Thursday, 1 December 2016

நாடா' புயல் எச்சரிக்கை: தமிழக அரசின் 15 அறிவுறுத்தல்கள்

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


'நாடா' புயல் வருவதனை முன்னிட்டு புயல் நேரத்தில் பொது மக்கள் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கை குறித்து தமிழக
அரசின் வருவாய்த் துறை 15 அம்ச அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
15 அறிவுறுத்தல்கள்
1. ரேடியோ மற்றும் தொலைக்காட்சியினை தொடர்ந்து கவனித்து கால நிலை அறிவிப்புகளை அறிந்து கொள்ளவும். இச்செய்தியினை பிறருக்கும் தெரிவிக்கவும்.
2. ரேடியோ மற்றும் தொலைக்காட்சியில் பெறப்படும் அதிகாரபூர்வமான செய்தியை மட்டுமே பிறருக்கு தெரிவிக்கவும்.
3. புயல்காற்று கதவு மற்றும் ஜன்னல்களை சேதப்படுத்த வாய்ப்புள்ளதால் அவற்றை இறுக்கமாக மூடி வைக்கவும்.
4. கடற்கரை மற்றும் நீர் சூழ வாய்ப்புள்ள பகுதிகளில் இருந்தால் மேடான பகுதிக்கு விரைவாக வெளியேறவும். நீர் சூழ்வதற்கு முன்னரே பாதுகாப்பான பகுதிக்கு சென்று விடவும்.
5. தங்கள் குடியிருப்பு வெள்ளம் மற்றும் புயலால் பாதிக்கப்படாதுயெனில் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கவும். எனினும் அதிகாரபூர்வமாக கேட்டுக்கொள்ளப்பட்டால் உடன் வெளியேறவும்.
6. நீர்நிலைகள் மற்றும் ஆற்றின் கரைகளிலுள்ள குடியிருப்புகளுக்குள் கன மழை காரணமாக நீர் சூழ வாய்ப்புள்ளதால் கரையோரங்களில் குடியிருப்போர் கவனமாக இருக்கவும்.
7. சமைக்காமல் உண்ணக்கூடிய உணவுகள் (பிரட், பிஸ்கட், பழங்கள்) தேவையான அளவு இருப்பு வைக்கவும், போதுமான குடிநீர் பாதுகாப்பான பாத்திரங்களில் சேமித்து வைக்கவும்.
8. நீர் சூழ்வதால் வெளியேற வேண்டிய பகுதியில் நீங்கள் குடியிருந்தால், பொருட்சேதங்களை தவிர்ப்பதற்காக விலை உயர்ந்த பொருள்களை வீட்டில் உயரமான பகுதியில் வைத்து பாதுகாக்கவும்.
9. குழந்தைகள் மற்றும் சிறப்பு உணவு தேவைப்படும் முதியோருக்கு தேவையான உணவுப் பொருளை இருப்பு வைக்கவும்.
10. மழைநீரில் செல்வதாயின், கையில் கொம்பு ஒன்றினை வைத்துக் கொள்ளவும். பாம்பு, பூச்சிகள் கடிக்க வாய்ப்புள்ளதால் கவனம் தேவை.
11. மின் வயர்கள் அறுந்து கிடக்க வாய்ப்பு உள்ளதால் தெருக்களில் கவனமாக நடக்கவும்.
12. அமைதியாக சூழ்நிலையை புரிந்து கொள்ளவும். ஆபத்து நேரத்தினை அமைதியாக எதிர் கொள்ளும் உங்களது திறன் மற்றவர்களுக்கும் பயன்படலாம்.
13. அதிகாரபூர்வமாக அறிவிக்கும் வரை புயல் பாதுகாப்பு மையங்களிலிருந்து வீட்டிற்கு திரும்பி செல்ல வேண்டாம்.
14. மின்கம்பங்களிலிருந்து தளர்வான / அறுந்த மின்கம்பிகளை கவனமாக தவிர்க்கவும்.
15. பேரிடரால் பாதுகாப்பிற்கு உள்ளான பகுதிக்கு தேவையில்லாமல் வேடிக்கை பார்க்க செல்ல வேண்டாம். உங்களது உதவி தேவைப்படும் எனில் மட்டுமே செல்லவும்.
இவ்வாறு வருவாய்த் துறை தெரிவித்துள்ளது

Half Pay Salary News - அரை சம்பள விடுப்பு உத்தரவு - விளக்கம்

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


சமீபத்தில் வந்திருக்கும் Half pay salary government letter ல் அனைத்து படிகளுக்கும் Half pay தான் என கூறப்பட்டுள்ளது அதாவது இது SUPERIOR SERVICE க்கு மட்டும் தான் பொருந்தும் யாரெல்லாம் 6600 GRADE PAY வாங்ஙகுகிறார்களோ அவர்களுக்கு மட்டும் தான்.


