழுவதும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 499 ஆசிரியர் களை டிஸ்மிஸ் செய்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித் துள்ளது. இவர்கள் அனைவரும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி களில் இடைநிலை ஆசிரியராக, பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருபவர்கள்.

5 ஆண்டு கால அவகாசம்

                    இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறை சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக் கும், மாவட்டக் கல்வி அதிகாரிகளுக் கும் அனுப்பப்பட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

                           பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு உதவி பெறும் பள்ளி களில், கடந்த 15.11.2011-க்கு பிறகு தகுதித்தேர்வு தேர்ச்சி இல்லாமல் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களை உட னடியாக பணியில் இருந்து விடுவிக்க வேண்டும். இருப்பினும், 23.8.2010 முதல் 14.11.2011 வரையிலான காலத்தில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் நியமிக்கப்பட்ட ஆசிரி யர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு 5 ஆண்டுகள் கால அவகாசம் அளிக்கப்படுகிறது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

                         இந்த உத்தரவின் மூலம், பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 15.11.2011-க்குப் பிறகு தகுதித்தேர்வு தேர்ச்சி இல்லாமல் நியமிக்கப்பட்ட 499 ஆசிரியர்கள் நடவடிக்கைக்கு உள்ளாவார்கள். உயர் நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரி வித்தனர்.

தொடக்கக் கல்வி இயக்ககம்

                                பள்ளிக் கல்வித் துறையைப் போல, தொடக்கக்கல்வி இயக்க கத்தின் கீழ் இயங்கும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் (ஆரம்பப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள்) மேற்குறிப்பிட்ட காலக்கெடுவுக்கு பிறகு இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித் தேர்வு தேர்ச்சி இல்லாமல் நியமிக்கப் பட்டிருக்கலாம். அவர்கள் மீதும் தொடக்கக்கல்வி இயக்ககம் தனியே நடவடிக்கை மேற்கொள்ளும் என கூறப்படுகிறது.

                   உயர் நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Wednesday 13 November 2013

தற்செயல் விடுப்பு விதிகள்....

தற்செயல் விடுப்பு விதிகள்....

1. ஒரு ஆண்டிற்கு 12 நாட்கள் தற்செயல் விடுப்பு வழங்கப்படும். ஒரே நேரத்தில் பத்து நாட்கள் தனியாகவோ , அரசு விடுமுறை அல்லது ஈடுசெய்யும் விடுப்பு முதலியவற்றுடன் சேர்த்தோ அனுபவிக்கலாம்.

2. அவ்வாறு நாட்கள் தொடர்ந்து அனுபவிக்கும் போது , இயற்கை சீற்றம், தேசிய தலைவர் மரணம் , பந்த், பண்டிகை, திடீர் விடுமுறை காரணமாக 11 வது நாள் அரசு விமுறை என அறிவிக்கப்பட்டால் ஊழியர் 10 க்கு மேற்பட்ட அந்த நாளையும் விடுப்பாக அனுபவிக்கலாம். (.நி.எண். 309 ..நி.சி.(அவி.11) நாள் 16.08.93)

3. தற்செயல் விடுப்பை ஈட்டிய விடுப்பு மற்றும் பிற முறையான விடுப்புடன் இணைத்து அனுபவிக்க இயலாது.
4. தற்செயல் விடுப்பு விண்ணப்பத்தில் அதற்கான காரணத்தை குறிப்பிட வேண்டியதில்லை.
(
..எண். 1410 ..நி.சீ துறை 2.12.77 ).
5.
தற்காலிக பணியாளர் மற்றும் தகுதிகாண்பருவத்தினருக்கு 3 மாதங்களுக்கு 2 நாட்கள் என்ற அளவில் இவ்வுடுப்பு வழங்கப்படும். (அவி. இணைப்பு VI )
6.
தகுதிகாண்பருவம் முடித்தவர் / நிரந்தர பணியாளர் ஆண்டு துவக்கத்திலேயே பணிநிறைவு பெரும் பணியாளருக்கு 12 நாட்கள் தற்செயல் விடுப்பை ஆண்டு துவக்கத்திலேயே வழங்கலாம். (அரசு கடித எண். 61559 /82 -4 ..சீ துறை நாள். 17.1.83)
7.
குறைந்தபட்சம் அரைநாள் சிறுவிடுப்பு அனுமதிக்கப்படும்.
8.
அவசர காரணங்களுகளுக்காக முதலில் விடுப்பு எடுத்து விட்டு பின்னர் இதற்கான விண்ணப்பத்தினை அளிக்கலாம். ( அரசுக் கடிதம் 61559 /82 -4 ..சீ துறை நாள். 17.1.83)

