Saturday, 9 September 2017

தனி ஊதியம் 750 - முரண்பாடுகள்!

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்






தொடக்கக்கல்வி - இன்று (12.06.2017) அனைத்து பள்ளி மற்றும் அலுவலகங்களில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி எடுக்க இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள் மற்றும் உறுதிமொழி

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்



தொடக்கக்கல்வி - பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டியவைகள் - 35 அறிவுரைகளை அறிவித்து தொடக்கக்கல்வி சுற்றறிக்கை

முதல் வகுப்பு சேர்க்கை தொடர்பான தகவல்கள்

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


முதல்  வகுப்பு சேர்க்கை தொடர்பான தகவல்கள்
முதல் வகுப்பில் 30.9.2012.ல் பிறந்த மாணவ மாணவியரை பள்ளியில் சேர்த்துக்கொள்ளலாம்.31.7.2012வரை பிறந்த5+ குழந்தைகள் களுக்கு தவிர்ப்பு வேண்டியதில்லை.
1.8.2012 முதல் 31.8.2012 வரை பிறந்த குழந்தைகளை சேர்த்தால் உதவி தொடக்கக்கல்வி அலவலரிடம் தவிர்ப்பு பெற்றுக்கொள்ளலாம்.  1.9.2012 முதல் 30.9.2012 வரை பிறந்த குழந்தைகளுக்கு மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலரிடம் தவிர்ப்பு பெறப்பட வேண்டும்.தவிர்ப்பு வேண்டி விண்ணப்பிக்கும் போது கீழ்கண்டவற்றை சேர்த்து இணைத்து அனுப்பவும் 1.சேர்க்கை விண்ணப்பம் .2.பிறப்புச்சான்று 3.இத்தனைநாளுக்குத்தவிர்ப்பு வேண்டி தலைமையாசிரியரின் விண்ணப்பம்.

கல்வி ஆண்டின் தொடக்கத்தில் பள்ளி ஆசிரியர்களிடம் தரப்படும் குறிப்புகள்

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


ஆசிரியர்களே..!
1.எல்லாக் குழந்தைகளும் ஒரே மாதிரியான திறன் கொண்டிருப்பதில்லை. அவரவர் திறனுக்கேற்ற எதிர்பார்ப்புகள்
மட்டுமே கொண்டவராகவும்
ஊக்குவிப்பவராகவும் இருங்கள்.
2.படிப்பே வராத குழந்தை என்ற போதும் .. தன்னம்பிக்கை
இழந்து விடாதவாறு அதனிடம்
பேசிப் பழகுங்கள்.
3.மதிப்பெண் நிறைய எடுக்க முயற்சிப்பது நல்லதுதான். ஆனால், முயற்சியையும் தாண்டி அது முடியாத போது அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்து..உணர்த்துங்கள்.
4.கற்றலில் குறையுள்ள குழந்தையை எதற்கும் உதவாததென முத்திரை குத்தவோ மற்றவர் முன் அதைச்
சொல்லி அவமானப் படுத்தவோ கூடாது.அவர்களுக்கு உதவுங்கள்.
5.வீட்டுப் பாடம் அளவாக தினமும் கொடுக்கலாம்.அது நன்கு கற்பிக்கப் பட்டதாக இருக்க வேண்டும்.
6.Meanings Test என்பது வீட்டுப் பாடம் என்றால் ...வகுப்பில் அது நன்கு விளக்கப் பட்ட பிறகு ரஃப் நோட்டில்  எழுதச் செய்து பிறகு
வீட்டுப் பாடமாகத் தரலாம்.
7.அடுத்த நாளில் உடனே தேர்வு வைக்காமல் வாய் மொழியாக ஒவ்வொருவரிடமும் கேட்டு நல்ல பயிற்சி கொடுத்த பிறகு
எழுதச் சொல்லலாம்.
8.இவ்வாறு நல்ல பயிற்சிக்குப்
பிறகு வகுப்பில் எழுதும் சிறு தேர்வுகளில் நல்ல மதிப்பெண்  பெறும் வகையில் கவனம் கொண்டால்  அது கற்றலின் மீது குழந்தைக்குப் பிரியம் மற்றும் தன்னம்பிக்கையைத் தரும்.
9.பாடங்களை கற்பிக்க நிறைய நேரம் எடுத்து புரியும்படி கற்பிக்க வேண்டும். ஏனோ தானோவென்று பாடம் நடத்தி விட்டு தேர்வு வரை மனனம் செய்ய வைத்து கூடுதல் மதிப்பெண் பெற வைப்பது பயனற்றது... அருவருக்கத் தக்கது.
10.முதல் வகுப்பு முதலே மொழிப் பாடங்களில் சிறு சிறு சொற்றொடர் சொந்தமாக எழுதப் பயிற்சி அளித்து பிறகு சிறு கட்டுரைகள் எழுத வைத்து மொழித் திறனை வளர்க்கலாம்
11. பாராட்டும், ஊக்குவிப்பும்,அன்பான அணுகு முறையுமே ஒரு நல்லாசிரியரின்
பண்புகள்.
12.எழுத்துக்களும், அடிப்படை இலக்கணமும் சரிவரக் கற்பிக்கப் பட்டால் பிழையின்றி எழுதவும் தவறின்றி மொழியைக் கையாளவும் செய்வார்கள்.
13.ஒவ்வொரு பாடம் கற்பிக்கும் முன்பும், பின்பும் அந்தப் பாடத்தை படிக்கப் பயிற்சி அளிக்க வேண்டும். வேகமாகப் படிக்க முடிந்தால்தான் புரிதல் சாத்தியம்.
14. பாடங்களை சிறு நாடகமாக்கி எல்லாக் குழந்தைகளும் பங்கேற்கும் வண்ணம் நடிக்கச் செய்தால் நல்ல புரிதலுடன் மகிழ்ச்சி யான கற்றல் நிகழும்.
15.பாடப்புத்தகம் தாண்டியும் வாசிக்கும  பழக்கம் உருவாக உறுதுணையாக இருங்கள்.
16.ஆடல், பாடல், பேச்சு, வரைதல் போன்ற தனித் திறமைகள் கண்டறியப பட்டு ஊக்குவிக்கப் பட வேண்டும்.
போட்டி என்பது பரிசு பெற மட்டுமல்ல..பங்கு பெறவும்
யார் வென்றாலும் மனமாறப் பாராட்டி மகிழவும் என்று உணர்த்துங்கள்.
17.பரிசு  எல்லாக் குழந்தைகளுக்கும் கிடைக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
18.பள்ளி வளாகத்தில்.. முதலில் பாதுகாப்பு...பிறகுதான் கற்பித்தல்.
19.அடி வாங்கி வளரும் குழந்தை கோழை அல்லது கொடூரன் ஆக மாறும் அபாயம் உள்ளது.
20.சமூக வன்முறைகளுக்கும், அவலங்களுக்கும் பள்ளி நாற்றங்காலாகி விடாமல் இருப்பதில் உங்கள் பங்கு முக்கியமானது.
21.மனக்காயங்கள் இல்லாத குழந்தைப் பருவம்குழந்தைகளின் அடிப்படை உரிமை.
22.பின்னாளில் நினைவு கூரும் போதெல்லாம் இனிய தென்றலாக நினைவலைகள் வந்து தழுவிச் செல்வதாக பள்ளிப் பருவம் அமைவது ஆசிரியர்களாகிய உங்களால் மட்டுமே சாத்தியப் படுத்தக் கூடிய ஒன்று.
23.உங்களிடம் ஒப்படைக்கப் பட்டிருப்பது உயிர்ப்புடன் கூடிய நிகழ் காலங்கள்...நாட்டின் நம்பிக்கைக்குரிய எதிர்காலங்கள்..!
***
ஒவ்வொரு கல்வி ஆண்டின் தொடக்கத்திலும் நம் பள்ளி ஆசிரியர்களிடம் தரப்படும்
குறிப்புகள்.

