Friday, 18 December 2015

How to Deduct Chief Minister's Public Relief Fund Amount via Web Payroll?

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


         முதல்வரின் பொது நிவாரண நிதிக்கான ஆசிரியர்களின் ஒரு நாள் சம்பள பணத்தை ஆன்லைன் சம்பள பில்லில் பிடிப்பது எப்படி? - விளக்கம்.
PDF Tutorial Steps Available. Now.




Forms: CRC Attendance Certificate

நிவாரண நிதிக்கு ஒரு நாள் ஊதியம்: தமிழக அரசு புதிய உத்தரவு

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


        முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு, அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள்ஒரு நாள் ஊதியத்தை அளிப்பதற்கான உத்தரவில் சில நடைமுறைகளை தமிழக அரசு எளிதாக்கியுள்ளது.மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் ஒரு நாள் ஊதியத்தை அளிக்கதமிழக அரசு டிசம்பர் 13-இல் ஒரு உத்தரவு பிறப்பித்தது.


         அதில், ஒரு நாள் அல்லது விரும்பும் நாள்களைத் தெரிவித்து அதற்கானதொகையைப் பிடித்தம் செய்து கொள்ள ஒப்புதல் அளிக்கலாம். இதற்கான ஒப்புதல் கடிதத்தை அளிக்க வேண்டும். தொகையைப் பிடித்தம் செய்து அதற்கான காசோலையையும், ஊதியம் பிடித்தம் செய்யப்பட்ட ஊழியர்கள் விவரங்கள் அடங்கிய பட்டியலையும் சம்பந்தப்பட்ட துறைக்கே கருவூலம்-கணக்குத் துறை அதிகாரிகள் அனுப்பி வைப்பர்' என்று தமிழகஅரசின் குறிப்பிடப்பட்டிருந்தது.மேலும், கருவூலத் துறை அதிகாரியால் அனுப்பப்படும் காசோலையும், பெயர்ப் பட்டியலும் மாவட்ட ஒருங்கிணைப்பு அதிகாரியால் தமிழக அரசுக்கு அனுப்பப்படும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நடைமுறை இப்போது மாற்றப்பட்டுள்ளது.

              இதுகுறித்து, பணியாளர்-நிர்வாகச் சீர்திருத்தத் துறை செயலர் பி.டபிள்யூ.சி. டேவிதார் அனைத்துத் துறைகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:-""டிசம்பர் மாதத்துக்கான அரசு ஊழியர்களின் ஒருநாள் அல்லது அதற்கு மேற்பட்ட (அவர்கள் விரும்பினால்) ஊதியம் எவ்வளவு என்பதை கணினி வழியிலான சம்பளக் கணக்கு பட்டியலில் கணக்கிட்டுக் கொள்ளலாம். இவ்வாறு பிடித்தம் செய்யப்படும் தொகையை, நேரடியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கான சேமிப்புக் கணக்குக்கு அனுப்பி வைக்கலாம். மாத ஊதியத்தை வரவு வைக்கும் போது இந்த நிதியைக் கணக்கில் செலுத்தலாம். இதுகுறித்த தகவலை மாவட்ட அதிகாரிகள், துறைத் தலைவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 

புத்தகங்கள் இழந்தோருக்கு 'டிஜிட்டல்' பாடம்

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


        சமீபத்திய மழை, வெள்ளத்தால், சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்ட மாணவ,மாணவியர், தங்களின் பாட புத்தகம், நோட்டு போன்றவற்றை இழந்துள்ளனர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மட்டும், இலவசமாக புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன.ஆனால், தனியார் பள்ளி மாணவர்களுக்கு, புத்தகம் கிடைக்காத நிலை உள்ளது.


        இந்நிலையில், 6ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரையிலானகணிதம், அறிவியல் மற்றும் ஆங்கில பாடப் புத்தகங்களை, 'நம்ம ஊரு அறக்கட்டளை' அமைப்பு சார்பில், 'நம்ம கல்வி' என்ற பெயரில், இலவசமாக கணினியில் வெளியிடப்பட்டுள்ளது.அறக்கட்டளைநம்ம ஊரு அறக்கட்டளையின், http://clsl.cu/ என்ற இணையதள இணைப்பில், இந்த புத்தகங்களை, ஆன் - லைனில் பார்க்க முடியும்.

இதுகுறித்து, அறக்கட்டளை நிறுவனர் நடராஜன் கூறியதாவது:
வெறும் வாசித்தல் என்ற முறைக்கு கூடுதலாக, மாணவர்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும் வகையில், பாடங்களை விளக்கும் பின்னணி குரலுடன், பாட வரிகள் மற்றும் படங்களை, 'வீடியோ' மூலம் திரையில் விளக்கும் வகையில், கணினி வழியில் வெளியிட்டுள்ளோம்.எளிதில் படிக்கலாம்பாடம் முடிந்ததும், பாடம் குறித்து மாணவர்கள் புரிந்து கொண்டது குறித்த கேள்விகளும், விடைகளும், கணினி திரையில் இடம் பெறுகிறது.சமச்சீர் பாட புத்தகத்தின் அம்சங்களில், எந்த மாற்றமும் இன்றி, இந்த கணினி வழி பாடங்களை பதிவேற்றம் செய்து உள்ளதால், புத்தகம் உள்ளவர்களும், இல்லாதவர்களும் எளிதில் படிக்கலாம்.தமிழ் மற்றும் ஆங்கில வழியில், 6 முதல் 8ம் வகுப்பு வரை, புத்தகங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. கணினி இல்லாதவர்கள், எங்கள் சிறப்பு அப்ளி கேஷனை மொபைல் போனில், பதிவிறக்கம் செய்து, பாடங்களைபடிக்கலாம். விரைவில், 9ம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரையிலான பாடங்களை வெளியிட உள்ளோம். எங்கள் தளத்தை பயன்படுத்த, எந்த கட்டணமும் கிடையாது.இவ்வாறு அவர் கூறினார் 

Thursday, 17 December 2015

Lesson Planning

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்

Weekly Newsletter
December 16, 2015




VIF International Education partners with districts and schools to develop global-ready teachers and students. For more than 25 years, educators have used VIF's professional development and curriculum, language acquisition and cultural exchange teacher programs to create engaging learning environments that integrate technology, cultural literacy and other 21st century skills into classroom instruction. VIF is a certified B Corp and 'Best for the World' honoree headquartered in Chapel Hill, North Carolina.



Daily editing builds students' skills!

With Every-Day Edit exercises, challenge students to find and fix errors in spelling, capitalization, punctuation or grammar.


The Eiffel Tower
Thomas Hopkins Gallaudet
Christmas

Lesson Planning

Holiday lesson: Santa Claus and Newton's Three Laws of Motion
As the holidays near, try this lesson that combines Santa and physics.


