Thursday, 30 March 2017
TPF TO GPF ACCOUNT SLIP
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்
ஊராட்சி / நகராட்சி ஆசிரியர்களின்சேமநலநிதி கணக்கானது( TPF ) பொது வருங்கால வைப்புநிதிக்கு (GPF) மாற்றப்பட்டதால் 2014-2015ஆம் வருட கணக்கீட்டு தாள் சரிசெய்யும் பணி மாநில கணக்காயர் அலுவலகத்தில் நிறைவு பெற்று
( AG's OFFICE )பதிவேற்றம் செய்யும் பணி NATIONAL INFORMATION CENTER ( NIC ) மூலம் நடைபெற்று வருகிறது.விரைவில் 2014 -2015 ஆம் ஆண்டு கணக்கீட்டுதாளை பதிவிறக்கம் செய்யலாம்.
( AG's OFFICE )பதிவேற்றம் செய்யும் பணி NATIONAL INFORMATION CENTER ( NIC ) மூலம் நடைபெற்று வருகிறது.விரைவில் 2014 -2015 ஆம் ஆண்டு கணக்கீட்டுதாளை பதிவிறக்கம் செய்யலாம்.
*ஆசிரியர் பொது வருங்கால வைப்புநிதி 2014 -2015 ஆம் ஆண்டு கணக்கீட்டுத்தாள் மார்ச் முதல் வாரத்தில் வெளியாக வாய்ப்பு
*கணக்கீட்டுத் தாளை சேமநலநிதி எண் மற்றும் பிறந்ததேதியை உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்யலாம்
இக்னோ உண்மைத்தன்மை சான்று கட்டணம் ரூ.100 லிருந்து ரூ.200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
அன்பாசிரியர் தனபால்- 249 இளம் விஞ்ஞானிகளின் ஆசான்!
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்
அறிவியல் ஆய்வகத்தில் மாணவர்களுடன் அன்பாசிரியர் தனபால்
சீமைக் கருவேல சாறிலிருந்து மின்சாரம் ; சூழலியலைக் காக்கும் கழிப்பறை
*
சிறந்த ஆசிரியர் ஒரு மெழுகுவர்த்தியைப் போல- தன்னொளி கொண்டு மாணவர் வாழ்வில் ஒளியேற்றுகிறார்.
கிராமப்புறத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்த தனபாலுக்கு அறிவியலில் அத்தனை ஆர்வம். எந்தப் பொருளைப் பார்த்தாலும் அதைப் பரிசோதித்துப் பார்ப்பார். கல்லூரி முடித்து ஆர்வத்துடன் இளம் விஞ்ஞானிக்கான தேர்வை எழுத 1995-ல் மும்பை சென்றார் தனபால். அங்கே பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் அவருக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. கேள்வித்தாள் முழுவதும் ஆங்கிலத்திலும், இந்தியிலுமே இருந்தது.
ஆரம்பக்கல்வி, உயர்நிலைப் பள்ளி, கல்லூரி இளங்கலை என அனைத்தையும் தமிழ் வழியில் படித்த மாணவர் தனபாலால் அன்று தேர்ச்சி பெற முடியவில்லை. ஆனால் அதே தனபால் இன்று அரசுப்பள்ளி ஆசிரியராகி, கிராமங்களில் இருந்து 249 இளம் விஞ்ஞானிகளை உருவாக்கியிருக்கிறார். அவரின் மாணவர்கள் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் அறிவியல் போட்டிகளில் தங்கத்தைக் குவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆக்கத்தையும், ஊக்கத்தையும் ஊட்டும் அன்பாசிரியர் தனபாலின் அறிவியல் பயணம் இந்த அத்தியாய அன்பாசிரியரில்...
''1996-ல் ஆசிரியப் பயிற்சியை முடித்த எனக்கு 2005-ல் கரூர், வெள்ளியணை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வேலை கிடைத்தது. கிராமத்தில் இருந்து மருத்துவர்கள், பொறியாளர்கள் உருவாகும் பெருமையை ஏற்கெனவே அடைந்துவிட்டோம். ஆனால் விஞ்ஞானிகள் கிராமத்தில் இருந்து உருவாவது மிகமிகக் குறைவு. இதைப் போக்கவேண்டும் என்பதுதான் என் லட்சியமாக இருந்தது. விஞ்ஞானிகள், அறிவியல் என்றவுடனே அந்நியமாக நினைக்க வேண்டாம். அன்றாட வாழ்க்கையில் பொதுமக்கள் சந்திக்கும் பிரச்சனைகளை சரிசெய்பவர்தான் சிறந்த விஞ்ஞானியாக இருக்கமுடியும்.