Tuesday 12 November 2013

தொடக்கக்கல்வி நாட்காட்டி (2013-14)

தொடக்கக்கல்வி நாட்காட்டி (2013-14)

           தொடக்கக்கல்வி 2013-14 ஆம் கல்வியாண்டிற்கான நாட்காட்டி , மாதிரி கால அட்டவணை மற்றும் தினசரி செயல்பாடுகளுக்கான கால அளவு வழிக்காட்டு அட்டவணையினை தொடக்கக்கல்வி இயக்ககம் வெளியீடு | Elementary Dept 2013 -14 calendar                                                      

Friday 8 November 2013

கல்வி செய்தி

அரசு பள்ளி மாணவர்களிடையே தினசரி நாளிதழ், புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை கல்வித்துறை தீவிரம்


         அரசு பள்ளி மாணவர்களிடையே தினசரி நாளிதழ்புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த கல்வித்துறை தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது.
 
      தர்மபுரி மாவட்டத்தில் ஊர்ப்புற நூலகங்கள்பகுதி நேர நூலகங்கள், என மொத்தம் 117 நூலகங்கள் உள்ளன. இவற்றில் 1.21 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த நூலகங்களில் 20 லட்சத்து 66 ஆயிரத்து587 நூல்கள் உள்ளன. கடந்த ஆண்டில் மட்டும் 16 லட்சத்து 41 ஆயிரத்து 879வாசகர்கள் இந்த நூலகங்களை பயன்படுத்தி படித்து சென்றுள்ளனர். நடப்பாண்டில் 20 ஆயிரம் மாணவர்கள் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். 50 ஆயிரம் மாணவமாணவிகளை புதிய உறுப்பினர்களாக சேர்க்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 1,750புரவலர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

         தர்மபுரி மாவட்ட மைய நூலகம் மற்றும் இதர கட்ட நூலகங்களில் குடிமை பணிகளுக்கான பயிற்சி மையம் செயல்படுகிறது. இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான புத்தகங்கள் உள்ளன. தினசரி500க்கும் மேற்பட்ட வாசகர்கள் மாவட்ட மைய நூலகத்திற்கு வந்து படித்து செல்கின்றனர். மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க மாவட்ட நூலகம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.
 
          இந்நிலையில் அரசு பள்ளிகளில் மாணவமாணவிகள் தினசரி நாளிதழ்புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த பள்ளிகளில் நூலகம் அமைக்க கல்விதுறை தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது.

               கடந்த வாரம் நல்லம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய நூலகம் திறக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான நூல்கள் நூலகத்தில் வைக்கப்பட்டது. தினசரி நாளிதழ்கள்மாணவர்களின் எதிர்காலத்திற்கு தேவையான பொதுஅறிவு புத்தகம்அப்துல்கலாம் புத்தகம்தலைவர்களின் வரலாறு புத்தகம் வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாணவரும் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் நாளிதழ்புத்தகம் படிக்க வேண்டும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதுபோல காரிமங்கலம் மாதிரி பள்ளியிலும் நூலகம் திறக்கப்பட்டது.
 