Education World Resource Roundup: Immigration
Many students have strong opinions on immigration. Your role as a teacher is to help them explore the resources that are out there.
Special Feature: Education World is pleased to be included in The Guardian's "How to teach" feature about Christmas. There are many great resources in this article! Check it out!
Early Childhood Resource: Create Starry Art
Sing "Twinkle, Twinkle" and explore all of the ways to create star art. Visit this linkfor even more EdWorld Early Childhood content. 
Don't forget we have useful graphic organizers and more printables in our Tools & Templates section or search for content on EducationWorld.com that meets your needs.
Available now: Education World's new app for iOS devices.

Professional Development

Seven Things Teachers Want Principals to Know
Sometimes teachers are too busy and overwhelmed to articulate exactly what they would like from their administrators. Education World has provided some help. Highlight your favorite parts of the article and hand it to your principal.
STEM News Roundup: Are Math Skills ‘Harder Than They Need to Be?’
In EdWorld's signature STEM News Roundup, we explore the criticism that math is overemphasized.
School Reduces Suspensions, Increases Teacher Retention by Engaging Students in STEM
One school saw that students who are excited about hands-on STEM activities want to participate in class and cause fewer disruptions.
Review some of your peers' favorite Professional Development Columnsand Classroom Management Tips.

Technology

2016 National EdTech Plan Insists on Technology Training in Teacher Prep, Warns Against BYODLearn about the five components to the national plan to increase the quality of tech and its influence in U.S. education./span>
Anti-Bullying Campaign Launches Custom Emoji for Twitter Use
The Ad Council has announced that it will be debuting its signature custom eye emoji for those who type #IAmAWitness.
What Students Are Googling About Their Teachers
Recently, Education World started to wonder what students wanted to really know about their teachers. Take a look at what we discovered.

FLASH NEWS : G.O Ms : 117 - கனமழை - முதலமைச்சர் நிவாரண் நிதிக்கு அரசு ஊழியர்களின் ஒருநாள் ஊதியம் பிடித்தம் செய்ய உத்தரவு

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்









பள்ளிக்கு முன்பாக சுகாதாரமற்ற முறையில் விற்கப்படும் உணவு பொருட்களை மாணவர்கள் வாங்கி உண்ணக்கூடாது - இயக்குநர்

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


       பள்ளிக்கல்வி - சுகாதார முன்னெச்சரிக்கைகள் - பள்ளிக்கு முன்பாக சுகாதாரமற்ற முறையில் விற்கப்படும் உணவு பொருட்களை மாணவர்கள் வாங்கி உண்ணக்கூடாது என ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும் - இயக்குநர் செயல்முறைகள்!!

             சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு அருகே பேல்பூரி உள்ளிட்ட சுகாதாரமற்ற கடைகளை வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்த கடைகள் இருந்தால், தலைமை ஆசிரியர் இந்த விஷயத்தில் தலையிட்டு அந்த கடைகளை அங்கிருந்து அகற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

'பள்ளி மதிய உணவை பெற்றோர் சோதிக்கலாம்'

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


      'நாடு முழுவதும், பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவை, தினமும், ஒன்று அல்லது இரண்டு பெற்றோர் சுவைத்து, சோதித்து பார்ப்பதை கட்டாயமாக்க வேண்டும்' என, மத்திய அரசு கூறியுள்ளது.
மாநில அரசுகளுக்கு, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அனுப்பியுள்ள கடித விவரம்: பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவை, தினசரி, ஒரு ஆசிரியர் சுவைத்து, சோதித்துப் பார்க்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இனி, ஒன்று அல்லது இரண்டு பெற்றோர், உணவை, தினசரி சுவைத்து பார்ப்பதை கட்டாயமாக்கும்படி, மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. சுழற்சி முறையில், மாணவர்களின் பெற்றோர், மதிய உணவின் தரத்தை சோதித்து பார்க்கலாம்.
மதிய உணவின் தரத்தை பரிசோதிக்கும் சமயம், இத்திட்டத்தின் கீழ், எத்தனை மாணவர்கள் பயன் பெறுகின்றனர் என்பதையும், பெற்றோர் அறிந்து, சான்று அளிக்க முடியும். இவ்வாறு, மத்திய அரசு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
12 கோடி மாணவர்கள் :
* நாடு முழுவதும், 12.6 லட்சம் பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்படுகிறது
* இந்த உணவை, 12 கோடி மாணவர்கள் சாப்பிடுகின்றனர்
* மாணவர்களுக்கு சத்தான உணவு வழங்கும் நோக்கில், இத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது
* உலகளவில், இந்தியாவில் மட்டுமே, இத்திட்டம் பெரியளவில் நடக்கிறது
* இத்திட்டத்தை, 60ம் ஆண்டுகளில், தமிழக முதல்வராக இருந்த காமராஜர் துவக்கி வைத்தார். 

நீங்கள் ஆசிரியராக வாழ்பவரா..? ஆசிரியப் பணியாளரா..?

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


        குழந்தைகள் உங்கள் மீது எத்தகைய அணுகுமுறையோடு இருக்கிறார்கள் என்பதே கற்றலுக்கான முக்கிய பாதையை வகுக்கிறது. அவர்கள் உங்கள் மீது கொண்டிருப்பது நம்பிக்கையா..? அச்ச உணர்வா..? என்பதை வைத்து கற்றல் வேறுபடும். - ஆப்ரகாம் மாஸ்லோ, உளவியல் அறிஞர்

      நீங்கள் குருவா? ஆசிரியரா...? என வினவிக் கொண்டபோது நமக்கு கிடைத்த விடை என்னவாக இருந்தது...? இன்னும் கொஞ்சம் தூர் வாரினால் அந்த அறிவுக்கேணி உங்கள் உண்மை முகத்தை தோண்டி எடுத்துக் கொடுத்துவிடும். கடந்த நம் அத்தியாயத்தை வாசித்து என்னிடம் கருத்து பரிமாறிய புதுவை ஆசிரியர் ஒருவர் வித்தியாசமான ஒன்றை குறிப்பிட்டார்.

அவர் கூற்றுப்படி ஆசிரியர்கள் இரண்டு வகை. ஒருவர் ஆசிரியராகவே வாழ்பவர். மற்றவர் ஆசிரியர் வேலைக்குப் போய் வருபவர். இக்கூற்றை நான் பரிசீலித்தபோது வியப்பான முடிவுகளை அடைய முடிந்தது. ஆசிரியராகவே வாழ்பவர்தான் முன் உதாரண ஆசிரியர். இவர் மாணவர்களிடம் பக்குவமாக நடந்துகொள்பவர். காலத்திற்கேற்ற மாறுதல்களை மனமுவந்து ஏற்பவர். இலட்சியத்தால் எழுச்சி காண்பவர்.