தொடக்க நிலை ஆசிரியர்களின் உச்சபச்ச GRADE PAY 5400 தான் மற்றும் Hr.Sec hm GP 5700/-ஆகையால் இதற்கும் நமக்கும் துளி அளவு கூட தொடர்பில்லை நம் ஆசிரியர்களில் யாரும் தேவை இல்லாமல் கவலை பட வேண்டாம் .

SSA - அனைத்துப் பள்ளிகளிலும் 1முதல் 8 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவா்களுக்கு 8.12.2016 அன்று கீழ்கண்ட தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்பட வேண்டும்.

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


குழந்தைகளின் நினைவாற்றலை வளர்ப்பதற்கான டிப்ஸ்...ஆசிரியர் தீலிப்

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்



கனமழை- பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிப்பு.

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


*சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர்,நாகை,கடலூர் ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை.
*விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம்,வானூர் வட்டம்.
*புதுச்சேரி,காரைக்கால் பள்ளிகளுக்கு 2 நாட்கள்  விடுமுறை.
               
-பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.
*மேலும் மழையின் அளவைப்பொருத்து அந்தந்த மாவட்ட நிர்வாகமே விடுமுறை விட அரசு உத்தரவு.விரைவில் மேலும் பல மாவட்டங்கள் அறிவிக்கப்படும்.

SCERT வாரத் தேர்வு (worksheet) குறைகள்

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


தமிழ்நாட்டில் என்னென்ன கல்வி முறை எப்படி உள்ளது எனத் தெரியாமலேயே தேர்வு நடத்தப்படுகிறதா?
மதிப்பெண் உண்டா? கிடையாதா?
சில பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி
1,2,3 ஆம் வகுப்பு வரையில் உள்ளது. சில பள்ளிகளில் 1,2,3,6,7 வகுப்புகள் ஆங்கில வழிக்கல்வியில் உள்ளது.
ஆனால் வினாக்கள் தமிழில் மட்டும் உள்ளது.
ஒரு முறைக் கொடுத்த வினாத்தாலே மறுபடியும் கொடுக்கப் படுகிறது.
பத்து மதிப்பெண்களுக்கு தேர்வு எனக் கூறி விட்டு
7 வினாக்களும்
8 வினாக்களும்
9 வினாக்களும் கொடுக்கப்பட்டுள்ளது.
கொடுக்கப்பட்ட சில வினாக்களுக்கு விடையே இல்லை.
முதலில் XEROX எடுத்துக் கொடுக்க வேண்டும் என்ற அறிவிப்பு அதன் பிறகு கரும்பலகையில் எழுதிப்போட்டு தேர்வு நடத்த வேண்டும் என்ற உத்தரவு.
கீழ்வகுப்பு வினாக்களில் வரும் படங்களையும் ஆசிரியர் வரைந்து போட்டு நடத்த வேண்டுமா?
அப்படியென்றால் அவர் வகுப்பில் இருக்கும் ஒரு கரும்பலகையில் எத்தனை படங்கள் வரைந்து போடுவார்?
ஏன் இந்த தடுமாற்றம்?
நோக்கம் சிறந்ததாக இருந்தால்
அதனை சிறந்த முறையில்
திட்டமிட்டு
செயல்படுத்த வேண்டாமா?
எந்த திட்டமிடலும் இல்லாமல்
தினம் தினம் ஒரு அறிவிப்புக் கொடுத்து ஏன் குழப்ப வேண்டும்.
ஒரு திட்டத்தை செயல்படுத்தும் முன்பு அதில் உள்ள தவறுகள் களைந்தெடுக்கப்பட்டு
வகுப்பறைக்கு வரும் போது
100% சதவீதம் தெளிவுடன்
இருந்தால் தானே
மாணவர்களும் குழப்பம் இல்லாமல் இருப்பார்கள்?
கல்வியை கல்வியாகப் பாருங்கள்
விளையாட்டாக்கி விடாதீர்கள்.

