Tuesday, 18 November 2014

தற்செயல் விடுப்பு விதிகள்

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


1. ஒரு ஆண்டிற்கு 12 நாட்கள் தற்செயல் விடுப்பு வழங்கப்படும். ஒரே நேரத்தில் பத்து நாட்கள் தனியாகவோ , அரசு விடுமுறை அல்லது ஈடுசெய்யும் விடுப்பு முதலியவற்றுடன் சேர்த்தோ அனுபவிக்கலாம்.


2. அவ்வாறு நாட்கள் தொடர்ந்து அனுபவிக்கும் போது , இயற்கை சீற்றம், தேசிய தலைவர் மரணம் , பந்த், பண்டிகை, திடீர் விடுமுறை காரணமாக 11வது நாள் அரசு விமுறை என அறிவிக்கப்பட்டால் ஊழியர் 10-க்கு மேற்பட்ட அந்த நாளையும்விடுப்பாக அனுபவிக்கலாம்.
(அ.நி.எண். 309 ப.ம.நி.சி.(அவி.11) நாள் 16.08.93)
3. தற்செயல் விடுப்பை ஈட்டிய விடுப்பு மற்றும் பிற முறையான விடுப்புடன் இணைத்து அனுபவிக்க இயலாது.
4. தற்செயல் விடுப்பு விண்ணப்பத்தில் அதற்கான காரணத்தை குறிப்பிட வேண்டியதில்லை. (அ.க.எண். 1410 ப.ம.நி.சீ துறை 2.12.77 ).
5. தற்காலிக பணியாளர் மற்றும் தகுதிகாண் பருவத்தினருக்கு 3 மாதங்களுக்கு 2 நாட்கள் என்ற அளவில் இவ்வுடுப்பு வழங்கப்படும். 
(அவி. இணைப்பு VI )
6. தகுதிகாண்பருவம் முடித்தவர் / நிரந்தர பணியாளர் ஆண்டு துவக்கத்திலேயே பணிநிறைவு பெரும் பணியாளருக்கு 12 நாட்கள் தற்செயல் விடுப்பை ஆண்டு துவக்கத்திலேயே வழங்கலாம்.
(அரசு கடித எண். 61559 /82-4 ப.ம.சீ துறை நாள்.17.1.83)
7. குறைந்தபட்சம் அரைநாள் சிறுவிடுப்பு அனுமதிக்கப்படும்.
8. அவசர காரணங்களுகளுக்காக முதலில் விடுப்பு எடுத்து விட்டு பின்னர் இதற்கான விண்ணப்பத்தினை அளிக்கலாம்.
( அரசுக் கடிதம் 61559 /82 -4 ப.ம.சீ துறை நாள். 17.1.83

அதிகரிக்கும் ஆங்கில மோகத்தால் அரசு தொடக்கப்பள்ளிகளில் குறைந்துவரும் மாணவர்கள்

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


            அதிகரித்து வரும் ஆங்கில மோகத்தால் அரசு தொடக்கப் பள்ளிகளில் போதிய அளவில் மாணவர் சேர்க்கை இல்லாமல் குறைந்து வருகிறது. இதற்கு அடிப்படை காரணம் மக்களிடையே வளர்ந்து வரும் ஆங்கில மோகம் தான். 
 
          அரசு பள்ளிகளில் உள்ளது  போல் பரந்துவிரிந்த  விளையாட்டு மைதானம், பெரிய விசாலமான வகுப்பறைகள், நல்ல காற்றோட்டமான சூழ்நிலை பெரும்பாலான தனியார் பள்ளிகளில் இல்லை. இருப்பினும் தற்போது உள்ள நிலையில் சாதாரண வேலை பார்ப்பவர்கள் கூட தனியார் மெட்ரிக் பள்ளிகளையே நாடி வருகின்றனர்.  

           அதே நேரம் இந்த பள்ளிகளில் பணியுரியும் ஆசிரியர்களில் 80 சதவீதம் பேர் தங்கள் குழந்தைகளை மெட்ரிக் பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்கின்றனர். பெரும்பாலன அரசு தொடக்கப் பள்ளிகளில் இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். ஒருசில பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லாத நிலையும் உள்ளன. இரண்டு ஆசிரியர்களை வைத்து 1 முதல் 5ம் வகுப்புவரை உள்ள மாணவர்களுக்கு எவ்வாறு பாடம் நடத்துவார்கள் என பெற்றோர்கள் எண்ணுவதும் இத்தைகைய நிலைக்கு காரணமாக உள்ளது. ஒரு சில பள்ளிகளில் ஆசிரியர்கள் அதிகமாக இருந்தும் மாணவர்கள் இல்லாத நிலை உள்ளது.  மாணவர்கள் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் குறைந்து கொண்டே வருகிறது. இதேநிலை நீடித்தால் இன்னும் 10 ஆண்டுகளில் அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை இல்லாமல் போகும் நிலை ஏற்படும் என கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்த கல்வியாளர்கள் சிலர் கூறுகையில். கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்வழி பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை என்பது குறைந்து கொண்டேவருகிறது. தற்போது நடைமுறையில் உள்ள செயல்வழிகற்றல் முறையால் மாணவர் சேர்க்கை வெகுவாக குறைந்து உள்ளது. அதேபோல் ஒரு கி.மீக்கு இடையே மற்றொரு பள்ளி இருக்க கூடாது என அரசு ஆணை உள்ளது. இந்த விதி மீறப்பட்டு அரசு பள்ளிகளுக்கு அருகிலேயே தனியார் ஆங்கிபள்ளிகள் புற்றீசல் போல பெருகிவருகிறது. மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க தமிழ்வழியில் கற்கும் ஆர்வத்தை மாணவர்கள், பெற்றோர்களிடம் உருவாக்க வேண்டும். அரசு பள்ளிகளில் பணியுரியும் அனைத்து ஆசிரியர்களும் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் தான் சேர்க்க  வேண்டும் என உத்தரவு இடவேண்டும். மாணவர்களுக்கு  சிறப்பு ஆங்கிலபயிற்சி அளிக்க வேண்டும். தமிழ்வழியில் படிக்கும் மாணவர்களுக்கு சிறப்பு உதவித் தொகை வழங்க வேண்டும் என்றனர்.