இவரது இலக்கு கல்வி மற்றும் கதறல் செயல்பாடு மட்டுமே அல்ல. மாணவர்களின் வாழ்வை மேம்படுத்துதல், அவர்களது சிந்தனைத்திறனை மேம்படுத்துதல். பாடப்புத்தகம் என்பது ஒருவகை வழிகாட்டி மட்டுமே. இவரைப் பொருத்தவரை கல்வி வகுப்பறையில் மட்டுமே நடப்பது அல்ல. குழந்தைகள் காலை கண் விழித்தெழுதல் முதல் இரவு உறங்கப்போகும் அந்த நிமிடம் வரை, பார்ப்பது, கேட்பது, அனுபவிப்பது எல்லாமே கல்வியில் அடக்கம். எந்த வயது மாணாக்கரை இவரிடம் ஒப்படைத்தாலும் முகம் கோணாது செயல்படுவார். தனது வாழ்வை, தனது ஆசிரியப் பணியிலிருந்து பிரித்துணர முடியாதவர் இவர். மாணவர் நலனை முன்வைத்து இயங்குபவர்.



ஆசிரியர் வேலைக்கு, கடனே என போய்வரும் ஒருவரை பரிசீலிப்போம். முதலில் அத்தகைய ஒருவருக்கு அப்பணி நிரந்தரமானதல்ல. அடுத்த படி நிலைகளை வாழ்வில் சாதித்து முன்னேற ஒரு தற்காலிக ஏற்பாடு இப்பணி. பெரும்பாலும் ஆசிரிய பணியாளரின் இலட்சியம், மாணவர் சார்ந்ததாக இருப்பது கிடையாது. ஏதோ ஒரு உபதொழிலை (Side Business) இவர் செய்கிறார். தனது வருமானத்தை குறிவைத்து திட்டமிட்டு  காய் நகர்த்துகிறார். இவருக்கு தன் வேலையில் கால அளவு முக்கியம். ஒரு மணி நேரம்கூட கூடுதலாக மாணவர்களுக்கு செலவு செய்ய மாட்டார். மாலை வகுப்பு நடத்தவோ, கல்வி உபசெயல்பாட்டுப் பணிகள் செய்யவோ இவருக்கு விருப்பமிருப்பதில்லை. ஆனால் ஊதியம் என வரும்போது எந்த சமரசமும் இவரிடம் செல்லாது. 



நாள்முழுவதும் இவரது கைபேசியில் அழைப்புகள் வந்து கொண்டேயிருக்கும். தனது பணி, பள்ளியின் முதல் மணியின்போது தொடங்கி மாலை கடைசி மணி அடித்தால் முடிந்தது என கருதுபவர்; அதிலும்  ஓய்வான பிரீயட்களில் வாய்ப்பு கிடைத்தால் எஸ்கேப் ஆகிவிடுவது இவரது வேலை இயல்புகளில் ஒன்று. தேர்வு விழுக்காடு என்பது அதிகாரிகளால் தன்மீது திணிக்கப்பட்ட சுமை என்று கருதி எரிந்து போகிறவர். அதற்காக மாணவர்களை சபித்துத் தள்ளுபவர். இவரைப் பொருத்தவரை கல்வி பள்ளியில் மட்டுமே நடக்கிறது. பாடப்புத்தகமே வேதம். இத்தகையவரிial, Helvetica, sans-serif; fontுமா? டியூஷன் சென்டர் நடத்துவது! தனது சொந்த நலனை முன்வைத்து இயங்குபவர் இவர்.



* ஒரு மாணவர் பள்ளிக்கு இரண்டு மூன்று நாட்கள் வரமுடியவில்லை என்றால் ஆசிரியராக வாழ்பவர், மாணவர் வீட்டிற்கேகூட சென்று, என்ன ஆயிற்று என அறிந்துகொள்ள தயங்கமாட்டார்.


* ஆனால் ஆசிரியப் பணியாளர் அப்படியல்ல. பள்ளிக்கு வந்தால் நடத்துவார். வராதவர்களுக்கு அவர் பொறுப்பல்ல. பள்ளிக்கு மாணவர்களை வரவழைத்தால், தான் பணி செய்ய தயார் என வீரவசனம் பேசுவார்.



* ஆசிரியராக வாழ்பவர் தனது வகுப்பில் உள்ள அனைவரைப் பற்றியும் முழுமையாக தெரிந்து வைத்திருப்பார். மாணவர்களின் பெற்றோர்களோடும்  இணக்கமான உறவை பேணுவார். அக்கறை என்பதே அவரது அணுகுமுறை.



* ஆசிரியப் பணியாளர் தனது உபதொழில் (Side-Business) சார்ந்து, ஓரிருவரை (பெற்றோர்) பயன்படுத்த அறிந்து பின்தொடர்வார். ‘அதிகாரம்’ என்பதே இவரது அணுகுமுறை. ‘வருமானம்’ என்பதே அவரது இலக்கு.



* ஆசிரியராக வாழ்பவர், பள்ளி நேரம் கடந்தும் மாணவர்கள் என்ன மாதிரி தன் பொழுதை போக்குகிறார்கள் என அறிந்து வைத்திருப்பார். ஒவ்வொரு மாணவரிடமும் அவரது அன்றாட அணுகுமுறை மாறுபடும்.



* ஆசிரியப் பணியாளர் பாடப்பொருள் சார்ந்தவர். அதை முடிப்பதும் அது சார்ந்த ‘வேலை-முடித்தல்’ பற்றியே சிந்திப்பவர்.



* ஆசிரியராக வாழ்பவர், மாணவர்களின் நிலை சார்ந்து  ஒரு பாடத்தை பலமுறை பலவிதமாக எத்தனை முறை கேட்டாலும் எத்தனைபேர் கேட்டாலும் திரும்ப விவரிக்க தயங்க மாட்டார். அதை தனது பேறாக, பெருமையாக கருதுவார்.



* ஆசிரியப் பணியாளர் பாடத்தை ஒருமுறை நடத்தவே சம்பளம் என பகிரங்கமாக சொல்வார். மறுமுறை அதை நடத்த வேண்டி வந்தால் அதை மிகப் பெரிய பாரமாக கருதி குமைந்துகொண்டே இருப்பார். ‘வேண்டுமானால் வீட்டுக்கு வா... டியூஷனில் கவனி... அதற்கும் பீஸ் கொடு...’ என்பதே அவரது அணுகுமுறை.