ஒரு ரூபாய் நோட்டு உருவாகி, இன்றுடன் நுாறு ஆண்டாகிறது.

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


நுாறு, ஐநுாறு ரூபாய் நோட்டுகளின், 'முதல்வனான' ஒரு ரூபாய் நோட்டு உருவாகி, இன்றுடன் நுாறு ஆண்டாகிறது. 'ஒத்த ரூபா நோட்டு' என, சற்றே மலிவாக அழைக்கப்பட்டாலும், பிற ரூபாய் நோட்டுகள் உருவாக, இந்த ஒரு ரூபாய் நோட்டு தான் முன்னோடியாக இருந்து இருக்கிறது. 

         கடந்த, 1917, நவ., 30ல், முதல் ஒரு ரூபாய் நோட்டு அறிமுகம் செய்யப்பட்டது. அப்போதைய வர்த்தகர்கள், பண பரிவர்த்தனை செய்ய, இந்த ஒரு ரூபாய் நோட்டு பெரிதும் உதவிகரமாக இருந்துள்ளது. கோவை முன்னாள் தபால் அலுவலர் ஹரிஹரன், இந்த பழைய ரூபாய் நோட்டுகளை, பத்திரமாக பராமரித்து வருகிறார். 
அவர் கூறியதாவது: முதல் ஒரு ரூபாய் நோட்டின் இருபுறமும், ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் படம் அச்சிடப்பட்டிருந்தது. 1935, ஏப்., 1ல் ரூபாய் நோட்டு அச்சிடும் உரிமம், இந்திய ரிசர்வ் வங்கிக்கு வழங்கப்பட்டது. அதன் பின், அச்சிடப்பட்ட, முதல் ஒரு ரூபாய் நோட்டில், முதலில் எட்டு மொழிகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. 1940ல் அச்சிடப்பட்ட நோட்டில், ஆறாவது ஜார்ஜின் உருவப்படம் அச்சிடப்பட்டது. நாடு சுதந்திரம் பெற்ற பின், பதவியேற்ற நிதியமைச்சரின் மேற்பார்வையில் அச்சிடப்பட்ட ஒரு ரூபாய் நோட்டு, மகிழ்ச்சியில் திளைத்திருந்த மக்களின் பெரும் வரவேற்பை பெற்றது. கடந்த, 1949ல் நிதித்துறை செயலர், கே.ஆர்.கே.மேனன் கையெழுத்திட்ட நோட்டில், முதல் முதலாக அசோக ஸ்துாபி இடம் பெற்றது.
1951ல் ஹிந்தியில் அச்சிடப்பட்ட ஒரு ரூபாய் வெளியானது. அதன் பின், 1994ல், நிறுத்தப்பட்ட, ஒரு ரூபாய் நோட்டு, 2015 மார்ச், 6ல், மறுபடியும் அறிமுகம் செய்யப்பட்டது. ஒரு ரூபாய் நோட்டு அச்சிட, 1.14 காசு செலவாவதாக, தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் தெரியவந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். கடந்த, 1943ல் ஒரு சவரன் தங்கத்தின் விலை, 13 ரூபாய் ஆக இருந்தது. அதன்படி எடுத்துக் கொண்டால், இன்று அந்த ஒரு ரூபாய் நோட்டு, 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ளது. தற்போது அரசால் செல்லாததாக அறிவிக்கப்பட்டுள்ள, 500 - 1,000 ரூபாய் நோட்டுகளை விட, இந்த ஒரு ரூபாய் நோட்டின் மதிப்பு, அதிகம் என்பது தான் வினோதம்!

Wednesday, 30 November 2016

மாற்றுப்பணியில் பணிபுரியும் ஆசிரியர்கள்

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்

மாற்றுப்பணியில் பணிபுரியும் ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு மற்றும் பிற விடுப்புக்கள் ஏதும் கோருவதாக இருப்பின் மாற்றுப்பணிப் பள்ளியின் தலைமையாசிரியர் வழியாக மட்டுமே தங்களது தாய்ப் பள்ளிக்கு விண்ணப்பிக்க வேண்டும் - செயல்முறைகள் ..