தமிழகத்தில் காற்று வாங்கும் தொடக்கப்பள்ளிகள் : 4 மாணவர்களுக்கு பாடம் நடத்த 2 ஆசிரியர்கள்

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


         பல தொடக்கப்பள்ளிகளில் ஒற்றை இலக்க எண்ணிகையிலேயே மாணவர்கள் படிக்கின்றனர். சேர்க்கையை அதிகரிப்பதற்காக அறிமுகம் செய்யப்பட்ட ஆங்கில வழிக் கல்விமுறையும் கைகொடுக்கவில்லை.
         தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் கல்வித்தரத்தை உயர்த்தவும், மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும் பள்ளிக்கல்வி மற்றும் தொடக்க கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. குறிப்பாக காலணியில் தொடங்கி நோட்டுப்புத்தகம், சீருடை, கல்வி உபகரணபெட்டி, உலக வரைபட புத்தகம், மதிய உணவு என 15க்கும் மேற்பட்ட இலவச திட்டங்களை வழங்கி வருகிறது.
மேலும் கடந்த 2 ஆண்டுகளாக அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்விமுறையும் அறிமுகம் செய்யப்பட்டது. மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்க சிறப்பு பிரசார இயக்கங்களும் நடத்தப்படுகின்றன. இவ்வாறு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டாலும் பல பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.
குறிப்பாக தொடக்கப்பள்ளிகளில் பலவற்றின் நிலை மிகவும் பரிதாபகரமாக உள்ளது. கிராமப்பகுதிகளில் மட்டுமின்றி மாநகர, நகரபகுதிகளில் உள்ள சில தொடக்கப்பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை உயர்வதற்குப் பதிலாக குறைந்து வருவதாக கல்வியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
உதாரணமாக நெல்லை மாநகர பகுதி எல்லைக்குள் உள்ள சில தொடக்கப் பள்ளிகள் மாணவர்களின்றி வெறிச்சோடி வருகின்றன. பாளை வட்டார அளவில் உள்ள சில பள்ளிகளில் இதை கண்கூடாகக் காணமுடிகிறது. 1 முதல் 5ம் வகுப்பு வரை கற்றுத்தரப்படும் ஒரு தொடக்கப்பள்ளியில் மொத்த மாணவர்கள் எண்ணிக்கையே ஏழு மட்டும் தான். இதில் தினமும் 3 பேராவது விடுப்பு எடுக்கின்றனர்.
எஞ்சிய 4 மாணவர்களுக்கு கற்றுக் கொடுப்பதற்காக இப்பள்ளியில் ஒரு தலைமை ஆசிரியரும் மற்றொரு ஆசிரியரும் உள்ளனர். மேலும் இந்த 4 பேருக்கும் மதிய உணவு தயாரித்து வழங்க சத்துணவு ஊழியர் மற்றும் ஒரு உதவியாளரும் பணி புரிகின்றனர்.
இதேபோல் மற்றொரு பள்ளியில் 9 மாணவர்கள் படிக்கின்றனர். இதில் 7 மாணவர்கள் வகுப்புக்கு வருவதே அரிதாக உள்ளது. இங்கும் 2 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். பாளை புறநகரில் மற்றொரு பள்ளியின் வருகை பதிவேட்டில் மாணவர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்திலேயே உள்ளது.
பாளை. மட்டுமின்றி மாவட்டத்தில் உள்ள பல வட்டாரங்களில் இருக்கும் தொடக்க பள்ளிகளில் இந்த நிலையே காணப்படுகிறது. இதுபோல் மாநிலம் முழுவதும் குறைந்த எண்ணிக்கையில் மாணவர்கள் பயிலும் பள்ளிகள் பல இருப்பதாக கல்வியாளர்கள் கூறுகின்றனர். மேலும் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்காக அரசால் அறிமுகம் செய்யப்பட்ட ஆங்கிலவழிக்கல்வி முறையும் எடுபடவில்லை. இதனால் மாணவர்களுக்கு தமிழ்வழியிலேயே பாடம் நடத்தப்படுகிறது.
இது குறித்து கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களை சேர்ந்தவர்கள் கூறியதாவது:
சில தொடக்கப்பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பது உண்மைதான். இலவச திட்டங்களை அள்ளி வழங்கினாலும் பெற்றோர் மத்தியில் தனியார் பள்ளிகள் மீதான மோகம் அதிகரித்து வருவதே இதற்கு காரணம்.
தனியார் பள்ளிகளின் சீருடை அமைப்பு, அங்கு கூடுதலாக கற்றுத்தரப்படும் கல்வி, விளையாட்டுகள் மற்றும் ஊக்குவிப்பு நிகழ்ச்சிகள் போன்றவை பெற்றோரை கவர்கிறது. சாதாரண கூலி தொழிலாளிகூட தன் மகன், மகளை வசதிக்கு ஏற்ப ஏதாவது ஒரு தனியார் பள்ளியில் படிக்க வைக்கவே விரும்புகிறார். மேலும் அரசுப் பள்ளிகளில் கடந்த 2 வருடமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஆங்கில வழிக்கல்வியும் முழுமையாக நடைபெறவில்லை. ஆசிரியர்களுக்கு தேவையான பயிற்சி அளிக்காததே இதற்கு காரணம்.
மாணவர் அதிகம் ஆசிரியர் குறைவு
இதுகுறித்து அனைத்து ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
ஈராசிரியர் பள்ளியில் தற்செயல்விடுப்பு, இலவச திட்டங்களை எடுத்து வர செல்லுதல், அனைவருக்கும் கல்வித்திட்ட பயிற்சி வகுப்புகளில் பங்கேற்பது, மருத்துவ விடுப்பு போன்ற பல காரணங்களால் 220 முழு வேலை நாட்கள் பணி செய்ய வேண்டிய நிலையில் இரண்டு ஆசிரியர்களும் 165 நாட்களுக்கும் குறைவாகவே பணிகளை கவனிக்கின்றனர்.
1 முதல் 5ம் வகுப்புவரை பாடம் நடத்த வேண்டிய நிலையில் இதர பணிகளை இவர்கள் கவனிப்பதால் பள்ளிகள் மீது பெற்றோருக்கு நம்பிக்கையின்மையை ஏற்படுத்துகிறது. அதே நேரத்தில் 140க்கும் அதிகமாக மாணவர்கள் பயிலும் தொடக்கப்பள்ளிகளும் இருக்கின்றன. இங்கு ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. மொத்தமே 4 ஆசிரியர்களை கொண்டு சமாளிக்கின்றனர். இதில் ஒருவர் மருத்துவ விடுப்பில் செல்லும்போது 3 ஆசிரியர்களே 140க்கும் மேற்பட்ட மாணவர்களை கவனிக்கும் நிலை உள்ளது. இந்த நிலையை மாற்ற நடவடிக்கை எடுத்தால் மட்டுமே மாணவர்கள் எண்ணிக்கை குறையாமல் தடுக்கப்படுவதுடன் தனியார் பள்ளிகளை புறந்தள்ளி முன்னேற முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தனியார் பள்ளிகளின் சீருடை அமைப்பு, அங்கு கூடுதலாக கற்றுத்தரப்படும் கல்வி, விளையாட்டுகள் மற்றும் ஊக்குவிப்பு நிகழ்ச்சிகள் போன்றவை பெற்றோரை கவர்கிறது. சாதாரண கூலி தொழிலாளிகூட தன் மகன், மகளை வசதிக்கு ஏற்ப ஏதாவது ஒரு தனியார் பள்ளியில் படிக்க வைக்கவே விரும்புகிறார். மேலும் அரசுப் பள்ளிகளில் கடந்த 2 வருடமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஆங்கில வழிக்கல்வியும் முழுமையாக நடைபெறவில்லை. ஆசிரியர்களுக்கு தேவையான பயிற்சி அளிக்காததே இதற்கு காரணம்.
மேலும் சில பகுதியில் மக்கள் தொகை எண்ணிக்கை மிகவும் உள்ளது. உதாரணமாக மாநகர எல்லைக்குள் உள்ள ஒரு தொடக்கப்பள்ளி அமைந்துள்ள பகுதியில் 120 குடியிருப்புகள் உள்ளன. விவசாயத்தை நம்பி உள்ள இப்பகுதியில் 1 முதல் 5 வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை 35 ஆகும். இதில் 25 பேர் மாநகர பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு அனுப்பப்படுகின்றனர்.
மீதம் உள்ள 10 மாணவர்களுக்காக மட்டுமே இப்பகுதியில் உள்ள பள்ளி இயங்குகிறது. அதுவும் அந்த கிராமத்தில் ஏதாவது நிகழ்ச்சி என்றால் அனைத்து மாணவர்களும் விடுப்பு எடுக்கும் நிலை உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பாளை. அருகே வெங்கடேஸ்வரபுரத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி. இங்கு 4 மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர். ஆனால், இவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க 2 ஆசிரியைகள் பணியில் இருப்பது தான் வேடிக்கை.

