மனதின் பொய் முகமூடியை கிழித்தெறிந்து உண்மையை உரக்கச் சொல்லவைக்கும் பேராற்றல் மிக்கவை புத்தகங்கள். படிக்கும்போது மனதுக்குள் பூப்பூப்பதும், பூகம்பம் தோன்றுவதுமான மாயத்தை நிகழ்த்தும் புத்தகங்கள் மனசாட்சியின் ஆன்மவிலாசம். அங்கே யாரும் தவறுதலாய் திரித்துக் கூறமுடியாது. மனது மட்டும் பார்க்கும்… கேட்கும்… அனுபவித்து பரவசப்படும்… அந்த நுட்பமான அறிவு, எழுத்துக்களின் வழியே சிந்தனைகளை தட்டியெழுப்பி நம்மை யாரென்று உலகிற்கு காட்டும். இன்று (ஏப்.,23) உலக புத்தக தினம். படித்த புத்தகத்தையும், எழுதிய புத்தகத்தை பற்றியும் விமர்சிக்கின்றனர்,எழுத்தாளர்கள் வாழ்க்கையின் அழகிய துணைவன் எழுத்தாளர் வின்சென்ட், மதுரை ஒரு புத்தகத்தை எப்படி படிக்க வேண்டும் புத்தகங்கள் என்னவெல்லாம் செய்கின்றன என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அவை தனிமனித வாழ்க்கையை, உலகையே மாற்றுகின்றன. நம் வாழ்க்கை பயணத்தில் மிகச்சிறந்த துணைவனாக கூடவே வருகின்றன. எப்படி படிக்க வேண்டும் என நிறைய பேருக்கு தெரியவில்லை. பொழுதுபோக்குக்காக, பிரச்னையை கண்டறிவதற்காக, தீர்வைத் தேடுவதற்காக படிக்க வேண்டும். இளைஞர்கள் இணையதளத்தில் இருப்பதை படித்து உள்வாங்கி அதைநோக்கி பயணிக்கவேண்டும். தத்துவ நுாலாக இருந்தாலும், சிறுகதையாக இருந்தாலும் முழுமையாக படிக்க வேண்டும். புத்தகங்களை எப்படி அணுகவேண்டும், படிக்க வேண்டும் என ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்றுத்தர வேண்டும். அலை குடிபோக சிறுவீடு கவிஞர் நந்தலாலா, திருச்சி பெருமரங்களுக்கு அடியில் விதை இருப்பதைப் போல, சமுதாயத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கு விதையாக இருப்பது புத்தகங்கள்தான். உருண்டை வடிவ உலகமாக இருந்தாலும், செவ்வக வடிவ புத்தகங்களின் வழியே நாம் அதைப்பார்க்கிறோம். அவை தான் மனிதனை செதுக்குகின்றன. ஒரு கவிஞர் எழுதிய புத்தகத்தின் கவிதை என்னை ஈர்த்தது. கடற்கரையில் அமர்ந்து மணலால் ஒரு குழந்தை வீடு கட்டுகிறாள். எப்போது குடிபோகலாம் என்று குழந்தையிடம் அப்பா கேட்கிறார். 'நாம் குடி போவதற்கு அல்ல. கடல் குடி வருவதற்கான வீடு' என்று குழந்தை சொல்வதாக கவிஞன் முடிக்கிறான். என்ன ஒரு நேர்மறையான பார்வை. அலையடிக்கும் இடத்தில் வீடு கட்டினால் அலை வீட்டை அழித்துவிடும் என்று சொல்கிறோம். இல்லை, அலை குடிவருகிறது என, மடைமாற்றம் செய்து, வாழ்க்கையை அழகுமிக்கதாக மாற்றுவது புத்தகங்கள் தான். ஒரு மனிதன் புத்தகங்கள் படிப்பதற்காக மட்டும் தலைகுனியலாம். அதிகமாக தலைகுனிந்து படிக்கும் மனிதனின் தலை எதிர்காலத்தில் நிமிர்ந்து நிற்கும். கல்கியின் கறுப்பு வெள்ளை எழுத்தாளர் வரலொட்டிரெங்கசாமி கல்கியின் பொன்னியின்செல்வன் புத்தகத்தை, ஆறாண்டு முயற்சிக்கு பின் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டேன்.அதன்பின் என்னுடைய எழுத்துநடை, கதை அமைப்பு, பாத்திரங்கள் அமைப்பு கூட வரவேற்கத்தக்க விதத்தில் மாறியிருப்பதாக வாசகர்கள் சொல்லும் போது அந்த பெருமை கல்கிக்கு தான் என, மனதுக்குள் சொல்லிக் கொள்வேன். அவரது பாத்திரப்படைப்பில் ஒரு விசேஷம் இருக்கிறது.