அறிவியலில் ஆறு குழுக்கள்
இதைத் தொடர்ந்து பள்ளியில் அறிவியல் ஆர்வம் கொண்ட மாணவர்களை இணைத்து ஒரு குழுவை அமைத்துள்ளோம். அறிவியல் நிகழ்வுகள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன. அண்டம், சுற்றுச்சூழல், மின்னியல், மின்னணுவியல், ரோபோ மற்றும் மருத்துவம் என மாணவர்களின் ஆர்வத்தைப் பொருத்து அவர்களை 6 பிரிவுகளாகப் பிரித்து, பயிற்சி அளிக்கிறோம்.
முதல்படியாக தினமும் நாளிதழ் வாசிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். காலை 8.30 - 9.30, மாலை 4.30 - 5.30 என இரண்டு மணிநேரம் ஒதுக்குகிறோம். இதில் வருடத்துக்கு சுமார் 500 மணி நேரம் கிடைக்கிறது. இதுதவிர சனி, ஞாயிறுகளில் களப்பயணம் மேற்கொள்கிறோம். தனித்திறன் வெளிப்பாடு (அறிவியல் துறை சேர்ந்த பேச்சு, எழுத்து, ஓவியப் போட்டிகள்), கண்காட்சி, கருத்தரங்கம், அறிவியல் நாடகம், வினாடி வினா, களப்பயணம், தணிக்கை செய்தல், ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தல், குறும்படம் தயாரித்தல் ஆகியவை தொடர்ந்து நடத்தப்படுகிறது. இவற்றில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொள்கின்றனர்.
2013-ல் கூடங்குளம் அணு உலை பிரச்சினை எழுந்த சமயம். நாளிதழ்களில் அதை வாசித்து என்ன செய்யலாம் என்று திட்டமிட்டோம். பாலமுருகன் என்ற +1 மாணவர், 'அணுமின் உற்பத்தியும், சுற்றுச்சூழல் பாதுகாப்பும்' என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்தார். அது 'ஸ்பேஸ்கிட்ஸ் இந்தியா' நடத்திய போட்டியில் தேர்வாகியது. எங்கள் மாணவருக்கு விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தன் கையால் பரிசு வழங்கினார்.
சீமைக் கருவேல சாறிலிருந்து மின்சாரம்
2014-ல் சீமைக் கருவேல மரங்களின் எதிர்மறைத் தாக்கம் பெரியளவில் விவாதிக்கப்பட்டு வந்தது. பறவைகூடக் கூடுகட்ட முடியாத அந்த மரத்தால் மழைப்பொழிவும், நிலத்தடி நீரும் குறைந்தது. இந்நிலையில் சீமைக் கருவேல மரத்தின் ஒவ்வொரு பாகங்களையும் சேகரித்தோம். காய், இலை, தண்டு, வேர் ஆகியவற்றை பள்ளி ஆய்வகத்தில் வைத்துப் பரிசோதனை செய்தோம். எல்லா தாவரங்களிலுமே அமிலம் இருக்கும். இதைப் பரிசோதித்ததில் அதன் pH மதிப்பு 5 எனக் கண்டுபிடித்தோம். அதைக்கொண்டு ஏன் மின்சாரம் தயாரிக்கக் கூடாது என்று யோசித்து, சீமைக்கருவேலத்தை அரைத்துப் பிழிந்து சாறு எடுத்தோம். 100 மில்லி சாறில் இருந்து 1.5 வோல்ட் மின்சாரம் கிடைத்தது.