ஓர் அரசு ஆரம்பப்பள்ளி - ஒரு ஆசிரியர் - ஒரு மாபெரும் புரட்சி

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்



         ஓர் அரசு ஆரம்பப்பள்ளி - ஒரு ஆசிரியர் - ஒரு மாபெரும் புரட்சி -ஒரு பதவி உயர்வு - ஒரு முழு கிராமம் - ஒரு பாராட்டுவிழா - மனதார வாழ்த்துவோம்

           உங்களால் நம்ப முடியுமா? ஒரு குக்கிராமத்திலிருக்கும் துவக்கப் பள்ளிக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் வந்துபோகிறார். கல்வித்துறை உயரதிகாரிகள் வந்துபோகின்றனர். அண்ணா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் வந்துசெல்கிறார். ஒரு தேசியக்கட்சியின் மாநிலச் செயலாளர் பள்ளிக்கு வந்துசெல்கிறார். விஜய் தொலைக்காட்சி 2013 புத்தாண்டில் தன் முகங்கள் நிகழ்ச்சியில் தமிழகத்தில் தலைசிறந்த அரசுப் பள்ளி என தேர்வு செய்து அறிவிக்கின்றது. ஆந்திராவில் துணை மாவட்ட ஆட்சியராகப் பணிபுரியும் தமிழக IAS அதிகாரி தனது பகுதியிலும் இதேபோல் செயல்படுத்த விரும்புவதாக தொலைபேசுகிறார். பக்கத்து மாநிலங்களிலிருந்து ஒரு சுற்றுலா போல வந்துபோகின்றனர். 

…….. இங்கே எழுதப்பட்டது ஒருசில மட்டுமே, எழுத மறந்தது ஏராளம்.



இத்தனைபேரும் விழிவிரியப் பார்க்கவும், அளவிற்கதிமாக நேசிக்கவும் என்ன காரணம்?
இரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரை தமிழகத்தில் இருக்கும் ஆயிரக்கணக்கான ஊராட்சிய ஒன்றிய துவக்கப்பள்ளிகளில் ஒன்றுதான் இந்தப்பள்ளியும். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்திலிருந்து அன்னூர் செல்லும் சாலையில் 5வது கி.மீ தொலைவில் காரமடை, சிறுமுகை நான்குசாலைப் பிரிவில் சிறுமுகை செல்லும் சாலையில் சென்றால் மௌனமாய் உலகிற்கு ஒரு முன்மாதிரியாய் நிமிர்ந்து நிற்கின்றது இராமம்பாளையம் ஊராட்சி ஒன்றிய அரசு துவக்கப்பள்ளி.


முதலில் தன்மீதும் அடுத்து பிறர்மீது குற்றம் காணாத மனிதன் சர்வநிச்சயமாக முன்னேறியே தீருவான். தன் சமூகத்தையும் முன்னேற்றுவான். அப்படிப்பட்ட மனிதர்களாகத்தான் தெரிகின்றனர், இந்த பள்ளியில் பணியாற்றும் தலைமையாசிரியை திருமதி. சரஸ்வதி மற்றும் ஆசிரியர் திரு.ஃப்ராங்ளின் ஆகியோர்.



தங்களிடம் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு ஒரு உன்னதமான கல்வி அனுபவத்தை தந்துவிடவேண்டுமென வேட்கை கொண்ட ஆசிரியர் ஃப்ராங்ளின் தலைமையாசிரியை உதவியுடன் பள்ளியில் இருக்கும் இரண்டு வகுப்பறையில் ஒன்றை முதலில் புதுப்பிக்க முடிவெடுக்கிறார்.

ஆசிரியர்கள் இருவரும் தங்கள் பணத்தில் பெரிய தொகையை ஒன்றினை அளித்து அந்த வேள்வியைத் தொடங்குகின்றனர். வளரும் தலைமுறைக்காகத் தொடங்கிய வேள்வியில் அவர்களின் பங்களிப்பு, அர்ப்பணிப்பு, நோக்கம் ஆகியவற்றை உணர்ந்த, அவர்களின் செயல்பாட்டின் மேல் அன்பும் மரியாதையும் நம்பிக்கையும் கொண்ட கிராமத்தினரின் ”கிராம கல்விக்குழு”வும் கை கோர்க்க நான்கே மாதத்தில் சுமார் ரு.2.5 லட்சம் செலவில் ஒரு வகுப்பறை முற்றிலும் நவீனப்படுத்தப்படுகிறது. 2011ம் கல்வியாண்டில் பள்ளிக்கு வந்த குழந்தைகளுக்கு பேரதிசயம் காத்திருந்தது. அதுவரைக் கண்டிராத ஒரு புதுச்சூழலுக்குள் தங்களைப் புகுத்திக் கொள்கின்றனர்.








பள்ளி குறித்த செய்திகள் இணையம், வார இதழ்கள், தொலைக்காட்சி வாயிலாக உலகத்திற்குத் ஓரளவு தெரியவருகின்றது. இதைக் கேள்விப்பட்ட கோவை மாவட்ட ஆட்சியர் எம்.கருணாகரன் அவர்கள் வருகை தந்ததோடு, இதே போன்று மாவட்டத்தில் விரிவாக்கம் செய்ய, முதற்கட்டமாக ஆனைகட்டி, பொள்ளாச்சி, தொண்டாமுத்துார் உட்பட நான்கு பள்ளிகளை சீரமைக்க உத்தரவிட்டு நிதி ஒதுக்கீடு செய்கிறார்.



பள்ளியின் ஒரு வகுப்பறையை மட்டும் செம்மைப் படுத்தியதோடு நின்றுவிடாமல், மேலும் பொதுமக்கள் நிதியோடும், ஆட்சியர் வாயிலாகவும், ”அனைவருக்கும் கல்வி திட்டம்” வாயிலாகவும் நிதி பெற்று அடுத்தடுத்த பணிகளை இராமம்பாளையம் பள்ளியில் மேற்கொள்கின்றனர்.

பள்ளி சுற்றுச்சுவர் ரூ.4,50,000 செலவில் கட்டப்படுகிறது (இதில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் ரூ.3,08,000, மீதி நன்கொடை). அடுத்ததாக அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் ரூ. 5,00,000 நிதிபெற்று அதோடு மேலும் நிதிதிரட்டி ரூ.6,25,000 மதிப்பில் பள்ளிக்கு ஒரு கணினி ஆய்வகக் கட்டிடம் 11 கனிணிகளோடு அமைக்கப்படுகிறது. கோவை மாவட்ட ஆட்சியர் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் ரூ.3,00,000 மதிப்பில் இரண்டாவது வகுப்பறை கிரானைட் தளம், குளிர்சாதனக் கருவி என அற்புதமாக வடிவமைக்கின்றனர்.