* ஆசிரியராக வாழ்பவர் அடுத்த தலைமுறை தன்னை கண்காணிக்கிறது என்ற புரிதலுடனே எதையும் செய்பவர். தனது அன்றாட பழக்க வழக்கங்களைக்கூட குழந்தைகள் பின்பற்றுவார்கள் என்கிற தெளிவோடு தன் வாழ்வை சுய கட்டுப்பாடு எனும் தூய்மை நெறியில் செலுத்துபவர்.



* ஆசிரியப் பணியாளர், பணி நேரத்தில்கூட சுய கட்டுப்பாட்டை இழப்பதை நாம் பார்க்கலாம். மாலையில், இரவில் அவர் எங்கும் செல்வார், எதையும் செய்வார். பள்ளியில் வீட்டு வேலை வாங்குவது, கைபேசியில் படம் பார்ப்பது, போதை பாக்கு, புகைத்தல்.. இவற்றோடு மதுக்கடை மகராசனாகவும் இருப்பதை பார்க்கலாம். அதுபற்றி அவருக்கு எந்த கூச்சமும் கிடையாது.



* ஆசிரியராக வாழ்பவர் சபலங்களுக்கு இடம் தரமாட்டார். மாணவர் மற்றும் மாணவியரை அவர்கள் +2 படிக்கும் வயதினராக இருந்தாலும் குழந்தைகளாக அணுகத் தெரிந்தவர். இவரது வகுப்பறையை, ‘உலகிலேயே பாதுகாப்பான இடம்’ என்று மாணவர்கள் கருதுவார்கள். 



* ஆசிரியப் பணியாளர் தனது அதிகாரத்தின் மீதே கவனமாக இருப்பதால் விதி மீறல்களை கட்டுப்படுத்துவதில்லை. விதிகளை சரிவர அறிவதும் இல்லை. பால்ய வன்முறையிலிருந்து பாலியல் வன்முறை வரை சந்தர்ப்ப சூழலுக்கு ஏற்ப எதையும் செய்வார்கள். வகுப்பையே தனது மிரட்டலில் வைத்திருக்க இவர்கள் வெட்கப்படுவதே இல்லை. பொறுப்பற்ற இவர்கள் சபலங்களுக்கு பலியாகி இழைக்கும் வக்கிர குற்றங்களால் முழு ஆசிரியர் சமுதாயத்திற்கும் தலைகுனிவே ஏற்படுகிறது.



* ஆசிரியராகவே வாழ்பவர், மாணவர்கள் தன்னை மதிக்க வேண்டும் என கருதுவார். மாணவர்கள் அளவுக்கு இறங்கிச்சென்று அன்பு, தோழமை, நட்பு என உறவை விரிவடையச் செய்வார். வாசிப்பை, கற்றலின் இனிமையை விதைப்பவர்.



* ஆசிரியப் பணியாளர், மாணவர்கள் தன்னைக் கண்டாலே நடுங்க வேண்டும் என கருதுவார். கற்றலைச் சித்திரவதையாக்கி விடுவார். 



* ஆசிரியராக வாழ்பவர், குழந்தைகள் நலப் போராளியாக இருப்பதை நாம் காணலாம். குழந்தைகளுக்கு  எதிராக நிகழ்த்தப்படும் எத்தகைய அநீதியையும், சமூக ரீதியிலும் சட்ட ரீதியிலும் தடுத்திட முழு மூச்சாக இறங்குபவர். குழந்தை திருமணங்கள், நரபலி, குழந்தையை வேலைக்கு அமர்த்துதல்் என இவரது கண்களில் இருந்து எதுவும் தப்பாது. தான் சார்ந்திருக்கும் ஆசிரியர் சங்கத்தையும் இதுமாதிரி வேலைகளில் ஈடுபடச் செய்வார். 



* ஆசிரியப் பணியாளர், ‘நமக்கேன் வம்பு’ என எதையும் கண்டுகொள்ள மாட்டார். வாய்ப்புக் கிடைத்தால் அச்செயல்களில் தானும் இறங்குவார். ‘இவர் செய்யலையா... அவர் செய்யலையா’ என வறட்டு வாதம் பேசுதல்... இதன் குற்றச்சாட்டிலிருந்து தன்னை காப்பாற்றுமாறு தான் சார்ந்திருக்கும் ஆசிரியர் சங்கத் தலைவருக்கு நெருக்கடியும் தர தயங்க மாட்டார்.



* ஆசிரியராகவே வாழ்பவர்... குழந்தைகளுக்கு தான் எப்படி இருந்தால் பிடிக்கும் என்பதன் மீது கவனம் கொள்வார். 



* ஆசிரியப் பணியாளர், தனக்கு எப்படி எல்லாம் இருந்தால் பிடிக்கும் என்று குழந்தைகளை மிரட்டி வைப்பார். இதில் வன்முறை இல்லா வகுப்பறை யாருடையது...?



நீங்கள் யார்? ஆசிரியராகவே வாழ்பவரா...? ஆசிரியப் பணியாளரா...?

Monday, 14 December 2015

சனிக்கிழமைகளில் பள்ளிகளை இயக்க இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை - இயக்குநர்

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


              வெள்ளம் பாதித்த பகுதி மாவட்டங்களில் சனிக்கிழமைகளில் பள்ளிகளை இயக்க எந்த அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை, வதந்திகைளை நம்ப வேண்டாம் என பள்ளிக்கல்வி இயக்குநர் திரு.கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
- Source: News 7 TV Channel.

இவர்கள் வெறும் 'ஜாலி' வாத்தியார்கள் அல்ல! - அசத்தும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்



