தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்
தமிழக அரசு சார்பில் 7 வது ஊதியக்குழு தொடர்பாக ஊழி யர்கள் சங்கங்களின் கருத்தறியும் கூட்டம் நான்கு நாட்கள் நடக்க உள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அமல்படுத்தப்பட்டுள்ள 7-வது ஊதியக் குழு பரிந்துரை களை தமிழக அரசு ஊழியர் களுக்கும் வழங்குவது தொடர் பாக அலுவலர் குழு அமைக் கப்பட்டுள்ளது. நிதித்துறை செயலர் க.சண்முகம் தலைமை யிலான இக்குழு, வரும் 26, 27 மற்றும் மே 2,3 ஆகிய தேதிகளில் நான்கு நாட்களில் அரசு ஊழியர் சங்கங்களை அழைத்து சந்தித்து அவர்களின் கோரிக்கைகள், கருத்துகளை கேட்க முடிவெடுத்துள்ளது.
இந்நிலையில், கருத்தறியும் கூட்டத்தை நடத்த நான்கு நாட்கள் போதாது என அரசு ஊழியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக ஜாக்டோ- ஜியோ அமைப்பின் நிர்வாகி கூறும்போது, ‘‘200க்கும் மேற் பட்ட ஊழியர் சங்கங்கள் உள்ள நிலையில், 4 நாட்கள் என்பது போதாது. கருத்தறியும் கூட்டத்தை இன்னும் சில நாட்கள் நீட்டித்தால், சங்கங்களின் நிர்வாகிகளை முழுமையாக சந்தித்து, கருத்துகளைப் பெற முடியும்’’ என்றார்