இப்போது இராமம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி…

  • 11 கனிணிகள் கொண்ட ஆய்வகத்துடன், இரண்டு வகுப்பறைகள்
  • குளிர்சாதனம் பொருத்தப்பட்ட (A/c) வகுப்பறை
  • டைல்ஸ் / கிரானைட் தரை 
  • தரமான பச்சை வண்ணப்பலகை 
  • வகுப்பறைக்குள் குடிநீர் குழாய்
  • சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர், 
  • வெந்நீர், சாதா நீருக்கு என தனித்தனி குழாய்கள்
  • தெர்மோகூல் கூரை
  • மின்விசிறிகள்
  • உயர்தர நவீன விளக்குகள்
  • கூரையில் பொருத்தப்பட்ட நவீன ஒலிபெருக்கிகள்
  • மாணவர்கள் எழுதிப்பழக மட்டஉயர பச்சை வண்ணப்பலகை,
  • வேதியியல் உபகரணங்கள்
  • கணித ஆய்வக உபகரணங்கள்
  • முனைகளில் இடித்து பாதிக்கப்படாமல் மாணவ மாணவியர் அமர்ந்து படிக்க வட்டமேசைகள்
  • மேசைகளின் கீழ்ப்பகுதியில் ஒருவரையொருவர் உதைக்காவண்ணம் தடுப்புகள்
  • அமரும் நாற்காலிகளிலேயே புத்தகங்களை வைத்துச்செல்ல பெட்டி வசதி
  • மாணவர்களின் செய்முறைத் திறமையை வெளிப்படுத்தப் பலகை
  • அனைவருக்கும் தரமான சீருடை
  • காலுறைகளுடன் கூடிய காலணி
  • முதலுதவிப்பெட்டி
  • தீயணைப்புக்கருவி
  • காணொளிகளை ஒளி(லி)பரப்ப டிவிடி சாதனம்
  • LCD புரஜெக்ட்டர்                                                                                                ஆகியவற்றோடு உலகத்திற்கே ஒரு முன்மாதிரி அரசுப்பள்ளியாக நிமிர்ந்து நிற்கின்றது

சுதந்திரம் பெற்று 65 ஆண்டுகளான பின்பும் இந்தியா முழுக்க கல்வி ஒரு கடைமையாக மட்டுமே பாவிக்கப்பட்டு வரும் சூழலில், இது எப்படி சாத்தியமானது, இதெல்லாம் ஓர் நாளில் வந்ததா?

இதையெல்லாம் செய்ய வைத்தது ஒற்றை மனிதனின் ஓங்கிய கனவு. ஒரே ஒரு மனிதன், தன்சிந்தையில் கருவாக்கி தனக்குள் அடைகாத்து சரியான நேரத்தில், சரியான இடத்தில் பிரசவித்ததின் விளைவே இது. ஆம், இது அத்தனையும் ஆசிரியர் திரு. பிராங்கிளின் அவர்களின் கனவினாலும், சரஸ்வதி டீச்சரின் ஒத்துழைப்பினாலும் மட்டுமே சாத்தியமானது. 






ஒரு காலத்தில் நூறு பிள்ளைகள் படித்த அந்தப்பள்ளியில் 5ம்வகுப்பு வரை மொத்தமே வெறும் 30 பிள்ளைகள் மட்டுமே படிக்கும் நிலைக்கு சுருங்கிப்போனது. கல்வி வியாபாரத்தில் தங்களை முதலீடு செய்ய வசதி இல்லாதவர்களின் கடைசிப்புகலிடமாக அரசுப்பள்ளிகள் மாறிப்போன காலம்தானே இது. ஆண்டாண்டு காலமாக இருந்து வரும் அரசுப்பள்ளியில் ஆயிரமாயிரம் பேர்படித்து பலனடைந்த வரலாறு ஒரு முற்றுப்புள்ளியை எட்டிவிடுமோ என்ற அச்சத்தைப் போக்க மிக அவசியத்தேவை மாற்றம் என்பதே.

இந்த கல்வியாண்டின் துவக்கத்தில் 27 மாணவர்களுடன் துவங்கிய இப்பள்ளியில் இன்று 62 மாணவர்கள் பயின்று வருகின்றனர். கடந்த இரு ஆண்டுகளில் தனியார் ஆங்கிலவழிக் கல்வி பள்ளியில் பயின்ற மாணவர்களும் இப்பள்ளியில் சேர்ந்துள்ள அதிசயமும் நிகழ்ந்துள்ளது.

காசு கொடுக்க முடியாத பிள்ளைகளுக்கு கல்வியை சரியாய் அளிக்க வேண்டும் எனும் வேட்கையில் யோசிக்க ஆரம்பித்தவர்கள், தங்கள் மனதில் தோன்றியதையெல்லாம் செதுக்கி, பட்டைதீட்டி, இன்றைக்கு தமிழகத்தின் எந்த ஒரு பள்ளியும் தரமுடியாத ஒரு தரத்தை, ஆரோக்கியத்தை, சுகாதாரமான கல்வியை செய்துகாட்டத் தொடங்கியுள்ளனர்.

ஆசிரியர்கள் இருவரும் இணைந்து கல்வித் துறையில் இப்படியும் புரட்சி செய்யமுடியும் என தங்கள் அர்பணிப்புக் கொடையால் ஒரு எடுத்துக்காட்டை உலகத்திற்குப் படைத்துவிட்டனர். தான் செய்யும் பணியை உயர்வாய், உயிராய் நேசித்ததன் விளைவே இது.




மாற்றத்தை நிகழ்த்த சரியான மனிதர்களின் ஒத்துழைப்பை ஈட்டிவிட்டால் போதுமென்ற தன்னம்பிக்கையோடு தங்களை முன்னுதரணமாக நிறுத்திக்கொண்டு தொடங்கியவேள்வியில் கிட்டத்தட்ட சாதித்துவிட்டனர்.

திட்டத்திற்கு ஒத்துழைப்புக் கொடுத்த கிராமத் தலைவரிடம் எப்படி தங்களால் ஒத்துழைப்பும், நிதியும் அளிக்க முடிந்தது எனக் கேட்டால் அவரின் ஒரே வார்த்தை “ஆசிரியர்கள் மேல் தங்களுக்கிருந்த நம்பிக்கை மட்டுமே” என்பதுதான்.

வெறுமென ஒரு சாதாரண ஆசிரியர்களாக மட்டும் அந்தப் பள்ளியில் செயல்படாமல் குழந்தைகளை ஒரு பெற்றோர் மனோபாவத்திலிருந்து வழிநடத்திக் கற்பிக்கின்றனர். யாரையும் எதற்கும் அடித்ததில்லை. உரிமையாய் பிள்ளைகள் ஆசிரியர் ஃப்ராங்ளின் மீது ஏறி விளையாடுவதும் கூட எப்போதாவது நடப்பதுண்டாம்.

“பிள்ளைகளுக்கு கல்வியோடு சுய ஒழுக்கம், சூழல்களை எதிர்கொள்ளும் பக்குவம், நேர்த்தியாக வாழ்வது என எல்லாமே கற்றுக்கொடுக்கிறோம். இங்கிருந்து வெளியேறும் மாணவன் எவரொருவருடனும் போட்டியிட தயாராக இருக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்” என்கிறார் ஃப்ராங்ளின்.