கறுப்பு என்றும் வெள்ளை என்றும் முத்திரை குத்தி கதாநாயகன் என்றும், வில்லன் என்றும் பிரித்து காட்டவில்லை. நாம் சந்திக்கும் மனிதர்களை நல்லவர்கள் என்றும், தீயவர்கள் என்றும்என வரவேற்று ஒதுக்குவது கூடாது என்று சொல்லியிருப்பார். அவரது கதையின் கதாபாத்திரங்களின் பட்டியல் 15 பக்கங்களுக்கு நீளும். ஆனாலும் சிறிய பாத்திரங்கள் கூட கதையை நகர்த்துவதாக காண்பித்திருப்பார். நாம் ஆயிரக்கணக்கான மானிதர்களை சந்திக்கிறோம். அவர்கள் நம் வாழ்க்கையை முன்நகர்த்த ஏதோ ஒரு விதத்தில் உதவுகின்றனர். இதை புரிந்து கொண்டால் மற்றவர்களுடான நம் உறவு மேம்படும். நீங்கள் மனம் லயித்து படிக்கும் புத்தகங்கள் உங்களுக்குள் மிக ஆழமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. உங்களை புரட்டிப் போட்டு விடும் புத்தகம் ஒருநாள் கிடைக்கும். அந்தநேரம் உங்கள் வாழ்க்கையே தலைகீழாக மாறும். அதற்கொரு நிபந்தனை. அதை தேட வேண்டுமென்றால் தொடர்ந்து படித்துக் கொண்டே இருக்க வேண்டும். எந்தபுத்தகத்தில் எந்த பேருண்மை வந்து உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போடுமோ … யாராலும் சொல்ல முடியாது. தினமும் பத்து பக்கங்களாவது படிக்க வேண்டும் என்ற உறுதிமொழி ஏற்போம். உருமாற்றும் ஆயுதம் மலர்வதி, எழுத்தாளர், கன்னியாகுமரி சமூகத்தில் நிறைய விஷயங்கள் நடக்கின்றன. நிறைய பேர் பார்க்கிறோம்; பார்க்காமல் போகிறோம். ஒரு படைப்பாளியின் பார்வையில் அது சமூகத்திற்கான அர்ப்பணிப்பாக இருக்கும். சமூகத்தின் உள் ஆழமாக பார்த்து அதில் கிடைத்த அனுபவங்களை துாப்புக்காரி, காட்டுக் குட்டி நாவல்களாக எழுத ஆரம்பித்தேன். சமூகத்தில் அழுக்காக்குபவர்களை மேல்மட்டமாகவும், சுத்தம் செய்பவர்களை கீழ்மட்டமாகவும் பார்க்கிறோம் என்ற மனோபாவத்தை துாப்புக்காரி புத்தகத்தில் வெளிப்படுத்தி னேன். அதைபடித்தவர்களிடம் சுத்தம் செய்பவர்களின் மேல் மரியாதை ஏற்படுத்தியது. காட்டுக்குட்டி நாவல் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்களின் போராட்டத்தை சொல்கிறது. சில புத்தகங்கள் மனிதனை நிறைய மாற்றுகிறது. தைரியத்தை, தன்னம்பிக்கையை கொடுக்கிறது. சமூகத்தில் உண்மையான பாசமும் அக்கறையும் உடையவர்கள் தானாக சாய்வுக்கு தேடுவது புத்தகங்களைத்தான். அதை படிக்கும்போது போராட்டக் குணத்தையோ, தவறான கண்ணோட்டத்தையோ மாற்றிவிடுகிறது. விமர்சன பார்வை சிந்திக்கத் துாண்டும் எழுத்தாளர் ஜான்பாஸ்கோ, திருச்சி மிகச்சிறந்த புத்தகமாக இருந்தாலும் எவ்வளவு பெரிய நுாலாசிரியராக எழுத்தாளராக இருந்தாலும் நமக்குள்இருக்கும் சமூக விரோத கருத்துக்கள் நம்மை அறியாமல் புத்தகத்தில் இடம்பெற வாய்ப்புள்ளது. ஒரு வாசிப்பாளராக மற்றவர்களால் இதை படித்து பார்த்து உணர முடியும். விமர்சன பார்வையுள்ள ஒரு வாசிப்பாளர், சிறந்ததாக மதிக்கப்படுகிற மிகப்பெரிய புத்தகத்தில் உள்ள இதுபோன்ற விஷயங்களை வெளிக்கொணர முடியும். இந்த விமர்சனப் பார்வை தான் நம்மை சிந்திக்க துாண்டும். இந்த பார்வை தான், வாழ்க்கையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் மனித குலத்தை முன்னேறச் செய்யும். இன்னொரு உலகை திறக்க வைக்கும் எழுத்தாளர் தமயந்தி, திருநெல்வேலி இன்னொரு உலகத்திற்குள் போய் வாழ்ந்து பயணிக்கும் உணர்வை தருவது புத்தகங்கள் தான். ஆங்கில எழுத்தாளர் எமிலி டிக்கன்சன் கவிதைகளை படிக்கும் போது, மாற்றுக் கருத்துக்களை, மாற்று அரசியலை எழுதும் போது எந்தளவுக்கு துயரத்தையும் எதிர்ப்பையும் சந்தித்திருப்பார் என்ற கேள்வி என்னை நகர்த்தியது. பிரபஞ்சனின் சந்தியா என்ற நாவலில் வரும் சந்தியா கதாபாத்திரம்தான், என் வாழ்வியல் கட்டமைப்பை உருவாக்கியது. குறிப்பாக பொய் முகமூடி அணியக்கூடாது என்பதை கற்றுக் கொண்டேன். பெண்களுக்கு பிறந்த நாள், விழாக்களுக்கு வாழ்த்த நினைத்தாலோ, சாதனைகளை பாராட்ட நினைத்தாலோ புத்தகங்களை பரிசளியுங்கள். என் தந்தை புத்தகங்களை பரிசளித்ததால் தான் எழுத்தாளராக நிற்கிறேன்
