Tuesday, 6 December 2016

பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாள் விடுமுறை அறிவிப்பு

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்

பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாள் விடுமுறை அறிவிப்பு

பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று முதல் 3 நாட்களுக்கு விடுமுறை:
 தமிழக அரசு அறிவிப்புமரியாதைக்குரிய தமிழகத்தின் இரும்பு பெண்மணி ஜெ.ஜெயலலிதா "அம்மா" காலமானார்., இரவு 11:30 மணிக்கு (05-12-2016) உயிர் பிரிந்ததாக அப்போல்லோ மருத்துவமனை அதிகாரப்பூர்வ அறிவிப்பு.
முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக நேற்றிரவு 11.30 மணி அளவில் இயற்கை எய்தினார். இதையடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று முதல் 3 நாட்களுக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகின்றன வியாழக்கிழமை வரை அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

ஜெயலலிதா இறப்பு அறிக்கை - முழு விபரம்

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்

ஜெயலலிதா இறப்பு அறிக்கை - முழு விபரம்.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அகால மரணத்தையடுத்து அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் 12 மணியளவில் ஒரு அறிக்கையை வெளியிட்டது.
அவ்வறிக்கையின் தமிழ் சாரம் இது:
தமிழக முதல்வர் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா இன்று (5.12.16) இரவு 11.30 மணி அளவில் இயற்கை எய்தினார் என்பதை சொல்லவியலா துயரத்தோடு பகிர்ந்துகொள்கிறோம்.
மாண்புமிகு புரட்சித்தலைவி செல்வி ஜெயலலிதா காய்ச்சல், நீர்ப்போக்கு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு 22.9.2016 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மாண்புமிகு முதல்வருக்கு தொடர்ந்து அளிக்கப்பட்ட பல்நோக்கு சிகிச்சை காரணமாக அவரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. வாய் வழியே உணவு எடுத்துக்கொள்ளும் அளவிற்கு உடல்நிலை சீரடைந்து வந்தது. இதனடிப்படையில் மாண்புமிகு முதல்வர் மேம்படுத்தப்பட்ட தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து உயர் சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டார். அங்கே எங்களின் மருத்துவ நிபுணர் குழு அவரின் உடல்நிலையை தீவிரமாக கண்காணித்து வந்தது.
இந்நிலையில், திடீரென டிசம்பர் 4, 2016-ல் துரதிர்ஷ்டவசமாக மாண்புமிகு முதல்வர் இதய துடிப்பு முடக்கத்தால் பாதிக்கப்பட்டார். அருகிலேயே தீவிர சிகிச்சைப் பிரிவு மருத்துவர் இருந்ததால், முதல்வருக்கு உடனே சர்வதேச அளவில் மிகவும் மேம்படுத்தப்பட்ட முறையான எக்மோ முறையில் சிகிச்சையளிக்கப்பட்டது. அவரின் உயிரைக் காப்பாற்ற முடிந்த அளவில் முயற்சி செய்து சிறந்த சிகிச்சை முறைகள் பின்பற்றப்பட்டன. ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று (5.12.2016) இரவு 11.30 மணியளவில் அவர் உயிரிழந்தார்.
அப்போலோ குழுமத்தின் ஒவ்வொரு உறுப்பினரும், ஊழியரும், மருத்துவரும் தங்களால் இயன்ற அளவிற்கு மாண்புமிகு முதல்வரை அக்கறையாக பார்த்துக்கொண்டார்கள். நவீன சிகிச்சை முறைகளையும், தொழில்நுட்பங்களையும் கொண்டு மாண்புமிகு முதல்வரை ஆற்றுப்படுத்த ஓய்வின்றி உழைத்தோம். இந்திய தேசத்திற்கும், தமிழக மக்களுக்கும் நேர்ந்த இந்த அளவுகடந்த துயரத்தில் நாங்களும் கனத்த இதயத்தோடு பங்கெடுத்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

G.O NO - 449,dt-29.11.2016-CCE-WORKSHEET -தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்



CLICK HERE-TO DOWNLOAD CCE- G.O

Saturday, 3 December 2016

தலைமையாசிரியர் ’கை’யை கடிக்கும் CCE Worksheet தேர்வுகள்!!!