மின்சாரத்தின் அளவை அதிகப்படுத்த, தாமிரம்- துத்தநாகம் (Cu-Zn) மின்கலன் கொண்டு, அதைத் தொடரிணைப்பில் (series connection) கொடுத்தோம். இதன்மூலம் 3 லிட்டர் சாறில் 64 வோல்ட் மின்சாரம் தயாரித்து, 50 எல்ஈடி விளக்குகளை எரியவைத்தோம். இந்த செயல்திட்டத்துக்கு சதீஷ்குமார் என்ற +1 மாணவர் மாநில அளவில் தங்கப்பதக்கம் வென்றார். தேசிய அளவிலும் தேர்வாகி, அங்கு மாநிலத்துக்கான 2-ம் பரிசு கிடைத்ததோடு, 'புத்தாக்க அறிவியல் விருது'ம் கிடைத்தது. இப்போது சதீஷ்குமார் ஜப்பானில் நடக்கவுள்ள சர்வதேசக் கருத்தரங்கிலும் பங்கேற்க உள்ளார்.
தொழிற்சாலைக் கழிவுநீரைச் சுத்தப்படுத்த..
அதேபோல, தொழிற்சாலைக் கழிவுகளால் குடிநீரும், நிலத்தடி நீரும் பாழாவதோடு எங்கும் சாக்கடை நீரே வியாபித்திருப்பதைக் கண்டோம். எப்படித் தடுக்கலாம் என்று விசாரித்ததில் கழிவுநீரில் விளையும் பயிர் பற்றித் தெரியவந்தது. மாட்டுத் தீவனப்புல் எனப்படும் கம்பு நேப்பியர் (CN2) பயிர்தான் அது. இப்பயிரால் கழிவு நீரை உறிஞ்சி, வளரமுடியும் என்றாலும் இதைக் கால்நடைகளுக்கு உண்ணக்கொடுக்கக் கூடாது. இதிலிருந்து மின்சாரம் எடுக்கமுடியுமா என ஆய்வுசெய்து, வெற்றிகரமாக மின்சாரம் தயாரித்தோம். இத்திட்டமும் மாநில அரசின் பெருத்த வரவேற்பைப் பெற்றது.
சூழலியலைக் காக்கும் கழிப்பறை
பொதுவாக கழிப்பறை கழிவுகள் பூமிக்கடியில் சேகரமாகின்றன. இதனால் நிலத்தடி நீருடன் கழிவு நீர் கலந்து அசுத்தமாகிறது. மேற்கத்திய கழிப்பறைகளால் அதிகளவில் தண்ணீரும் வீணாகிறது. இதைத் தடுக்கவும், திறந்தவெளி மலம் கழித்தலைக் குறைக்கவும் 2016-ல் சூழலியல் காக்கும் கழிப்பறையைக் கட்டினோம். இக்கழிப்பறை பூமிக்கு மேலே 3 அடி உயரத்திலேயே கழிவுகளைச் சேகரிக்கும். இது 3 வகைகளில் கழிவைப் பிரிக்கும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்கும். தென்னை நார், சாம்பல் மூலம் கழிவிலிருந்து துர்நாற்றம் கிளம்பாது. நொதித்தல் மூலம் கழிவுகள் இயற்கை உரங்களாக மாற்றப்படும். அதில் கால்சியம், பொட்டாசியம், சாம்பல் சத்து இருக்கும் என்பதால் விவசாயத்துக்குப் பயன்படுத்தலாம். இந்த செயல்திட்டத்தை விளக்கி ஹரிஹரன் என்ற மாணவர், மாநில அளவில் தங்கப்பதக்கம் பெற்றார்.
செயல்திட்டங்களையும், ஆய்வுக்கட்டுரைகளையும் சமர்ப்பிப்பதற்காகத் தொடர்ந்து பயணித்துக்கொண்டே இருக்கிறோம். அரசு அளிக்கும் தொகை போக்குவரத்துக்கே செலவாவதால், லக்கேஜ், உணவு உள்ளிட்ட செலவினங்களை நானே பார்த்துக் கொள்கிறேன். கிராமப்புற மாணவர்கள் நாடு போற்றும் விஞ்ஞானிகளாக உருமாற்றும் தருணத்தைவிட ஓர் ஆசிரியருக்கு வேறென்ன தேவைப்பட்டுவிடும்?
