Friday 5 December 2014

மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான முறையில் அலுவலக நடவடிக்கைகள் அமைய தொடக்கக்கல்வித்துறை உத்திரவு

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல். மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான முறையில் அலுவலக நடவடிக்கைகள் அமைய தொடக்கக்கல்வித்துறை உத்திரவு


அனைத்து அலுவல்களுக்கும் மாதிரி படிவங்கள் மற்றும் அலுவலக குறிப்புறைகள் வழங்கி கடைபிடிக்க உத்திரவு தொடக்கக்கல்வித்துறையில் உள்ள லட்சக்கணக்காண ஆசிரியர்கள் சார்ந்த விடுப்பு, உயர்கல்வி, முன்அனுமதி, மருத்துவவிடுப்பு, ஈட்டியவிடுப்பு, அரைச்சம்பள விடுப்பு, வைப்புநிதி முன்பணம் கோரல், பகுதி இறுதிப்பணம் கோரல்,சேமநலநிதி கணக்கீடு,ஊக்கஊதியம் அனுமதித்தல், பதவிஉயர்வுக்குண்டான ஊதிய நிர்ணயம்,பண்டிகை முன்பணம்,மருத்துவ விடுப்பு அனுமதித்தல்,ஆண்டு ஊதிய உயர்வு அனுமதித்தல்,பொன்ற நடைமுறைகள் அந்தந்த உதவித்தொடக்கக்கல்வி அலுவலகப்பணியாளர்களால் அவர்கள் ஏற்கனவே கையாண்ட நடைமுறைகளின்படி அலுவலககுறிப்புகளும்,ஆணைகளும் வழங்கப்பட்டு வந்தன ஆனால் தமிழகம் முழுவதும் உள்ளஅனைத்து உதவித்தொடக்கக்கல்வி அலுவலகங்களிலும் ஒரே மாதிரியான வழிமுறையிணை பின்பற்ற தொடக்கக்கல்வித்துறை இயக்குனரகம் மூலம் ”மாதிரிப்படிவங்கள்,அலுவலகநடைமுறைக்கடிதம்,அலுவலகசெயல்முறை ஆணைகள் மற்றும்,பணிப்பதிவேட்டில் பதிய மாதிரி சீல்கள்” ஆகியன நிர்வாகப்பயிற்சியின் போது வழங்கப்ப்ட்டுள்ளது. .அதனை கடைபிடிக்க கோரப்பட்டு அனைத்து உதவிதொடக்கக்கல்விஅலுவலகங்களுக்கும் உரிய மாவட்டக்கல்வி அதிகரிகள் வாயிலாக அனுப்பப்படுள்ளதாக அறியப்படுகிறது.             

Monday 1 December 2014

நாடு முழுவதும் பின்பற்றப்படும் 10+2+3 கல்வி முறை மாறுகிறது: வருகிறது பல சிறப்பம்சங்களுடன் புதிய 8+4+3 திட்டம்

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


          இந்தியாவில் பின்பற்றப்படும், 10+2+3 கல்வி முறையை மாற்ற, மத்திய அரசு விரைவில் முடிவு செய்யும். இதற்காக, ஆர்.எஸ்.எஸ்.,சின் ஒரு அமைப்பான, பி.எஸ்.எம்., புதிய கொள்கை திட்டத்தை, மத்திய அரசிடம் வழங்கியுள்ளது. அதன்படி, 8+4+3 என, விரைவில் கல்வி முறை மாற உள்ளது.

         கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், 6 - 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, மூன்றாம் மொழிப்பாடமாக இருந்த ஜெர்மன் நீக்கப்பட்டு, சமஸ்கிருதம் கட்டாயமாக்கப்பட்டது. அது போல, நாடு முழுவதும் ஒருங்கிணைந்த கல்வி முறையை கொண்டு வருவதற்காக, மாநில பட்டியலில் உள்ள கல்வியை, மத்திய பட்டியலில் சேர்க்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.அந்த வகையில், இம்மாதம், 17 மற்றும் 18ம் தேதிகளில், ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள, ஆர்.எஸ்.எஸ்.,சின் கல்வி பிரிவான, 'பாரதிய சிக் ஷா மண்டல் - பி.எஸ்.எம்.,' மாநாட்டில், புதிய கல்வி முறைக்கான வரைவுத் திட்டம் வெளியிடப்பட உள்ளது.அதன்படி, தற்போது நடைமுறையில் உள்ள, 10 + 2 + 3 என்ற முறை மாற்றப்பட்டு, 8 + 4 + 3 என்ற புதிய முறையை அறிமுகப்படுத்த, அந்த மாநாட்டில் விரிவான விவாதம் நடத்தப்பட உள்ளது.