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


அரசு மற்றும் உதவிபெறும் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை (சி.சி.இ.,) தேர்வுகள் நடத்த தலைமையாசிரியர்கள் தங்கள் சொந்த பணம் செலவிடுவதால் அதிருப்தியில் உள்ளனர்.
      தொடக்கக் கல்வி மாணவர்களுக்கு இந்தாண்டு முதல் சி.சி.இ., தேர்வுகள் நடத்த மாநில கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் (எஸ்.சி.இ.ஆர்.டி.,) உத்தரவிட்டுள்ளது. இதன்படி கடந்த இரண்டு வாரங்களாக திங்கள் - வெள்ளி மதியம் 3:00 மணிக்கு 1-8ம் வகுப்பு மாணவர்களுக்கு இத்தேர்வு நடத்தப்படுகின்றன. இன்னும் இரண்டு வாரம் நடக்கிறது.
இத்தேர்வுகளுக்கான வினாத்தாள் (ஒர்க்சீட்) எஸ்.சி.இ.ஆர்.டி., இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. இதை பள்ளிகளில் ’டவுன்லோடு’ செய்து, ஒரு பள்ளியில் 500 மாணவர்கள் இருக்கும்பட்சத்தில் 500 நகல் எடுத்து மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. பல பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளனர். இதற்கான செலவை தலைமையாசிரியர்கள் ஏற்க உதவி கல்வி அலுவலர்கள் வற்புறுத்துவதால் அவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் முருகன் கூறியதாவது:
வினாத்தாள் நான்கு பக்கம் உள்ளது. இதை நகல் எடுத்து மாணவர்களுக்கு வழங்க நாள் ஒன்றுக்கு 700 ரூபாய்க்கு மேல் ஒரு  தலைமையாசிரியர் செலவிட வேண்டியுள்ளது. தற்போது பணம் எடுக்க கட்டுப்பாடு உள்ள சூழ்நிலையில் ஏ.டி.எம்.,ல் தினமும் 2 ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்க முடிகிறது.
இதில் குடும்ப செலவை பார்ப்பதா அல்லது நகலுக்கு செலவிடுவதா. சி.சி.இ., தேர்வு நடத்த உத்தரவிட்ட எஸ்.சி.இ.ஆர்.டி., இயக்குனர் இதற்கென தனியாக நிதி ஒதுக்க வேண்டும் அல்லது மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப வினாத்தாள் அனுப்ப வேண்டும். இதற்கு தலைமையாசிரியரை பலிகடா ஆக்கக்கூடாது. சில உதவிபெறும் பள்ளிகளில் மாணவர்களிடம் இத்தொகை வசூலிப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது, என்றார்.

SSA - உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு 5 நாட்கள் NON - RESIDENTIAL TRAINING - இயக்குனர் செயல்முறைகள்

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்




2017 ல் வார இறுதி நாட்களுடன் மகிழ்விக்க வரும் விடுமுறைகள்.

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


பிறக்கவிருக்கும் 2017 ம் ஆண்டில் அனைத்து விடுமுறை நாட்களும் வார இறுதி நாட்களை ஒட்டியே வருவது பலரையும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. மொத்தம் 14 விடுமறை நாட்கள் வார இறுதி நாட்களுடன் சேர்ந்து வருகிறது.
அதிலும் ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதங்களில் தொடர்ச்சியாக 9 நாட்கள் விடுமுறை வருவது கூடுதல் 'ஜாக்பாட்'
செய்தி.ஜனவரி : 26 ம் தேதி குடியரசு தினம் வியாழக்கிழமை வருகிறது. சனி, ஞாயிறு வார விடுமுறை என்பதால் வெளியூர்களில் தங்கி வேலை செய்வோர் வெள்ளிக்கிழமையும் விடுமுறை எடுக்க வாய்ப்புள்ளது.பிப்ரவரி : 24 ம் தேதி வெள்ளிகிழமை மகாசிவராத்திரி. மார்ச் :11, 12 ஆகிய நாட்கள் சனி,ஞாயிறு இதைத் தொடர்ந்து 13 ம் தேதி திங்கள்கிழமை ஹோலி பண்டிகை விடுமுறை.
25, 26 சனி,ஞாயிறு. 28 ம் தேதி கூடி பட்வா (வடமாநிலங்களில் கொண்டாடப்படும் பண்டிகை) விடுமுறைஏப்ரல் :1, 2 சனி,ஞாயிறு, இதைத் தொடர்ந்து 4ம் தேதி ராம நவமி விடுமுறை.13 ம் தேதி வைஷாகி பண்டிகை, 14ம் தேதி அம்பேத்கார் ஜெயந்தி மற்றும் புனிதவெள்ளி. ஏப்ரல் 14ம் தேதி தென்னிந்தியாவில் தமிழ் புத்தாண்டு தினமாகவும், சித்திரை விஷூவாகவும் கொண்டாடப்படுகிறது. இதைத் தொடர்ந்து 15, 16 ஆகிய நாட்கள் சனி, ஞாயிறு விடுமுறை.
16ம் தேதி ஈஸ்டர் தினம் விடுமுறையாகவே கருதப்படுகிறது.29, 30 சனி, ஞாயிறு விடுமுறை. இதனைத் தொடர்ந்து மே 1 ம் தேதி விடுமுறை.ஜூன் : 24, 25 சனி, ஞாயிறு. இதைத் தொடர்ந்து 26ம் தேதி திங்கள்கிழமை ரம்ஜான்.ஆகஸ்ட் : 12,13 சனி,ஞாயிறு. 14ம் தேதி கிருஷ்ணஜெயந்தி.
15ம் தேதி சுதந்திர தினம். மீண்டும் ஆகஸ்ட் 17 ம் தேதி வியாழக்கிழமை பார்சி புத்தாண்டு. 19 மற்றும் 20 சனி,ஞாயிறு விடுமறை. இதனால் இடையில் வரும் 16 மற்றும் 18 ஆகிய தேதிகள் விடுமுறை எடுத்தால் தொடர்ந்து 9 நாட்கள் விடுமுறை கிடைக்கும்.ஆகஸ்ட் 25 ம் தேதி வெள்ளிக்கிழமை விநாயகர் சதுர்த்தி.
இதைத் தொடர்ந்து 26, 17 சனி,ஞாயிறு விடுமுறைஅக்டோபர் : செப்டம்பர் 30, அக்டோபர் 1 சனி,ஞாயிறு. தொடர்ந்து அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி விடுமுறை. 14, 15 சனி,ஞாயிறு. அக்டோபர் 16 திங்கள் கிழமை தசரா.
17 ம் தேதி நரக சதுர்த்தி. 18 ம் தேதி புதன்கிழமை தீபாவளி. 19 ம் தேதி பலிபிரதிபதா பண்டிகை. 20 ம் தேதி பாய்துஜ் பண்டிகை.
தொடர்ந்து 21 மற்றும் 22 சனி,ஞாயிறு விடுமுறை.டிசம்பர் :டிசம்பர் 1ம் தேதி வெள்ளிக்கிழமை மிலாடி நபி. 2,3 சனி,ஞாயிறு விடுமுறை. டிசம்பர் 23,24 சனி,ஞாயிறு. டிசம்பர் 25 திங்கள்கிழமை கிறிஸ்துமஸ் விடுமுறை