'என்னை செதுக்கியது மாணவர்கள்தான்'
உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், என்னுடைய பள்ளிப்பருவத்தில் நான் எந்த மேடையும் ஏறியதில்லை; பரிசுகளோ, கைதட்டல்களோ வாங்கியதில்லை. இப்போது என் மாணவர்கள் அவற்றைப் பெறும்போது நான் அடையும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. மாணவர்களுடன் இப்போது வரை 117 மேடைகள் ஏறியிருக்கிறேன். என்னைச் செதுக்கியது மாணவர்கள் என்பதில் எனக்குப் பெருமைதான்.
அறிவியலுக்கு செயல்வழிக் கற்றல் மிகவும் முக்கியம். அதனால் பாடங்களைப் பெருமளவில் ஆய்வகத்திலும், களங்களிலும் கற்பிக்கிறோம். பத்தாம் வகுப்பில் அறிவியலில் நூற்றுக்கு நூறு வாங்கும் மாணவர்களுக்கு ஒரு வெள்ளி நாணயத்தை ஆண்டுதோறும் பரிசாக வழங்கிவருகிறேன். 8 ஆண்டுகளாக என் மாணவர்கள் அறிவியலில் 100% தேர்ச்சி பெற்று வருகின்றனர்.
வெளியூரில் இருந்து படிக்கும் மாணவர்கள்
அரசுப்பள்ளி என்றாலும் வெளியூர்களில் இருந்து மாணவர்கள் இங்கு வந்து படிக்கிறார்கள். மாணவர்களின் தனித்திறமையைக் கண்டு, ஈரோடு, திருச்சி, நாமக்கல் மாவட்டங்களில் இருந்து பெற்றோர்கள் தங்கள் மகன்களை இங்கே சேர்க்கின்றனர். அவர்களின் நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டும் என்ற உறுதியில் இன்னும் கூடுதலாக உழைக்கிறேன். முதுகலை இயற்பியல் ஆசிரியராகப் பதவி உயர்வோடு, இட மாற்றலுக்கான ஆணை வந்தது. என் மாணவர்களின் நலன் கருதி அதை வேண்டாமென்று கூறிவிட்டேன். 12 வருடங்களில் ஒரு நாள் கூட மருத்துவ விடுப்பு எடுக்காமல் ஓடிக்கொண்டே இருக்கிறேன்.
எங்கள் மாணவர்களின் அறிவியல் சாதனைகளைக் கண்ட முன்னாள் மாணவர்கள் ஒன்றுசேர்ந்து, 80 ஆயிரம் ரூபாய் செலவில் ஆய்வகத்தை மறுசீரமைப்பு செய்துகொடுத்தனர். 100 பேர் அமரும் வகையில், இளம் விஞ்ஞானிகள் ஆய்வுக்கூடமும் அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது வைக்கோல் எரிப்பதால் டெல்லியில் ஏற்படும் மாசுபாடு குறித்து செய்தித்தாளில் படித்தோம். இதனால் வைக்கோல் மறுசுழற்சி குறித்து ஆய்வில் ஈடுபட்டுள்ளோம். தேசிய அளவில் வெற்றி பெற்று விருதுடன் திரும்பும் மாணவர்களுக்கு பாராட்டு விழா நடத்த ஆசை. ஆனால் அரங்க வசதி இல்லாமல் இருக்கிறது. அத்துடன் நவீன உபகரணங்கள் கொண்டு ஆய்வகத்தை மேம்படுத்தும் முயற்சியிலும் இருக்கிறோம். நல்லுள்ளங்களின் உதவியில் அனைத்தும் நடக்கும்'' என்கிறார் அன்பாசிரியர் தனபால்.
க.சே. ரமணி பிரபா தேவி --> தொடர்புக்கு: ramaniprabhadevi.s@thehindutamil.co.in
ஆசிரியர் தனபாலின் தொடர்பு எண்: 9443588855
PSTM என்பது Person Studied in Tamil Medium
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்
அதாவது TNPSC ல் முற்றிலுமாக தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு உள்ளது. தமிழை மட்டும் ஒரு பாடமாக எடுத்து படித்தால் அது தமிழ் வழியில் படித்தல் ஆகாது, ஆங்கிலம் தவிர, மற்ற அனைத்துப் பாடங்களையும் தமிழில் படித்து இருக்க வேண்டும்.
