தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்
அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் எம்.பில்., பிஎச்.டி., போன்ற உயர்கல்வி பயில அனுமதி வழங்கும் அதிகாரம், உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு (ஏ.இ.இ.ஓ.,க்கள்) அளிக்கப்பட்டுள்ளது.
தொடக்கக்கல்வி இயக்குனரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: எம்.பில்., பிஎச்.டி., பயில அனுமதி கோரும் ஆசிரியர்கள் தொடக்கக் கல்வி இயக்குனரகத்திற்கு மனுவை அனுப்புகின்றனர். அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அஞ்சல்வழி கல்வி மூலம் மேற்படிப்பு பயில முன் அனுமதி வழங்கும் அதிகாரம், உதவி மற்றும் கூடுதல் தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, உயர்கல்வி பயில சம்பந்தப்பட்ட உதவி மற்றும் கூடுதல் தொடக்கக்கல்வி அலுவலர்களிடம் அனுமதி பெறலாம். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment