Thursday, 1 December 2016

சம்பளத்தில் வருமான வரி பிடித்தமா? : புதிய வசதி அறிமுகம்

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


வருமான வரி பிடித்தம் செய்யும், டி.டி.எஸ்., திட்டத்தில், புதிய சேவையை, வருமான வரித் துறை அறிமுகம் செய்துள்ளது. சென்னை, தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், தமிழகம், புதுச்சேரி பிராந்திய வருமான வரி முதன்மை தலைமை ஆணையர், ஏ.கே.ஸ்ரீவஸ்தவா, நேற்று, இந்த சேவையை துவக்கி வைத்தார்.
அவர் பேசியதாவது: ஊழியர்களிடம், அவர்கள் பணிபுரியும் அலுவலகங்களிலேயே, டி.டி.எஸ்., என்ற முறையில், வருமானத்திற்கு தக்கபடி, மாத சம்பளத்தில் வரிப் பிடித்தம் செய்யப்படுகிறது.
படிவம் - 13 : அது தேவையில்லை என, ஊழியர்கள் விரும்பினால், வருமான வரித் துறைக்கும், அலுவலகத்திற்கும் தகவல் தெரிவித்து, படிவம் - 13ஐ நிரப்பி தரலாம். அந்த வசதியை, இனி தமிழகத்தில், 'ஆன்லைனில்' பெறலாம்.
அதற்காக, www.tnincometax.gov.in என்ற இணையதளத்தில், சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. அந்த இணையதளத்தில், 'tds (for197)' என்ற பகுதியினுள் நுழைந்து, சம்பளதாரர்கள், தங்களது முந்தைய, இரு ஆண்டு கணக்குகளைபதிவு செய்தால் போதும். அலுவலகத்தில் வரிப் பிடித்தம் செய்வது நிறுத்தப்படும் அல்லது தேவைக்கேற்ப குறைக்கப்படும். இவ்வசதி அறிமுகம் செய்யப்படும், மூன்றாவது மாநிலம், தமிழகம். இந்தியாவை, 'டிஜிட்டல்' மயமாக்க வேண்டும் என, மத்திய அரசு முனைப்பாக செயல்படுகிறது. அந்த வேகத்திற்கு, வருமான வரித் துறையும் ஈடுகொடுத்து வருகிறது. அதற்கு,இப்புதிய சேவையே உதாரணம். கணினிமயமாக்கல் காரணமாக, வரி செலுத்தாத நிறுவனங்களை எளிதில் கண்டுபிடிக்க முடிகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மூன்றில் ஒரு பங்கு : வருமான வரித் துறை இயக்குனர் ஜெனரல், முரளிகுமார் பேசுகையில், ''வருமான வரித் துறைக்கு கிடைக்கும் வருவாயில், மூன்றில் ஒரு பங்கு, டி.டி.எஸ்., மூலமாகவே கிடைக்கிறது,'' என்றார்.

III STD TAMIL SLAS QUESTION PAPER

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


III STD Maths SLAS QUESTION PAPER

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


புயலுக்கு பெயரை யார் தேர்வு செய்வது? பெயர் வைப்பதற்கான காரணம் என்ன?