நீங்கள் தமிழ் வழியில்தான் படித்து இருக்கிறீர்கள் என்பதனை நிருபிக்க, TNPSC-க்கு நீங்கள் படித்த பள்ளி, மற்றும் கல்லூரியில் இருந்து தமிழ் வழியில் படித்ததற்க்கான சான்றிதழ் வாங்கி TNPSC ல் சமர்ப்பிக்க வேண்டும். இந்த சான்றிதழின் மாதிரி படிவம் TNPSC ஆல் கொடுக்க பட்டு உள்ளது. பத்தாம் வகுப்பு (SSLC), மற்றும் பட்ட படிப்பு (Degree) இவற்றிற்கு தமிழ் வழியில் படித்ததற்க்கான சான்றிதழ் கண்டிப்பாக வாங்கி வைத்து கொள்ள வேண்டும். முடிந்தால் 12 ம் வகுப்பிற்கும் சேர்த்து வாங்கி வைத்து கொள்ளுங்கள், தவறு இல்லை.
சான்றிதழ் படிவத்தை நீங்கள் தயார் செய்து கொண்டு நீங்கள் படித்த பள்ளிக்குச் சென்றால், அவர்கள் அதனை நிரப்பி பள்ளி / கல்லூரி முத்திரை இட்டு பள்ளி / கல்லூரி முதல்வர் கையொப்பம் இட்டு தருவார். அந்த பள்ளியில் தான் படித்தீர்கள் என்பதனை நிருபிக்க இந்த சான்றிதழை வாங்க செல்லும் பொழுது மதிப்பெண் நகல் அல்லது மாற்றுச் சான்றிதழை எடுத்துச் செல்லலாம்.
முக்கியமாக, இந்த PSTM சான்றிதழை, நீங்கள் தேர்விற்கு விண்ணப்பம் செய்யும்போது நான் தமிழ் வழியில் படித்து இருக்கிறேன் என்று தெரிவிக்க வேண்டும், மேலும் இந்த சான்றிதழ் வாங்கப்பட தேதியை விண்ணப்பத்தில் நீங்கள் குறிப்பிட வேண்டும். அப்போதுதான், நீங்கள் தமிழ் வழியில் படித்து உள்ளீர்கள் என்று TNPSC-ஆல் ஏற்றுக் கொள்ளப்படும். உங்களுக்கான இட ஒதுக்கீடு சலுகையும் கிடைக்கும். மாறாக விண்ணப்பத்தில் நீங்கள் இதனை பற்றி குறிப்பிடாமல், பின்னர் சான்றிதழ் சரி பார்ப்பின் பொழுதோ அல்லது கலந்தாய்வின் பொழுதோ இந்தச் சான்றிதழை கொண்டு சென்றால் அது TNPSC-ஆல் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
PSTM சான்றிதழை, தமிழில் வாங்கி வைத்து இருப்பது தவறு இல்லை, ஆனால் TNPSC அதற்க்கான ஆங்கில படிவத்தை கொடுத்து இருப்பதால் அதனையே பயன்படுத்துதல் மிகவும் நன்று. அதாவது நமது அனைத்து சான்றிதழ்களிலும் நமது பெயர் ஆங்கிலத்திலயே இருக்கும். இந்த சான்றிதழில் மட்டும் தமிழில் இருந்தால் பெயர் குழப்பம் ஏற்படும் என்பதற்காக ஆங்கிலத்தில் வைத்து இருக்கலாம். நீங்கள் ஏற்கனவே தமிழ் படிவத்தில் விண்ணப்பித்து இருந்தால் பரவாயில்லை.
Thursday, 2 March 2017
2036ல் என்னென்ன தொழில்கள் இருக்கும்,இருக்காது ??
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்
25 வருஷத்துக்கு முன்னாடி மன்மோகன் சிங் கொண்டுவந்த பொருளாதார சீர்திருத்தம் தான் நமக்கு இதுவரை சோறு போடுது...ஆனா நெலம இப்படியே தொடரும்னு எதிர்பார்க்கறது முட்டாள்தனம், நாம நம்மள மாத்திக்கணும்...!
அவருடைய வார்த்தைகள் முழுவதும் எனக்கு உடன்படாவிட்டாலும், அதில் நிதர்சனம் இருக்கிறது என்றே பட்டது.