Sunday, 23 April 2017
வங்கிகளில் பணம் அனுப்பும் முறை RTGS, NEFT ,IMPS , UPI பற்றி தெரிந்து கொள்வோம்!!! வங்கிகளில் பணம் அனுப்பும் முறை பற்றி தெரிந்து கொள்வோம்.
RTGS : Real Time Gross Settlement. வார நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும், சனிக்கிழமை வேலை நாட்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும் RTGS மூலம் பணம் அனுப்பலாம். (வங்கிக் கிளைகளின் வேலை நேரத்தைப் பொறுத்து இது மாறுபடும்). குறைந்தபட்சம் 2 லட்ச ரூபாய் அனுப்ப வேண்டும். தொகை அனுப்பிய உடனேயே பெறுநரின் வங்கிக்கு தகவல் தரப்படும். அடுத்த 30 நிமிடங்களுக்குள் தொகையை பெறுநரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும். எதுவும் பிரச்னை என்றால் உடனடியாக அனுப்புநரின் வங்கிக்கு பெறுநரின் வங்கி தொகையைத் திருப்பி அனுப்பி விட வேண்டும். _____ NEFT : National Electronic Fund Transfer வார நாட்களில் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை. சனிக்கிழமை வேலை நாட்களில் காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை. இதில் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஒரு தடவை அனுப்பும் வங்கியிலிருந்து மும்பையில் உள்ள NEFT சர்வீஸ் செண்டருக்கு தகவல் அனுப்பும். அங்கிருந்து பெறுநரின் வங்கிக்கு தகவல் அனுப்பப்பட்டு பணம் பெறுநரின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும். Core banking சிஸ்டத்தில் செயல்படுவதால் சம்பந்தப்பட்ட வங்கிக் கிளை செயல்பட்டாலும், இல்லாவிட்டாலும் பிரச்னை இல்லை. உள்ளூர் விடுமுறை தினங்களிலும் கூட பாதிப்பு இருக்காது. NEFT-ல் அனுப்பப்படும் தொகையை அடுத்த 2 மணி நேரத்துக்குள் பெறுநரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்காவிட்டால் அனுப்புநரின் வங்கிக் கணக்கிற்கு அடுத்த ஒரு மணி நேரத்தில் திருப்பி அனுப்பப்பட்டு விட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. _______ மேலே உள்ள இரண்டுமே வங்கி வேலை நாட்களில், வேலை நேரத்தில் மட்டுமே செயல்படுத்தப்படும். IMPS : Immediate Payment Service 24x7 எந்த நேரத்திலும் உடனடியாக பணம் அனுப்பும் முறை. இண்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங், ஏ.டி.எம். ஆகிய வழிகளில் IMPS சர்வீஸ் வசதி உள்ள எந்தவொரு வங்கிக் கணக்கிற்கும் எப்போது வேண்டுமானாலும் பணம் அனுப்பலாம். அடுத்த நொடியில் பெறுநரின் வங்கிக் கணக்கில் பணம் இருக்கும். UPI : Unified Payments Interface இதுவும் IMPS போல தான். ஆனால் NEFT, RTGS, IMPS போன்றவற்றையெல்லாம் ஆன்லைனில் நான் உபயோகிக்கும் போது பெறுநரின் வங்கிக் கணக்கு விபரங்களை நாம் முதலில் பதிவு செய்து அதன் பிறகே தொகை அனுப்ப இயலும். புதிதாக பெறுநரைப் பதிவு செய்தால் சில வங்கிகளில் 30 நிமிடங்களில் தொகை அனுப்பும் வசதி செயல்படுத்தப்படும். சில வங்கிகளில் 24 மணி