புதுப்பிக்கப்பட்ட வகுப்பறையில் இரண்டு வருடங்களாக புழங்குவது ஐந்து முதல் பத்து வயதுவரை இருக்கும் பிள்ளைகளேயாயினும் இதுவரை ஒரேயொரு இடத்தில் கூட ஒரு பொட்டு அழுக்கு படவில்லை. எப்படி சாத்தியம் இது எனக் கேட்டால், “மாணவனுக்கு சுவற்றில் அழுக்கு செய்தால்,அதை சுத்தம் செய்வது எவ்ளோ கடினம் என்பதையும், மீண்டும் வர்ணம் பூச ஆகும் செலவுகள் குறித்தும் எடுத்துக் கூறியிருப்பதால், ஒரு துளி அழுக்குப்படாமல் இருக்கின்றது” என்கிறார். பிள்ளைகளுள் படிந்திருக்கும் ஒழுக்கம், அந்த ஆசிரியர்களின், உழைப்பு, திறமை, அர்பணிப்புத்தன்மை, தியாகத்திற்கு கிடைக்கும் மாபெரும் அங்கீகாரமாகும்.

பிள்ளைகளுக்கு ஆங்கிலப் பயிற்சி, யோகாப் பயிற்சி, ஓவியப்பயிற்சி, விளையாட்டு பயிற்சி, தலைமைப்பண்பு பயிற்சி, செய்தித்தாள்கள் வாசிப்பு பயிற்சி என அனைத்துவிதப் பயிற்சிகளும் சிறப்பாக அளிக்கப்படுகிறது. மாணவர்களின் சேமிப்பு பழக்கத்தை வளர்க்க தனித்தனி அஞ்சலகக் கணக்குகளில் சிறுசேமிப்பு. முன்னிரவு நேரத்தில் தொலைக்காட்சி பார்ப்பதில் குழந்தைகள் சிதைந்துவிடக்கூடாது என்பதற்காக அந்த நேரத்தில் சிறப்பு வகுப்பு நடத்தவும் அனுமதிபெற்று அதையும் திறம்படத் துவங்கியுள்ளனர்.


மாணவ - மாணவியருக்கான தனித்தனி கழிப்பறை வசதியும், விளையாட மைதான வசதியும் சிறப்பாக உள்ளது. சீருடைகள், கழுத்தணி, காலணி, அரைக்கச்சை, அடையாள அட்டை,ஆசிரியர், மாணவர் பெற்றோர் இணைப்புக்கையேடு ஆகியவை இலவசமாக வழங்கப்படுகிறது.

ஓய்வுபெறும் கட்டத்திற்கு நகர்ந்து கொண்டிருக்கும் ஆசிரியை சரஸ்வதி அவர்களும், இந்தத் திட்டங்களின் பிதாமகனான ஃப்ராங்களின் அவர்களுக்கும் சமகாலச் சமுதாயத்தின்முன் உதாரணங்களாக முன்னிறுத்தப்பட வேண்டியவர்கள். தனக்கோ, பிறருக்கோ, சமூகத்திற்கு ஏதாவது செய்திடவேண்டும் எனும் வேட்கை எல்லோருக்குள்ளும் இருப்பது இயல்புதான். “சம்பளத்திற்கு உழைப்போம்” என்ற மனோபாவம் நீக்கமற படிந்து போன சமூகத்தில் தங்களை முழுதும் ஈடுபடுத்தி, எவரொருவரும் செய்திடாத அதிசயத்தை, அற்புதத்தை சப்தமில்லாமல் செய்திட்ட இந்த ஆசிரியர்கள் இந்திய அளவிலும், உலக அளவிலும் அடையாளப் படுத்தப்பட வேண்டியவர்கள். எடுத்துக்காட்டுகளாக முன்னிறுத்தப்பட வேண்டியவர்கள். இவர்களைச் சரிவர பாராட்டுவதும், இவர்களின் தியாகத்தை, உழைப்பை அங்கீகரிப்பதும் அரசுகளின், சமூக அமைப்புகளின், ஊடகங்களின் மிக முக்கியக் கடமை. இவர்கள் செய்த பணியை தங்கள் பகுதிக்கும் விரிவுபடுத்த வேண்டியது சக ஆசிரியர்கள், சக மனிதர்களின் தலையாயக் கடமை.



ஓங்கிய முழக்கத்தோடு எதையோ எதிலிருந்தோ மீட்கப்போவது மட்டும்தான் புரட்சியா? அமைதியாய் மௌனமாய் நிகழ்த்துவதும் மாற்றத்தை நிகழ்த்துவதும் புரட்சிதான்!

இந்தக் கல்விப் புரட்சியாளர்களைக் கொண்டாடுவோம், முன்மாதிரியா எடுத்துக்கொள்வோம், மனதார வாழ்த்துவோம்.

பணியிட மாறுதல்
மாற்றம் என்பது வளர்ச்சியின் ஒரு அங்கம்தான். ஒரு கிராமப்புறத்து ஆரம்பப் பள்ளியை அதிசயத்தக்க வகையில் மாற்றியமைத்து அதிர்வுகளை ஏற்படுத்திய இராமம்பாளையம் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் திரு. ஃப்ராங்ளின் அவர்கள் பதவி உயர்வு பெற்று நடுநிலைப் பள்ளிக்கு பணியிட மாறுதல் பெற்றுள்ளார். தங்கள் கிராமத்துப் பள்ளியை முற்றிலும் மாற்றியமைத்த ஆசிரியருக்கு கிராம மக்கள் இன்று 15.11.2014 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு பள்ளி வளாகத்தில் பாராட்டுவிழா நடத்தி வழியனுப்பி வைக்கின்றனர்.

மனம் கனிந்த அன்பும், நல்வாழ்த்துகளும் ஃப்ராங்ளின் 
ஃப்ராங்ளின் அவர்களைத் தொடர்புகொள்ள...99424 72672
franklinmtp@gmail.com,

கட்டுரை : ஈரோடு கதிர்  

Sunday, 16 November 2014

இரண்டு CRC யும்

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்
இரண்டு CRC யும் pri ,up- pri (22.11.2014) இந்த வாரம் நடைபெறும் !!!


இரண்டு CRC யும் pri ,up- pri (22.11.2014) இந்த வாரம் நடைபெறும் !!!
வரும் சனிக்கிழமை 22.11.2014 தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கான குறுவள பயிற்சி(pri-CRC) மற்றும் உயர் தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கும் குறுவள
மைய பயிற்சி(UP Pri -CRC) நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன .

Wednesday, 5 November 2014

இணையவழி முறையால் உரிய காலத்தில் ஊதியம் பெற முடியாமல் அரசு ஊழியர்கள் அவதி

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்

இணையவழி முறையால் உரிய காலத்தில் ஊதியம் பெற முடியாமல் அரசு ஊழியர்கள் அவதி







         அரசுத் துறைகளைச் சேர்ந்த பல லட்சம் ஊழியர்கள், தங்களின் மாத ஊதியத்தை உரிய காலத்தில் பெற முடியாமல் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர். இதற்கு கருவூலக் கணக்கு துறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இணைவழி (ஆன்லைன்) முறையே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.