1998ல தொடங்கின kotak நிறுவனம், ஒரு லட்ஷத்தி எழுபதாயிரம் வேலை ஆட்களோட சக்கை போடு போட்டது...!
இன்னைக்கு அப்படி ஒரு நிறுவனமே இல்ல...! வெள்ளை பேப்பர்ல print எடுத்து தான் photo பார்க்கமுடியும்கறது இவ்வளவு சீக்கிரமா வழக்கொழிந்து போகும்னு அவங்க நினைக்கவே இல்ல.
இன்னைக்கு அப்படி ஒரு நிறுவனமே இல்ல...! வெள்ளை பேப்பர்ல print எடுத்து தான் photo பார்க்கமுடியும்கறது இவ்வளவு சீக்கிரமா வழக்கொழிந்து போகும்னு அவங்க நினைக்கவே இல்ல.
பேப்பர் போட்டோ தொழிலுக்கு என்ன நடந்ததோ, அதுதான் பெரும்பாலான தொழில்களுக்கு அடுத்த பத்து வருஷத்துல நடக்கும்ங்கறது தான் அந்த நண்பரோட ( நான் ஒத்துக்கொண்ட) வாதம்....!
தெருவுக்கு தெரு மொளைச்ச PCO, STD பூத்தெல்லாம் இப்ப எங்க போச்சு??
எதனால ? ஏன் இப்படினு கேட்டா?
டெக்னிகலா சொல்லனும்னா Artificial Intelligence. சிம்புளா சொல்லனும்னா 'Software' என்கிற மென்பொருள். மனுஷ மூளையை விட திறமையா செயல்படும் இதுங்க தான் மேலதிகமான காரணமா இருக்கும்.!
உதாரணத்துக்கு சொல்லனும்னா...சொந்தமா ஒரு கல்யாண மண்டபம் கூட வெச்சிக்காம, 'Bharat Matrimony' வருஷத்துக்கு ஆயிரக்கணக்கான கல்யாணங்களை நடத்திக்கொடுக்குது...கமிஷனோட...! இல்லீங்களா..?
'Ubar'ங்கறது ஒரு சாதாரண மென்பொருள், ஒரு ஸ்கூட்டர் கூட சொந்தமா வெச்சிக்காம, இன்னைக்கு உலகத்துலயே பெரிய டாக்ஸி சேவை கம்பெனியா கொடி கட்டி பறக்குது...!
இந்த மாதிரி software tool எல்லாம் எப்படி நல்லா போய்ட்டு இருக்கிற தொழில்களை பாதிக்கும் ?
அதுக்கும் ஒரு நல்ல உதாரணத்தை சொல்லலாம்: உங்களுக்கு ஒரு சட்டச்சிக்கல் வருது...என்ன பண்றதுனு தெரியலை...! என்ன செய்வீங்க? ஒரு நல்ல வக்கீலா பார்த்து..யோசனை கேப்பீங்க...! சிக்கலோட தீவிரத்தை பொறுத்தோ அவரோட பிரபலத்தை பொறுத்தோ உங்க கிட்ட அவரு fees வாங்குவாரு..! இல்லையா...!
இப்ப, அதையே ஒரு கம்ப்யூட்டர் சல்லிசா செஞ்சு கொடுத்தா ? உங்களோட சிக்கல் என்னனு சின்னதா சில வரிகள் type பண்ணின உடனே, IPC Sectionஓட சரியான விவரங்கள அந்த கம்ப்யூட்டர் கொடுத்தா ? நாட்ல பெரும்பாலான வக்கீல்கள் தலைல துண்ட போட்டுக்கிட்டு தானே போகணும்...!
IBM Watson, இப்ப அமெரிக்காவுல அதைத்தான் செஞ்சுகிட்டு இருக்கு. ஒரு லாயரால அதிகபட்சம் 70% தான் ஒரு சட்டச்சிக்கலுக்கு தீர்வு சொல்லமுடியும்னா, இந்த மென்பொருள் 90% சரியான தீர்வை சில வினாடில சொல்லுது...!
அதனால, அமெரிக்க பார் கவுன்சிலோட கணக்கு படி, இன்னும் 10 வருஷத்துல அமெரிக்காவுல 90% வக்கீல்கள் காணாம போய்டுவாங்க..! அட யாருமே வராத கடையில இவங்க யாருக்கு டீ போடுவாங்க ?