ஸ்மிருதியுடன் சந்திப்பு:

பிரதமர் மோடி, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, மூத்த அமைச்சர் வெங்கையா நாயுடு, பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா போன்ற பலர், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பிலிருந்து, பா.ஜ.,வில் இணைந்தவர்கள். பா.ஜ.,வை கட்டுப்படுத்தும் உயரிய அமைப்பாக, ஆர்.எஸ்.எஸ்., விளங்குகிறது என சொல்லப்படுகிறது.இந்திய கல்வி முறையில் மாற்றத்தை கொண்டு வர, மத்திய அரசு, படிப்படியாக சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு முன்னோடியாக, கடந்த அக்., 30ல், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியை, ஆர்.எஸ்.எஸ்., தலைவர்கள் சிலர் சந்தித்தனர் என, டில்லி வட்டாரங்களில் பேசப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ்., மூத்த தலைவர்கள், சுரேஷ் சோனி, தத்தாத்ரேயா ஹோசபலே போன்றோர், அமைச்சர் ஸ்மிருதியை சந்தித்து, கல்வி முறையை எந்தெந்த விதங்களில் மாற்ற வேண்டும் என கூறியதன் அடிப்படையில் தான், மத்திய அரசு, சமீப காலமாக செயல்படுகிறது எனவும் கூறப்படுகிறது.

ஆர்.எஸ்.எஸ்., சொல்வதென்ன?

*வெறும் எழுத்தர்களை உருவாக்கும், மெக்காலே கல்வி முறையை நாட்டிலிருந்து அகற்ற வேண்டும். சிந்திக்கத் தெரிந்த, நாட்டின் நலன், பொருளாதார வளர்ச்சிக்கான அடிப்படை போன்றவற்றுடன் இயைந்தவாறு கல்வி முறை இருக்க வேண்டும்.
*நவீன தொழில்நுட்ப யுக்திகளுடன், பாரம்பரிய கல்வி முறையையும் இணைத்து, புதியதொரு கல்வி முறை பின்பற்றப்பட வேண்டும். 
பொறுப்பு 

யார் வசம்?

கல்வி முறையில் மாற்றம் செய்ய வேண்டும் என்ற, ஆர்.எஸ்.எஸ்., அதற்கான வடிவமைப்பு, செயல்திட்டத்தை, அந்த அமைப்பின் சிறந்த கல்வியாளரான தினாநாத் பத்ராவிடம் வழங்கியுள்ளது. அவர், இதற்காக ஆராய்ச்சி செய்து வடிவமைத்துள்ள கல்விமுறை, குஜராத்தில் பின்பற்றப்பட்டு, வெற்றிகரமாக செயல்படுகிறது.

புதிய கல்வி திட்டத்தின் முக்கிய அம்சங்களாவன:


*இப்போது நடைமுறையில் உள்ள, 10 + 2 + 3 கல்வி முறை, 1968ல், கோத்தாரி கமிஷன் பரிந்துரைப்படி அமலில் உள்ளது; இந்த முறை, விரைவில் மாற்றப்பட உள்ளது.
*மாணவர்களின் முதல் எட்டாண்டு படிப்பு, தனி பிரிவாகவும்; அதன் பின், நான்காண்டு தனிப்பிரிவாகவும்; அதன் பின், மூன்றாண்டு தனிப்பிரிவாகவும் பிரிக்கப்பட உள்ளது.
*முதல் எட்டாண்டு படிப்பு, மாணவர்களின் அடிப்படை கல்வி தொடர்பானதாக இருக்கும்; இதில், அவர்களின் தாய்மொழி தான், முதல் மொழியாக இருக்கும்; ஆங்கிலம், இந்தி துணை மொழிகளாக இருக்கும்.
*முதல் எட்டாண்டு படிப்பில், கணிதம், பொது அறிவியல், சமூக அறிவியல், உடற்கல்வி, வேலை, சுத்தம், பாரம்பரிய கல்வி, சமூக சேவை ஆகிய பாடப்பிரிவுகள் இருக்கும்.
*முதல் எட்டாண்டு படித்து முடிக்கும் மாணவன், விரும்பினால், படிப்பை அத்துடன் நிறுத்திக் கொண்டு, தொழில்கள் செய்யவோ, அல்லது தொழிற்கல்வி  படிக்கவோ செய்யலாம்.
*அதன் பின், விரும்பினால், நான்காண்டு படிப்பை தொடரலாம்.