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

            பள்ளிகல்லூரி மாணவமாணவிகள்இளைஞர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் நூலகங்கள் மூலம் அறிவை வளர்த்து கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

                 அனைத்து பள்ளிகளிலும்மாணவமாணவிகளுக்கு நூலகம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நூலகம் தொடர்பான வாசகங்களை பள்ளி தலைமை ஆசிரியர்கள் எழுதி வைத்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில்89 மேல்நிலைப் பள்ளி, 114 உயர்நிலைப் பள்ளிகளில் நூலகம் திறக்கப்பட்டுள்ளது. நூலகம் இல்லாத பள்ளிகளில் நூலகம் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Thursday 7 November 2013

சமச்சீர்க் கல்வி

Posted: 17 Oct 2013 10:30 AM PDT
·        
·        
இன்றைய சமகாலக் கல்வியில் சமச்சீர் என்ற வார்த்தை எல்லார் வாயிலும் உச்சரிக்கப்படும் ஒன்று. கடந்த வருடங்களில் தொடங்கிய சமச்சீர்க் கல்வி தற்போது ஒன்பதாம் வகுப்பிற்குப் பாய்ந்துள்ளதை அநேகர் ஆதரிக்கின்றனர். சிலர் புறக்கணிக்கின்றனர். அந்த விஷயத்திற்கு நாம் போகத்தேவையில்லை. இப்போது நாம் பார்க்கப்போவது, அரசு - ஆசிரியர் - மாணவர் என்ற சிறிய முக்கோணத்திற்குள் இயக்கப்படும் சமச்சீர்க் கல்விக் கொள்கையைப் பற்றியதுதான்.
சமச்சீர்க் கல்வித் திட்டத்தை முன்னிலைப்படுத்திய அரசின் செயல்பாட்டைப் பற்றி முதலில் காண்போம். ஏற்கெனவே இருந்த கல்விக் கொள்கையில் உள்ள பின்னடைவு அல்லது சமூக மாற்றத்திற்கான புதியவழிக் கல்விக்கொள்கையாக இது அமையும் என அரசு நினைத்திருக்கலாம்.
வழக்கமான பாடத்திட்டத்தில் ஒவ்வொரு மாதம், ஒவ்வொரு வாரம் ஆசிரியர் நடத்த வேண்டிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டிருக்கும். அந்தந்த வாரத்திற்குள்ளான பாடத்தை நடத்தி, தேர்வு வைத்து, மாணவர்களை தேர்ச்சி அடைய வைக்கவேண்டும் என்கிற உத்வேகம் அதில் இருக்கும். இதனடிப்படையில் காலாண்டுத் தேர்வு தொடங்கி முழுஆண்டுத் தேர்வு வரையிலான தேர்வுகளும், அதற்குள் இடைப்பருவத் தேர்வுகளும் நடக்கும். ஒரு மாணவனின் தேர்ச்சி வெற்றி என்பது பாட அளவில் குறைந்தது 35 சதவீதம், அதிகபட்சம் 100 சதவீதம்.
இது இப்போது சமச்சீர்கல்வியில் மாறி இருக்கிறது. ஒவ்வொரு பாடத்திட்டத்திலும், இந்த வாரம் நடத்தவேண்டிய பாடம் எது, அதில் ஆசிரியர் தரவேண்டிய வளரறி மதிப்பீடுகள் FA (a), (b) (1. வகுப்பறையில் மாணவரின் பாட எதிர்வினை), (2.மாணவர்களுக்குத் தரவேண்டிய செயல்திட்டம்) எவை என்பது குறிப்பிடப்பட்டுள்து நாம் வரவேற்கத் தகுந்த ஒன்று. அரசின் பாடத்திட்டத்தினை ஆசிரியர்கள் மாற்றி அமைத்துக்கொள்ளலாம் என்கிற அரசின் நெகிழ்வுத்தன்மையையும் நாம் பாராட்டவேண்டும். ஆக, இத்துடன் அரசின் மகத்தான பணி தொடங்கிவிட்டது..
