Tuesday, 26 April 2016
நிதித்துறை - இடைநிலை ஆசிரியர் பதவியிலிருந்து பதவி உயர்வு ( தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் ) பெறுவோர்க்கு, பதவி உயர்வில் ஊதியநிர்ணயம் செய்தல் - நிதித்துறை செயலாளர் செயல்முறைகள்
அரசு பள்ளிகளில்,கடந்தாண்டை விட, 10சதவீதம் வரை,மாணவர் சேர்க்கை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்என,தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது
அரசு பள்ளிகளில்,கடந்தாண்டை விட, 10சதவீதம் வரை,மாணவர் சேர்க்கை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்என,தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.கோடை காலத்தில் பின்பற்ற வேண்டிய நடவடிக்கை குறித்து,தலைமை
ஆசிரியர்களுக்கு,பள்ளி கல்வித்துறை சார்பில்,அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி,பள்ளிகளில் குடிநீர் மற்றும் கழிப்பிட வசதி செய்து,தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பள்ளி திறக்கப்படும் நாளில் ஆசிரியர்,மாணவர் வருகை பதிவை துவக்கும் வகையில்,பதிவேடுகளை தயார் செய்ய வேண்டும். பள்ளி திறந்த நாளில்,பஸ் பாஸ் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என,தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும்,பள்ளியின் உள்கட்டமைப்பு வசதி,ஆங்கில வழி கல்வி,நலத்திட்ட உதவிகள்,கடந்தாண்டுகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம்,மாணவர்களின் சிறப்பான முன்னேற்றம் குறித்து,பெற்றோரிடம் விளக்கி,சேர்க்கையை அதிகரிக்க வேண்டும். கடந்தாண்டை காட்டிலும்,அரசு பள்ளிகளில், 10சதவீதம் வரை,சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என,அறிவுறுத்தப்பட்டுள்ளது.பத்தாம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு,அதே பள்ளியில் பிளஸ்1சேர்க்கை நடக்க வேண்டும்.
குறைந்த மதிப்பெண்ணை காரணம் காட்டி,வேறு பள்ளிக்கு செல்ல கட்டாயப்படுத்தக்கூடாது. புதிதாக பாடப்பிரிவு துவக்கவும்,அதற்கென ஆசிரியர் நியமிக்கவும்,பெற்றோரிடம் தொகை வசூலிக்கக்கூடாது.பள்ளியில் நடக்கும் பராமரிப்பு பணிகளில் எச்சரிக்கையாகசெயல்பட வேண்டும். பெஞ்ச்,டெஸ்க் தரமாக உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். கரும்பலகைகளுக்கு கருப்பு வர்ணம்பூசவேண்டும் என,அறிவுறுத்தப்பட்டுள்ளது
இடைநிலை ஆசிரியர்கள் பதவியுர்வு பெறும் பொழுது நிர்ணயம் செய்ய வேண்டிய வழிமுறைகள் !!!
கணினி வழி கற்பித்தலில் சிறப்பாக செயல்படும் ஆசிரியர்களுக்கு தேசிய விருது !!!
GO NO-117 Date-20/04/2016 அரசு ஊழியர்கள்,ஆசிரியர்களுக்கான 6% அகவிலைப்படி அரசாணை !!!
ஏழாவது ஊதியக்குழுவில் 14.28% மட்டுமே ஊதிய உயர்வு , இயக்கங்கள் போர் கொடி !
ஏழாவது ஊதியக்குழுவில் 14.28% மட்டுமே ஊதிய உயர்வு , இயக்கங்கள் போர் கொடி !
The 7th pay commission report has failed to address the welfare of employees, said president of confederation of central government employees and workers KKN Kutty.
Criticising strongly, K K N Kutty said it is “totally disappointing and beats logic”.
“It is the only commission, which has reduced the allowances and due to which the growth in net income is only 14.28 percent,” he added.
Addressing a meeting on the 7th pay commission in Visakhapatnam, Kutty slammed the centre for failing to look into the issues of the employees and warned that agitations would be launched to demand minimum pay as per the market prices.
He said that the commission had recommended that the minimum pay should be hiked from Rs 7,000 to Rs 18,000. However, considering the current market conditions, he said that minimum pay was not adequate. He said that a memorandum with 26 demands had been submitted to the centre. He warned that massive protests will taken out from September onwards if the government failed to address the issues of employees in the seventh pay commission.
The 7th pay commission has recommended a 14.27 percent increase in basic pay, the lowest in 70 years. The previous 6th Pay Commission had recommended a 20 percent hike, which the government doubled while implementing it in 2008.
போலி ஆசிரியர்களை கண்டுபிடிக்க தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவு!
போலி ஆசிரியர்களை கண்டுபிடிக்க தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவு!
போலி ஆசிரியர்களை கண்டுபிடிக்க தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
உண்மைத் தன்மை சான்று பெறுவதில் இருந்த குழப்பத்தையும் ஆசிரியர் தேர்வு வாரியம் தீர்த்து வைத்துள்ளது.
சமீபத்தில் போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்த ஆசிரியர் பிடிபட்டார். இதையடுத்து 2012, 2013 ல் தகுதித் தேர்வு மூலம் பணியில் சேர்ந்த ஆசிரியர்களின் தகுதிச்
சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை கண்டறிய பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு
கல்வித்துறை உத்தரவிட்டது.தகுதிச்சான்றின் உண்மைத் தன்மை குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு தலைமை ஆசிரியர்கள் விண்ணப்பித்தனர். அவற்றை ஆசிரியர் தேர்வு வாரியம் கண்டுகொள்ளாமல் இருந்ததால் தலைமை ஆசிரியர்கள் தகுதிச்சான்று பெற முடியாமல் தவித்து வந்தனர்.போலி ஆசிரியர்களை கண்டு பிடிப்பதிலும் சிக்கல் இருந்தது. தற்போது 'தகுதித் தேர்வை மட்டுமே ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது. தகுதிச் சான்றுகளை முதன்மை கல்வி
அலுவலர்களே அளித்தனர். இதனால் உண்மைத் தன்மை சான்றுகளை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் பெற்று கொள்ளலாம். சந்தேகம் இருந்தால் மட்டும் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு அனுப்பலாம் என, ஆசிரியர் தேர்வு வாரியம் தெளிவுப்படுத்தி உள்ளது.
தகுதிச்சான்றின் உண்மைத் தன்மை குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு தலைமை ஆசிரியர்கள் விண்ணப்பித்தனர்.