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


புயலுக்கு பெயரை யார் தேர்வு செய்வது?
பெயர் வைப்பதற்கான காரணம் என்ன?
புயல் சின்னம் உருவாகும் போதெல்லாம், அதற்கு ஒரு பெயர் சூட்டப்படுவது பற்றி அனைவரும் அறிந்திருப்பார்கள். அவற்றிற்கு எவ்வாறு பெயர் சூட்டப்படுகிறது என்பதை இங்கே காணலாம்.
ஒரே நேரத்தில் இரண்டு அல்லது மூன்று புயல்கள் உருவானால் குழப்பம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதால் தான் மனிதர்களைப் போலவே புயலுக்கு பெயர் வைக்கும் முறை உருவானது.
20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஆஸ்திரேலியா தான் இந்தப் பழக்கத்தை முதலில் தொடங்கி வைத்தது. ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையத்தினர் மக்களிடம் செல்வாக்கு குறைந்த அரசியல் வாதிகளின் பெயர்களை புயல்களுக்கு சூட்டியுள்ளனர். பின்னர் 1954-ஆம் ஆண்டு இந்தப் பழக்கத்தை அமெரிக்கா தொடங்கியது.
இந்தியாவைப் பொறுத்தவரை வங்கக் கடல் மற்றும் அரபிக் கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும் நடைமுறை 2004-ஆம் ஆண்டில் உருவானது. இந்தியா, வங்கதேசம், மாலத்தீவு,‌ மியான்மர், ஓமன், பாகிஸ்தான், தாய்லாந்த், இலங்கை ஆகிய 8 நாடுகள் இணைந்து பெயர் பட்டியலைத் தயாரித்து வருகின்றன.

புயல் சின்னத்துக்கு பெயர் சூட்டும் வழக்கம் உருவானது பற்றிய சுவாரஸ்ய தகவல்

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


சென்னை: பிறந்த குழந்தை போல, புயல் சின்னங்களுக்கு பெயர் சூட்டும் வழக்கம் உருவானது பற்றிய சுவாரஸ்யமான தகவல்களைப் பார்க்கலாம்.
      ஒரே சமயத்தில் இரண்டு பகுதிகளில் ஏற்படும் புயல் சின்னங்களை வேறுபடுத்திக் காட்டவே புயல் சின்னங்களுக்கு பெயர் சூட்டும் முறை அறிமுகமானது. இதனை முதன் முதலில் ஆஸ்திரேலியாதான் அறிமுகப்படுத்தியது. இந்த முறையினால் வானிலை ஆய்வு மையங்களின் பணி எளிதானது.
அதுவும், ஆஸ்திரேலியா இந்த புயல்களுக்கு என்ன பெயர்களை வைத்தது தெரியுமா? ஆஸ்திரேலியாவில் மக்களிடம் செல்வாக்குக் குறைந்த அரசியல்வாதிகளின் பெயர்களை புயல்களுக்கு சூட்டி மகிழ்ந்தது.
இந்த முறையை 1954ம் ஆண்டு அமெரிக்காவும் பின்பற்றத்  தொடங்கியது. அமெரிக்கா பின்பற்றத் தொடங்கி சரியாக 50 ஆண்டுகளுக்குப் பிறகு அதாவது 2004ம் ஆண்டுதான் நாமும் இதனை பின்பற்றத் தொடங்கினோம்.
வங்கக் கடல் மற்றும் அரபிக் கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் சூட்டும் முறை 2004ல் துவங்கியது.இதற்காக இந்தியா, மாலத்தீவு, ஓமன், பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர், தாய்லாந்து, இலங்கை ஆகிய 8 நாடுகள் இணைந்து ஒரு அமைப்பை ஏற்படுத்தின.
இவைகள் தாங்கள் விரும்பும் பெயர்களை பரிந்துரைத்து ஒரு பட்டியல் உருவாக்கப்படும். இதில் ஒவ்வொரு புயலுக்கும் ஒவ்வொரு பெயர் அடுத்தடுத்து சூட்டப்படுகிறது.
வங்கக் கடலில் தற்போது நாடா புயல் உருவாகியுள்ளது.பெயர் வைக்கும் முறை அறிமுகமாகி இது 35வது புயல் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
மேலும், தற்போதைய புயல் பெயர் பட்டியலில் 64 பெயர்கள் இடம்பெற்றுள்ளன