          இந்த முறை, சோதனை அடிப்படையிலோ அல்லது அதை அறிமுகப்படுத்துவதற்கான உரிய உத்தரவுகளோ இதுவரை பிறப்பிடப்படவில்லை எனவும் அரசு ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். இதனால், இந்த மாதத்தில் பல அரசு ஊழியர்களின் வங்கிக் கணக்கில் இதுவரை (நவ.4) ஊதியம் வரவு வைக்கப்படவில்லை என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.


              ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு ஊழியர்களின் ஊதியத்துக்கான பட்டியலைச் சேகரித்து அவற்றைப் பரிசீலிக்கும் பணிகளை மாவட்ட கருவூலக் கணக்குத் துறை மேற்கொண்டு வருகிறது. கருவூலத் துறையில் கணினிகள் பயன்பாட்டுக்கு வந்த நேரத்தில், ஊதியத்துக்கான பட்டியலை அப்படியே தட்டச்சு செய்து அதை


குறுந்தகட்டிலும், நகல் எடுத்தும் மாவட்ட கருவூலக் கணக்குத் துறையில் சமர்ப்பிக்கப்பட்டு வந்தது. இந்தப் பணியை ஒவ்வொரு அலுவலகத்திலும் உள்ள நிர்வாக அலுவலர் மேற்கொண்டு வந்தார்.


இணையவழி முறை புகுத்தப்பட்டது: கருவூலக் கணக்குத் துறையில் இணையவழி முறை புகுத்தப்பட்ட பிறகே பிரச்னை தொடங்கியது. அதாவது, எந்தவித வழிகாட்டுதலும் இல்லாமல் வெறும் கணினியில் மட்டுமே புகுத்தப்பட்ட இணையவழி முறை அறிமுகப்படுத்தப்பட்டது.


எப்படி பதிவு செய்ய வேண்டும், தவறு ஏற்பட்டால் அதைத் திருத்துவது எப்படி என்பன உள்ளிட்ட எந்த விவரங்களும் தெரிவிக்கப்படவில்லை. ஒரு அலுவலகத்தில் ஊதியப் பட்டியல் தயாரிக்கும் அதிகாரிகள், தாங்களாக யோசித்து இந்த இணையவழி முறையைக் கையாள வேண்டியிருப்பதாகக் கூறுகின்றனர்.


இதுகுறித்து, திருச்சியைச் சேர்ந்த அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறியது: ஒரு அலுவலகத்தில் 50-க்கும் மேற்பட்ட பதவியிடங்கள் இருந்தால், ஊதியப் பட்டியல் தயாரிக்கும்போது ஒரு குறிப்பிட்ட பதவியிடத்துக்குப் பதிலாக வேறொரு பதவியைத் தவறாகக் குறிப்பிட்டால் அதை அந்த அதிகாரியே திருத்த முடியாது. இதைத் திருத்துவதற்கு மாவட்ட கருவூலக் கணக்குத் துறைக்கு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும். அவர்கள் சென்னையில் உள்ள இணையவழி பராமரிப்புப் பிரிவுக்கு அப்படியே அனுப்பி அவர்களது பதிலைப் பெறுவர். அந்த பதில், ஊதியப் பட்டியல் தயாரிக்கும் அதிகாரிக்கு அனுப்பப்படும். இவ்வாறு ஒவ்வொரு தவறுக்கும் மின்னஞ்சல் மூலம் கேள்வி கேட்டு பதிலைப் பெற்று காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது என்று தெரிவித்தார்.


உத்தரவு வரவில்லை: இணையவழி முறையைப் பயன்படுத்துவது தொடர்பாக, கருவூலக் கணக்குத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் சிலருக்கு மட்டுமே பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. அரசு அலுவலகங்களில் ஊதியப் பட்டியல் தயாரிக்கும் அலுவலர்கள், அதிகாரிகள் யாருக்கும் அதுபோன்ற பயிற்சி அளிக்கப்படவில்லை என்றும் புகார் கூறப்படுகிறது.


மேலும், இணையவழி முறையைப் பயன்படுத்த வேண்டும் எனவும், அதை எப்படிக் கையாள்வது என்பது தொடர்பாகவும் அரசின் உத்தரவுகள் எதுவும் வரவில்லை. ஒவ்வொரு மாதமும் ஊதியப் பட்டியலை 15 முதல் 20-ஆம் தேதிக்குள் மாவட்ட கருவூலக் கணக்குத் துறையிடம் அளிக்க வேண்டும்.


ஆனால், இணையவழி முறை காரணமாக, ஒவ்வொரு மாதமும் தாமதம் ஏற்பட்டு ஊதியப் பட்டியலை உரிய நேரத்தில் சமர்ப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அரசுத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


மேலும், இணையதள இணைப்பு இல்லாத சிறு அரசு அலுவலகங்களைச் சேர்ந்த அலுவலர்கள், இணையதள மையங்களை நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர். இதனால், இந்த நவம்பர் மாதத்தில் இதுவரைகூட (4-ஆம் தேதி) சில அரசு ஊழியர்களின் வங்கிக் கணக்கில் ஊதியம் வரவு வைக்கப்படவில்லை என்ற புகார் உள்ளது.


உரிய பயிற்சி அவசியம்: இணையவழி முறையை முழுமையாக அமல்படுத்துவதற்கு முன்பாக, அரசு அலுவலகங்களில் ஊதியப் பட்டியலைத் தயாரிக்கும் அலுவலர்களுக்கு அதுகுறித்து பயிற்சி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. மேலும், ஒரே நேரத்தில் அனைத்து இடங்களில் நடைமுறைப்படுத்தாமல் பகுதி பகுதியாகச் செயல்படுத்த வேண்டும் எனவும் அலுவலர்கள் வேண்டுகோள் வைக்கின்றனர்.

Sunday, 2 November 2014

கல்வித்துறைக்கு எதிராக 2000 வழக்குகள் நிலுவையில் உள்ளன

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்

கல்வித்துறைக்கு எதிராக 2000 வழக்குகள் நிலுவையில் உள்ளன.



         பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி துறைக்கு எதிராக, வழக்குகள் அதிகரித்து வருகின்றன. ஓய்வு பெற்ற ஆசிரியர் மற்றும் பணியில் உள்ள ஆசிரியர்களால், 2,000த்திற்கும் மேற்பட்ட வழக்குகள், நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது.


          அரசு ஊழியர், 12 லட்சம் பேரில், 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர், கல்வித்துறையில் பணி புரிகின்றனர். பெரிய துறையாக, பள்ளி கல்வித்துறை இருப்பதாலோ என்னவோ, வழக்குகளுக்கும் பஞ்சம் கிடையாது.


வழக்குகள் எண்ணிக்கை :


பதவி உயர்வு, ஊதிய உயர்வு உள்ளிட்ட பணிகளைக் கூட, மாவட்ட கல்வி அதிகாரிகள், சரியாக செய்வதில்லை என, ஆசிரியர் சங்க நிர்வாகிகள் குற்றம் சாட்டுகின்றனர்.இதன் காரணமாக, நாளுக்கு, நாள், கல்வித்துறைக்கு எதிராக வழக்குகள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளை வழங்கும் தீர்ப்புகளை, உடனுக்குடன் அமல்படுத்தவும், கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை.இதனால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், அதிகாரிகள் ஆஜராகி, நீதிபதிகளின் கேள்விகணைகளுக்கும் ஆளாகி வருகின்றனர்.கடந்த, 27ம் தேதி, சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், பள்ளி கல்வித்துறை முதன்மை செயலர், சபிதா ஆஜரானார். ஆசிரியர்களுக்கு, சிறப்பு நிலை அந்தஸ்து வழங்குவது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம், ஒரு உத்தரவை பிறப்பித்திருந்தது. இதை அமல்படுத்த நடவடிக்கை எடுக்காததால், சம்பந்தப்பட்டவர்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்தனர்.இதில், நீதிபதிகள், பல்வேறு கேள்விகளை எழுப்பியதால், செயலர் சபிதா, நெளிய வேண்டிய நிலை ஏற்பட்டது.தற்போதைய நிலவரப்படி, அரசாணை எண், 216 தொடர்பான வழக்குகள் (ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கு, தேர்வு நிலை, சிறப்பு நிலைக்கான பணப்பலன் வழங்குவது) மற்றும் இதர வழக்குகள் என, 2,000த்திற்கும் அதிகமான வழக்குகள், நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது.


இதுகுறித்து, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலர், ரைமாண்ட் பேட்ரிக் கூறியதாவது:


•எந்த ஒரு வழக்காக இருந்தாலும், கடைசி பிரதிவாதியாக, மாவட்ட அளவில் உள்ள ஒரு அதிகாரி தான் இருப்பார். பெரும்பாலும், பதவி உயர்வு, ஊக்க ஊதியம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளால், வழக்குகள் வருகின்றன.
•இந்த பிரச்னைகள் வராத அளவிற்கு, மாவட்ட அளவில் உள்ள அதிகாரிகள் செயல்படுவதில்லை. மேலும், வழக்கில், பதில் மனு தயாரிக்கும் பணி, மாவட்ட அதிகாரியிடமே தரப்படுகிறது.திணறுகின்றனர் எவ்வித சட்ட அறிவும், அனுபவமும் இல்லாத மாவட்ட அதிகாரிகள், பதில் மனுவை தாக்கல் செய்ய திணறுகின்றனர்.
•யாரையாவது பிடித்து, பல ஆயிரம் ரூபாயை, எப்படியோ செலவழித்து, பதில் மனுவை தாக்கல் செய்கின்றனர். இதிலும், பல ஓட்டைகள் இருக்கும். வழக்குகளின் நிலையை, தொடர்ந்து கண்காணிக்கவும், ஆள் கிடையாது. இதனால், அவ்வளவு எளிதில், வழக்கு முடிவுக்கு வருவதில்லை. இறுதியில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடும் அளவிற்கு, நிலைமை முற்றுகிறது. அப்போது தான், விஷயம், உயர் அதிகாரிகள் வரை செல்கிறது.
•ஒவ்வொரு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலகங்களில், ஒரு சட்ட அலுவலரை நியமிக்க வேண்டும். அவர், கல்வித்துறையை அறிந்தவராகவும் இருக்க வேண்டும். இப்படி செய்தால், ஓரளவு, வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்கலாம்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்க பொதுச்செயலர், சாமி சத்தியமூர்த்தி கூறியதாவது:உயர் பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள், ஒரு முடிவை எடுக்கும் முன், விரிவாக விவாதிப்பது இல்லை. எடுத்தோம், கவிழ்த்தோம் என, முடிவை எடுப்பதும், பின் மாற்றுவதையும், வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதனால் தான், வழக்குகள் குவிந்துகொண்டே இருக்கின்றன.இவ்வாறு, சாமி கூறினார்.


 சட்ட அலுவலர் நியமனம் இழுபறி:


பள்ளி கல்வித்துறையில், நாகராஜன் என்பவர், சட்ட அலுவலராக பணியாற்றி வருகிறார். வழக்குகளை உடனுக்குடன் முடிப்பதற்கு வசதியாக, மேலும், இரு சட்ட அலுவலர்கள் நியமனம் செய்யப்படுவர் என, சட்டசபையில் அறிவித்து, ஆறு மாதங்களுக்கு மேல் ஆகிறது. இதுவரை நியமனம் செய்யவில்லை.நாகராஜன் கூறுகையில், ''ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு, ஒரு சட்ட அலுவலரும், உயர் நீதிமன்ற மதுரை கிளை வழக்குகளை கவனிக்க, ஒரு சட்ட அலுவலரும் நியமனம் செய்யப்படுவர் என, தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை, நியமனம் நடக்கவில்லை,'' என்றார்.

Saturday, 1 November 2014

தொடக்க கல்வி -

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


தொடக்க கல்வி - காலியாக உள்ள பணியிடங்கள் பதவி உயர்வு மூலம் நிரப்புதல்




 

Sunday, 26 October 2014

தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்துவதாக - தகவல்

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல் தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்துவதாக - தகவல்


          நவம்பர் முதல் வாரத்தில் தொடக்கப்பள்ளி / நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்துவதாக தொடக்கக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளதாக தகவல்




              தமிழக ஆசிரியர் கூட்டணி இயக்க இதழான ஆசிரியர் இயக்கக் குரலிலும், நேர்முகமாகவும் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பி ஆசிரியர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி வந்தோம்.


              அந்தோ பரிதாபம் என்ற தலைப்பில் காலியாக உள்ள உ.தொ.க.அ. காலிப் பணியிடங்களின் பட்டியலை வெளியிட்டு வந்தோம். 25-10-2014 அன்று நடைபெற்ற உ.தொ.க.அ. பணிமாற்ற கலந்தாய்வில் 64 நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உ.தொ.க.அலுவலர்களாக பணி மாற்ற ஆணை வழங்கியுள்ளார்.

              மேல்நிலைக் கல்வித்தகுதிக்கு இணையாக diploma in teacher education படித்தவர்களுக்கும் உ.தொ.க.அலுவலர் பணிமாற்ற ஆணை வழங்கி இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். ஐபெட்டோ அகில இந்திய செயலாளர் வா.அண்ணாமலை அவர்கள் தொடக்கக் கல்வி இயக்குநருக்கு தொலைப்பேசியில் நன்றியையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொண்டார்.



                 பலமுறை கேட்டுக் கொண்டதற்கிணங்க நவம்பர் முதல் வாரத்தில் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், தமிழ், வரலாறு, ஆங்கிலம், கணிதம், அறிவியல் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வை ஒரேநாளில் நடத்துவதாக தொடக்கக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார். - இவ்வாறு தகவல்கள் கிடைத்துள்ளது. உறுதியான தகவல் கிடைத்ததும் நமது பாடசாலை வலைதளத்தில் பதிவு செய்யப்படும்.

Friday, 17 October 2014

ஆன்லைன் மூலம் சம்பள பில் அரசு ஆசிரியர்களுக்கு உத்தரவு

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்

ஆன்லைன் மூலம் சம்பள பில் அரசு ஆசிரியர்களுக்கு உத்தரவு.


ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியருக்கு, அடுத்த மாதம் முதல், இ-பே ரோல்எனும், ஆன்லைன் மூலம் பில் சமர்பிக்கும் முறையை கருவூல அலுவலர்கள் அமல்படுத்தியுள்ளனர். தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கு, கருவூலம் மூலம் சம்பளம் மற்றும் சலுகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக, ஒவ்வொரு மாதமும், சம்பந்தப்பட்ட தலைமை அலுவலர், தமக்கு கீழ் உள்ள அரசு ஊழியருக்கான சம்பள பில் தயாரித்து, கருவூலத்தில் சமர்பிக்க வேண்டியிருந்தது.
கடந்த சில ஆண்டுகளாக, சம்பள பில் பெறுவதை, காகித கோப்புகளாகவும், சிடி வடிவிலும், பெறப்பட்டு வந்தது.இதன்மூலம், அரசு ஊழியர்களின் எண்ணிக்கை, அவர்கள் சம்பளம் பெறும் தலைப்பு, மொத்த செலவு உள்ளிட்டவற்றை துல்லியமாக கணக்கிட முடியாத நிலை இருந்து வந்தது. தற்போது கருவூலத்துறை கணினிமயமாக்கப்பட்டு வருகிறது. இதனால், அக்டோபர் மாத சம்பளம் முதல், ஆன்லைனில் பில் சமர்பிக்கும் முறையை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. அதாவது ஒவ்வொரு பள்ளிக்கும், அலுவலகத்துக்கும் தனித்தனியே, "யூசர் ஐடி',"பாஸ்வேர்டு' வழங்கப்படும். கருவூலத்துறை இணையதளத்தில் இ-பே ரோல் எனும் பகுதியில், இதை பயன்படுத்தி, அலுவலர்களின் பில்களை, ஆன்லைனில்சமர்பிக்கலாம்.

பின் வழக்கம் போல, வங்கிக்கணக்குகளில், "இ.சி.எஸ்' முறையில் சம்பளம்வழங்கப்பட்டுவிடும். ஆவணங்களாக தயாரித்து வழங்கி வந்த முறையை, ஒழித்துள்ள நிலை, தலைமை அலுவலர்களின் பணி பளுவை வெகுவாக குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு அக்டோபர் மாதத்துக்கான சம்பள பில்களை, "ரிகர்சல்' போல், ஆன்லைனிலும், பதிவு செய்துவிட்டு, ஆவணமாகவும் தரலாம் எனவும், அடுத்த மாதம் கண்டிப்பாக, ஆன்லைன் முறையில் மட்டுமே, பில் சமர்பிக்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சேலம் மாவட்ட அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பில் தயாரிக்கும் பணியில் ஈடுபடும் ஒரு ஆசிரியர் வீதம் தேர்வு செய்யப்பட்டு, நேற்று சிறுமலர் மேல்நிலைப்பள்ளியில், ஆன்லைனில் பில் சமர்பிப்பது குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. இதில் சேலம் கருவூல பணியாளர்கள் கலந்து கொண்டு பயிற்சியளித்தனர்.

Education World

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்
Education World

Here are the Most Popular Articles on EducationWorld.com Last Week!

Did you see the latest news stories EducationWorld staffers have been writing and curating for you? Check these stories out.Share this newsletter with your colleagues. Send us your story ideas and bylined articles by emailing editor@educationworld.com.
As always, EducationWorld has great lessons, templates and more to help you!

Weekly News Roundup

Microsoft Releases New OneNote App for Educators
Microsoft is taking the next step in OneNote after its release of the new OneNote Class Notebook Creator app on Tuesday.  With the app,...
Poor AP Test Results Put US Behind Other Countries
America's schools may be in trouble after the release of recent results of two high school Advanced Placement (AP) exams focused on science,...
Bullying Allegations Lead to Cancelled Football Season
A small town in New Jersey is defending its high school team as its season is cut short after reported events of bullying, intimidation and...
Miami School Using Debating Skills to Prep for Common Core
While many debate the Common Core's efficacy, a Florida middle school now has a debate class simply because of the standards. Bridget McKinney,...
Study Finds Video Games Don't Improve Learning
A recent study from France found that there is no educational benefit to playing video games, but there is no harm either. The study examined the...
The Edworld Exchange
Sell original curricular materials such as lesson plans, worksheets, templates, teaching guides and more! Simply upload your files and set the prices. The Sales transaction takes place on the platform, and we provide immediate download to buyers! It's that easy!

Learn More!


NOBEL LAUREATES FOR PEACE மத்திய அரசு சார்பில் தமிழக அரசு பள்ளிகளில் பல்வேறு கல்வி வளர்ச்சிப் பணிகள்!

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்



மத்திய அரசு சார்பில் தமிழக அரசு பள்ளிகளில் பல்வேறு கல்வி வளர்ச்சிப் பணிகள்!அக்டோபர் 11,2014,11:54 IST


சென்னை: மத்திய அரசு சார்பில், பல்வேறு கல்வி வளர்ச்சிப் பணிகள், தமிழக அரசு பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பள்ளி படிப்பை பாதியில் விட்ட மாணவர்களுக்கு, பயிற்சி அளித்து, பின், முறையான பள்ளிகளில் சேர்ப்பது, தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி உட்பட, பல திட்டங்கள், மத்திய அரசு நிதியில் செயல்படுத்தப்படுகின்றன. இதை, மூவர் குழு, ஆய்வுசெய்து வருகிறது. குஜராத் மாநில அரசின், முன்னாள் தலைமை செயலர், மான்காட், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தைச் சேர்ந்த, ரங்கராஜன், உலக வங்கி சார்பில், அமெரிக்காவைச் சேர்ந்த, மூனா ஆகியோர், அரசு பள்ளிகளில் ஆய்வு செய்து வருகின்றனர்.
நேற்று முன்தினம், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சில அரசு பள்ளிகளில், மத்திய குழு ஆய்வு செய்தது. நேற்று, விழுப்புரம் மாவட்டத்தில், திண்டிவனம் அருகில் உள்ள ஓங்கூர் தொடக்கப் பள்ளி, சாரம் அரசு மேல்நிலைப்பள்ளி, மயிலத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி, சாரத்தில் உள்ள வட்டார வள மைய பயிற்சி மையம் உட்பட பல இடங்களை, மத்திய குழுவினர் பார்வையிட்டனர்.
அனைவருக்கும் கல்வி இயக்குனரக மாநில திட்ட இயக்குனர், பூஜா குல்கர்னி, இணை இயக்குனர், நாகராஜ முருகன் உள்ளிட்ட அதிகாரிகள், மத்திய குழுவுடன் பார்வையிட்டு வருகின்றனர். இன்றும், விழுப்புரம் மாவட்டத்தில், பல அரசு பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
ரங்கராஜன் கூறுகையில், &'&'பள்ளிகளை பார்வையிட்டுக் கொண்டிருக்கிறோம்; தற்போதைக்கு எதுவும் கூற முடியாது,&'&' என்றார்.
இணை இயக்குனர் நாகராஜ முருகன் கூறுகையில், &'&'மாணவர்களின் வாசிப்புத் திறன், ஒட்டுமொத்த கல்வித்தரம், பள்ளிகளில் உள்ள வசதிகள், ஆசிரியரின் கற்பித்தல் திறன் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும், மத்திய குழுவினர் பார்வையிடுகின்றனர். இதுவரை பார்வையிட்ட பள்ளிகளில், மத்திய குழுவினர் எவ்வித குறையையும் தெரிவிக்கவில்லை" என்றார்