PRAYER SCHEDULE AS PER G.O 335

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


தொடக்கக் கல்வி -அரசு நலத்திட்டங்கள் 2012-2013 கல்வியாண்டு முதல் 2017-2019 கல்வியாண்டு முடிய ஒவ்வொரு நலத்திட்டங்களின் தலைப்பின் கீழ் பதிவேடுகள் உருவாக்கி தேவைப்பட்டியலின் படி பதிவுகள் மேற்கொண்டு பராமரித்தல் -தொடர்பாக!!

தமிழக பள்ளிகளில் மாணவர்களின் காலை வழிபாட்டு கூட்டம் 10 நிமிடமாக குறைப்பு

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


தமிழக பள்ளிகளில் மாணவர்கள் காலை வழிபாட்டு கூட்டம் தொடர்பாக அரசு கடந்த 2012ம் ஆண்டு ஆணை வெளியிட்டது. இதன்படி திங்கட்கிழமை பொதுவழிபாட்டு கூட்டம், பிற நாட்களில் வகுப்பறை வழிபாட்டு கூட்டம் கொண்டுவரப்பட்டது. 
இதன்படி பொது மற்றும் வழிபாட்டு கூட்டம் 20 நிமிடங்கள் வரை நடந்தது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை ஒவ்வொரு மாணவனும் பிழையின்றி பாடவே இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழக பள்ளிக் கல்வித்துறை அரசாணை 335ஐ புதிதாக வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையில் வகுப்பு வழிபாட்டு கூட்டத்தை மாற்றி, ெபாது வழிபாட்டு கூட்டமாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் எல்லா மாணவனும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாட வேண்டியதில்லை. யாராவது ஒரு மாணவன் பாடினால் போதும்.
இதுதவிர 20 நிமிடமாக இருந்த திங்கட்கிழமை மட்டும் பொதுவழிப்பாட்டு கூட்டம் 3 நிமிடம் குறைத்து, 17 நிமிடமாகவும், பிற வேலை நாட்களில் 20 நிமிடங்கள் இருந்த வழிபாட்டு கூட்டம், 10 நிமிடமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. இதில் சுழற்சி முறையில் மாணவர்கள் முன்னின்று தமிழ்த்தாய் வாழ்த்து பாடல்கள் பாடுவார்கள் என தெரிவிக்கப்பட்டது. 
தமிழ்த்தாய் வாழ்த்து, திருக்குறள் விளக்கம், செய்தி வாசித்தல், பொது அறிவு, பிறந்த நாள் வாழ்த்து என அனைத்தையும் 10 நிமிடங்களில் நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வகுப்பறையில் ஒவ்வொரு மாணவ, மாணவிக்கும் முன்னின்று வழிபாட்டு கூட்டம் நடத்தும் வகையில் வாய்ப்பு கிட்டுமா என்ற சந்தேகமும் ஆசிரியர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

TPF INSTRUCTION FOR MISSING CREDIT

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்