நேரமாகும். UPI-ஐயைப் பொறுத்தவரை பதிவு செய்து காத்திருக்கத் தேவையில்லை. நேரடியாக பெறுநரின் மொபைல் எண் (அவரும் upi-யில் பதிவு செய்திருக்க வேண்டும்), அல்லது ஆதார் எண், அல்லது வங்கிக் கணக்கு எண் + IFS கோடு (IFSC) ஆகியவற்றைக் கொண்டு உடனடியாக எப்போது வேண்டுமானாலும் தொகை மாற்ற முடியும். இதில் இன்னும் சில வங்கிகள் இணையவில்லை. அந்தந்த வங்கியின் இண்டர்நெட் பேங்கிங்கிலும், மொபைல் செயலியிலும் UPI என்ற ஆப்ஷன் இருக்கும். அல்லது BHIM என்ற மொபைல் செயலியைத் தரவிறக்கிக் கொண்டும் இதனை உபயோகித்துக் கொள்ளலாம்.
தனியார் பள்ளி மாணவர் சேர்க்கை: அரசு இ-சேவை மையம் மூலம் பெற்றோர் விண்ணப்பிக்கலாம்.
கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ், தனியார் பள்ளிகளில் விண்ணப்பிக்க விரும்புவோர், அரசு இ-சேவை (இணைய சேவை) மையங்களை நாடலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்கான கட்டணத்தைச் செலுத்தி உரிய முறையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ், தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் அளவுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும்போது, ஆன்-லைன் முறை பின்பற்றப்படுகிறது. என்னென்ன இணைப்பு: கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் இணையதளத்தில் விண்ணப்பிக்கும்போது மாணவரின் புகைப்படம், பிறப்புச் சான்றிதழ், முகவரிச் சான்றிதழ், பெற்றோரின் வருமானச் சான்றிதழ் ஆகியவற்றை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு பதிவேற்றம் செய்யப்படும் ஆவணம் 400 கே.பி.,க்கு மிகாமல் இருப்பது அவசியம். இதனை கிராமப்புறங்களில் வசிக்கக்கூடிய மாணவர்களின் பெற்றோர்கள் வீட்டில் இருந்தபடியே செய்வது சிரமம். இந்த சிரமங்களைக் கருத்தில் கொண்டு, அரசு இ-சேவை மையங்களின் மூலமும் விண்ணப்பிக்கும் நடைமுறையை தமிழக அரசு தொடங்கியுள்ளது. என்ன செய்ய வேண்டும்: அரசு இ-சேவை மையத்துக்குச் சென்று விண்ணப்பிப்பதற்கு முன்பாக, நாம் தேர்ந்தெடுத்துள்ள பள்ளிகளின் பட்டியலை வரிசைப்படுத்திக் கொள்ள வேண்டும். விண்ணப்பிக்கும்போது ஐந்து பள்ளிகள் வரை விருப்பம் தெரிவிக்கலாம். எனவே, இணைய சேவை மையத்துக்குச் சென்று பள்ளிகளைத் தேர்வு செய்வதற்குப் பதிலாக, வீட்டிலேயே பள்ளிகளைத் தேர்வு செய்து பட்டியலிடுவது சிரமத்தைத் தவிர்க்கும். இ-சேவை மையங்களுக்கு தேவையான சான்றிதழ்களை எடுத்துச் சென்றால் அங்கேயே ஸ்கேன் செய்து, நிர்ணயிக்கப்பட்ட அளவில் அதனை பதிவேற்றம் செய்து கொள்ளலாம். மேலும், அரசு இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்கும்போது நாம் சரியான முறையில் தகவல்களைத் தெரிவித்து அவை உரிய வகையில் பதிவேற்றம் செய்யப்படுகிறதா என்பதை உறுதி செய்த பிறகே விண்ணப்பத்தை சமர்ப்பிக்க ஒப்புதல் அளிக்க வேண்டும்
தொடக்கக்கல்வி 2017-2018 ஆம் ஆண்டுக்கான பணிநிரவல், மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வுக்கான கால அட்டவணை
SPF - சிறப்பு சேமநல நிதி பிடித்தம்- பணிப்பதிவேட்டில் விடுதல் பதிவாக பதிதல் - முதல் பிடித்தற்கான சான்று
உதவி தொடக்க கல்வி அலுவலர் 5 தேர்வுகளில் தேர்ச்சி வேண்டும்
வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் ஏப்ரல் 22,23 தேதிகளில் "தரமான கல்விக்கான மாநிலக் கருத்தரங்கம்"
குழந்தை உரிமைகள்..