நான் அரங்குக்குள் நுழைந்தபோது 3 மணி இருக்கும். நுழைவு படிக்கட்டுகள் அருகே ஒருவர் அப்போதுதான் மதிய உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
அநேகமாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக இருக்கலாம். அரங்கினுள்ளே பெருந்திரளான ஆசிரியப் பெருமக்கள் ஒரு நீள் அரை வட்டத்தில் அமர்ந்திருந்தனர்.குழந்தை நேயப் பள்ளிகள் பற்றிய அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி அது.உண்மையில் அந்தக் கூட்டம் பற்றிய விபரங்கள் எனக்குத் தெரியாது.
அரசுப் பள்ளியைச் சார்ந்த ஆசிரியர்களுக்கான கருத்தரங்கு என்று மட்டும் தெரியும். என்னுடைய புத்தகத்தை விரும்பி படித்ததோடு தன் தோழமைகளுக்கு தொடர்ந்து பரிந்துரைப்பவரும், சின்னமுத்தூர் பள்ளியின் தலைமையாசியருமான கிருஷ்ணவேணி என்னை அழைத்திருந்தார். "எங்கள் ஆசிரியர்கள் மத்தியில் கொஞ்சம் நேரம் பேச முடியுமா!?" எனக் கேட்டிருந்தார்.
சில வருடங்களாக அவர் மற்றும் அவரின் நட்பில் இருக்கும் ஆசிரியர்களின் பணி, திறன் கண்டு வியந்திருக்கிறேன். "பேசுறனோ இல்லையோ… என்ன நடக்குதுனு பாக்கிறதுக்காச்சும் வர்றேங்க" என்று சொல்லித்தான் வந்திருந்தேன். பின் வரிசையில் ஒரு நாற்காலியை போட்டு அமர்ந்த வண்ணம் என்ன நடக்கிறது எனக் கவனிக்க ஆரம்பித்தேன்.குழுமியிருந்தவர்களில் விருப்பப்பட்ட ஆசிரியர்கள் தங்கள் அனுபவங்களை மிகச்சுருக்கமாக பகிர்ந்து கொண்டிருந்தனர்...தன்னிடம் படித்த ஒரு மாணவி திருமணமாகி வெளியூர் சென்று, குழந்தை பிறந்தபின்தன் குழந்தையும் அதே ஆசிரியையிடம் பயில வேண்டும் என்பதற்காக அதே ஊருக்கு குடி வந்திருப்பதாக சொல்லும் 25 ஆண்டுகளாக பணியாற்றும் ஆசிரியை...வகுப்பறைக்குள் நுழையும்போது ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு வேடத்தில் நுழைவேன் என்பதையும், பிள்ளைகள் தன்னை கோமாளி வாத்தியார் என்றும் கூட அழைப்பார்கள், சில நேரங்களில் விளையாடும்போது "வாடா போடா" என்று கூடச் சொல்வார்கள் எனச் சொல்லும் ஆசிரியர்...
வேறொரு பள்ளியில் பணிபுரிந்தாலும், மலைக்கிராமம் ஒன்றில் மிகுந்த சிரமங்களுக்கிடையே நடந்துவரும் பள்ளிக்கு உதவ தன் நட்புகளிடம் தனிப்பட்ட முறையில் நிதி திரட்டி, அந்தப் பள்ளிக்கு நூலகம் அமைக்க நிதி வழங்கிய ஆசிரியை…தங்கள் பள்ளியில் NCC தொடர வேண்டும் என்பதற்காக, பலவிதமான கடும் போராட்டங்களுக்குப் பின்னர், தான் அதே பள்ளியில் 10 வருடம் பணியாற்றுவதாகவும், NCC பொறுப்பாளாராக பணியாற்றுவதாகவும் உறுதிப் பத்திரம் வழங்கி, பொறுப்பேற்று 300 மாணவர்களை விமானப் படை விமானத்தில் விமானி அறை வரை சென்று புழங்கும் வாய்ப்பு பெற்றுக் கொடுத்த ஆசிரியர்...உயர்நிலைப்பள்ளி வரை இருக்கும் ஒரு நகரிலிருந்து, கிராமத்திலிருக்கும் தங்கள் அரசுப் பள்ளிக்கு வேன் வைத்துக்கொண்டு மாணவ மாணவிகள் வருவதாகச் சொல்லும் ஆசிரியை...
வகுப்பறை அருகே சாலை போடும் ரோலரை சன்னல் வழியே வேடிக்கை பார்க்கும் மாணவர்களை மிரட்டி, அடக்கி உட்கார வைக்காமல், ஆசிரியர்களின் பாதுகாப்போடு சாலையோரம் நிறுத்திவைத்து, சாலை போடும் நடவடிக்கையை முழுக்க பார்க்க அனுமதித்த ஆசிரியர்...தமது பள்ளிக்கான கட்டிடம் மற்றும் தளவாடங்களுக்காக நகரின் பெரு முதலாளிகளை நாள் முழுக்கக் காத்திருந்து சந்தித்து விளக்கிக் கூறி வேண்டியதைப் பெற்று வந்த ஆசிரியர்…பள்ளியின் கற்பித்தல் திறனை அறிந்து, தனியார் பள்ளியில் ஆரம்பக் கல்வி படிக்கும் ஒரு குழந்தையின் அம்மா, "எம்புள்ள அந்த ஸ்கூல்ல படிக்குது, இங்க சேத்துறாலாம்னு இருக்கேன், டிசி தருவாங்ளானு தெரியல, டிசி இல்லாம சேத்துக்குவீங்ளா!?" எனக் கேட்பதாகச் சொல்கிறார் ஓர் ஆசிரியை…மலைப் பிரதேசத்தில் இருக்கும் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க அங்குள்ள பள்ளிக்கு விருப்பப்பட்டு வற்புறுத்தி பணி மாறுதல் பெற்று, தினம்தோறும் காலையும் மாலையும் சேர்த்து சுமார் 160 கி.மீ தூரத்தை 7 மணி நேரம் பயணத்தில் சென்று வரும் ஆசிரியர்…பழுதடைந்த சமையல் கூட கான்க்ரீட்டிலிருந்து பெயர்ந்த கம்பி ஒன்று உணவு பாத்திரத்தில் விழுந்துவிட, சமையல் கட்டிடத்தை புதுப்பித்துத் தர வேண்டுகிறார். விதிகள் வேறுமாதிரி வியாக்கியானங்கள் பேசுகின்றன. விதிகளுக்கு வேண்டுவதுபோல் "சிறப்பான" வேலைகளைச் செய்து போராடி புதுக் கட்டிடம் உருவாக்கிய ஆசிரியர்…
பள்ளிக் கட்டிடம் கட்டுவதற்காக மண் பரிசோதனை செய்ய துறை சார்ந்த அதிகாரிகள்வந்தபோது அனைத்து மாணவர்களையும் பாதுகாப்பாக சுற்றிலும் நிற்கவைத்து முழு நிகழ்வுகளை பார்த்துத் தெரிந்துகொள்ள உதவிய ஆசிரியர்...தான் பணியாற்றும் நடுநிலைப் பள்ளியில் இருக்கும் மாணவ மாணவியர்களுக்கு விக்கிப்பீடியாவில் கணக்குகள் தொடங்கி தமிழில் மாணவர்கள் அறிந்த, விரும்பியதகவல்களை பதிவு செய்ய வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் ஆசிரியை…வில் எடுத்துக்கொண்டு குருவி வேட்டைக்குப் போகும் மாணவனை, "குருவியை சுட்டுதிம்பியா!?" எனக் கேட்டிருக்கிறார் ஆசிரியர். "சும்மா புடிச்சு ஊட்ல வச்சுக்குவேன் சார்" என மாணவன் சொல்ல. "அதுக்கு ஏன் டா வில் வச்சு அடிக்கிறே, வீட்டுக்கே குருவி வர நான் வழி சொல்றேன்" எனச் சொல்லிவிட்டு, மண் சட்டிகளில் கொஞ்சம் சருகும் சுள்ளிகளும் போட்டு வீட்டு முற்றங்களில் கட்டி வைத்து, இரை போட குருவிகள் அங்கேயே குடி பெயர்ந்து வந்திருக்கின்றன. அதே அமைப்புகளை வகுப்பறை முன்பிலும் நிறுவ, குருவிகள் மட்டும் வரவில்லை. காத்திருந்து சலித்த மாணவர்கள் "இங்க ஏன் சார் வரல" எனக் கேட்க,"நீங்கெல்லாம் என்னேரம் சத்தம் போட்டுக்கிட்டே இருந்தா எப்படிடா வரும், குருவிங்க வரனும்னா நீங்க அமைதியா இருக்கோனும்" எனச் சொல்ல இப்பொழுதெல்லாம் வகுப்பறை முழுவதும் அடர் அமைதி. ஆசிரியரிடம் சந்தேகம் கேட்பதைக் கூட கிசுகிசுப்பான குரலில்தான் கேட்கிறார்களாம்.