கல்லூரி மட்ட படிப்பு:


*நான்காண்டு படிப்பு, கல்லூரி மட்ட படிப்பை ஒரே வீச்சில் படிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. விரும்பினால், முதலாண்டுடன் நிறுத்திக் கொள்ளலாம்; அப்போது முதலாண்டு சான்றிதழ் வழங்கப்படும். இரண்டாம் ஆண்டு முடித்த பிறகு, இன்னொரு சான்றிதழ் வழங்கப்படும்; அது, டிப்ளமோ சான்றிதழாகவும், மூன்றாம் ஆண்டு, டிகிரி சான்றிதழாகவும், நான்காம் ஆண்டு சான்றிதழ், ஹானர்ஸ் டிகிரி சான்றிதழாகவும் வழங்கப்படும்.
*இதனால், கல்வி, தொழில் ரீதியாகவும், நாட்டின் உற்பத்திக்கு உகந்ததாகவும் இருக்கும்.
*எந்த படிப்பில் சேரவும், நுழைவுத் தேர்வு முறை இருக்காது என்பது, பி.எஸ்.எம்., வரைந்துள்ள கல்வித் திட்டத்தின் முக்கிய அம்சம். மதிப்பெண் மட்டுமின்றி, பிற தகுதிகளும், பொருளாதாரமும் கவனத்தில் கொள்ளப்படும்.
*எல்லா வகையான படிப்பிலும், செய்முறை எனப்படும் பிராக்டிகல் அவசியம் இருக்கும்.

தொடக்கக் கல்வி - அனைத்து SSA CEOs, APOs and DEEOs க்கும் மண்டல வாரியாக இரண்டு நாட்கள் நிர்வாகப் பயிற்சி

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


      தொடக்கக் கல்வி - அனைத்து SSA CEOs, APOs and DEEOs க்கும் மண்டல வாரியாக இரண்டு நாட்கள் நிர்வாகப் பயிற்சி இரண்டு கட்டமாக முறையே 02 & 03ம், 04 & 05.12.2014 அன்றும் அளிக்கப்படவுள்ளது. 

உயர்கல்வி அனுமதி: ஏ.இ.இ.ஓ., க்களுக்கு அதிகாரம்

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


               அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் எம்.பில்., பிஎச்.டி., போன்ற உயர்கல்வி பயில அனுமதி வழங்கும் அதிகாரம், உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு (ஏ.இ.இ.ஓ.,க்கள்) அளிக்கப்பட்டுள்ளது.
             தொடக்கக்கல்வி இயக்குனரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: எம்.பில்., பிஎச்.டி., பயில அனுமதி கோரும் ஆசிரியர்கள் தொடக்கக் கல்வி இயக்குனரகத்திற்கு மனுவை அனுப்புகின்றனர். அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அஞ்சல்வழி கல்வி மூலம் மேற்படிப்பு பயில முன் அனுமதி வழங்கும் அதிகாரம், உதவி மற்றும் கூடுதல் தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, உயர்கல்வி பயில சம்பந்தப்பட்ட உதவி மற்றும் கூடுதல் தொடக்கக்கல்வி அலுவலர்களிடம் அனுமதி பெறலாம். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

தமிழக அரசு ஊழியர்களுக்கான வீட்டுக் கடன் உச்ச வரம்பு 50 சதவீதமாக உயர்வு

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


              தமிழக அரசு ஊழியர்களுக்கான வீட்டுமனைக் கடன் உச்சவரம்பை 20 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உயர்த்தப்பட்ட கடன் உச்சவரம்புத் தொகையானது, மூன்று தவணைகளாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

         அரசு ஊழியர்கள் வீட்டுமனை வாங்குவதற்கான கடன் தொகையின் உச்சவரம்பை 20 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்த வேண்டுமென தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது. இந்தக் கோரிக்கையை ஏற்று, கடன் தொகையின் உச்சவரம்பானது 50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை வீட்டுக் கடன், முன்பணத் தொகை பெறாத அரசு ஊழியர்கள் அவற்றைப் பெற்றிட வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், வீட்டுக் கடன் ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.12.5 லட்சமாக உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை (பொறுப்பு) செயலாளர் பணீந்திர ரெட்டி புதன்கிழமை பிறப்பித்தார்.