நாடா' புயல் எச்சரிக்கை: தமிழக அரசின் 15 அறிவுறுத்தல்கள்

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


'நாடா' புயல் வருவதனை முன்னிட்டு புயல் நேரத்தில் பொது மக்கள் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கை குறித்து தமிழக
அரசின் வருவாய்த் துறை 15 அம்ச அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
15 அறிவுறுத்தல்கள்
1. ரேடியோ மற்றும் தொலைக்காட்சியினை தொடர்ந்து கவனித்து கால நிலை அறிவிப்புகளை அறிந்து கொள்ளவும். இச்செய்தியினை பிறருக்கும் தெரிவிக்கவும்.
2. ரேடியோ மற்றும் தொலைக்காட்சியில் பெறப்படும் அதிகாரபூர்வமான செய்தியை மட்டுமே பிறருக்கு தெரிவிக்கவும்.
3. புயல்காற்று கதவு மற்றும் ஜன்னல்களை சேதப்படுத்த வாய்ப்புள்ளதால் அவற்றை இறுக்கமாக மூடி வைக்கவும்.
4. கடற்கரை மற்றும் நீர் சூழ வாய்ப்புள்ள பகுதிகளில் இருந்தால் மேடான பகுதிக்கு விரைவாக வெளியேறவும். நீர் சூழ்வதற்கு முன்னரே பாதுகாப்பான பகுதிக்கு சென்று விடவும்.
5. தங்கள் குடியிருப்பு வெள்ளம் மற்றும் புயலால் பாதிக்கப்படாதுயெனில் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கவும். எனினும் அதிகாரபூர்வமாக கேட்டுக்கொள்ளப்பட்டால் உடன் வெளியேறவும்.
6. நீர்நிலைகள் மற்றும் ஆற்றின் கரைகளிலுள்ள குடியிருப்புகளுக்குள் கன மழை காரணமாக நீர் சூழ வாய்ப்புள்ளதால் கரையோரங்களில் குடியிருப்போர் கவனமாக இருக்கவும்.
7. சமைக்காமல் உண்ணக்கூடிய உணவுகள் (பிரட், பிஸ்கட், பழங்கள்) தேவையான அளவு இருப்பு வைக்கவும், போதுமான குடிநீர் பாதுகாப்பான பாத்திரங்களில் சேமித்து வைக்கவும்.
8. நீர் சூழ்வதால் வெளியேற வேண்டிய பகுதியில் நீங்கள் குடியிருந்தால், பொருட்சேதங்களை தவிர்ப்பதற்காக விலை உயர்ந்த பொருள்களை வீட்டில் உயரமான பகுதியில் வைத்து பாதுகாக்கவும்.
9. குழந்தைகள் மற்றும் சிறப்பு உணவு தேவைப்படும் முதியோருக்கு தேவையான உணவுப் பொருளை இருப்பு வைக்கவும்.
10. மழைநீரில் செல்வதாயின், கையில் கொம்பு ஒன்றினை வைத்துக் கொள்ளவும். பாம்பு, பூச்சிகள் கடிக்க வாய்ப்புள்ளதால் கவனம் தேவை.
11. மின் வயர்கள் அறுந்து கிடக்க வாய்ப்பு உள்ளதால் தெருக்களில் கவனமாக நடக்கவும்.
12. அமைதியாக சூழ்நிலையை புரிந்து கொள்ளவும். ஆபத்து நேரத்தினை அமைதியாக எதிர் கொள்ளும் உங்களது திறன் மற்றவர்களுக்கும் பயன்படலாம்.
13. அதிகாரபூர்வமாக அறிவிக்கும் வரை புயல் பாதுகாப்பு மையங்களிலிருந்து வீட்டிற்கு திரும்பி செல்ல வேண்டாம்.
14. மின்கம்பங்களிலிருந்து தளர்வான / அறுந்த மின்கம்பிகளை கவனமாக தவிர்க்கவும்.
15. பேரிடரால் பாதுகாப்பிற்கு உள்ளான பகுதிக்கு தேவையில்லாமல் வேடிக்கை பார்க்க செல்ல வேண்டாம். உங்களது உதவி தேவைப்படும் எனில் மட்டுமே செல்லவும்.
இவ்வாறு வருவாய்த் துறை தெரிவித்துள்ளது

Half Pay Salary News - அரை சம்பள விடுப்பு உத்தரவு - விளக்கம்

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


சமீபத்தில் வந்திருக்கும் Half pay salary government letter ல் அனைத்து படிகளுக்கும் Half pay தான் என கூறப்பட்டுள்ளது அதாவது இது SUPERIOR SERVICE க்கு மட்டும் தான் பொருந்தும் யாரெல்லாம் 6600 GRADE PAY வாங்ஙகுகிறார்களோ அவர்களுக்கு மட்டும் தான்.