தினம் ஒரு மாணவர் குருவிகளுக்கு இரை போடும் வாய்ப்பையும் வழங்கியிருக்கிறார். குருவிகளுக்கு மண் சட்டிகளில் கூடு அமைத்து வீடுகளுக்கே வரவழைத்ததை ஒரு குறும்படமாக இயக்கி அதை திரையிட்டு, இதையெல்லாம் பகிர்ந்துகொண்ட ஆசிரியர்…தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும்போது 'மாணவர்கள்', 'மாணவிகள்', 'ஸ்டூடண்ஸ்', 'பிள்ளைகள்' என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் "எங்க கொழந்தைங்க… எங்க கொழைந்தங்க" எனச் சொன்ன ஆசிரியர்கள், ஆசிரியைகள்…ஒரு ஞாயிறு மாலையில் 2 மணி நேரங்களை ஒதுக்க மறுத்திருந்தால் மேற்கண்ட எவரையும் நான் அறியாமலே போயிருக்கலாம். 29.11.2015 அன்று ஈரோடு செங்குந்தர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற "குழந்தை நேயப் பள்ளிகள்" பற்றிய அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் விதவிதமான ஆசிரியர்கள் தங்கள் செயல்பாடுகள் குறித்து ஒவ்வொருவராகப் பகிர்ந்துகொள்ள உண்மையில் மிரண்டு போனேன்.நான் அறிந்த வரையில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீது மக்களுக்கு பொதுவாக இரண்டு விதமான மேம்போக்கான கருத்துகள் உண்டு.
ஒன்று, 'நல்ல' சம்பளம் வாங்குறாங்க, மற்றொன்று "எங்க ஒழுங்காச் சொல்லித் தர்றாங்க, அவிங்க புள்ளைங்ளே தனியார் ஸ்கூல்லதான் படிக்குதுங்க". இவ்வாறான கூற்றுகள் சரியா தவறா என்ற ஆராய்ச்சிக்கு முன்பு எல்லோருக்கும் மற்ற எல்லோர் குறித்தும் எந்த விதமான கருத்துகள் வேண்டுமானாலும் உருவாகலாம். அப்படி உருவாகுவதை அவ்வளவு எளிதில் தடுத்துவிட முடியாது. இன்னும் சொல்லப்போனால் எல்லோரிடமிருந்தும் எல்லாவற்றையும் தடுத்து நிறுத்திவிட முடியாது. மேலோட்டமாக இப்படியாக வைத்திருக்கும் கருத்துகளைத் தாண்டியும், எந்தவித ஒப்பீடுகளும், கணக்குகளும், ஏற்றத்தாழ்வுகளும் வைத்துக் கொள்ளாமல் நேர்மையாக, கடுமையாக, அர்ப்பணிப்போடு பணியாற்றும் அரசுப் பள்ளி ஆசிரியர்களும் இருக்கிறார்கள் என்பதை நாம் நிச்சயம் தெரிந்துகொள்ளவே வேண்டும்.ஒரே கல்வி மாவட்டத்தில் அருகருகில் இருக்கும் இரண்டு பள்ளிகளில், ஒரு பள்ளிசுமார் 50 பிள்ளைகளோடு 'நடந்து' கொண்டிருக்கின்றது, மற்றொரு பள்ளி சுமார்300 மாணவர்களோடு 'ஓடி'க் கொண்டிருக்கின்றது. 50 மாணவர்கள் இருக்கும் பள்ளி ஆசிரியர், "தனியார் பள்ளிகளில் சேர்ப்பதை கௌரவமாக நினைக்கிறார்கள் பெற்றோர்கள்.
அதனால் எண்ணிக்கை கூடவில்லை" என்கிறார். 300 மாணவர்கள் இருக்கும் பள்ளி ஆசிரியர், "தனியார் பள்ளிகளுக்கு நாங்கள் கடும் போட்டியாக இருக்கிறோம். 29 பிள்ளைகள் அங்கிருந்து இங்கு வந்து சேர்ந்திருக்கிறார்கள்" என்கிறார். சென்செஸ் கணக்குப்படி இரண்டு குழந்தைகள் மட்டுமே இருக்கும் கிராமத்தில் குழந்தை சேர்ப்புக்காக பேரணி நடத்தச் சொல்கிறார்கள் உயரதிகாரிகள் என்கிறார் ஒரு ஆசிரியர்.இத்தனை உழைப்புக்குப் பின்னால் இருக்கும் ஒரு மறுக்க முடியாத உண்மை, பொதுவாக அரசுப் பள்ளிகளுக்கு பள்ளியின் கற்பித்தல் திறன், கட்டமைப்புத் தகுதி பார்த்து சேர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை மிகச் சொற்பமே. 120 கோடி மக்கள் தொகை கொண்ட இந்திய தேசத்தில், கல்வி பயிலும் வயதில் இருக்கும் பிள்ளைகளின் எண்ணிக்கை சுமார் 23 கோடிப் பேர் என்றால், அதில் சுமார் 3 கோடிக் குழந்தைகள் ஒரு போதும் பள்ளிக்கூட வாசலை மிதித்துவிட முடியாதவர்களாகவே இருக்கிறார்கள் எனும் மிகக் கசப்பான உண்மையை கணக்கில் கொண்டே ஆகவேண்டும்.
அந்த எண்ணிக்கை குறைய வேண்டுமென்றால், அது அரசுப் பள்ளிகள் மட்டுமே செய்ய முடியும்.அரசுப் பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கையில் 90% தனியார் பள்ளியில் கட்டணம் செலுத்தி படிக்க வைக்கமுடியாது என்ற நிலையில் வருகிறார்கள் என்றே கருதலாம். எல்லாக் கதவுகளும் அடைபட்டு, வேறு வழியின்றி அரசுப் பள்ளியில் அடைக்கலம் தேடும் மாணவர்களை, மனித இயல்புக்கே உரிய கீழ்மைத்தனத்தோடு ஒருபோதும் அணுகாமல், அர்ப்பணிப்போடு, தன் திறனை, உழைப்பை,நேரத்தை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தரும் ஆசிரியர்கள் மிக நிச்சயமாகப் போற்றுதலுக்குரியவர்கள், அதைவிட வணக்கத்திற்குரியவர்கள்.
அப்படியான ஆசிரியர்களை தொடர்ந்து இனம் கண்டு அங்கீகரிப்பதும், மற்ற ஆசியர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூகத்திற்கே நம்பிக்கை தருவதாகவும், மாற்றங்களை விதைப்பதாகவும் இருக்கும்.செய்வோம்!