மூன்று தவணைகள் எப்படி? வீட்டு கடன் பெற தகுதி படைத்தவர்களுக்கு மூன்று தவணைகளாக கடன் தொகைகள் வழங்கப்படும். முதல் தவணையாக, அனுமதிக்கப்பட்ட மொத்த கடன் தொகையில் 50 சதவீதத் தொகை அல்லது வழிகாட்டி மதிப்பின்படி ஒரு நிலத்தின் மதிப்பு அல்லது விண்ணப்பதாரர் கோரிய தொகை ஆகியவற்றில் எது குறைவோ அந்தத் தொகை முதல் தவணையாக அளிக்கப்படும்.

இதன்பின், வீட்டுக் கூரை வரை கட்டுமானத்தை எழுப்புவதற்காக இரண்டாவது தவணைத் தொகை அளிக்கப்படும். அது அனுமதிக்கப்பட்ட மொத்த கடன் தொகையில் பாதியாக இருக்கும். இறுதி மற்றும் மூன்றாவது தவணைத் தொகையானது கட்டுமானம் முழுவதையும் முடிப்பதற்காக அளிக்கப்படும். இந்த மூன்று தவணைத் தொகைகளும் 10 மாதங்களுக்குள் அளிக்கப்பட வேண்டும். அதாவது முதல் தவணைத் தொகை 2 மாதங்களுக்குள், அடுத்தடுத்த தவணைத் தொகைகள் தலா 4 மாத இடைவெளிகளுக்குள்ளும் அளிக்கப்பட வேண்டும்.

முதல் தவணைத் தொகையைப் பெற்ற அடுத்த ஆறு மாதங்களுக்குள் அந்த நிலத்தில் வீட்டுக்கான கட்டுமானத்தைத் தொடங்க வேண்டும். இல்லாவிட்டால் அதனை அரசு அடமானத்தில் எடுத்துக் கொள்ள விண்ணப்பதாரர் சம்மதிக்க வேண்டும் என்று அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமைச் செயலக சங்கம் நன்றி: தங்களது கோரிக்கையை ஏற்று, வீட்டுக் கடனுக்கான உச்சவரம்பினை உயர்த்தியதற்கு தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளது. இது குறித்த அறிவிப்பை சங்கத்தின் தலைவர் எஸ்.பீட்டர் அந்தோனிசாமி வெளியிட்டார்.

தொடக்க நடுநிலைப்பள்ளிகளின் விடுமுறை பட்டியல் 2014-15

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


முனனுமதி பெறாமல் பட்டம் பெற்ற ஆசிரியர்கள் ஊக்க ஊதியம் கோரும் நிகழவுகளில் - ஒழுங்கு நடவடிக்கை

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


         தொடக்கக் கல்வித்துறையில் முனனுமதி பெறாமல் பட்டம் பெற்ற ஆசிரியர்கள் ஊக்க ஊதியம் கோரும் நிகழவுகளில் DEEO ஒழுங்கு நடவடிக்கை எடுத்து அதன் நகலை இயக்குநருக்கு அனுப்ப உத்தரவு

ந,க ,எண்-023458/இ1/2014-நாள் 21.11.2014



படைப்பாற்றல் கற்றல் படிநிலைகள்

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்

அரை சம்பள விடுப்பின் போது சம்பளத்தை கணக்கிடும் முறை:

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


            உதாரணமாக தாங்கள் அக்டோபர் மாதம் 27 நாட்கள் அரை சம்பள விடுப்பு எடுத்துள்ளீர்கள் எனில். 
             செப்டம்பரில் தங்களின் ஊதியம் = Pay-13,380(pay+G.P+P.P) + DA-8697(72%)+ HRA-760+ MA-100=22,937.(உத்தேசமாக) 
அக்டோபர் மாதம் மொத்தம் -31 நாட்கள். 
அப்படியானால், 
27 நாட்கள் அரை சம்பளம், 
4 நாட்கள் முழு சம்பளம் . 
முதலில் உங்களின் அக்டோபர் மாத்தத்தின் ஒரு நாள் PAY-ஐ கண்டுபிடிக்க வேண்டும். 
காரணம் Pay-ஐ தவிர மற்ற அனைத்தும் முழுமையாக கிடைக்கும்.DA அறிவிக்கப்பட்டிருந்தால் புது DA தொகையினையும், அந்த மாதம் தங்களுக்கு Increment எனில் அதையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். 
>Pay-13,380/31=431.61 
(ஒரு நாள் Pay) 
>Half pay=431.61/2=215.8 
(அரை நாள் Pay) 
27 days half pay=215.8*27=5826. 
4 days full pay= 431.61*4=1726.4 
Pay-7553 (5826+1727) + DA-8697 (72%)+ HRA-760+ MA-100=17,110.