அடுத்து, ஆசிரியர்களின் நிலையைப் பார்ப்போம். அரசு வெளியிட்டுள்ள பாடத்திட்டத்தின்படி அவர்கள் நடந்துகொள்கிறார்களா என்பதே ஐயம். இன்னும் இதை நடைமுறைப்படுத்த ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டும், அவர்கள் தெளிவு அடையவில்லை என்றே தோன்றுகிறது. பாடத்திட்டத்தின்படி குறுதேர்வு வினாத்தாள்களை (மாதிரிகளை அரசு வழங்கியுள்ளது) அவர்கள் தயாரித்து, மாணவர்களுக்குக் கற்றலடைவுச் சிறு மதிப்பீடு வைத்து, மதிப்பெண்ணைப் பதிவேட்டில் குறிக்கிறார்களா அல்லது 'ஏறக்குறைய' என்ற அடிப்படையில், மாணவர்களின் கல்வித்தரத்தை வைத்து மதிப்பெண் தருகிறார்களா என்பது தெரியவில்லை.
உதாரணமாக, வளரறி மதிப்பீடு--விற்கு 40 மதிப்பெண். அதில் ஏதாவது நான்கு பாடவேளையில், 10 மதிப்பெண்ணிற்கு 4 ஆக வைத்துக் கொள்ளலாம். இதற்கு ஆதாரம் தேவையில்லை. அதாவது பாடம் நடத்தும்போது முன்னும் பின்னுமாகக் கற்றல் - கற்பித்தலில் மாணவனின் எதிர்வினை என்பதால் தேவையில்லை. எனவே ஆசிரியர்கள் தாராளமாக, நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்கு 10 மதிப்பெண், மோசமாகப் படிக்கும் மாணவர்களுக்கு 5 மதிப்பெண் குறித்துக்கொள்ளலாம் என்கிற அவல நிலை இதில் ஏற்படுகிறது. இப்படி 4 மதிப்பீடுகளிலும் இச்செயல் நிகழும்.
மதிப்பிற்குரிய ஆசிரியர்கள் இந்த தவறைச் செய்வதில்லை. தெளிவற்ற, குழப்பமான, ஆதாரம் எதுவும் தேவையில்லை என்கிற நிலையை உணர்ந்த சில மோசமான ஆசிரியர்கள் மதிப்பெண்ணை வழங்கிவிடுகிறார்கள். இது மாணவர்களைப் பாதிக்கும் ஒன்று.
கம்பர் பற்றி ஆசிரியர் வினவும் ஐயங்களுக்கு, உடனடியாகப் பதில் தரும் மாணவர்களுக்கு அதிக மதிப்பெண் வழங்குவது தவறில்லை. பதிலளிக்க தயங்கும், அதைப்பற்றித் தெரியாத மாணவர்களுக்குக் கம்பர் பற்றி விஷயங்களை, அம்மாணவர்களுக்குச் சொல்லி, அவர்களைத் திரும்ப சொல்ல வைக்கவேண்டும் என்று கல்விக்கொள்கை சொல்கிறது. இதை ஆசிரியர்கள் பின்பற்றுகிறார்கள் என்றால் மகிழ்ச்சிதான்.
பாடக்குறிப்பேட்டில் பயன்படுத்தும் கருவிகள் என்ன என்பதைக் குறிப்பிடும் ஆசிரியர்கள், அதைக் கடைபிடிக்கும்போது கற்பித்தல் சிறப்பாக நடைபெறும். தனக்கான வளரறி மதிப்பீடுகளை (குறுந்தேர்வு, செயல்திட்டம்) ஆசிரியர்கள் மாற்றிக் கொள்ளலாம் என்கிற முழு சுதந்திரத்தை அரசு வழங்கிய பின், பொதுபுத்தி மனோநிலையில், எல்லா பாட ஆசிரியர்களும் அதைப் பின்பற்றும் செக்குமாட்டுத்தனத்தை விடவேண்டும். அவர்களாக, தம் மாணவர்களின் கல்வித் தரத்தினை முன்னேற்றும் வகையில் வளரறி மதிப்பீடுகளை அமைத்துக்கொள்ளவேண்டும்.