டெங்கு காய்ச்சலுக்கான தடுப்பூசி மெக்ஸிக்கோவில் கண்டுபிடிப்பு

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


உலகிலேயே முதன்முதலாக டெங்கு காய்ச்சலுக்கு தடுப்பூசி மெக்ஸிக்கோவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Aedes aegypti மற்றும் Aedes albopictus எனும் கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சலால்,ஆரம்பத்தில் சளி மற்றும் இருமலுடன் என சாதாரண அறிகுறிகளுடன் ஆரம்பித்து பின்னர் உயிரையே பறிக்கும் மிக கடுமையான நோயாககருதப்பட்டு வருகிறது.
உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் இந்த டெங்கு நோய்க்கு ‘ஸனோஃபி’என்ற பிரான்ஸ் மருந்து தயாரிப்பு நிறுவனம் டெங்கு நோய்க்கான மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் கடந்த 20 ஆண்டுகளாக ஈடுபட்டு, ‘டெங்வாக்ஸியா’ எனப்படும் தடுப்பூசியை வெற்றிகரமாக தயாரித்து மெக்ஸிகோ நாட்டின் ஒப்புதலையும் தற்போது பெற்றுள்ளது.

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடுகாங்கயம் பள்ளி ஆய்வு கட்டுரை தேர்வு

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


        திருப்பூர், :காங்கயம் பள்ளி மாணவியரின் ஆய்வு கட்டுரை, சண்டிகரில் நடைபெறும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டது.
 
         மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப துறை சார்பில், 23 ஆண்டுகளாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடத்தப்படுகிறது. இம்மாநாடு, டிச., 27 முதல் 31 வரை, பஞ்சாப் தலைநகர் சண்டிகரில் நடைபெற உள்ளது.
இதற்கு முன்பாக, மாநில அளவிலான மாநாடு, நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் முத்தாயம்மாள் பொறியியல் கல்லுாரியில், சமீபத்தில் நடந்தது; 29 மாவட்டங்களில் இருந்து, 203 ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. திருப்பூர் மாவட்டத்தில் இருந்து, 12 ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இதில், காங்கயம் ஜேசீஸ் மெட்ரிக் பள்ளியின் எட்டாம் வகுப்பு மாணவி நந்தினி தலைமையில் மேற்கொள்ளப்பட்ட, 'காலநிலை மாறுபாட்டால், தாவரங்களிலும், விலங்குகளிலும் ஏற்படும் மாற்றங்கள்' என்ற ஆய்வு கட்டுரை, அகில இந்திய மாநாட்டில் பங்கேற்க, தகுதியானதாக தேர்வு செய்யப்பட்டது.

மனித உடம்பின் 99 இரகசியங்கள் ! - பகுதி 1

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


1. நன்கு வளர்ந்த ஒரு மனிதனின் உடலில் மொத்தம் 206 எலும்புகள் உள்ளன. ஆனால் அவன் குழந்தையாக இருக்கும் போது அவனுடைய உடலில் 300 எலும்புகள் இருக்கும் அவன் வளர வளர அவற்றில் 94 எலும்புகள் மற்ற எலும்புகளுடன் இணைந்து விடுகிறது…
2. நாம் 6 விநாடிக்கு ஒரு முறை கண்களை இமைக்கிறோம். சாதார ணமாக வாழ்நாளில் சுமார் 25 கோடி முறைகள் கண்களை இமைக்கிறோம்…