கற்றல் அடைவுகள்..
தரமான கல்வி...
கல்வி சார்ந்த குறும்படங்கள்..
என பல தலைப்புகளில் இரண்டு நாள் நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன..
மாவட்டங்கள் சார்பாக அறிக்கை சமர்ப்பிக்க தனி அமர்வு முதல் நாள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது...
அனுமதி இலவசம்..
முன்பதிவு அவசியம்..
நிகழ்ச்சி நடைபெறும் ஸ்ரீகிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, திருத்தணி சாலையில்... அரக்கோணம் பேருந்து நிலையத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது...
காஞ்சிபுரத்தில் இருந்து 1 மணி நேரம்..
நண்பர் ஜி.முனுசாமி, மாநிலச் செயலாளர்
📞9443048510
📞 7598340424
நண்பர்.பூபாலன்
வேலூர் மாவட்டச் செயலாளர்
📞 9944274858
தேனி.சுந்தர்
மாநிலச் செயலாளர்
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
9488011128 / 9047140584
sundar.tnsf@gmail.com
தொடக்கக் கல்வி - DEE TRANSFER APPLICATION 2017 - NEW APPLICATION FORM PDF (ORIGINAL COPY 3 PAGES)
SBI வங்கியில் சில சேமிப்பு கணக்கிற்கு எல்லாம் குறைந்தபட்ச வைப்பு தொகை தேவையில்லை.!!!
என்னடா இது எல்லாம் எஸ்பிஐ வங்கியில் சேமிப்பு வங்கிகணக்குகளுக்கு 5000 ரூபாய் எனக் கூறுகின்றார்கள் இவன் என்ன இல்லை என்று கூறுகின்றான் என்று நீங்கள் கேட்பது எனக்குக் கேட்கின்றது.ஆம், எஸ்பிஐ வங்கியில் சிறு சேமிப்பு வங்கி கணக்கு, அடிப்படை சேமிப்பு வங்கி கணக்குகள், ஜன தண் கணக்குகள்உள்ளிட்ட சேமிப்பு வங்கி கணக்குகளுக்குக் குறைந்த பட்ச இருப்புத் தொகை தேவையில்லை.இந்த அறிவிப்பு எஸ்பிஐ வங்கியின் டிவிட் மூலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்மையில் எஸ்பிஐ வங்கி ஐந்துதுணை வங்கிகளுடன் இணைந்துள்ளது.
Saturday, 22 April 2017
Shaala siddhi எப்படி முடிப்பது? தயார் செய்ய வேண்டியது என்னென்ன? பயனுள்ள குறிப்புகள் உங்களுக்காக…
50 ஆண்டு அரசுப்பள்ளி : கவுரவிக்கிறது கல்வித்துறை.
சில பள்ளிகள், அப்பகுதியினரின் ஒத்துழைப்போடு சிறப்பாக செயல்படுகின்றன. இதில், ௫௦ ஆண்டுகள் பழமையான பள்ளிகளும் உண்டு; இப்பள்ளிகளை கவுரவிக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது.இப்பள்ளிகளை தேர்வு செய்வதற்காக மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் மேற்பார்வையாளராகவும், தொடக்கக் கல்வி அலு
வலரின் நேர்முக உதவியாளர் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்; உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள், கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள் என, 12 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
