தமிழக அரசு தகவல் பாரத ஸ்டேட் வங்கியின் மின்னணு வங்கிச் சேவை வழியாக மாத ஊதியம் பெறும் அரசு ஊழியர்களுக்கு வங்கிக் கணக்கு இருப்பு கட்டுப்பாட்டில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான தகவல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. பாரத ஸ்டேட் வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் வரும் 1 ஆம் தேதி முதல் தங்களது கணக்குகளில் ரூ.5 ஆயிரம் (பெருநகரம்), ரூ.3 ஆயிரம் (நகரங்கள்), ஆயிரம் ரூபாய் (கிராமங்கள்) வரை இருப்பு வைக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. இருப்புத் தொகையை குறைவாக வைத்திருப்போருக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது. இந்த நிலையில், பாரத ஸ்டேட் வங்கியின் மின்னணு வங்கிச் சேவை மூலமாக மாத ஊதியம் பெறும் அரசு ஊழியர்களுக்கும் இந்தக் கட்டுப்பாடு பொருந்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு தமிழக அரசு சார்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கம்:- மாத ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு சிறப்புத் திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்கப்பட்டு ஊதியம் அதில் போடப்படுகிறது. எனவே, ஊழியர்கள் குறித்த அடிப்படை விவரங்களை வங்கியில் சமர்ப்பித்து வங்கி விதித்துள்ள கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு பெறலாம். குறிப்பாக, ஊழியரின் பெயர், வங்கிக் கணக்கு எண், வருமான வரிக் கணக்கு எண், ஆதார் எண் ஆகிய விவரங்களை கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும். இவற்றை வங்கியில் சமர்ப்பித்த பிறகு, அவை வங்கியால் ஆய்வு செய்யப்படும். பின்பு, குறைந்தபட்ச இருப்புத் தொகையாக ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை வங்கிக் கணக்கில் வைப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.
Thursday, 30 March 2017
பேறுகால விடுப்பு இனி 26 வாரம் -
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் பெண் ஊழியர்களுக்கு, 26 வாரம், பேறு கால விடுப்பு அளிக்கும் புதிய சட்டத்திற்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். பெண் ஊழியர்களுக்கு, தற்போது, 12 வாரம், பேறுகால விடுப்பு அளிக்கப்படுகிறது. இதை, 26 வாரமாக உயர்த்தும் சட்டத்திற்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து, 50 அல்லது அதற்கு மேல் ஊழியர்கள் பணியாற்றும் நிறுவனங்களில் பெண் ஊழியர்கள், 26 வாரம், பேறுகால விடுப்பு எடுத்துக் கொள்ள முடியும். இந்த நிறுவனங்கள் குறிப்பிட்ட தொலைவில், பெண் ஊழியர்களுக்காக, குழந்தைகளை கவனித்துக் கொள்ளும் இல்லங்களை அமைக்க வேண்டும். பெண் ஊழியர்கள், தங்கள் குழந்தைகளை பார்த்து வர, ஒரு நாளில் நான்கு முறை, குழந்தை பாதுகாப்பு இல்லம் செல்ல, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அனுமதி வழங்க வேண்டும். உலகளவில், கனடா, நார்வே நாடுகளுக்கு அடுத்தபடியாக, நம் நாட்டில் தற்போது, அதிக நாட்கள் பேறுகால விடுப்பு வழங்கப்படுகிறது. கனடாவில், 50 வாரங்களும், நார்வேயில், 44 வாரங்களும், பேறு கால விடுப்பு வழங்கப்படுகிறது.
750 PP NEWS - தனிஊதியம் 750ஐ பதவி உயர்வின் போது எப்படி நிர்ணயம் செய்யப்பட வேண்டும்?தொடக்க கல்வி இயக்குனரின் ஆணை
பி.எட் (கல்வியியல்) கற்பித்தல் பயிற்சிக்கு அனுமதி கோரும் விண்ணப்பம்..
2016-17 ஆம் ஆண்டிற்கான தொடக்க பள்ளி ஆசிரியர்கள் | பணி மாறுதல் விண்ணப்பம்..
திருக்குறளில் உள்ள அறத்துப்பால் மற்றும் பொருட்பாலில் உள்ள 105 அதிகாரங்கள் நன்னெறி கல்வி - அரசாணை
TNPSC - Departmental Exam.
(துறைத் தேர்வு) - தமிழக பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் எந்த எந்த துறைத் தேர்வுகளை எழுத வேண்டும், எந்த தேர்வுக்கு என்ன புத்தகங்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படுகின்றன. (துறைத்தேர்வுக்கு உரிய புத்தகங்கள் எவை..) [முழு விபரங்களுடன்]
208]