3. நமக்கு இரண்டு கால்கள், இரண்டு கண்கள், இரண்டு காதுகள், இரண்டு கைகள் இவைகள் ஒரே அளவாக இருப்பதில்லை காரணம்கருவில் சிசு வளரும் போது அதன் உறுப்புகள் ஒரே சீராக
வளர்வதில்லை. இந்த மிகச் சிறிய வத்தியாசம் தான் நம்மை அழகுபடுத்திக் காட்டுகிறது. நம்
இடது கால் செருப்பை விட வலதுகாலின் செருப்பு வேகமாக தேய்வது கூட இந்த சிறு வித்தியாசத்தால் தான்…
4. மனிதன் இறந்தபின் அவனது ஜீரண உறுப்புகள் தொடர்ந்து 24 மணி நேரம் வரை செயல்படுகிறது.
அவனது எலும்பு தொடர்ந்து 4 நாட்களை வரை செயல் படுகிறது. தோல் தொடர்ந்து 5 நாட்கள் வரை பணி செய்கிறது. கண் மற்றும் காது தொடர்ந்து 6 மணி நேரம் பணி செய்கிறது தசைகள் ஒரு மணி நேரம் செயல்படுகிறது. அவனது சிறுநீரகம் தொடர்ந்து 6 மணி நேரம் செயல்படுகிறது. ஆக
அவனது உயிர் பிரிந் தாலும் அவனது உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் நிறுத்தப்படவில்
லை…
5. 50 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய்ஆகும் பெண்களுக்கு 300 நாட்களில் குழந்தை பிறக்கிறது. 28
நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் ஆகும் பெண்களுக்கு 280 நாட்களில் குழந்தை பிறக்கிறது.
இது தவிர மாதவிடாய் பிரச்சனைகள் உள்ள பெண்களுக்கு குழந்தை பிறப்பும் சற்று முன்னாடியே (குறை பிரச வம்) அமைந்து விடுகிறது. பெண்கள் இது விஷயத்தில் கவனம் கொள்ள வேண்டும்…
6. பகலில் 8 மில்லிமீட்டர் சுருங்கி இரவில் 8 மில்லி மீட்டர் உயர்ந்து விடுகிறோம். காரணம் பகலில் நமது வேலைகள் செய்யும்போது தண்டு வடத்திலுள்ள குறுத்தெலும்பு வட்டுகள் ஈர்ப்பு விசைகாரணமாக அழுத்துகின்றன. இதனால் உயரம் குறைகிறது. இரவில் எவ்வித விறைப்புத் தன்மையும் இல்லாமல் படுத்து உறங்குவதால் நமது உடம்பின் உயரம் கூடுகிறது…
7. நம் இரத்தத்தில் சிவப்பணுக்களின் ஆயுட்காலம் 127 நாட்கள் தான் அதன் பிறகு அது மடிந்து விடும். புது சிவப்பணுக்கள் உருவாகும். இரத்தத்தில் வெள்ளை அணுக்களின் ஆயுட்காலம் 120 நாட்கள்…
8. நம் உடலில் சுமார் 20 லட்சம் வியர்வை சுரப்பிகள் இருக்கின்றன. அவை ஒரு நாளில் சராசரியாக 5 லிட்டர் முதல் 6 லிட்டர் வியர்வையை வெளிப்படுத்துகின்றன…
9. நமது கைகளில் நடுவிரலில் நகம் வேகமாகவும், கட்டை விர லில் நகம் மெதுவாகவும் வளர்கின்றன. நம்முடைய உடல் பாரத்தால் கை விரல் நகத்தைவிட கால்விரல் நகம்
மெதுவாக வளர்கிறது…
10. நாம் இரவில் தூங்கும் போது அசையாமல் தூங்குவதில்லை, சுமார் 40 முறை அந்தப் பக்கம்,
இந்த ப்பக்கமாகப் புரண்டு படுக்கிறோம்…
11. நம்முடைய உடல்தோலின் பருமன் மிகக் குறைந்தபட்சம் ½ மில்லி மீட்டர் கண்ணிமைகளிலும், அதிகபட்சமாகப் பருமன் 4 முதல் 6 மில்லி மீட்டராக உள்ளங்கைகளிலும், அடிப் பாதங்களிலும் அமைந்திருக்கிறது…
12.மூளை அதிகமாக வேலை வாங்கும் மனித உறுப்பு கட் டை விரல்கள்…
13. மனித உடலில் மிகவும் கடினமான பாகம் தாடை எலும்பு…
14. மனித மூளை 80 முதல் 85 சதவீதம் தண்ணீரைக் கொண்டதாகும்…
15. கல்லீரல் 500 விதமான இயக்கங்களை நிகழ்த்துகிறது…
16. நம் ஒடல் தசைகளின் எண்ணிக்கை 630…
17. நம் உடலின் மொத்த எடையில் 12 சதவீதம் பங்கு ரத்தம் உள்ளது…
18. நம் தலைமுடி 1 லட்சத்திலிருந்த இரண்டு லட்சம் வரை உள் ளன. அவை 1 மாதத்திற்குள் 1-1/4 செ.மீ. வளர்கின்றன…
19. மண்டை ஓடு மனிதனின் 80 ஆம் வயது வரை வளர்கிறது…
20. மனித முகங்களை மொத்தம் 520 வகைகளுக்குள் அடக்கி விடலாம்…
              ................தொடரும்.........

Tuesday, 24 November 2015

TPF Closure Regarding Meeting For DEEO's





5 Days BRC Training For Teachers

5 Days BRC Training For Teachers

          அகஇ-சிறப்பாசிரியர்கள்,தொடக்க நிலை மற்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு மாவட்ட அளவில்,வட்டார அளவில் 5நாட்கள் பாடப்பொருள் சார்ந்த பயிற்சி வழங்குதல் சார்ந்து-செயல்முறைகள்.. 

Monday, 12 October 2015

உதவி பேராசிரியர் ஆக எழுதுங்கள் ’நெட்’!

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


       உதவி பேராசிரியர் பணி மட்டுமின்றி, ஆராய்ச்சி படிப்பிற்கான ஊக்கத்தொகை (ஜே.ஆர்.எப்.,) பெறவும் இத்தேர்வில் தகுதி பெற வேண்டும். பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.,) சார்பாக, இடைநிலை கல்வி வாரியத்தால் (சி.பி.எஸ்.இ.,) நடத்தப்படும் இத்தேர்வை லட்சணக்கானோர் எழுதுவதில் இருந்தேஇத்தேர்வின் முக்கியத்தை உணர்ந்துகொள்ளலாம்.


யார் எழுதலாம்?
தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம், வணிகவியல், வரலாறு, அரசியல் அறிவியல், மேலாண்மை என மொத்தம் 99 பாடங்களில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் ‘நெட்’ தேர்வு எழுதலாம். மேலும், முதுநிலை பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண் பெற்றிருப்பது அவசியம்.எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமானது. முதுநிலை இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். பிஎச்.டி., படித்தவர்கள் இத்தேர்வை எழுத வேண்டிய அவசியம் இல்லை.
வயது வரம்பு: உதவி பேராசிரியர் பணியுடன், ஜே.ஆர்.எப்., ஊக்கத்தொகை பெற விண்ணப்பிப்போர், அதிகபட்சம் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு 5 ஆண்டுகள் தளர்வு உண்டு. உதவி பேராசிரியர் பணிக்காக மட்டும் விண்ணப்பிப்போருக்கு வயது வரம்பு இல்லை.தேர்வு விபரம்ஜூன் மற்றும் டிசம்பர் என ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும். இத்தேர்வு முற்றிலும் ‘அப்ஜெக்டிவ்’ முறையைக் கொண்டது; மொத்தம் மூன்று தாள்கள். அனைத்து கேள்விகளுக்கும் தலா 2 மதிப்பெண்கள். ‘நெகட்டிவ்’ மதிப்பெண்கள் இல்லை.
தாள் 1: ஆசிரியர் பணி மற்றும் ஆராய்ச்சி மீதான ஆர்வத்தை சோதிக்கும் வகையில் 60 வினாக்கள் கேட்கப்படும். இதில் 50 வினாக்களுக்கு பதில் அளித்தால் போதும்.
தாள் 2: விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யும் பாடத்தில் இருந்து கேட்கப்படும் 50 வினாக்களுக்கும் பதில் அளிக்க வேண்டும்.
தாள் 3: விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யும் பாடத்தில் இருந்து கேட்கப்படும் 75 வினாக்களுக்கும் பதில் அளிக்க வேண்டும்.தேர்வு எழுத, முதல் இரு தாள்களுக்கும் தலா 1.25 மணி நேரம், மூன்றாவது தாளுக்கு மட்டும் 2.50 மணி நேரம் கால அவகாசம் உண்டு. தேர்ச்சி0 பெற ஒவ்வொரு தாளிலும் குறிப்பிட்ட அளவு மதிப்பெண் எடுக்க வேண்டியது அவசியம்.விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 1தேர்வு நாள்: டிசம்பர் 27ம் தேதிமேலும் தகவல்களுக்கு: cbsenet.nic.in