ஆடிட்டர்கள், டாக்டர்கள்ள இருந்து ப்ரோக்கர்கள் வரை நிலைமை அதே தான்...! 80% மேலான சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் இனி ஆளுங்க தேவை இல்லை..கம்ப்யூட்டரே பாத்துக்கும். 'Subject Matter Experts'னு சொல்லப்படற விற்பன்னர்கள் தான் இனி பொழைக்க முடியும்...!
ஆட்டோமோட்டிவ் தொழில்நுட்ப துறைல 15 வருஷமா இருக்கறதால நான் 100% நம்புகிற ஒரு விஷயத்தை சொல்றேன் கேட்டுக்கோங்க...!
2018ல Satellite மூலமா இயக்கப்படும் தானியங்கி கார்கள் ரோட்டுக்கு வந்துடும்.(நம்ம ஊர்ல இல்லீங்க..பணக்கார நாடுகளோட சில நகரங்களில் மட்டும்) அதோட result மட்டும் சக்ஸஸ் ஆயிடுச்சுன்னா...ஒட்டுமொத்த ஆட்டோமோட்டிவ் சம்பத்தப்பட்ட எல்லா நேரடியான, மறைமுகமான தொழில்கள் நிச்சயம் பாதிக்கப்படும்.
அடுத்த 10 வருஷத்துல நிலைமை இதுதான்: யாருக்கும் கார் ஓட்ட வேண்டிய / வாங்கவேண்டிய தேவை இருக்காது,. 'Driving License' என்ற ஒன்று காணாமல் போயிருக்கும். பார்க்கிங் பிரச்சனை என்பதே இருக்காது. ஒரு எடத்துக்கு போகணும்னா..உங்க செல்லில் இருந்து..ஒரு மிஸ் கால்..இல்ல..SMS...! அடுத்த ரெண்டு நிமிஷத்துல உங்க முன்னாடி தானா ஒரு கார் வந்து நிக்கும். நீங்க போகவேண்டிய எடத்துக்கு சமர்த்தா கொண்டுபோய் விட்டுடும். கிலோமீட்டருக்கு இவ்வளோனு நீங்க காசு கொடுத்தா போதும். பொருட்கள் அனுப்புறது முன்னை விட சீக்கிரமாவும் பத்திரமாவும் இருக்கும்.
இதனால என்னவாகும்ன்னா...அடிக்கடி தேவைப்படாம பார்கிங்க்ல தூங்கற 37% வாகனங்கள் இருக்காது. சொந்தமா ஒரு டிரைவர், இல்ல டாக்ஸி டிரைவர்னு ஒருத்தனும் இருக்கமாட்டான். சிக்னல், ட்ராபிக்ஜாம் பத்தி எல்லாம் யோசிக்கவே மாட்டோம். 'Accident' ரொம்ப கொறஞ்சு போய்டும். சிட்டில 'கார் பார்க்கிங்'காக மட்டுமே ஆக்ரமிக்கப்பட்டிருக்கிற 17% நிலங்கள் காலியாயிடும். உலக அளவுல மோட்டார் வாகனங்களின் விற்பனை 90% கும் கீழ போய்டும். 10 கோடி பேர் வரைக்கும் வேலை போகும்.
Tesla, Apple, Microsoft, google இவங்க கட்டுபாட்ல தான் இந்த டிரைவர்கள் இல்லாத தானியங்கி கார்கள் இருக்கும். எல்லாமே மின்சாரத்துல தான் ஓடும். முப்பதே வருஷத்துல 7% உலகளாவிய மின் உற்பத்தியை கொடுக்கும் சூரிய மின்தொழில்நுட்பம், இன்னும் 10-15 வருஷத்துல 25% மேல் மின்சார தேவையை பூர்த்தி செய்யும்.
