Thursday, 30 March 2017

பேறுகால விடுப்பு இனி 26 வாரம் -

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் பெண் ஊழியர்களுக்கு, 26 வாரம், பேறு கால விடுப்பு அளிக்கும் புதிய சட்டத்திற்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். பெண் ஊழியர்களுக்கு, தற்போது, 12 வாரம், பேறுகால விடுப்பு அளிக்கப்படுகிறது. இதை, 26 வாரமாக உயர்த்தும் சட்டத்திற்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து, 50 அல்லது அதற்கு மேல் ஊழியர்கள் பணியாற்றும் நிறுவனங்களில் பெண் ஊழியர்கள், 26 வாரம், பேறுகால விடுப்பு எடுத்துக் கொள்ள முடியும். இந்த நிறுவனங்கள் குறிப்பிட்ட தொலைவில், பெண் ஊழியர்களுக்காக, குழந்தைகளை கவனித்துக் கொள்ளும் இல்லங்களை அமைக்க வேண்டும். பெண் ஊழியர்கள், தங்கள் குழந்தைகளை பார்த்து வர, ஒரு நாளில் நான்கு முறை, குழந்தை பாதுகாப்பு இல்லம் செல்ல, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அனுமதி வழங்க வேண்டும். உலகளவில், கனடா, நார்வே நாடுகளுக்கு அடுத்தபடியாக, நம் நாட்டில் தற்போது, அதிக நாட்கள் பேறுகால விடுப்பு வழங்கப்படுகிறது. கனடாவில், 50 வாரங்களும், நார்வேயில், 44 வாரங்களும், பேறு கால விடுப்பு வழங்கப்படுகிறது.

No comments:

Post a Comment