கிராமப்புற மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட செயல்திட்டத்திற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் ஆசிரியர்கள் மேற்கொள்ளவேண்டும். அதாவது பள்ளு இலக்கியம் பற்றியோ, அக்பர் பற்றியோ செயல்திட்டம் தரும்போது, கிராமப்புற மாணவர்களுக்கு அதற்கான வழிவகைகள் அமைவதில்லை. இணையமோ, நூலகமோ இல்லாத கிராமப்புற மாணவர்களுக்கு ஆசிரியர்தான் பள்ளி வழியாகவோ, தன்னுடைய பொருளாதாரத்தின் வழியாகவோ செய்யவேண்டும். அவர்கள் நாம் பெறாத பிள்ளைகள் என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். செய்வார்களா ஆசிரியர்கள்? பாடத்தினைத் தவிர்த்து, பாடம் தொடர்பான பல விஷயங்களை மாணவர்கள் கற்கத்தான் சமச்சீர்க்கல்வி. இதை மாணவர்களிடம் கையளிப்பார்களா ஆசிரியர்கள்?
இனி, மாணவர்கள். இந்தக் கல்விக்கொள்கை இவர்களுக்காக வடிவமைக்கப்பட்டது என்றும் இவர்கள் அறிவாளியாக ஆக ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் ஆசிரியர்கள் அவ்வப்போது வகுப்பறையில் சொல்லி வருகிறார்கள். இருந்தாலும் நகர மாணவர்களைவிட, கிராமப்புற மாணவர்கள் நிலைதான் படுமோசம். நெகிழ்வான கல்விக்கொள்கையினை அவர்கள் சிறிது தடுமாற்றத்துடன் வரவேற்கிறார்கள். காரணம் செக்குமாட்டு வாசிப்பிலிருந்து, புதிய, எளிமையான கற்றல் தளத்திற்கு அவர்கள் மாறிவிட்டதே. கடைசி பெஞ்ச் மாணவர்களை முதல் பெஞ்ச மாணவர்களாக மாற்றுவதே இக்கொள்கை. ஆனால், அவர்கள் உழைக்காமலேயே மதிப்பெண் பெற்றுவிடுகிறார்கள். அதாவது குறைந்த மதிப்பெண் 5. இதிலிருந்து அவர்கள் விடுபடவேண்டும். குழு மனப்பான்மையுடன் கற்றல்திறன் அதிகம் உள்ள மாணவர்களுடன், ஆசிரியருடன் இணைந்து தம் கற்றலை மேம்படுத்த முனையவேண்டும்.
ஆசிரியர் வழியாக மட்டும் கற்றல் என்பது இல்லாமல், ஆசிரியர் உதவியுடன் கற்றல் என்பதை மாணவர்கள் உணரவேண்டும். இணையமோ, நூலகமோ இல்லாத கிராமம் எனில், ஆசிரியர்கள் உதவியுடன் கற்றலை உருவாக்கிக்கொள்ளலாம். அதற்கு மாணவனின் வேட்கையும் வேகமும் தான், ஆசிரியர்களை உழைக்கச்செய்யும். அந்த வேட்கையையும் வேகத்தையும் மாணவர்கள் பெற்றிடவேண்டும். இலவச மதிப்பெண்களைப் புறக்கணித்து, தனது தகுதியை மேம்படுத்தி, தன் உழைப்பு மதிப்பெண் பெற முயலவேண்டும். மிகத் தைரியமாக, ஆசிரியர்களிடம் உதவி கேட்கவேண்டும். தன்னுடைய கற்றலில் உள்ள குறைபாடுகள் எவை? அவற்றை எவ்வாறு போக்குவது? என்கிற ஆலோசனையை மாணவர்கள் ஆசிரியரிடம் பெறவேண்டும். அரைகுறை கல்வி அறிவு பெற்ற பெற்றோர், கிராமத்திலிருந்து வரும் மாணவர்களுக்கு, மிகச் சிறந்த இடம் பள்ளிதான். அதை இவர்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
கடைசியாக சில விஷயங்கள்...
அரசு செய்யவேண்டியவை