தொடக்க நிலை ஆசிரியர்களின் உச்சபச்ச GRADE PAY 5400 தான் மற்றும் Hr.Sec hm GP 5700/-ஆகையால் இதற்கும் நமக்கும் துளி அளவு கூட தொடர்பில்லை நம் ஆசிரியர்களில் யாரும் தேவை இல்லாமல் கவலை பட வேண்டாம் .

SSA - அனைத்துப் பள்ளிகளிலும் 1முதல் 8 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவா்களுக்கு 8.12.2016 அன்று கீழ்கண்ட தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்பட வேண்டும்.

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


குழந்தைகளின் நினைவாற்றலை வளர்ப்பதற்கான டிப்ஸ்...ஆசிரியர் தீலிப்

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்



கனமழை- பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிப்பு.

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


*சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர்,நாகை,கடலூர் ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை.
*விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம்,வானூர் வட்டம்.
*புதுச்சேரி,காரைக்கால் பள்ளிகளுக்கு 2 நாட்கள்  விடுமுறை.
               
-பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.
*மேலும் மழையின் அளவைப்பொருத்து அந்தந்த மாவட்ட நிர்வாகமே விடுமுறை விட அரசு உத்தரவு.விரைவில் மேலும் பல மாவட்டங்கள் அறிவிக்கப்படும்.

SCERT வாரத் தேர்வு (worksheet) குறைகள்

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


தமிழ்நாட்டில் என்னென்ன கல்வி முறை எப்படி உள்ளது எனத் தெரியாமலேயே தேர்வு நடத்தப்படுகிறதா?
மதிப்பெண் உண்டா? கிடையாதா?
சில பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி
1,2,3 ஆம் வகுப்பு வரையில் உள்ளது. சில பள்ளிகளில் 1,2,3,6,7 வகுப்புகள் ஆங்கில வழிக்கல்வியில் உள்ளது.
ஆனால் வினாக்கள் தமிழில் மட்டும் உள்ளது.
ஒரு முறைக் கொடுத்த வினாத்தாலே மறுபடியும் கொடுக்கப் படுகிறது.
பத்து மதிப்பெண்களுக்கு தேர்வு எனக் கூறி விட்டு
7 வினாக்களும்
8 வினாக்களும்
9 வினாக்களும் கொடுக்கப்பட்டுள்ளது.
கொடுக்கப்பட்ட சில வினாக்களுக்கு விடையே இல்லை.
முதலில் XEROX எடுத்துக் கொடுக்க வேண்டும் என்ற அறிவிப்பு அதன் பிறகு கரும்பலகையில் எழுதிப்போட்டு தேர்வு நடத்த வேண்டும் என்ற உத்தரவு.
கீழ்வகுப்பு வினாக்களில் வரும் படங்களையும் ஆசிரியர் வரைந்து போட்டு நடத்த வேண்டுமா?
அப்படியென்றால் அவர் வகுப்பில் இருக்கும் ஒரு கரும்பலகையில் எத்தனை படங்கள் வரைந்து போடுவார்?
ஏன் இந்த தடுமாற்றம்?
நோக்கம் சிறந்ததாக இருந்தால்
அதனை சிறந்த முறையில்
திட்டமிட்டு
செயல்படுத்த வேண்டாமா?
எந்த திட்டமிடலும் இல்லாமல்
தினம் தினம் ஒரு அறிவிப்புக் கொடுத்து ஏன் குழப்ப வேண்டும்.
ஒரு திட்டத்தை செயல்படுத்தும் முன்பு அதில் உள்ள தவறுகள் களைந்தெடுக்கப்பட்டு
வகுப்பறைக்கு வரும் போது
100% சதவீதம் தெளிவுடன்
இருந்தால் தானே
மாணவர்களும் குழப்பம் இல்லாமல் இருப்பார்கள்?
கல்வியை கல்வியாகப் பாருங்கள்
விளையாட்டாக்கி விடாதீர்கள்.