போலி சான்றிதழ்களை தடுக்க புகைப்படம், ரகசிய பார்கோடுடன் சாதி சான்றிதழ் அறிமுகம்.

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


தமிழகம் முழுவதும் இ சேவை மையங்கள் மூலம் வழங்கப்படும் சாதி சான்றிதழ்களில் விண்ணப்பதாரரின் பெயர், மாவட்டம், தாலுகா, கிராமம், எந்த வகுப்பை சேர்ந்தவர், தந்தை பெயர் மற்றும் முகவரியுடன் அரசின் முத்திரை பதித்து வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு வழங்கப்படும்
சான்றிதழ்களில் போலியான சான்றிதழ்களும் வருவதாக புகார்கள் எழுந்துள்ளது.
குறிப்பாக சான்றிதழ் அவசரத்துக்காக தாலுகா அலுவலகங்களில் நடமாடும் இடைத்தரகர்கள் கையில் பணத்தை கொடுத்து ஏமாந்துவிடுகின்றனர். இடைத்தரகர்கள் தாங்கள் போலியாக தயாரித்து வைத்துள்ள அரசின் முத்திரையுடன், வருவாய்த்துறை அதிகாரிகளின் கையெழுத்தையும் தாங்களே போட்டு சான்றிதழ்களை வழங்குகின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இனி, ரகசிய பார்கோடு எண்ணுடன் சம்பந்தப்பட்டவரின் புகைப்படத்துடன் கூடிய சாதி சான்றிதழ்கள் இ சேவை மையங்களில் வழங்கப்படும்.
தமிழகத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த நடைமுறை அடுத்த வாரம் அல்லது ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வரும் என்று வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பான சுற்றறிக்கை தமிழகத்தில் எல்லா இ சேவை மையங்களுக்கும் நேற்று வந்துள்ளது. அதில், ‘சாதி சான்றிதழ்களை வழங்குவதில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இனி சாதிச்சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்து வருபவர்களிடம் ரேஷன் கார்டு, இருப்பிடச் சான்றிதழ், மாணவர்களாக இருந்தால் பள்ளியின் மாற்றுச்சான்றிதழ் நகல்களுடன் கட்டாயமாக உரியவர்களின் புகைப்படம் கொண்டு வரவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அகஇ - பெண்கல்வியின் முக்கியத்துவம்,

அகஇ - தொடக்கக் கல்வி - வட்டார மைய அளவில் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு "தமிழ் கற்பித்தலில் அடிப்படை திறன்களை வளர்த்தல்" என்ற தலைப்பில் இரண்டு நாட்கள் பயிற்சி (டிசம்பர் 8,9 மற்றும் 14,15) இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்.

G.O NO.562 DATED :28.10.1998 - 30 ஆண்டுகாலம் பதவி உயர்வு இல்லாமல் ஒரே பணியில் இருந்தால் Bonus increment பெறலாம்

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


தொடக்கக் கல்வி - சிறுபான்மையினர் நலம் - கிராமபுறங்களில் வசிக்கும் சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் மாணவர்களின் விவரங்களை 06.12.2016க்குள் அனுப்ப இயக்குனர் உத்தரவு.

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


தொடக்கக் கல்வி - விருது - சிறந்த பொது நிர்வாகத்திற்கான "பிரதமர் விருது" - 2015-16ஆம் ஆண்டுக்கான தகுதியுடையோர் விண்ணப்பங்கள் அனுப்ப கோரி இயக்குனர் உத்தரவு

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்