இதெல்லாம் நம்ம ஊருக்கு லேசுல வராதுங்கனு நீங்க நெனைச்சா..? உங்க நினைப்பை மாத்திக்குங்க...இன்னைக்கு பெரும்பாலான உலக நிறுவனங்களோட எதிர்கால பொருட்களை (Future Products) விற்பனைக்கு வெக்கப்போற முக்கிய சந்தை ஆசிய மார்க்கெட் தான்..குறிப்பா சீனா & இந்தியா. ஒரு காலத்துல இவங்களால கொஞ்சம் லேட்டா கண்டுக்க படற நிலைமையை செல்போன்கள் மாத்திடுச்சு. 15 வருஷ அமெரிக்க லாபத்தை செல்போன் கம்பெனிகள் 5 வருஷத்துல இந்தியால சம்பாரிச்சிட்டாங்க. இனிமே விடுவாங்களா ??
சரி, மேற்கொண்டு என்னென்ன தொழில்கள் பாதிப்புக்கு உள்ளாகும் ?
முக்கியமா 'Banking' எனப்படும் வங்கி சேவைகள். 'BitCoin' னு ஒண்ணை பத்தி கேள்விப்பட்டு இருக்கீங்களா? இல்லனா கூகுளை கேளுங்க...! அடிச்சு சொல்லும் அடுத்த 10 வருஷத்துல உலக கரன்ஸி இப்படி ஏதாவது ஒண்ணு தான்னு.
அப்புறம், 'Insurance' எனப்படும் காப்பீட்டு திட்டங்கள். மொத்தமா செம்மஅடி வாங்கும்.
ரியல்-எஸ்டேட் (வீட்டுமனை) சுத்தமாக மாறிப்போகும். சிட்டிக்குள்ள குவியும் கலாச்சாரம் மாறிப்போய் பரவி வாழும் நிலை உருவாகும். வீட்டு பக்கத்திலியே Green House வெச்சு காய்கறி உணவு பொருள்கள் தயாராகும்.
விவசாயம்: இன்னைக்கு பணக்கார நாட்டு விவசாயிகள், மெஷின்களை மேய்க்கும் மேனஜர்களாக தான் இருக்கிறார்கள். நம்ம ஊருக்கு சீக்கிரமே இந்த நெலமை வந்துடும்.
காத்துல இருக்கிற ஈரப்பதத்தை உறிஞ்சி தண்ணீர் குடிச்சுக்கலாம் தாகம் எடுக்கறப்போ.
'Moodies'ங்கற ஒரு App, இப்பவே உங்க முகத்தை scan செஞ்சு உங்க மூடு என்னனு சொல்லுது...2020ல நீங்க பொய் சொல்றீங்களா இல்ல உண்மைய சொல்றீங்களானு அச்சு பிசகாம சொல்லிடும். யாராலயும் ஏமாத்த முடியாது.
இப்பவே மனுஷங்களோட சராசரி ஆயுட்காலம் வருஷத்துக்கு 3 மாசம் கூடிகிட்டே போகுது (2012ல 79ஆ இருந்த சராசரி ஆயுட்காலம் இப்ப 80 ஆயிடுச்சு). 2036ல மனுஷனுங்க நிச்சயம் 100 வருஷத்துக்கு மேல வாழ்வாங்க.
Tricoder X னு ஒண்ணு அடுத்த வருஷம் மார்கெட்க்கு வருது. உங்க செல் போன்ல உட்கார்ந்துகிட்டு வேலை செய்யும் இது, உங்க கண்ணை ஸ்கேன் பண்ணும். உங்க ரத்த மாதிரியை ஆராயும். உங்க மூச்சு காத்தை அலசும். உங்க உடம்புல என்ன வியாதி, எந்த மூலைல எந்த நிலைல இருந்தாலும் சொல்லிப்புடும். அப்புறம் என்ன 2036ல 100 வருஷம் வாழறதெலாம் ஜுஜுபி.
அதனால்..மக்களே...! இன்னைக்கு பரபரப்பா இருக்குற 80-90% தொழில்கள் காணாம போய்டும்..புதுசா தொழில்கள் வரும்..ஆனா வேலையில்லா திண்டாட்டம் கூடிகிட்டே போகும். மொத்தத்துல, சூதானமா இருந்தாதான் பொழப்பு ஓடும்...!!
TN GOV EMPLOYED NHIS-2016 card !!
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்
NHIS-2016 card for the period 01.07.2016 to 30.06.2020 can be downloaded online in the above link by entering your NHIS-2012 card No. & password. Password is date of birth in (DD/MM/YYYY)format
Subscribe to:
Posts (Atom)