ஒரு ரூபாய் நோட்டு உருவாகி, இன்றுடன் நுாறு ஆண்டாகிறது.

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


நுாறு, ஐநுாறு ரூபாய் நோட்டுகளின், 'முதல்வனான' ஒரு ரூபாய் நோட்டு உருவாகி, இன்றுடன் நுாறு ஆண்டாகிறது. 'ஒத்த ரூபா நோட்டு' என, சற்றே மலிவாக அழைக்கப்பட்டாலும், பிற ரூபாய் நோட்டுகள் உருவாக, இந்த ஒரு ரூபாய் நோட்டு தான் முன்னோடியாக இருந்து இருக்கிறது. 

         கடந்த, 1917, நவ., 30ல், முதல் ஒரு ரூபாய் நோட்டு அறிமுகம் செய்யப்பட்டது. அப்போதைய வர்த்தகர்கள், பண பரிவர்த்தனை செய்ய, இந்த ஒரு ரூபாய் நோட்டு பெரிதும் உதவிகரமாக இருந்துள்ளது. கோவை முன்னாள் தபால் அலுவலர் ஹரிஹரன், இந்த பழைய ரூபாய் நோட்டுகளை, பத்திரமாக பராமரித்து வருகிறார். 
அவர் கூறியதாவது: முதல் ஒரு ரூபாய் நோட்டின் இருபுறமும், ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் படம் அச்சிடப்பட்டிருந்தது. 1935, ஏப்., 1ல் ரூபாய் நோட்டு அச்சிடும் உரிமம், இந்திய ரிசர்வ் வங்கிக்கு வழங்கப்பட்டது. அதன் பின், அச்சிடப்பட்ட, முதல் ஒரு ரூபாய் நோட்டில், முதலில் எட்டு மொழிகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. 1940ல் அச்சிடப்பட்ட நோட்டில், ஆறாவது ஜார்ஜின் உருவப்படம் அச்சிடப்பட்டது. நாடு சுதந்திரம் பெற்ற பின், பதவியேற்ற நிதியமைச்சரின் மேற்பார்வையில் அச்சிடப்பட்ட ஒரு ரூபாய் நோட்டு, மகிழ்ச்சியில் திளைத்திருந்த மக்களின் பெரும் வரவேற்பை பெற்றது. கடந்த, 1949ல் நிதித்துறை செயலர், கே.ஆர்.கே.மேனன் கையெழுத்திட்ட நோட்டில், முதல் முதலாக அசோக ஸ்துாபி இடம் பெற்றது.
1951ல் ஹிந்தியில் அச்சிடப்பட்ட ஒரு ரூபாய் வெளியானது. அதன் பின், 1994ல், நிறுத்தப்பட்ட, ஒரு ரூபாய் நோட்டு, 2015 மார்ச், 6ல், மறுபடியும் அறிமுகம் செய்யப்பட்டது. ஒரு ரூபாய் நோட்டு அச்சிட, 1.14 காசு செலவாவதாக, தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் தெரியவந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். கடந்த, 1943ல் ஒரு சவரன் தங்கத்தின் விலை, 13 ரூபாய் ஆக இருந்தது. அதன்படி எடுத்துக் கொண்டால், இன்று அந்த ஒரு ரூபாய் நோட்டு, 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ளது. தற்போது அரசால் செல்லாததாக அறிவிக்கப்பட்டுள்ள, 500 - 1,000 ரூபாய் நோட்டுகளை விட, இந்த ஒரு ரூபாய் நோட்டின் மதிப்பு, அதிகம் என்பது தான் வினோதம்!