Monday, 28 November 2016

PERSONAL & ADMINISTRATION DEPT - 13-10-2016 -க்கு பிறகு அரைச்சம்பள விடுப்பில் செல்பவர்கள் இனி DA,HRA,MA போன்ற படிகளை முழுமையாக பெற முடியாது - புதிய உத்தரவு அமல்

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்                                                                                                                                                                                          

PERSONAL & ADMINISTRATION DEPT - 13-10-2016 -க்கு பிறகு அரைச்சம்பள விடுப்பில் செல்பவர்கள் இனி DA,HRA,MA போன்ற படிகளை முழுமையாக பெற முடியாது - புதிய உத்தரவு அமல்

தொடக்கக் கல்வி - CHILD FRIENDLY TOILET- புதிய முன்னோடி திட்டம் செயல்படுத்த சிறந்த பள்ளிகளின் பட்டியலை கோரி இயக்குனர் செயல்முறைகள்

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்                                                                                                                                                                                                                                                                                                                                                          

தொடக்கக் கல்வி - CHILD FRIENDLY TOILET- புதிய முன்னோடி திட்டம் செயல்படுத்த சிறந்த பள்ளிகளின் பட்டியலை கோரி இயக்குனர் செயல்முறைகள்

தொடக்கக்கல்வி - தொடக்க/நடுநிலைப் பள்ளிகளில் துப்புரவு பணியாளர்கள் நியமனம் செய்வது,பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது அறிவுரைகள் வழங்கி - இயக்குனரின் செயல்முறைகள்

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்தொ

டக்கக்கல்வி - தொடக்க/நடுநிலைப் பள்ளிகளில் துப்புரவு பணியாளர்கள் நியமனம் செய்வது,பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது அறிவுரைகள் வழங்கி - இயக்குனரின் செயல்முறைகள்

Monday, 19 September 2016

உங்களின் வருமான வரி ( INCOME TAX ) உங்கள் கணக்கில் சேர்ந்துவிட்டதா ?

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


அனைத்து அரசு அலுவலர்களும் ஆசிரியர்களும் கவனமாக படிக்கவும்.
Be alert all govt staffs ,

நமது ஆதார் எண், வங்கி கணக்கு எண், PAN நம்பர் ஆகியவை நமது ECS WEB
PAYROLL ( ONLINE SERVICE RECORD-S.R.) மூலம் இணைக்கப்பட்டுள்ளது. நாம்
வாங்கும் சம்பளம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. ஆனால் அந்த
சம்பளத்தில் பிடிக்கப்படும் வருமானவரி நமது பான் கார்டில் கட்டாயம் வரவு
வைக்கப்பட வேண்டும். நம்மிடம்
சம்பளத்தில் பிடிக்கப்படும் வருமான வரி
நமது அலுவலக TAN நம்பரில் சேர்ந்து இருக்கும்.  நமது அலுவலக DDO (TAN)
நம்பரில் இருக்கும் வருமான வரி பிடித்தத்தை PAN நம்பருக்கு மாற்ற
கட்டாயம் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை TDS-24Q ஒவ்வொரு காலண்டுக்கும்
தாக்கல் செய்ய வேண்டும். ஆண்டு முடிவில் Form-16 நாம் பெறவேண்டும். இதை
வலியுறுத்தி நமது தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் அரசாணை (G.O.880
DT:12.12.2014, G.O.843 DT; 15.12.2015) வெளியிட்டுள்ளது. இதுவரை நாம்
Form-16 வாங்கவில்லை எனில் நம்மிடம் பிடிக்கப்பட்ட வருமான வரி நமது
பெயரில் வரவு வைக்கப்படாமல் உள்ளது. அதாவது நாம் இதுவரை வருமான வரி
காட்டவில்லை என்று பொருள். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை TDS-24Q  தாக்கல்
செய்யாமல் தாமதிக்கப்படும் ஒவ்வொரு நாளுக்கும் ரூபாய் 200 அபராதம்
விதிக்கப்படும். இது சம்பளம் வாங்கும் அனைவருக்கும் பொருந்தும் Please forward to
other groups. It may help other govt servants.