1. அரசு மிகச் சிறந்த பாடத்திட்டத்தினைத் தயாரித்துள்ளது. கூடவே way2cce.com என்ற இணையத்தின் வழியாக ஆசிரியர்களுக்கான -மதிப்பெண் பதிவேடு தயாரித்துள்ளது. (இதில் பெரும்பாலான பள்ளிகள் தங்கள் பெயரினைப் பதிவு செய்துகொள்ளவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. எத்தனை ஆசிரியர்களுக்கு இது தெரியும் என்றும் தெரியவில்லை. இதில் மதிப்பெண்களைப் பதிவு செய்யவேண்டும் என்கிற கட்டாயத்தை அரசு உருவாக்கவேண்டும்.)
2. நூலகமோ, இணையமோ இல்லாத ஊர்களில் இயங்கும் பள்ளிகளில், மாணவர்கள் பயன்படுத்த கணினி வசதியை ஏற்படுத்தியிருந்தாலும், அது முழுமையாகச் செயல்படுகிறதா என்பதை கவனிக்கவேண்டும்.
3. மாணவர்கள் கற்றலை மேம்படுத்த, ஆசிரியர் அளிக்கும் செயல்திட்டங்களை உருவாக்க 'நூலகம்' என்கிற பாடவேளையை உருவாக்கவேண்டும்.
4. ஆசிரியர்கள் பள்ளியில் உள்ள கணினியைப் பயன்படுத்திக்கொள்ள, அச்சு (print ) எடுத்துக்கொள்ள தலைமையாசிரியர் அனுமதிக்கவேண்டும் என்ற கட்டாயத்தை அரசு ஆணையிடவேண்டும். (பெரும்பாலான பள்ளிகளில் பணம் இல்லை என்கிற கதையைத் தான் தலைமையாசிரியர்கள் சொல்கிறார்கள். பல தலைமையாசிரியர்களுக்குக் கணினியை இயக்கத் தெரியாது என்பது வேறு விஷயம்)
5. கணிப்பொறி என்கிற பாடவேளையை அரசு உருவாக்கியுள்ளமைக்கு நன்றி. ஆனால் கிராமப்புற மாணவர்கள் அத்தனைபேருக்கும் கணிப்பொறி இயக்கத் தெரிந்திருக்கிறதா என்பதைக் அவ்வப்போது கண்காணிக்கும் பணியையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
ஆசிரியர்கள் செய்யவேண்டியவை
1. தலைமை ஆசிரியர்கள் உதவியில்லாமல், முழு முயற்சி எடுத்துத் தன் பொருளாதாரத்தினை முன்வைத்து கற்றலுக்கான கருவிகளை மாணவர்களுக்குத் தயாரித்துத் தர முன் வரவேண்டும்.
2. கற்றல் குறைவான மாணவர்களுக்கு, இவர்கள் நம் பிள்ளைகள் என்கிற உணர்வுடன் மீண்டும் கற்பிக்கவேண்டும்.
3. இணையத்தை இயக்கவும், தேடுபொறியில் செயல்படவும் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கவேண்டும். (கணிப்பொறி பாடவேளை என்பது வெறும் பாடவேளையாக இருக்கிறது.) ஒவ்வொரு மாணவரும் கணினியை இயக்கத் தெரிந்திருக்கிறார்களா என்பது குறித்து ஆசிரியர்கள் ஆய்வு மேற்கொள்ளவேண்டும்.
மாணவர்கள் செய்யவேண்டியவை
1. கற்றல் குறைவாக இருப்பின், தகுந்த பாட ஆசிரியரிடம் தன் கற்றலை மேம்படுத்திக் கொள்ளவேண்டும்.
2. செயல்திட்டத்திற்கான கருவிகள் இல்லாதபோது, ஆசிரியரிடமே அதைப் பெற்று செயல்படவேண்டும்.
3. இலவச மதிப்பெண்ணை மறுத்து, உழைப்பு மதிப்பெண்ணைப் பெற வேண்டும்.
4. எந்த தயக்கமும் இல்லாமல், தன் ஐயங்களைக் கேட்டு தெளிவு கொள்ளவேண்டும்.
ராணிதிலக், கட்டுரையாளர் - தொடர்புக்கு raa.damodaran@gmail.com