Monday 14 December 2015

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடுகாங்கயம் பள்ளி ஆய்வு கட்டுரை தேர்வு

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


        திருப்பூர், :காங்கயம் பள்ளி மாணவியரின் ஆய்வு கட்டுரை, சண்டிகரில் நடைபெறும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டது.
 
         மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப துறை சார்பில், 23 ஆண்டுகளாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடத்தப்படுகிறது. இம்மாநாடு, டிச., 27 முதல் 31 வரை, பஞ்சாப் தலைநகர் சண்டிகரில் நடைபெற உள்ளது.
இதற்கு முன்பாக, மாநில அளவிலான மாநாடு, நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் முத்தாயம்மாள் பொறியியல் கல்லுாரியில், சமீபத்தில் நடந்தது; 29 மாவட்டங்களில் இருந்து, 203 ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. திருப்பூர் மாவட்டத்தில் இருந்து, 12 ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இதில், காங்கயம் ஜேசீஸ் மெட்ரிக் பள்ளியின் எட்டாம் வகுப்பு மாணவி நந்தினி தலைமையில் மேற்கொள்ளப்பட்ட, 'காலநிலை மாறுபாட்டால், தாவரங்களிலும், விலங்குகளிலும் ஏற்படும் மாற்றங்கள்' என்ற ஆய்வு கட்டுரை, அகில இந்திய மாநாட்டில் பங்கேற்க, தகுதியானதாக தேர்வு செய்யப்பட்டது.

No comments:

Post a Comment